3 விவசாய சட்டங்கள் நிறைவேற்றம்

3 விவசாய சட்டங்கள் நிறைவேற்றம் – மஹாத்மாவின்        3 குரங்குகளாக கூச்சலிடும் எதிர்க் கட்சிகள்




தலைப்பான – மூன்று விவசாய சட்டங்கள் நிறைவேற்றம் - மஹாத்மாவின் 3 குரங்குகளாக கூச்சலிடும் எதிர்க் கட்சிகள் – என்பதைப் படித்து விட்டு, எதிர்க்கட்சிகளைக் குரங்குகளாகச் சித்தரித்தது ஜனநாயகத் தத்துவத்திற்கே எதிரானது என்று என்னைக் குற்றம் கூறிச் சாடலாம்.

மூன்று சட்டங்களைப் பற்றி எதிர்க்கட்சிகள், அரசு மசோதாக் காகிதங்களை மதித்துப் படிக்காமல் கண்களை மூடிக்கொண்டும், அரசு தரப்பு கருத்துக்களை கேட்க மாட்டோம் என்று காதுகளை மூடிக்கொண்டும், தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தாமல் வாயை மூடிக் கொண்டும் - ஆனால் சபையில் ‘தீமையைப் பார்ப்போம், தீமையைக் கேட்போம், தீமையைச் சொல்வோம்’ என்ற  மன நிலையில் சபாநாயகரின் மைக்குகளை உடைத்தும், பெஞ்சுமேலே ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்தும், மசோதா காகிதங்களை சபாநாயகரின் முன் கிழித்து அவர் மேல் வீசியும் – போராடியவர்களை செவிடு, குருடு, ஊமை என்ற மூன்று நிலைகளைக் குறிக்கும் மூன்று குரங்குகளாக சித்திரிப்பதில் என்ன தவறு இருக்கிறது? – என்று தான் என்னால் கனத்த மனத்துடன் சிந்திக்கத் தோன்றுகிறது.

இந்த மூன்று சட்டங்களால் விவசாயிகளின் வாழ்க்கையில் தேனும், பாலும் ஓடும் என்று சொல்ல வரவில்லை. ஆனால், இவைகள் விவசாயிகளுக்கு இடைத்தரகர்கலான மண்டி வாலாக்களின் பிடியிலிருந்து விடுதலை, தாங்கள் தங்கள் நிலத்தில் பயிரிட்ட விளைபொருட்களை எங்கும், யாருக்கும் விற்கும் சுதந்திரம் – ஆகியவைகளை அளிக்கும் கேடயமாகும். மேலும் இந்த சட்ட மாற்றங்கள் அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க எடுத்த தார்மீக நடவடிக்கையாகும். இந்த மாற்றத்தால் அவர்களின் வருமானம் இரட்டிப்பாகும் போது, மோடி அரசின் நம்பகத்தன்மையும், ‘மோடி அரசு விவசாயிகளின் நண்பன்’ என்ற பட்டமும் கிட்டும்.  

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராஹுல் காந்தி இந்த மூன்று சட்டங்களை எதிர்க்க உதிர்த்த வார்த்தைகளைக் கேட்பவர்கள் பப்பு ராஹுலுக்கு ‘குரங்கு புத்தித் தலைவர்’ என்று பட்டம் சூட்டுவார்கள் என்பது திண்ணம்.



‘நாங்கள் மத்தியில் பதவிக்கு வந்ததும் முதல் முதலாக இந்த மூன்று சட்டங்களையும் கிழித்து, குப்பைத்தொட்டியில் தூக்கி எறிவோம்’ என்று பொதுமேடையில் மீடியா மூலமாகத் தெரிவித்திருக்கிறார். ‘குரங்கு கையில் கிடைத்த பூமாலை’ என்ற சொல்லாடை தான் நினைவுக்கு வருகிறது.

இதில் என்ன வேடிக்கை என்றால், 2019-ம் ஆண்டு லோக் சபா தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இந்த சட்டத்தில் உள்ள மூன்று மிக முக்கியமான கொள்கை ரீதியான விதிகள் இடம்பெற்றுள்ளன. இவைகளைத் தான் காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கப் போகிறேன்.



1. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 11-வது எண்ணில் தெரிவிக்கப்பட்ட வாசகம்: வேளாண் விற்பனை வாரியம் (APMC – Agricultural Produce Marketing Council) சட்டத்தை ரத்து செய்து விட்டு, விளைபொருள்கள் ஏற்றுமதி மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுவிப்போம்.

2. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 21-வது எண்ணில் தெரிவிக்கப்பட்ட வாசகம்: அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 என்பது கண்ரோல் (கட்டுப்பாடுகள்) கோலோட்சிய காலத்தைச் சேர்ந்தது. ஆகையால் இந்தச் சட்டத்தை ரத்து செய்வோம் என்று வாக்குறிதி அளிக்கிறோம். அதை நீக்கி அவசர காலத்தில் மட்டும் இந்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் பொருந்தும் அளவில் சட்டம் கொண்டு வருவோம்.

3. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை 9-வது எண்ணில் தெரிவிக்கப்பட்ட வாசகம்: விவசாயிகள் உற்பத்திக் கம்பனிகள்/நிர்வாகங்கள் ஆகியவைகளை காங்கிரஸ் உருவாக்க உதவி செய்துஅவைகளின் வாயிலாக விவசாய இடுபொருட்கள்தொழில் நுட்பம் மற்றும் சந்தைப் படுத்தல் ஆகியவைகளை ஊக்குவிக்கும்.  (அதாவது ராஹுல் பாணியில் சொல்வதானால் – கார்பரேட் அதானி – அம்பானி போன்றேரை விவசாயச் சந்தையில் ஈடுபடவைக்கும்.)

