திருக்கார்த்திகை – டிசம்பர் 06 – 12 – 2022 – செவ்வாய்க்கிழமை

 தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாள் தான் திருக்கார்த்திகை திருநாளாகும்கார்த்திகை மாதம் 20ம் தேதி, டிசம்பர் 6ம் நாள் செவ்வாய் கிழமை அன்று திருக்கார்த்திகை கொண்டாடப்பட இருக்கிறது.

திருக்கார்த்திகை என்பது தீபத் திருநாளாகும். அந்த தினத்தில் பக்தர்கள் தங்கள் வீடுகளில் எண்ணை விளக்குகளால் அலங்கரித்து சிவபிரானைப் பூஜிப்பார்கள். அதே போல் சிவன் கோயில்களில் தீபங்கள் பல ஏற்றி வழிபடுவார்கள். சிவன் ஜோதி வடிவானவன் என்பதை நினைவு கூறும் விதமாக சொக்கப்பனைக்கு அக்னி இட்டு வாழிபாடு செய்வார்கள் சிவ பக்தர்கள்.

சிவபிரான் தாம் வடிவமற்றஆதியும் அந்தமும் இல்லா அருப்பெருஞ்சோதி என்பதை உலகத்திற்கு உணர்த்திய அந்த தினம் தான் திருக்கார்த்தைகையாகும்.

பிரம்மாவும் விஷ்ணுவும் ஒவ்வொருவரும் தாங்கள் தான் சக்தி மிகுந்தவர்கள் என்று சண்டையிடவும், அவர்களின் ஆணவத்தை அடக்கச் சிவபிரான்என் உருவத்தின் முடிஅடி ஆகியவைகளைக் கண்டு பிடிப்பவர்களே சக்தியில் மேலானவர்கள்என்று சொல்லி சிவபிராமான் அக்னிச் ஜ்வாலையான சுடராக அவதாரம் எடுத்தார். பிரம்மா அன்னம் வடிவம் எடுத்துக் கொண்டு சுடரான சிவனின் முடியினைக் காணப் பறந்து சென்றார். விஷ்ணுவும் பன்றி வடிவம் எடுத்து சிவச் சுடரின் அடியினைக் காண விரைந்தார். ஆனால் அவர்கள் இருவரும் வெற்றி பெறவில்லை. அதனால் அவர்களில் ஆணவமும் மறைந்தது.

திருக்கார்த்திகைத் திருவிழா திருவண்ணாமலைக் கோயிலில் அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜைகள் திருக்கார்த்திகைக்கு 60 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிடும். ஏனென்றால் திருவண்ணாமலைக் கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகமாகும். மேலும் இது தட்ஷிண கைலாயம் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. மேலும் இத்திருத்தலத்தில் மலையே சிவலிங்கமாக துதிக்கப்பட்டு வணங்கப்படுகிறது. ஆகையால் தான் இந்த மலையையே சிவஸ்சொரூபமாக நினைத்து பக்தர்கள் கிரி வலம் செய்வது அந்தத் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் அண்ணாமலையாரையே வலம் வந்ததாகக் கருதுவர். மேலும். இந்த மலையை இன்றைக்கும் பல சித்தர்கள் அரூபமாக கிரிவலம் வருகின்றனர் என்பது ஐதீகம். .

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், மகா தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என ஐந்து நாட்கள் தீபங்கள் ஏற்றப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் தீபத்திருவிழாவில் பங்கேற்பார்கள்.

டிச.6-ல் மகாதீபம் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 24ஆம் தேதியன்று தொடங்கி டிசம்பர் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி மாலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட உள்ளது.


மகாதீப தரிசனம் 2668 அடி உயர மலை உச்சியில் 5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட கொப்பரையில் 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகளும் மகாதீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும். இந்த வெண்கல கொப்பரையை 1668-ல் பிரதானிவேங்கடபதி ஐயர் என்பவர் செய்து கொடுத்தார். பின்பு 1991-ல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும். இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத அரசகுலத்தினர் ஆவர் .

முன்னதாக, அன்று காலை 4 மணியளவில், மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் அர்த்தநாரீஸ்வரர் நடனமாடியபடி காட்சி அளித்த பின்னர் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். பிறகு காதீபம் மலை உச்சியில் ஏற்றப்படும்.

அந்த சமயத்தில் பக்தர்களின்அண்ணாமலையாருக்கு அரோகராஎன்ற  கோஷங்கள் வானைப் பிளக்கும் அளவிற்கு பக்தியின் சக்தியை வெளி உலகத்திற்கு பறைசாற்றும்.

கார்த்திகை விழாவைக் குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடுவர்.

குமராலய தீபம்:முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.

விஷ்ணுவாலய தீபம்: விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.

சர்வாலய தீபம்:ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.

தீப மங்கள ஜோதி நமோ நம - தூய அம்பல லீலா நமோ நமஎன்ற வரிகள்           ( பொருள்:  தீப மங்கள ஜோதீ நமோநம … திருவிளக்குகளின் மங்களகரமான ஒளியே, போற்றி, போற்றி, தூய அம்பல லீலா நமோநம … பரிசுத்தமான பரவெளியில் லீலைகள் புரிபவனே, போற்றி, போற்றி) - வரும் அருணகிரி நாதரின் - நாத விந்து கலாதி நமோ நம வேத மந்திர ஸ்வரூபா நமோ நமஎன்று தொடங்கும் திருப்புகழை திருக்கார்த்திகைத் திருநாளில் ஓதுவது சிறப்பாகும்

தீப மங்கள ஜோதி வீட்டிலும், வீதியிலும், நாட்டிலும் ஒளி வீசி பாரத நாட்டை அனைத்துச் செயல்களிலும் ஒளிபெறச்செய்து உலக அரங்கங்களில் கோலோச்ச அந்த அண்ணாமலையாரை வேண்டுவோமாக.

சர்வம் ஜோதி மயம் ஜகத்.


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017