மோடி சர்க்காரின் 20 லட்சம் கோடி நிவாரணம்



பொருளாதார நிபுணர்கள் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதிப்படும் ஏழை – எளியோர்கள், தெருவியாபாரிகள், பல வெளி மாநிலங்களிலிருந்து கட்டிடம் மற்றும் பிற தொழிற்கூடங்களில் வேலை செய்ய வந்தவர்கள், சிறு- குறு தொழிற் கூடங்கள், பெரிய உற்பத்தி நிறுவனங்கள், விவசாயிகள், நடுத்தர நேர்மையாக வரிசெலுத்துவோர்கள், லாரி- ஆட்டோ – பஸ் ஓட்டுனர்கள் என்று அனைத்து மக்களும் பயன்படும் வகையில் இந்த மஹா பெரிய புரட்சிகரமான நிவாரணத் திட்டம் மோடி அரசு கொண்டு வந்துள்ளது என்று பாராட்டி உள்ளனர்.

‘நாங்கள் மொத்த பொருளாதார உற்பத்தியில் 5% நிவாரணம் அளிக்க கோரிக்கை விடுத்தோம். ஆனால், மோடி அரசோ 10% என்ற அளவில் நாங்கள் கேட்டதற்கும் மேலே இரண்டு பங்கு அதிகமாக திட்டம் தீட்டி உள்ளார்கள். ‘இந்தியாவை சுய சார்பு நாடாக உருவாக்கும்’ மோடியின் இலட்சியக் கனவை நினைவாக்கும் திட்டங்களாகும். என்பது தான் ஒரு நேர்மையான மதிப்பீடாகும்.

இதற்கு ஐந்து முக்கிய காரணிகளை உணர்ந்து, அவைகளை மேற்கொண்டு, மேம்படுத்தி, இந்தியாவை ஒரு வலிமையான சுயசார்பு நாடாக உருவாக்க 130 கோடி மக்களும் உறுதி ஏற்க மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு அவசியமான ஐந்து காரணிகள் இதோ:    1. பொருளாதாரம், 2. உட்கட்டமைப்பு. 3. தொழில் நுட்ப அடிப்படையிலான செயல்பாடுகள். 4. மக்கள் தொகை 5. தேவை மற்றும் சப்ளை
‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டம் என்று இந்த 20 லட்சம் கோடி திட்டத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது. சுய சார்பு என்றால் சுயநலம் இல்லை. உலகமே ஒரே குடும்பம் என்பது தான் இந்தியாவின் பாரம்பரிய குணமாகும். உள்நாட்டில் அனைத்தையும் உற்பத்தி செய்து, சுய தேவைகளைப் பூர்த்தி செய்து, உலக அரங்கில் அந்தப் பொருட்களை விற்பனை செய்து அதன் மூலம் இந்தியாவை ஒரு வலிமை மிக்க நாடாக உருவாக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதை மோடி அரசு தீர்மானித்துத் திட்டம் தீட்டி உள்ளது ஒரு சிறந்த அரசுக்கு எடுத்துக்காட்டாகும்.

வெளி மாநிலத் தொழிலாளர்கள் லட்சக் கணக்கானோர் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், தங்களுடைய சொந்த மாநிலத்தில், தங்களுடைய சொந்த மாநிலாத்தில் பதிவு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட £ 61,000 கோடியுடன் இப்போது £ 40,000 கோடி கூடுதலாக நிதி ஒதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் மொத்த ஒதிக்கீடு ரூபாய் 1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அத்துடன், இதில் வேலை செய்பவர்களின் தினக்கூலியை ருபாய் 182-லிருந்து ரூபாய் 202-ஆக உயர்த்தி உள்ளார்கள். இந்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 240 லட்சம் பேர்கள் இந்தியா பூராவிலும் பதிவு செய்துள்ளனர். ஆகையால் பதிவு செய்துள்ள அனைவருக்கும் வேலை உறுதி என்பது இந்த அதிக தொகை ஒதிக்கீட்டினால் தெளிவாகிறது. 

வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பிற நேரடி நிவாரணங்கள்::

1.   வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு இலவச ரேஷன் வழக்கப்படும். ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு, ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, 1 கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும். நாடு முழுவதும் 8 கோடி வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்கு இந்த வசதி கிடைக்கும். இதற்காக 3500 கோடி ரூபாய் செலவிடப்பட இருக்கிறது.

2.    ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் ஆகஸ்டு மாதம் செயல்படும். இதன் மூலம் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், அங்கு ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இதையடுத்து, 23 மாநிலங்களில் 63 கோடி மக்கள் – அதாவது மொத்த கார்டுதாரர்களில் 83 % பயன்பெறுவர். அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் 100 சதவீதம் இது நிறைவேற்றப்படும்.

3.   ‘பிரதமர் ஆவாஸ் யோஜனா’ என்ற பெயரில், வெளீமாநிலத் தொழிலாளர் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்காக, குறைந்த பட்ச வாடகையுடன் கூடிய வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும். தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அருகில் உள்ள காலி இடங்களில் குடியிருப்புகளை அமைத்து, குறைந்த வாடகைக்கு விடப்படும். தனியாருடன் இணைந்து இது செயல்படுத்தப்படும்.

இதே போல் மற்ற தொழில்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் பலவகையான சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

சுயசார்புடன் இருக்க இந்தியா இப்போதே தன்னைத் தயார் நிலையில் வைத்துள்ளதை இரண்டு மாதங்களில் மூன்று கோடி முக கவசங்கள், 1.2 லட்சம் லிட்டர் கிருமி நாசினி ஆகியவற்றை 12 ஆயிரம் சுய உதவி குழுக்கள் கடந்த 2 மாதங்களில் தயாரித்து சாதனை படைத்துள்ளனர். 

இந்த இக்கட்டான நேரத்திலும், 7200 சுய உதவிக் குழுக்கள் நகர்ப்புறங்களில் துவக்கப்பட்டுள்ளன. மேலும் தொழிலாளர் நலனைக் காக்கும் விதமாக, தற்போது நடைமுறையில் உள்ள 30% தொழிலாளருக்கு இருக்கும் குறைந்த பட்ச ஊதிய நிர்ணயம் அனைத்துப் பிரிவினருக்கும் நாடு முழுவதும் விரிவுபடுத்த முடிவாகி உள்ளது. தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட உள்ளது. அத்துடன் நாடு முழுவதும் உள்ள 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாகக் குறைத்து, இதன் மூலம் சட்டங்கள் எளிய முறையில் செயல்படுத்தப் படுவதை கண்காணிக்க முடியும்.   

“படிப்படியாக முன்னேற்றம், வளர்ச்சி என்ற திட்டமிடுவதிலிருந்து விடுபட்டு, அசுர வளர்ச்சியை அதிவேகமாக அடைய திட்டமிடும் தருணமிது. அதைப் பயன்படுத்தி நாம் முன்னேற்றப் பாதையில் வீரு நடைபோட உறுதி பூணுவோம்” என்று தான் மோடி 130 கோடி இந்திய மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். அதற்கான நிதி ஒதிக்கீடு தான் இந்த ரூபாய் 20 லட்சம் கோடி திட்டமாகும்.

‘இந்தியா, தன்னிறைவு நாடாக மாறும். இதை யாராலும் தடுக்க முடியாது. உலகுக்கே இந்தியா வழிகாட்டும்’ என்பது தான் மோடியின் நம்பிக்கை. 

அதை நடைமுறைப்படுத்தி, இந்தியாவின் புகழை உலகறியச் செய்ய உழைப்போம் வாரீர் – என்பது தான் வாய்மையின் வேண்டுகோள்.


வாழ்க பாரதம்! பாரதமாதவுக்கு ஜே! வந்தே மாதரம்!

Comments

Popular posts from this blog

தமிழில் நான்கு வேதங்கள்

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017