மேலும் ஒரு முக்கிய விவரத்தை இங்கு வாசகர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். 2010-ம் ஆண்டிலேயே மன்மோஹன் சிங் ஆட்சியில் ஒரு வழிகாட்டு மந்திரிசபைக் குழுவும் மோடி இப்போது கொண்டு வந்துள்ள சட்டங்களைப் போல் விவசாய சீர்திருத்தங்களை அமல் படுத்தப் பரிந்துரை செய்துள்ளது. மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியின் போது காங்கிரஸ் ‘மோடி எங்களது பரிந்துரைகளைக் காப்பி அடித்து சட்டங்கள் இயற்றுகிறார். அவருக்கு சுய புத்தியே கிடையாது’ என்று சொல்லி வந்தவர்கள், இப்போது சரியான பதில் சொல்ல முடியாமல் ‘சட்டத்தைக் கிழிப்பேன், ஆட்சிக்கு வந்து சட்டத்தை ரத்து செய்வேன்’ என்று ஒலமிடும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு விட்டது.

மோடி கொண்டு வந்த விவசாயச் சட்டத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொன்ன இந்த மூன்றையும் செயல்படுத்தவும் புதிய சட்டங்கள் வழிவகுக்கின்றன. இந்த மூன்றையும் இப்போது மூர்க்கமாக எதிர்க்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

 

இதில் முக்கியமாக வேளாண் விற்பனை வாரியம் (APMC – Agricultural Produce Marketing Council) மூடப்படவேண்டும் என்றே காங்கிரஸ் சொல்கிறது. ஆனால் இந்த புதிய மோடி அரசின் விவசாயிகள் சட்டம் ‘வேளாண் விற்பனைக் கூடம் இருக்கட்டும். மூடவேண்டாம். ஆனால், விவசாயிகளை அந்த மாநில விற்பனைக் கூடங்கள் நடத்தும் மண்டிகளில் மட்டும் விற்க இருக்கும் தடையை நீக்கி, விவசாயிகள் வெளிச் சந்தையில் தங்கள் மாநிலத்தில் உள்ள வியாபாரிகளுக்கோ, இந்தியாவில் உள்ள வெளி மாநில வியாபாரிகளுக்கோ அல்லது பெரிய வியாபாரிகளுக்கோ (கார்பரேட் என்று முத்திரை குத்தி அவதூறு பரப்பும் வியாபாரிகளுக்கோ) இந்திய விவசாய பொருட்களின் வெளிச்சந்தை விலைக்கு விற்கும் ஒரு புதிய சந்தையைத் தான் இது ஏற்படுத்தி உள்ளது.

 

தனிப்பட்ட இந்த வியாபாரிகளிடம் முன்பே ஒப்பந்த அடிப்படை விலையை நிர்ணயித்தும் (இதைத் தான் ‘Forward Trading’ என்று சொல்வார்கள்) விவசாயிகள் விளை பொருட்களை விற்கவும் இந்த புதிய வேளாண் சட்டத்தில் வழி வகுத்துள்ளது.

 

மேலும் இந்த முன்னபே விலையை நிர்ணயம் செய்யும் நிர்ணய விலை ஒப்பந்தம் 1 வருடத்திலிருந்து 5 வருடங்கள் வரை செய்து கொள்ளலாம். விவசாய விளைச்சல் பொருட்கள் சந்தையில் கூடினால், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை விவசாயிகளுக்குத் தான் உண்டு. விவசாய பொருள்களின் விலை குறைந்தால், வியாபாரிகள் ஒப்பந்தப்படி விவசாயிகளுக்கு ஒப்பந்த விலையைக் கொடுத்தாக வேண்டும். விவசாயிகள் விலை குறையும் போது வியாபாரிகள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. மேலும், விவசாயிகள் ஒப்பந்தத்தை எந்த கால கட்டத்திலும் ரத்து செய்யலாம். அதற்கு ஒரு நஷ்ட ஈடும் கொடுக்க வேண்டாம். இதனால் விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் ஆதாரவிலை கிடைக்க வழிவகுக்கிறது இந்தச் சட்டங்கள்.


 


 தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி, கோழிப்பண்ணை போன்றவற்றில் ஒப்பந்த முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்படாமல், ஒப்பந்த விலை மூலம் உறுதியான வருவாய் கிடைக்கும். ஒருவேளை ஒப்பந்த விலையைவிட, சந்தை விலை அதிகரித்து விட்டால், அந்தக் கூடுதல் தொகையும் விவசாயிகளுக்கு கிடைக்கும்.

இனி எல்லா விவசாய சந்தைகளின் பணபரிவர்த்தனை மின் வழி மூலம் நேரடியாக வரவு அவர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் செல்வதை இந்தச் சட்டங்கள் உறுதிசெய்வதால், வெளிப்படைத் தன்மையும், ஊழல் ஒழிப்பும், நேர்மையான விலை நிர்ணயமும் ஏற்பட உதவும். இதில் யாரேனும் தவறு செய்தால், அதைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிதாகிவிடும். ஆகையால், விவசாயிகள் – வியாபாரிகள் – நுகர்வோர்/மக்கள் ஆகியவர்கள் பலனடைவார்கள். நியாயமான சந்தை விலை ஓரளவுக்கு கிடைக்க வாய்ப்பும், விவசாயிகள் முன்பு போல் தங்கள் விளைபொருள்களை போராட்டம் என்ற பெயரில் வீதியில் கொட்டி எதிர்ப்பை தெரிவிக்கும் நிலையை இது தடுத்து நிறுத்தும்.

