பாரதம் மேலும் மேம்பட மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்


பாரதம் 1947-ல் சுதந்திரம் அடைந்து இப்போது 76 வருடங்கள் கடந்து விட்டன.

மோடி 2014 ஆண்டிலிருந்து கடந்த 9 வருடங்களாக பாரதப் பிரமராக ஆட்சி செய்கிறார்.

மோடி பதவியில் அமர்ந்த முதல் ஆண்டிலேயே இந்தியாவில் வெட்டவெளியில் கழிப்பறைகளாகப் பயன்படுத்திய நிலையை மாற்ற இந்தியா முழுவதும்கிராமம், நகரம் என்ற பாகுபாடின்றி அரசின் மான்யத்தில் கழிப்பறைகள் கட்டிகுறிப்பாக பரதப் பெண்மணிகளின் உபாதைகளைப் போக்கி அவர்களின் நன் மதிப்பைப் பெற்றார். அத்துடன் காஸ் சிலிண்டர் அடுப்புகாஸ் சிலிண்டர் ஆகியவகைகள் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால் மோடி இந்தியா பூராவும் காஸ் அடுப்புகள்காஸ் சிலிண்டர்கள் ஆகியவைகள் மிகவும் எளிதாகவும், ஏழை எளியோருக்கு மான்யத்துடனும் கிடைக்க வழிவகுத்து, சமையல் செய்யும் பெண்களின் கண்ணீரைத் துடைத்தார். நல்ல குடிநீர் வசதி வீட்டிலேயே பைப்மூலம் கிடைக்கவும் வழி செய்து அது நாடு முழுவதும் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல. மின்சார வசதி இந்தியாவின் அனைத்து இடங்களிலும்மலைப் பிரதேசங்களிலும் கிடைக்க வழிவகுத்து விட்டார் மோடி தமது முதல் ஆண்டு ஆட்சியிலேயே. அதிலும் குறிப்பாக அனைத்து வசதிகளுடன் குறைந்த விலையில் லட்சக் கணக்கில் வீடுகள் கட்டி மக்களுக்கு உதவி உள்ளார்.

சுத்தம் சுகம் தரும் என்பார்கள். சுத்தம் பேணிக் காத்தால், மக்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதன் காரணமாக நீர்நிலைகள், ஆறுகள், நதிகள் தூய்மையைகுறிப்பாக கங்கையை தூய்மைப் படுத்தும் பணியை மிகவும் சிறப்பாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது மோடி அரசு.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பர். அதற்கு ஏற்ப கொரோணா காலத்தில் பல கோடிக்கணக்கான ஏழைகளுக்கு இலவச உணவு திட்டத்தை தொடர்ந்து இரண்டு வருடங்களாக மத்திய அரசின் முழுச் செலவில் செயல்பட்டு வருவது மோடி அரசின் ஒரு உத்தமச் செயலாகும்.

அரசு அலுவகத்திலும் தூய்மையைக் கடைப்பிடிக்க அங்குள்ள பல குப்பை ஆவணங்களை அகற்றியும், அலுவலகக் கட்டிடங்களை சரி செய்தும் - மேஜைநாற்காளிகள் ஆகியவைகளைப் புதிப்பித்தும் செயல்படுத்தியது மோடி அரசு. வேண்டாத பல பிரிட்டிஷ் கால காலாவதியான சட்டங்களை நீக்கியும், தற்போதைய அரசுப் படிவங்கள் பலவற்றை மக்களுக்குப் பயன்படும் வகையில் சுருக்கியும், அரசு அதிகாரிகளிடம் ஆவணங்களில் அத்தாட்சிக் கைஎழுத்தை நீக்கி விண்ணப்பத்தார்களே சுய அத்தாட்சிக் கைஎழுத்திடும் வழக்கைத்தையும் செயல்படுத்தி மக்களின் நன் மதிப்பைப் பெற்றது மோடி அரசு.

