ஓம் குருப்யோ நமஹ: பெரியவா திருவடிகளே சரணம்
மஹா
ஸ்வாமிகள் – பெரியவா என்று காஞ்சி மட பக்தர்கள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளை
வணங்குவர். அவரது ஜனனம்: 20-05-1894. ஜீவ சமாதி அடைந்த நாள் – 08-01-1994.
99
வருடங்களுக்கு மேல் வாழ்ந்து ஹிந்து தர்மத்தை நிலை நாட்டிய காஞ்சிமட பீடாதிபதியின்
126-வது வருடப் பிறந்த நாளான 20-ம் தேதி மே மாதம் 2020 அன்று அவரது பாதார விந்தங்களில்
விழுந்து நமஸ்கரித்து அவரது ஆசியைப் பெறுவோமாக.
நடமாடும்
தெய்வம் என்று போற்றப்படும் ஸ்ரீ சந்திரசேகரரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் காஞ்சி மடத்தின்
68-வது பீடாபதியாவார். இந்தியா பூராவும் கால்நடையாகவே பூஜ்ய ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள்
போல் திக்விஜயம் செய்து சனாதன ஹிந்து மதத்தை வேரூண்டச் செய்த மஹான்.
மஹா ஸ்வாமிகளின் இரு
அருளுரைகள்:
1.
ஹிந்து மதத்தில் பல மூர்த்திகள் இருப்பதற்குக் காரணம்:
’ஒரு மூர்த்தி இருந்தால் போதாதா? இவ்வளவு
மூர்த்திகள் எதற்கு ஸ்வாமி?’ என்று காஞ்சி மகா பெரியவாளிடம் ஒருமுறை கேட்டார்கள்.
அதற்கு, மகா பெரியவா இப்படியாக அருளினார்
என்கிறது ‘தெய்வத்தின் குரல்’.
’’ நாம் சாப்பிடுகிறோம். வயிறு
நிரம்புவதற்காகத்தானே சாப்பிடுகிறோம். எதைச் சாப்பிட்டால் என்ன? அன்னத்தை
மாத்திரம் சாப்பிட்டால், வயிறு நிரம்பி விடுகிறது.
அநேகவிதமான பதார்த்தங்கள் எல்லாம் எதற்காக
என்று கேட்டால் என்ன சொல்வது?
வயிறு நிரம்ப வேண்டும் என்பது சரி. ஆனால் நாக்கு என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது ருசி பார்க்கிறது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதார்த்தத்திலே ருசி இருக்கிறது. அந்த ருசியை அனுசரித்து அவரவரும் சாப்பிடுகிறார்கள்.
அதனால் வெவ்வேறு ருசியுள்ளவற்றைச் சுவைக்கிறார்கள்.
அப்படியே ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த
மூர்த்தங்களைக் கொண்டு, தியானம் பண்ணுகிறார்கள். பிரார்த்தனை
பண்ணிக்கொள்கிறார்கள்.
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மூர்த்தியிடத்திலே ருசி
இருக்கிறது. அதனால் அநேகவிதமான மூர்த்திகள் இருக்கின்றன.’’
2. அஹம்
பிரம்மாஸ்மி
என்ற
மகாவாக்கியத்தின்
விளக்கம்:
ஜீவனும் பிரம்மமும் ஒன்றுதான் என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர்கள். அதாவது
நாமேதான் ஸ்வாமி என்கிறார்.
“நான்தான் ஸ்வாமி” என்றுதான் ஹிரண்யகசிபுவும் சொன்னான். அவனை
ஸ்வாமியே நரசிம்மமாக வந்து சம்ஹாரம் செய்யும்படி ஆயிற்று.
ஆசார்யாள், “நாம்தான் ஸ்வாமி” என்று சொல்வது ஹிரண்யகசிபு சொன்னது
போலவா? இல்லவே இல்லை.
“நான்தான் ஸ்வாமி” என்று ஹிரண்யகசிபு சொன்னபோது தன்னைத் தவிர வேறு ஸ்வாமியே கிடையாது என்ற அகங்காரத்தில் சொன்னான். பகவத் பாதர்களோ ஸ்வாமியைத் தவிர வேறு எதுவுமே கிடையாது என்பதால் நாமும் ஸ்வாமிதான் என்கிறார்.
ஜீவன் தனக்கு உள்ள அகங்காரத்தை அடியோடு விட்டு விட்டால் இவனே பிரம்மத்தில் கரைந்து பிரம்மமாகி விடுகிறான் என்கிறார்.
இப்போது நாம் உத்தரணி ஜலத்தைப்போல் கொஞ்சம் சக்தியுடன் இருக்கிறோம். ஸ்வாமி அகண்ட சக்தியுடன் சமுத்திரமாக இருக்கிறார். அந்தச் சமுத்திரத்திலிருந்துதான் இந்த உத்தரணி ஜலம் வந்தது. இந்த உத்தரணி ஜலம், தான் தனி என்கிற அகங்காரத்தைக் கரைத்து சமுத்திரத்தில் கலந்து சமுத்திரமே ஆகிவிட வேண்டும்.
Comments