இதன் மூலம் விவசாயப் பொருள்களை மண்டியில் விற்கலாம், தனியாருக்கு விற்கலாம். இந்தியாவில் இருக்கும் எந்த மாநிலப் பெரும் வியாபாரிகளுக்கும் எந்த வரி செலுத்தாமல் தடையில்லாமலும், தரகர்கள் இல்லாமலும், கமிஷன் கட்டாமலும் விற்க வகை செய்கிறது இந்தச் சட்டங்கள். விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த பயிர்களை சந்தைப் படுத்த கட்டுப்படுத்தும் விலங்குகளை உடைத்தெறிந்து சுதந்திரப்பறவைகளாகப் பறக்கும் சக்தியை இந்த மூன்று சட்டங்களும் கொடுத்துள்ளன.

 

ஏற்கனவே பஞ்சாப், தமிழ் நாடு, ஒடிசா ஆகிய மாநில அரசுகள் விவசாயிகள் மாநில வேளாண் விற்பனை வாரிய சட்டத்தின் (APMC) கீழ் விவசாய உற்பத்திப் பயிர் கொள்முதல் ஒப்பந்த முறைக்கு வழி வகுத்து சட்ட திருத்தம் செய்துள்ளனர். இதனால் பஞ்சாப் முதல்வரும் ராஹுலுடன் டிராக்டர் போராட்டத்தில் பங்கு கொண்டது ஒரு அப்பட்டமான அரசியல் சாதன முறைகேடு என்பதுடன், அவரே தன் அரசு இயற்றிய சட்டத்தையே எதிர்ப்பதற்குச் சமமாகும். இது ராஹுலில் ‘கிழித்தல்’ நாடகத்தை விட கேவலமாகும்.

 

காங்கிரஸ் இப்போது இந்த புதிய வேளாண் சட்டத்தை எதிர்ப்பது தங்கள் வாக்குறிதிகளை – அதுவும் 2019 தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறிதிகளை – எதிர்ப்பதாகும். இதற்கு காங்கிரஸ் ‘ஆமாம், நாங்கள் எங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறிதி கொடுத்தோம். ஆனால், மக்கள் அவைகளை ஆதரிக்க வில்லை. ஆகையால் எதிர்க்கிறோம்’ என்று சொல்லித் தப்பிக்கலாம். ஆனால், காங்கிரசால் இதுவரை அதற்கு மாற்று வழிகளைத் தெரிவிக்கவில்லை. ஆகையால், காங்கிரசின் எதிர்ப்பு அரசியல் தற்கொலைக்குச் சமம். காங்கிரஸ் – 3 குரங்கின் நிலையான செவிடு, குருடு, ஊமை ஆகிய நிலையில் சிக்கித் தவிக்கிறது.

முக்கியமாக பஞ்சாப் – மஹாராஸ்ட்ரா விவசாயிகள் இந்த சட்டத்தில் உள்ள வேளாண் விற்பனை வாரியம் சட்டத்தில் இயங்கும் மண்டிகளில் மட்டும் விவசாயிகள் விற்க வேண்டும், விவசாயப் பொருட்களை வெளி மாநிலங்களுக்குச் சென்று, விற்க அனுமதிக்கக் கூடாது – என்ற ஏகோபோக உரிமைகள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் – டிராக்டர்கள் வைத்திருக்கும் பெரிய நிலச் சொந்தக்காரர்கள் – பாதிக்கபடும் விவசாயிகள் போர்வையில் மண்டித் தரகர்கள் – டிராக்டர்களை வைத்துப் போராடினார்கள். ராஹுலும் தன் பங்கிற்கு பஞ்சாப் – ஹரியானா மாநிலங்களில் டிராக்டரில் குஷன் சீட்டில் உட்கார்ந்து கொண்டு போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.



யாகாவாராயினும் நாகாக்க – காவாக்கால் சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு – என்று வள்ளுவர் சொல்லில் வாய்மை வேண்டும் என்றும், இல்லாவிடில் அந்த குற்றமே சோகத்தில் இழுத்து மீழ்கடித்துவிடும் என்று மிகவும் தெளிவாக உரைக்கிறார். இந்த நல்லுரை அனைவருக்கும் வேண்டும் என்றாலும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு மிக மிக அவசியம் என்பதால் தான் வள்ளுவர் ‘யாகாவா – யாராக இருப்பினும்’ என்று சொல்கிறார். தன் கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்ட வாக்குறிதிகளைத் தாங்கி நிற்கும் இந்த மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களை கிழிப்பேன், குப்பைத் தொட்டியில் வீசுவேன், என்று சொன்னதுடன் நில்லாமல், தனது டிவிட்டரில் – ‘இந்த சட்டங்கள் இருட்டுச் சட்டங்கள் – புதிய வடிவில் உருவான ‘ஜமிந்தாரிச் சட்டங்கள்’ – மோடியின் நண்பர்கள் புதிய இந்தியாவின் ஜமின்தாரிகளாகளாக உருவாகிறார்கள். வேளான் சந்தை குறுகி விட்டது. நம் தேசத்தின் உணவு பாதுகாப்பு அழிக்கப்பட்டு விட்டது’ என்று பதிவு இட்டுள்ளார்.

