சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு - 14 – 04 – 2022 – வியாழன்

 



60 தமிழ் வருடங்களில் சுபகிருது 36 – வது வருடமாக வருகிறது.

சித்திரை 1 அன்று மேஷ லக்கினம், திரியோதசி திதி, பூரம் நட்சத்திரம், வளர்பிறை திதியில் சுபகிருது ஆண்டு பிறக்கிறது.

சுபகிருது வருடத்தில் நாடெங்கும் நல்ல மழை பெய்யும் சுபிட்சமாக விளங்கும் என தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது. நல்ல விளைச்சல் உண்டாகும். கேடு எவருக்கும் வராது மக்கள் சுகமாக வாழ்வர் எனவும் தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக நோய்களின் பிடியில் சிக்கித்தவித்த மக்கள் இந்த ஆண்டு நிம்மதி பெருமூச்சு விடலாம்.

சுபகிருது என்பதற்கு நற்செய்கை என்று பொருள். ஆகையால் இந்த ஆண்டு பல்வேறு நற்செய்திகளைக் கொண்டுவரும் ஆண்டாக அமையும்.

சுபகிருது வருட சித்தர்பெருமான் இடைக்காடரின் வெண்பா இதுதான்:


சித்தர்
இடைக்காடர் வெண்பா:

 சுபகிருது தன்னிலே சோழதேசம் பாழ்

மாமம் விலைகுறையும் ன்சாம் - சுபமாகும்

நாடெங்கும் மாரிமிகும் நல்ல விளை வுண்டாகும்

கேடெங்கு மில்லையதிற் கேள்.


 வெண்பா பொருள்:

 சுபகிருது ஆண்டில் சோழநாட்டிலே சில பொருள்கள் வீணாகிப் பாழாகும்.

மான்களுக்கு நோய் தாக்கும். மண்பாண்டங்களின் விலை குறையும். 

மழை நன்கு பெய்து விளைச்சல் உண்டாகும். 

மழையினால் வேறு எந்த கேடும் இல்லை

ஆகையால் தமிழ்ப் புத்தாண்டு தினத்திலிருந்து லோக க்ஷேமம் பிறக்கிறது. உலகம் கொரோணா கால துன்பங்களிலிருந்து விடுபட்டு புத்துயிருடன் வெற்றி நடை போடும். வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017