குறைந்த பட்ச ஆட்சி முறைஅதிக பட்ச நிர்வாக முறைஎன்ற மக்களை நம்பும் இந்த முறை தான் மக்களாட்சி என்ற நிலைக்கு வித்திடும் நல்ல அரசாங்கத்திற்கு லட்சணம். இதை மோடி அரசு பதவி ஏற்றது முதல் தனது தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுகிறதுஇதனால் பல மத்திய அரசாங்கப் பணிகளை மக்கள் நேரடியாகச் செல்லாமல் இணைய தளவசதி மூலம் செய்து முடிக்க முடிகிறது.

ஒரே இந்தியாஒரே ரேஷன் கார்ட், பாஸ்போர்ட் பெறுவதில் துரிதம், பல மத்திய அரசின் மக்கள் பயன் பெறும் திட்டங்களில் பயன்பெறுவோர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தைச் செலுத்துதல், எந்தப் பணமும் கட்டாமல் வங்கியில் கணக்கு தொடங்கும் வசதி, இண்டர் நெட் வசதியை மேம்படுத்தல், கை பேசியை இந்திய மக்கள் அனைவரும் உபயோக்கும் வண்ணம் அதன் விலையை வெகுவாகக் குறைத்தும், அதை மேக்-இன்- இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே தயாரிக்கும் செயல்திட்டம்என்று பல மோடி அரசின் சாதனைகள்.

குறைந்த விலை மருந்துகள், கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவிலேயே தயாரித்து மக்களுக்குப் பயன்படுத்திவெளி நாட்டிற்கும் ஏற்றுமதி செய்து சரித்தம் படைத்துள்ளது மோடி அரசு.

நாட்டின் நதிகளை இணைத்தல், நதிப் போக்குவரத்தை அதிகரித்தல்அதற்கு பல துறைமுகங்களை இந்தியாவைச் சுற்றி கிழக்குமேற்கு கடற்கரைகளில் அமைத்தல், ரோட் போக்குவரத்தைற்கு எட்டு வழிச் சாலைகளையும் பல இடங்களில் ஏற்படுத்தல், ஆகாய விமானப் போக்குவரத்தை சாதாரண மக்களும் பயன்படுத்தும் அளவில் பயணச் சீட்டின் விலையைக் குறைத்தல்என்று இந்த 9 வருடங்களில் பல சாதனைகளை மோடி அரசு நிகழ்த்திக் காட்டி உள்ளது.

நாட்டின் பாதுகாப்பில் மோடி அரசு முழுக் கவனம் செலுத்திபல போர்விமானங்கள்வாங்குதல்இந்தியாவிலேயே சுயசார்ப்புக் கொள்கையில் உற்பத்தி செய்தல், பலவிதமான தளவாடங்கள்புல்லட் புரூஃப் ஜாக்கட் ஆகியவைகளை உள்ளூரிலேயே தயாரித்தல், நெடுஞ்சாலையில் எமர்ஜென்சி காலத்தில் போர் விமான்ங்கள் தரை இறங்கும் வசதிஎன்று இந்தியாவின் வருங்காலத்தை நினவில் கொண்டு மோடி அரசு செயல்படுகிறது.

இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை பல நாடுகள் பாராட்டும் அளவில் உள்ளது.

வார்ணாசி காரிடார், அயோத்தி ராமர் கோயில் கட்டுதல், முத்தலாக் முறை ஒழிப்பு, காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தல், புதிய பாராளுமன்றக் கட்டிடம் கட்டுதல் ஆகியவைகள் அரசியல் ரீதியில் மிகவும் கடினமானகாங்கிரஸ் கனவிலும் நினைக்காத செயல்களை மோடி அரசு வெற்றிகரமாக செயல்படித்தி உள்ளது. காஷ்மீர் முஸ்லீம்கள்நக்கசலட்டுகள் தீவிரவாதம் வெகுவாகக் குறைந்துள்ளது