இந்த பழிச்சொற்களால் காங்கிரசின் நன்பகத் தன்மையைச் சிதைத்து விட்டார்.


பப்பு ராஹுல் தான் இப்படி என்றால், நம் ஊர் பப்புவான சுடலை ஸ்டானின் கட்சியான தி.மு.க.வும் இதே தவறைச் செய்துள்ளது.

திமுகவின் 15-வது சட்டபேரவைத் தேர்தல் 2016 அறிக்கை எண் 24-ல் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறிதிகள்:

1. தமிழக வேளாண் உற்பத்திப் பொருள்களை இந்திய மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்துதல்.

2. வேளாண் பொருள் உற்பத்தியாளர்கள் இடைத்தரகர்கள் இன்றி தங்கள் உற்பத்திப் பொருள்களைச் சந்தை விலைக்கு விற்று பயன் பெரும் வகையில் உற்பத்தியாளரையும், வாங்குபவர்களையும் இணைத்தல். அதற்கு ‘வேளாண் விளைபொருள் பரிவர்த்தனை அமைப்பு – Agriculture Produce Marketing Exchange உருவாக்கப்பட்டு – அன்றாட சந்தை விலை அறிவிக்கப்படும்.

 தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையில் தமிழக விவசாயிகள் தமிழக எல்லை தாண்டி, இந்தியாவின் மாநில எல்லைகளையும் தாண்டி, உலகத்தின் எந்த நாட்டிலும் தன் விளைபொருள்களை சந்தைப்படுத்த வாக்குறிதி அளித்துள்ளது. அத்துடன் இடைத்தரகர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மண்டி சந்தையை ஒழிக்கவும் பரிந்துரை செய்துள்ளது சுடலை கட்சி.  

 வேளாண் பாதுகாப்புக்கு மத்திய அரசை சட்டம் இயற்ற பரிந்துரைத்துவிட்டு, இப்போது ‘வேளாண்மை மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. ஆகையால் மத்திய அரசுக்கு வேளாண்மைச் சட்டம் இயற்றும் அதிகாரம் கிடையாது’ என்று தன் தலைவரும், அப்பாவுமான கருணாநிதியின் 2016 தேர்தல் அறிக்கையின் வாக்குறிதியையே மறந்து அப்பாவின் கனவை கானல் நீராக்கி விடுகிறார் சுடலை.

 வேடிக்கை பார்க்கவும் முடியாது; ஏற்கவும் முடியாது’ என்று தீர்மானம் 

போட்டு திமுக மோடியின் இந்த 3 சட்டங்களையும் எந்த வாதங்களையும்

முன் வைக்காமல், அரசியல் செய்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.

இந்த சமயத்தில், ‘இந்திய அரசியல் சாசனத்தின் படி விவசாயம் முழுக்க 

முழுக்க மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதா?’ என்ற கேள்வி ஒன்று

 தான் உருப்படியான வாதமாகப் படுகிறது. ஆகையால் அதற்கு விளக்கம் 

என்ன? – என்பதற்கு ஒரு தெளிவான பதில் தேவையாகும். 




அரசியல் சாசனத்தை மேற்கோள் காட்டி விளக்கம் கொடுப்பதற்கு முன், 17-வது மக்களவைத் தேர்தலில் – இந்தத் தேர்தலில் திமுக + கூட்டணிக் கட்சிகள் 39 இடங்களில் 38 இடங்களைப் பெற்று சரித்திரம் படைத்தது – தன் தேர்தல் அறிக்கை 27 எண்ணில் ‘மத்திய அரசு உரிய சட்டங்களை இயற்றி, நாட்டில் உள்ள விளை நிலங்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சுடலையின் போராட்டக் கோஷங்களான – வேடிக்கை பார்க்க மாட்டோம்; ஏற்க மாட்டோம் – மோடியின் வேளாண் சட்டங்களை – என்பது வலுவிழந்து விட்டதை வாசகர்கள் உணரவேண்டுகிறேன்.

அரசியல் சாசனத்தில் மத்திய அரசுப் பட்டியல் (Union List), மாநிலஅரசுப் பட்டியல் (State List), பொதுப் பட்டியல் (Concurrent List) என்று ஆட்சி நிர்வாகம் ஒழுங்காக நடைபெற வரையருக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில உரிமைகள் பாதுகாக்கப்படவும், அதே சமயத்தில் இந்திய இறையாண்மை பாதிக்கப்படாமலும் அரசியல் சாசனத்தின் விதிகள் உள்ளன.

அதன்படி, விவசாயம் என்பது அரசியல் சாசன மாநிலப் பட்டியல் Entry No. 14-ன் படி மோடியின் 3 வேளாண் சட்டங்கள் மாநில கூட்டாச்சியை மீறிய மாநில உரிமையில் தலையிட்டதாகும் என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது ஒரு நியாயமான கருத்தாகும். அதற்கும் நேரடியாகப் பதில் சொல்ல வேண்டியது அவசியம்.

(Entry 14 - Agriculture, including agricultural education and research; protection against pests and prevention of plant diseases)

மோடி அரசு இதற்குப் பதில் சொல்லும் விதமாக இந்த மூன்று விவசாயச் சட்டங்களும்  Entry – 33-யின் கீழ் இயற்றப்பட்டது என்று சொல்லி எதிர்ப்பவர்களின் தவறான திசை திருப்பும் முயற்சியை முறியடித்து விட்டார்கள்.

