தமிழக அரசின் அடாத செயல் – நெஞ்சு பொறுக்குதில்லையே !
இந்த சோக சம்பவத்தின் முழு விவரம் இதோ : “ திருவள்ளூர் மாவட்டம் , திருத்தணியை சேர்ந்தவர் குப்புசாமி ( 36). இவர் வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தந்தை நந்தன் ( 65) அதிமுகவின் 15 ஆவது வட்ட நகரதுணை செயலாளராகவும் மனித உரிமைகள் அமைப்பின் மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். திருத்தணி நகரில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கூட்டுறவு பண்டக கடை எண் 2 இல் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது. அதிமுக வட்ட துணை செயலாளராக பதவி வகிக்கும் நந்தன் , பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்று பார்த்தபோது , புளி இருந்த பாக்கெட்டில் இறந்து போன பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அந்த புளியில் பல்லி இறந்து கிடந்த பொட்டலத்தை எடுத்துக்கொண்டு கடை ஊழியர் சரவணனிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் நந்தனுக்கு முறையான பதில் அளிக்காமலும் , அலட்சியப் படுத்தும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் இருந்த செய்தியாளர்கள் முதியவர் நந்தனிடம் விசாரித்த தகவலின் அடிப்படையில் செய்திகள் ஒளிபரப்பானது....