முஸ்லீம் தீவிரவாதம் தமிழகத்தில் வேரூன்றும் அபாயம்
தீபாவளி 24-ம் தேதி கொண்டாட இருக்கும் நாளுக்கு முந்தைய தினமான 23-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 2 மணி அளவில் கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள கோட்டை
சங்கமேஸ்வரர் கோயிலுக்கு எதிரில் ஒரு கார் வெடித்துச் சிதறி உள்ளது. அந்தக் காரை ஓட்டி வந்தவன் ஜமேஷா முபின் (25) என்ற பயங்கரவாதி என்ற விபரம் பிறகு தெரியவந்துள்ளது. அவன் ஓட்டி வந்த காரில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததில் அவன் மடிந்தான்.
இது வெறும் காஸ்
சிலிண்டர் வெடிப்பு இல்லை – இது ஒரு பயங்கரவாதியின் செயல் – என்பதை தமிழக அரசும்
– காவல் துறையும் 4 நாட்களுக்குப் பிறகு தான் உணர்ந்து
தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது அவர்களின் தவறான கணிப்பு – பாதுகாப்பில் அஜாக்கிரதை – சிறுபான்மையினரின் நன்மதிப்பிற்கு
முதலிடம் கொடுக்கும் அரசியல் ஆகியவைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது.
காரை ஓட்டி வந்த
அந்த முஸ்லீம் தீவிரவாதி ஜமேஷா முபின் மட்டும் தான் செத்தான் – வேறு பொதுமக்களுக்கும் எந்தவிதமான
உயிர்ச்சேதமோ – பொருட் சேதமோ இல்லை என்பதை அறிந்த கோவை மக்கள்
“கோட்டை சங்கமேஸ்வரர் தான் இந்த தீவிரவாத தாக்குதல் தோல்வி அடைய வைத்த்துடன்
அதற்கு மூளையாக இருந்த தீவிரவாதியையும் செத்து மடிய வைத்து கோவை மக்களைக் காத்தருளினார்”
என்று மன அமைதி கொண்டனர்.
கோவை சங்கமேஸ்வரர்
அருளால் கோவை மக்கள் தங்கள் தீபாவளியை அடுத்த நாளான
24-ம் தேதி கொண்டாடி மகிழ்ந்தனர்.
வெறும் காஸ் சிலிண்டர்
வெடிப்பு என்று வெகு அலட்சியமாக முதலில் தமிழக அரசு
- தமிழக போலீஸ் ஆகியவர்கள் கணித்தது எவ்வளவு பெரிய தவறு என்பது பிறகு
தெரியவந்து தமிழக மக்களை கதிகலங்க வைத்தது.
இதுமட்டுமின்றி, கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு
முன்னர் ஜமேஷா முபின் தன் நெருங்கிய உறவினர்களான அப்சர்கான், முகமது அசாருதீன் ஆகியோருடன் குண்டு வெடிக்க வைப்பது
தொடர்பாக ஓரிரு முறை ஒத்திகை பயிற்சி நடத்தியுள்ளான். இவர்கள் கோவை பகுதியில் உள்ள
பழமையானதும், மக்கள் அதிகம் வரக்கூடிய கோவில்களான
கோட்டை சங்கமேஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில்,
புலியங்குளம் விநாயகர் கோயில் ஆகியவற்றுக்கு இருசக்கர வாகனத்தில்
சென்று ஒத்திகை பார்த்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை போலீஸார்
கைப்பற்றியுள்ளனர்.
மேலும், கோவையில் 5 இடம் உள்பட
தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் குண்டு வைக்க சதி செய்ய திட்டம் வகுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
சென்ற முறை பல இடங்களில் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் நாட்டில் கோவை மற்றும் சில இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர். ஆனால் அந்த பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்கள் சிறுபான்மை அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்தினால் அவர்களைச் சரியான முறையில் தண்டிக்காமல் காவல் துறை மென்மையாக நடந்து கொண்டது இந்த பயங்கரவாதிகளுக்கு பயம் விட்டுப் போய் மீண்டும் பயங்கரவாதச் செயல்களை செய்யத் தூண்டிவிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும்
குண்டுவெடிப்பில்
பலியான முபினின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்களை ஆய்வு செய்த போது, சிலிண்டர், வெடிபொருள், ஆணி, கோலி குண்டு
ஆகியவற்றை வெடிக்கச் செய்து பெரும் சேதத்தை விளைவிக்க முபின்
திட்டமிட்டிருந்ததையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர். மேலும், குண்டுவெடிப்பில்
சம்பந்தப்பட்டவர்கள், காந்திபார்க், பழைய மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து
காஸ் சிலிண்டர் மற்றும் 3
டிரம்களை கைதானவர்கள் வாங்கியிருப்பதையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
இந்த பயங்கரவாத
தாக்குதலுக்கு ‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’ என்று அவர்கள் பெயரிட்டு இருந்தது தெரிய
வந்துள்ளது. அதாவது, தீவிரவாத
சிந்தனை உடையவர்கள், தனிப்பட்ட
முறையில் தாக்குல் மேற்கொள்வதே ஒற்றை ஓநாய் முறை ஆகும். இந்த வகையான தாக்குதல்களை
நடத்துபவர்கள், அதற்கான பிரத்யேக
பயிற்சி மற்றும் மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பார்கள்.