(Entry 33 of the Concurrent List -


Trade and commerce in, and the productionsupply and distribution of,-

(a) the products of any industry where the control of such industry by the Union is declared by Parliament by law to be expedient in the public interest, and imported goods of the same kind as such products

(b) foodstuffs, including edible oilseeds and oils

(c) cattle fodder, including oilcakes and other concentrates

(d) raw cotton, whether ginned or not ginned, and cotton seed; and

(e) raw jute.)

 

ஆகையால் மோடி அரசு கூட்டாட்சி தர்மத்தை மதித்துத் தான் என்ரி 33-ன் கீழ் சட்டம் இயற்றியதை அரசியல் ரீதியாக எதிர்க்க முடியுமே தவிர, சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடியாது என்பது திண்ணம்.

2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி, அன்றைய பிரதமர் திரு மன்மோகன்சிங் அவர்கள், அதிக லாபம் தரக்கூடிய வேலையை விவசாயிகள் செய்ய வேண்டும் என்றும், தன்னுடைய வருமானத்தைக் கூட்ட, விவசாயம் சாராத தொழிலை செய்து, தங்களுடைய பொருளாதாரத்தைக் கூட்ட வேண்டும் என்றும் கூறி இருந்தார். அதாவது ‘என்னால் உங்களுக்கு உதவ முடியாது, வேறு தொழிலுக்குச் செல்லுங்கள்’ என்று உபதேசம் செய்துள்ளார். இது ‘ராஹுல் நாம் சட்டம் இயற்றினால், கிழித்துப் போடுவாரோ?’ என்று மன்மோஹன் சிங்கின் பயத்தினால் விளைந்த உபதேசமாக இருக்கலாம்!

தற்போதைய பிரதமர் மோடி அவர்களோ, விவசாயிகளிடம் நன்றாக விவசாயம் செய்யுங்கள் என்றும், அதிக லாபத்தோடு செய்யுங்கள் என்றும், நீங்கள் விரும்பும் வகையில், நேரடியாக விருப்பப்பட்ட இடத்தில், விருப்பப்பட்ட விலைக்கு விற்கும் வகையில், விவசாயிகளிடம் விவசாயம் செய்யுங்கள் என ஊக்குவித்து சட்டத்தை கொண்டு வந்து இருக்கின்றார்.

இப்போது அந்த மூன்று சட்டங்களைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.

கீழே உள்ளவைகள் தான் மூன்று சட்டங்கள்:

 1.   விலை உறுதி அளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) அவசரச் சட்டம், 2020 – The Farmers Empowerment and Protection Agreement on Price Assurance and Farm services ordinance, 2020

2.   விவசாயிகள் விளை பொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) அவசரச்சட்டம், 2020 – The Farmers Produce Trade and Commerce (Promotion and Facilitation) ordinance, 2020

3.   அத்தியாவசியப் பொருட்கள் அவசர திருத்த சட்டம், 2020 (Essential Commodities Amendment) ordinance, 2020


முதல் விவசாயச் சட்டம் – விலை உறுதி – பண்ணை ஒப்பந்த முறையில் விலை நிர்ணயம்.

இரண்டாவது விவசாயச் சட்டம் – விவசாய உற்பத்திப் பொருளை சந்தைப்படுத்தல்.

மூன்றாவது விவசாயச் சட்டம் – அத்தியாவசியப் பொருள் கட்டுப்பாடுகள் தளர்வு.

அதாவது – விவசாய விளைச்சல் பொருள்களின் விலை – விற்பனை – அத்தியாவசியம் – ஆகியவைகளைப் பற்றியதாகச் சுருக்கமாக புரிவதற்காக குறிப்பிடலாம்.

மோடி அரசின் மேலே குறிப்பிட்ட வேளாண் மசோதாக்களை சட்டமாக்க செப்டம்பர் 27, 2020 அன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

முதல் மற்றும் இரண்டாம் வேளாண் சட்டங்களின் முக்கியமான அம்சங்களைச் சிறிது அலசுவோம்.

இனி விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சுதந்திரமாக யாருக்கும், எங்கும், சந்தை நிலவர விலைக்கு ஏற்ப விற்கலாம். அல்லது விற்காமல் கிடங்குகளில் சேமித்து நல்ல விலை வரும்போது விற்கலாம்.

“வேளாண் விலைபொருள் சந்தைக் கழகம் (APMC) என்ற மாநிலச் சட்டத்தின் கீழ் இயங்கும் மண்டி இடைத்தரகர்களிடம் மட்டும் தான் விற்க வேண்டும், அவர்களுக்குக் கட்டாயம் கமிஷன் தரவேண்டும், வெளி மாநிலங்களுக்கு தங்கள் விளைபொருட்களை விற்க முடியாது” - என்ற அனைத்துத் தடைகளும் தகர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த மண்டிகள் மூடப்படவில்லை. விவசாயிகளின் ஆதரவு இல்லாமல் அவைகள் மூடப்பட்டால் அதனால் விவசாயிகளுக்கு ஒன்றும் தீமை இல்லை. கமிஷன் ஏஜெண்டுகள் அகற்றப்படுவார்கள்.

பஞ்சாபில் APMC-யின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கமிஷன் மண்டியைப் பற்றிச் சொல்வது இங்கு சாலப்பொருத்தமாகும்.