‘ஏழு சகோதரிகள்’ என முன்பு அழைக்கப்பட்டு வந்த அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்கள். அவற்றோடு இப்போது சிக்கிம் மாநிலமும் சேர்க்கப்பட்டுவிட்டது. ஆக, இந்தியாவின் வடகிழக்குப் பகுதி இன்று ‘அஷ்டலட்சுமி’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் இயற்கை வளம் மிக்க மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்தவை வட கிழக்கு மாநிலங்கள். வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலானவற்றின் 98 சதவீத எல்லைகள் சீனா, பங்களாதேஷ், மியான்மர் (பர்மா), பூட்டான் ஆகிய அண்டைநாடுகளைத் தொட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தியா முழுவதிலுமுள்ள நீர்மின் உற்பத்திக்கான திறன் 145 ஜிகாவாட்ஸ் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் 45% (57.6 ஜிகாவாட்ஸ்) வடகிழக்கில் உள்ளது. அதிலும் 46.9 ஜிகாவாட்ஸ் உற்பத்தித் திறன் கொண்ட மாநிலம் அருணாச்சலப் பிரதேசம் (காரணம், பிரம்மபுத்ரா). இருந்தபோதிலும் இயற்கை அழகும் வளமும் நிறைந்த இப்பகுதி இன்றளவும் இந்தியாவின் ‘சவலைப் பிள்ளை’யாகவே இருக்கிறது.

இந்த மாநிலங்களில் வன்முறை, அன்னியர்களில் ஊடுருவல், சீனாவின் எல்லைப் பிரச்சனை, நக்சலைட்டுகளின் அட்டூஷியம் என்று பல பிரச்சனைகளால் இந்த அஷ்டலட்சுமிப் பிரதேசம் இந்தியாவின் கடந்த காலப் பிரதமர்களால் கவனிக்கப்படவே இல்லை. ஆனால் மோடி பதவிக்கு வந்த பிறகுவட கிழக்கு மாகாணப் பார்வைஎன்ற திட்டத்தால் அந்த அஷ்ட லட்சுமிகள் இந்தியாவின் மேம்பாட்டுத் திட்டங்களில் பல அங்கும் செயல்படுத்தப் பட்டு அவர்களும் இந்தியாவின் முக்கிய அங்கம் வகிக்க வழி வகுத்துள்ள வெற்றிகரமான மோடி அரசின் செயல்பட்டுகள் சிறப்பானவைகளாகும்.

இந்த அளவில் முந்தைய எந்த பிரதம மந்திரியும் மோடி அளவில் பாரதத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்தியது இல்லை. தைரியம், நிதானம், தொலை நோக்குப் பார்வை, மனிதாபிமானம், நேர்மை, தன்னம்பிக்கை, தூய சிந்தனை, சாணக்கிய தந்திரம், ஊழலை உயர் மட்டத்தில் அடியோடு ஒழித்த அரசியல்வாதி, உலக அரங்கில் பெரிதும் மதித்துப் போற்றப்படும் இந்தியத் தலைவர், பல முஸ்லீம் நாட்டில் ஆட்சி செய்யும் மன்னர்களின் அன்பையும்அவர்கள் அளித்த மிகவும் மேம்பட்ட பல பட்டங்களையும் பெற்ற பாரதப் பிரதமர்என்று பல திறமைகளையும், சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளார் மோடி ஜி அவர்கள்.

லங்கைச் சிறையில் வாடும் பல தமிழர்கள்தூக்குத் தண்டனை தமிழ்க் கைதிகள் பலர்மோடியின் தலையீட்டால் விடுதலை ஆகி உள்ளார்கள்.

இதே போல் பல இந்தியர்கள்பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முஸ்லீம் தேசங்களில் கைதிகளாக இருந்தனர். அவர்களில் பல தூக்குத் தணடனைக் கைதிகளும் அடக்கம். மோடி தமது அந்த நாடுகளில் சுற்றுப் பயணம் செய்த போது அங்குள்ள ஆட்சியாளர்களிடம் கூறி பலருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது சாதாரண விஷயம் இல்லை.

அத்துடன் முஸ்லீம் நாடுகளில் இந்துக் கோயில்கள் கட்ட நிலம் அளிக்கவும் அவர்கள் முன் வந்தது ஒரு நம்ப முடியாத ஒன்றாகவே உலக அளவில் கணிக்கப்படுகிறது.