அதுபோன்று, முபின் பிரத்யேக பயிற்சிகள் பெற்றவர் என்பது
தெரிய வந்துள்ளது. இந்த ஒற்றை நாய் தாக்குதல்
ஒத்திகையின்போதுதான், சங்கமேஷ்வரர்
கோவில் முன்பு எதிர்பாராதவிதமாக நடைபெற்ற
கார் வெடிப்பு சம்பவம் என்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதை விட ஒரு பயங்கரமான
செய்தி ஒன்றைப் பற்றி அறியவேண்டும்.
KhilafahGFX – என்பது ஐஎஸ்ஐஎஸ் என்ற பயங்கரவாத இயக்கத்திற்கு ஆட்களை அனுப்பும் செயலில் ஈடுபட இயங்கும் செயலிலியாகும். தமிழ் முஸ்லீம் மக்களை இந்தப் பயங்கர வாதச் செயலில் ஈடுபட வைக்கும் இழிதொழிலில் ஈடுபட்டிருப்பதும் இதன் மூலம் ஜமேஷா முபின் மூளை சலவை செய்யப்பட்டு தீவிரவாதச் செயலில் ஈடுபட்டு கோவை கார்வெடிப்பில் செத்தான் என்பதும் இப்போது அவன் தான் இறந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற அவனது மரணச் செய்தியின் மூலம் தெரியவருகிறது.
சிறுபான்மையினர்
வாக்குகள் மூலம் தான் ஆட்சியில் இருப்பதாக கூறும் தி.மு.க சிறுபான்மை
வாக்குகளுக்காக மற்றவர்களின் உயிர்களை பலி கொடுக்க தயாராக இருக்கின்றனரா என்கிற
கேள்வி எழுகிறது.
இருப்பினும், காலம் கடந்தாவது தமிழக போலீசும் – தமிழக அரசும் இந்த கோவை கார் வெடிப்பை ஒரு பயங்கரவாதச் செயல் என்பதை உணர்ந்து தேசிய புலனாவுத் துறைக்கு மாற்றி உள்ளதை பாராட்டலாம்.
இந்தச் செயலுக்கு உந்துதலாக இருந்தவர்கள் தமிழக கவர்னரும், பிஜேபி தமிழகத் தலைவருமான கே. அண்ணாமலையும் ஆவார்கள்.
கோவை சிலிண்டர் வெடிப்பு.. வெளிநாட்டு சதி.. ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு! – என்பதை 23-ம் தேதியே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிப்படுத்து உள்ளார்.
மேலும், அவரின் நெருக்குதலால் தான் விடியல் அரசும் தேசிய புலனாய்வுத் துறைக்கு இந்த சம்பவத்தை விசாரிக்க ஒப்புக் கொண்டது.
சிங்காரச் சென்னையை உருவாக்குவேன் என்ற சூளுரையுடன் சென்னை கார்ப்பரேஷன் மேயர் பதவியை வகித்தவர் தான் இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்த மழைகாலத்தில் சென்னை எப்படித் தத்தளிக்கிறது என்பதை தமிழக மக்கள் நேரிலேயே அனுபவைக்கும் நிலைக்கு வந்து விட்டனர்.
சிங்காரச் சென்னை வேண்டாம் – பயமின்றி தீவிரவாதச் செயல்கள் இன்றி அமைதியாக வாழும் நிலையாவது கிடைக்குமா? என்ற ஏக்கம் தமிழக மக்களின் மனத்தில் நிலைத்து விட்டது.
அமைதியை விரும்பும் சிறுபான்மை முஸ்லீம் மக்களும் இந்த்த் தீவிரவாதச் செயல்களை விரும்புவதில்லை. காஷ்மீரிலேயே இயல்பு நிலை திரும்பி அங்கு அமைதி நிலவுகிறது.
ஆனால் தமிழகத்தில் தீவிரவாதம் தலைதூக்க ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. அதற்கு தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அந்த்த் தீவிரவாதச் செயல்களை முளையிலேயே வேரேடும் வேர் மண்ணோடும் பிடிங்கி எறிய வேண்டும்.
விடியல் அரசு விழிப்புடன் செயல்பட்டு, தமிழக மக்களின் நிம்மதியை உறுதி செய்ய வேண்டும்.
சத்தியமேவ ஜெயதே !
Comments