இந்த மண்டியின் மொத்த கமிஷன் 8.5% - இது விவசாயிகளிடமிருந்து விற்பனை விலையிலிருந்து வசூலிக்கப்படுகிறது. மண்டி வரி – 3%, கிராம வளர்ச்சி வரி – 3%, இடைத்தரகர் கமிஷன் – 2.5%. ஆனால், அதே விவசாயி மண்டியைத் தவிர்த்து வெளி வியாபாரிகளிடம் விற்றால் இந்த 8.5% விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபமாகும்.

மேலும் குறைந்த பட்ச ஆதர விலை (MSP – Minimum Support Price) – என்பதும் செயல்பாட்டில் இருப்பதால், வெளி வியாபாரிகள் விவசாயிகளிடம் இந்த விலைக்கோ அல்லது அதற்கு மேலோயோ தான் அவர்களது விளை பொருள்களை வாங்க முடியும். கார்ப்பரேட் வியாபாரிகளிடம் ஒப்பந்தம் போடும் போதும் இந்த நிலைதான் நீடிக்கும். இதில் எந்த விதமான வரிகளோ, இடைத்தரக கமிஷனோ கிடையாது என்பதைச் சொல்ல வேண்டும்.

சென்ற வருடம் சுமார் 40,000 பஞ்சாப் மண்டி இடைத்தரகர்கள் மட்டும் ரூபாய் 1600 கோடி வரையும் கமிஷனாகப் பெற்றுள்ளார்கள். மண்டி வரி வசூல் சுமார் ரூபாய் 1750 கோடியாகும். இந்தப் பணமான ரூபாய் 3350 கோடி ரூபாய்களை விவசாயிகள் இழந்துள்ளது இனித் தொடராது என்பது எவ்வளவு பெரிய லாபம் என்பதை பஞ்சாபின் உண்மையான விவசாயிகள் உணரும் போது அரசியல் வாதிகளின் சூது வெளிவந்துவிடும்.

தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள புதிய சட்டப்படி, சந்தை வளாகம் (Market Area) தவிர அறிவிப்பு செய்யப்பட்ட, வணிக பகுதிகளில் கட்டணம் வசூலிக்க இயலாது என்பதால், பஞ்சாப் மாநில அரசிற்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும், அதனால் போராட்டம் நடக்கிறது.

இந்த சட்டம், அகில இந்திய அளவில் பார்த்தால், பெரிதும் வரவேற்கப்படும் சட்டம், பல மாநில விவசாயிகள், இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள்.

மற்ற மாநிலங்களிலும் மண்டி வரி 1.5% - 2% என்ற அளவில் உள்ளது. அதுவும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை மண்டியில் விற்றால் தான் அந்த வரியைச் செலுத்த வேண்டும். விவசாய பொருள்களை சந்தைப் படுத்துவதில் உள்ள மண்டி கட்டுப்பாடு நீக்கப்பட்டதால் விற்பது என்பது அவர்களது அடிப்படை உரிமையாக இந்தச் சட்டம் செய்கிறது என்பதை விவசாயிகள் உணரவேண்டும்.

ஏ.பி.எம்.சி. சட்டத்தின் கேட்டை உணர்ந்த காரணத்தால், பிஹார் அரசு இந்த மாநிலத்தில் அதை ரத்து செய்துவிட்டது.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற பொருட்களின் விலை உயரும்போது அவற்றை ஏற்றுமதி செய்யவும் சேமித்து வைக்கவும் அரசு அவ்வப்போது கட்டுப்பாடுகளை விதிக்கிறது.  

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின்கீழ் வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள், எண்ணை வித்துக்கள் ஆகிய விளைபொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை கிடங்குகளில் இருப்பு வைத்துக்கொள்வதற்கான கட்டுப்பாடுகளை இச்சட்டம் விளக்கிக் கொண்டுள்ளது.

இப்போது வந்துள்ள சட்டத் திருத்தத்தின்படி இம்மாதிரி கட்டுப்பாடுகளை பின்வரும் சூழலில்தான் விதிக்க முடியும்:

 

1. தோட்டப் பயிர்களைப் பொறுத்தவரை அவற்றின் விலை கடந்த 12 மாதங்களின் சராசரி விலையைவிட 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

 

2. தானியங்களைப் பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி விலையைவிட 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அப்படி இருந்தாலும்கூட இந்தக் கட்டுப்பாடு உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பொருந்தாது.

 

தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் ஆகியவை, “இயற்கை சீற்றம் கடும் பஞ்சம்” போன்ற பேரிடர் காலங்களில் மட்டும், மத்திய அரசு இந்த பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தும். மற்ற நேரங்களில் உற்பத்தி செய்யும் விவசாயிகள், அதனை விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் தேவையில்லாமல் இருப்பு அளவுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு ஏற்படுகிறது. விவசாயிகள் மட்டுமின்றி, நுகர்வோரும் இதனால் பயன் பெறுவர். அரசு இயத்திரங்களின் அனாவசியமான ஆய்வுகள் தவிர்க்கப்படும்.

விளைபொருட்களை உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும் விற்பனை செய்யவும் விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் அளிக்கப்படும் என்கிறது மத்திய அரசு.

இதனால், இந்தத் துறையின் பொருளாதாரம் மேம்பட்டு, நேரடி அந்நிய முதலீடு விவசாயத் துறையில் கிடைக்குமென மத்திய அரசு நம்புகிறது. உணவு விநியோகச் சங்கிலியில் தேவைப்படும் குளிர்பதன கிடங்குகள் போன்றவற்றைக் கட்டத் தேவைப்படும் முதலீட்டை இந்தச் சட்டம் எளிதாக்கும் என்பது இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்களின் வாதம்.

