மோடி அரசு கடந்த ஆறு ஆண்டுகளாக பதவியில் இருந்து பல அற்புதமான நல்ல திட்டங்களையும், நீண்டகாலம் பெயர் சொல்லும் கட்டுமானப்பணிகளையும், எல்லைப் பாதுகாப்பில் புதிய தீர்க்கமான உத்திகளை மேற்கொண்டு சீனா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அத்துமீறல்களை ராணுவம் – பேச்சு வார்த்தகள் என்று இரு முனைச் சாதுரியத்தால் மக்களின் நன் மதிப்பையும், நம்பிக்கையும் பெற்றுள்ளார். அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்ரேலியா, இஸ்ரேல், எமிரேட், சவுதி அரேபியா போன்ற பல நாடுகள் இந்தியாவின் எல்லையைப் பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. உண்மையிலே சீனாவும், பாகிஸ்தானும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாகவே கருத இடம் உண்டு. அதற்கு முழு முதற் காரணம் நமது பாரதப்பிரதமர் மோடி அவர்கள் தான் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். இந்தக் கொரோனா காலத்திலும், பிரான்ஸிலிருந்து ரஃபேல் ஐந்து போர்விமானங்கள் இந்தியாவிற்கு வந்து அவைகள் நமது ராணுவ விமானப் படையில் சேர்க்கப்பட்டுவிட்டன. வரும் பனிகாலத்திற்கு ஏற்ற உடைகள், உணவுகள் – போதுமான அளவுக்கு நமது வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. காலம் காலமாக பிஜேபி ...