மோடி அரசு 370 & 35 A ஆகிய ஆர்டிகளை பாராளுமன்றம் மூலமாக ரத்து செய்ததையோ, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் ஆணை பிறப்பித்ததையோ, முத்தலாக் முறையை ஒழித்து சட்டம் இயற்றியதைப் பற்றியோ முஸ்லீம் தேசங்கள் பலபாகிஸ்தானைத் தவிர்த்துஎந்தவிதமான எதிர்ப்பையும் காட்ட வில்லை என்பது மோடி அரசின் வெற்றிகரமான வெளியுறவுக் கொள்கையே காட்டுகிறது.

மோடி அரசின் பொருளாதாரக் கொள்கையும் இந்தியாவை அது 100-வது வருட சுதந்திரத்தைக் கொண்டாடும் போது வளர்ந்த நாடாகவும், உலக அளவில் நம்பர் ஒன் நாடாகவும் உருவாக்கும் தொலை நோக்குக் குறிக்கோளை கொண்டுள்ளது.

ஆனால் இந்த நிலையை இந்தியா அடைந்து விடக் கூடாது என்ற துர் எண்ணம் சில பல வெளி நாட்டினருக்கு இருக்கிறது. அத்துடன் இந்தியாவில் உள்ள சில மோடி வெறுப்பாளர்கள் இதைத் தடுக்கும் முயற்சியில் மிகவும் மும்முறமாக களம் இறங்கி உள்ளார்கள். அதற்கு காங்கிரஸ் - மம்தா தெலுங்கானாவின் முதல் மந்திரி சந்திர சேகர் ராவ்ஸ்டானின் ஆகியவர்கள் முனைப்புடன் உள்ளார்கள். பிபிசி ஆவணப்படம், அதானிப் பிரச்சனைஎன்று மக்களைக் குழப்பி, மோடியை 2024-லோக் சபா தேர்தலில் தோற்கடிக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்கள். பல உலக நாடுகளின் ஊடகங்களும் இதற்குத் துணை போவதும், பணம் செலவு செய்வதும் இருக்கிறது.

ஆகையால் பாரத தேச மக்கள் விழுப்புடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட சாதனைப் பட்டியல் எந்தத் தலைவரும்இந்தியாவிலும் சரி, உலகத்திலும் சரிசெய்யாத ஒன்று என்பதை பாரத மக்கள் ஒரு போதும் மறக்கக் கூடாது.

மோடியை விட்டால் தற்போது நம்பத் தகுந்த தலைவர்கள் எதிர் அணியில் இல்லை என்பதும் உண்மையாகும்.

மோடிக்கும் 2024 லோக் சபா தேர்தல் கடைசித் தேர்தலாகும். ஏனென்றால் 2029-ல் மோடியின் வயசு 75-க்கும் மேலாக இருக்கும். ஆகையால் அவர் தேர்தலில் நிற்க மாட்டார். எந்த வகையான நிர்ப்பந்தம் வந்தாலும் 2029 லோக் சபா தேர்தலில் நிற்க அவரை ஒப்புக்கொள்ள வைக்க முடியாது. தார்மீக தர்மத்தை மதிக்கும் உத்தமர் மோடி. ஆகையால் வருகிற 2024- லோக் சபா தேர்தலில் மீண்டும் பிரதமராக பிஜேபி தனித்து முழு மெஜாரிடி பலத்துடன் பதவியில் அமர பாரதமாதா அருள் புரிய வேண்டும்.

பாரத மக்கள் மோடியின் பிஜேபி தேர்தல் சின்னமான தாமரையை மறக்காமல் தேர்தலின் போது அந்த தாமரைச் சின்னத்தில் முத்திரை பதித்து, பாரதம் அகில உலகில் முத்திரை பதிக்க உறுதி பூணுவோம் வாருங்கள்.

ஜெய் ஹோ மோடி ஜி ! பாரத மாதாவுக்கு ஜே !


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017