விவசாய விளை பொருட்களை மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எந்த இடத்திலும் வியாபாரமும் வர்த்தகமும் செய்ய வழி வகுக்கிறது. இதன் மூலம், மாநில அரசுகளால் இயக்கப்படும் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வெளியிலும் பொருட்களை விற்க வழிசெய்யப்படுகிறது.

 

இதனால், விவசாயிகளுக்கு தங்கள் உற்பத்தி பொருட்களுக்குக் கூடுதல் விலை கிடைக்குமென அரசு கூறுகிறது.

 


பாஜகவின் கூட்டணி கட்சியான ஷிரோண்மணி அகாலிதளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாடல் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். எதிர்காலத்தில் மிகப்பெரிய கார்பரேட்டுகள் விவசாய சந்தைக்குள் நுழைய வழிவகுக்கும் என்று விவசாயிகளின் அச்சப்படுவதாக கூறி அகாலிதளம் கடுமையாக எதிர்த்தது.

 

‘ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த மசோதாவுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடுகிறார்கள். விவசாயிகளின் அச்சங்களுக்கு தீர்வு காணாமல் சபைகளில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்த அரசாங்கத்தின் ஒரு பகுதியாக நான் இருக்க விரும்பவில்லை, அதனால்தான் நான் ராஜினாமா செய்தேன்’ என்று பாகல் விளக்கம் அளித்துள்ளார். அவர் ராஜினாமாவும் உடனே ஏற்கப்பட்டு விட்டது.

 

இந்த பாதல் ராஜினாமாவை எதிர்க்கட்சிகள் தங்களுக்குச் சாதகமான காரணமாகக் குறிப்பிடுகின்றனர்.

 

ஆனால் இதன் மூலம் சில உண்மைகள் தெரியவருகின்றன. இந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்கும் மாநிலங்கள் குறிப்பாக இரண்டு தான். ஒன்று பஞ்சாப். மற்றென்று மஹாராஷ்ரா.


பஞ்சாபில் சுக்பிர் அக்ரோ என்ற நிருவனம் அகாலி தளத்தின் தலைவர் சுக்பிர் பாதலுக்குச் சொந்தமானது. அது இந்திய உணவு கார்ப்பரேஷனுக்கு தானியங்களை விற்கும் தரகராக விவசாயிகளிடமிருந்து கோதுமையை கொள்முதல் செய்து விற்று, கமிஷன் பெறும் நிருவனமாகும். அதன் வருட வருமானம் ரூபாய் 5000 கோடி என்று சொல்லப்படுகிறது. அவர் பெறும் கமிஷனான 2.5% இந்த வேளாண் சட்டத்தால் இழக்க நேரிடும் என்ற நிலை உருவாகி உள்ளது. பஞ்சாப்பில் உள்ள அநேகமாக எல்லா சேபிப்புக் கிடங்குகளும் இந்த அக்ரோ நிருவனத்திற்குச் சொந்தமானதாகும். ஆகையால் பஞ்சாபில் எந்த ஒரு விவசாயியும் நேரடியாக இந்திய உணவு கார்பரேஷனுக்கு கோதுமையை விற்க முடியாத அளவில் அந்த நிறுவனத்தின் ஆதிக்கம் உள்ளது. ஆகையால் தான் அந்த கட்சியின் மந்திரியை ராஜினாமாச் செய்யச் சொல்லி உள்ளனர் என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

அடுத்து மஹாராஷ்ராவில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேயின் வருட வேளாண் வருமானம் சுமார் ரூபாய் 10,000 கோடி என்று கூறப்படுகிறது. கரும்பு, பருத்தி, வெங்காயம், மிளகாய், திராக்ஷை ஆகியவைகளை அவர்கள் தான் விவசாயிகளிடமிருந்து கமிஷன் பெற்றுக் கொள்முதல் செய்து, வியாபாரிகளுக்கு விற்று அதிலும் லாபம் பெறுகிறார்கள். இந்தச் சட்டங்கள் இந்த ஏற்பாட்டை தகர்த்து விடுகிறது. ஆகையால் தான் மஹாராஷ்ராவிலும் இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளது.  

 


முன்னதாக இந்த மசோதாக்களை தாக்கல் செய்து விவாதத்தை தொடங்கும் முன்பு பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “விவசாய சீர்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றத்தால், ஏற்கனவே அமலில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்திற்கு எந்த பாதிப்பும் வராது. அதேபோல் மாநிலங்கள் அமல்படுத்தியுள்ள விவசாய உற்பத்தி சந்தை குழு சட்டத்தின் ஷரத்துக்களை நசுக்காது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை இந்த மசோதாக்கள் உறுதி செய்யும்” – என்று விளக்கி உள்ளார்.


“சந்தை கட்டுப்பாடு, விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை யாருக்கும் விற்கலாம் என்ற சுதந்திரம் ஆகியவற்றில் இவை தலையிடாது. இதுபோல் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பதற்கு அரசுக்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை. இந்த மசோதா மூலம் விவசாயத் துறையில் தனியார் முதலீடு ஊக்குவிப்பு, சந்தை போட்டி ஆகியவை அதிகரிக்கும். இதனால் விவசயாத்துறையின் உள்கட்டமைப்பு வலுப்படும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்த மசோதா காரணமாக இனி விவசாயிகள் பெரிய வர்த்தக நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு கிடைக்கும்" என்று வேளாண் அமைச்சர் மேலும் விளக்கம் அளித்தார்.

 

விவசாயி டூ மண்டி, மண்டி டூ கார்ப்பரேட்/கடைகள் என்பது இப்போது விவசாயி டூ மண்டி, விவசாயி டூ கார்ப்பரேட், மண்டி டூ கார்ப்பரேட் என விவசாயிகளுக்கு விற்பனை வழிகளை சட்டப்பூர்வமாக செயல்பட வழிவகைகள் செய்கின்றது.

நாட்டில் உள்ள மொத்த சொந்த நில விவசாயிகள் – சுமார் 14 கோடி – அதில் சுமார் 12 கோடி விவசாயிகள் 5 ஏக்கருக்கும் கீழே நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகள். இது தவிர குத்தகைக்கு எடுத்துப் பயிரிடும் விவசாயிகள் – சுமார் 8 கோடிப்பேர்கள். இது தவிர நிலத்தில் கூலிக்கு வேலை செய்பவர்கள் –சுமார் 5 கோடிப் பேர்கள். ஆக மொத்தம் சுமார் 14 + 8 + 5 =   சுமார் 27 கோடிப் பேர்கள்.

ஆகையால் சுமார் 2 கோடிப் பேர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் மண்டி வர்தகத்தில் தாக்கம் இந்த மூன்று வேளாண் சட்டங்களால் ஏற்படும். அதற்காக 12 கோடி விவசாயிகளின் உரிய விலையைச் சுரண்டும் மண்டித் தரகர்களுக்கு ஒரு கடிவாளம் போடவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. இந்த மண்டி விவசாயிகள் தான் மற்ற சிறு/குறு நில விவசாயிகளை வளரவிடாமல் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் இந்த ஆரோக்கியமற்ற மண்டிச் சந்தையினருக்கு விவசாயிகளிடம் உண்மையிலேயே அக்கரை  உண்டென்றால், அவர்கள் வசூலிக்கும் வரிகளை முழுவதும் – அல்லது பெருமளவாவது குறைத்து விவசாயப் பொருள்களை வாங்கி மண்டியை நடத்தலாமே? – என்பதற்கு அவர்களிடமிருந்து போராட்டம் தான் பதிலாக இருக்கிறது.

விவசாயிகள் விழித்து விட்டால், அது உண்மையிலேயே விவசாயத்திற்கு ஒரு விடிவெள்ளி தான்.

மண்டியில் விற்றாலும், வியாபாரிகளிடம் விற்றாலும் அரசு நிணயித்த விலைக்குக் குறைவாக விவசாய விளைபொருட்களை வாங்க முடியாது. ஆனால் தரகர்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி, பிறகு மண்டிகளில் அதிக விலைக்கு விற்று விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய அரசாங்கம் நிர்ணயித்த விலை கிடைக்காமல் செய்து விடுகின்றனர். மேலும், தங்கள் மகசூலுக்கு அரசாங்கம் குறைந்த ஆதார விற்பனை விலையை நிர்ணயித்துள்ளது என்பதும், அந்த விலைக்குக் கீழே விவசாயிகளிடமிருந்து வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது என்பதும் பல சிறு-குறு விவசாயிகளுக்குத் தெரியவில்லை.

“வருடம் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை 10 அரசியல் குடும்பங்கள் பங்கு போட்டுக் கொண்டிருந்தது. இந்த மசோதா அதை தடுத்து நிறுத்துகிறது, அதனால்தான் இந்த மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகளிடம் இந்தப் பதற்றமான போக்கு . இந்த வேளாண்மை மசோதாவினால் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவில் 2 அரசியல் கட்சிகள் குடும்பங்களின் வருமானம் கிட்டத்தட்ட சுருங்கிவிடும் அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரே நாடு, ஒரே ரேஷன், நீட்தேர்வு, ஒரே மாதிரியான வரி விதிப்பு, முறையான ஜிஎஸ்டி, மும்மொழி திட்டம்... இதேபோல் அனைத்து மாநிலத்திற்கும் சேர்த்து ஒரே சந்தை என்ற நிலையை மோடி அரசு ஏற்படுத்தப்படுத்த முயற்சிக்கிறது. இது விவசாயிகளுக்கு சாதகம், நல்ல விஷயம் என்கிறது மோடி அரசு.

உண்மை சொல்வோம் – அதை உரக்கச் சொல்வோம் – என்ற வழியில் இந்த மோடி அரசின் 3 வேளாண் சட்டங்களை அலசி உள்ளோம். நடைமுறையில் எதிர்கொள்ளும் சிக்கல்களை சீர் செய்யும் நோக்கு இந்த மோடி அரசுக்கு உள்ளது. ஆகையால், ‘ஜெய் கிசான் – ஜெய் ஜவான்’ என்ற லால்பகதூரின் கனவை மோடி அரசு நினைவாக்குகிறது என்பது தான் என் கணிப்பு.

சில முக்கிய விவர ஸ்லைடுகள் – உங்களை மேலும் தெளிவுபடுத்தும்





குறைந்த பட்ச ஆதார விலையை MSP (Minimum Support Price ), கடந்த கால காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஒப்பிடும் போது, தற்போது உள்ள மத்திய அரசாங்கம் அதிக அளவில் உயர்த்தி இருக்கின்றது.




Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017