ஹிந்து நாளிதழின் கார்ட்டூன்
ஹிந்து நாளிதழின் கார்ட்டூன் – நேர்மையை அம்பால்
குத்தி
குருதி சிந்தவைக்கும் அவலம் பாரீர்
– ஆக்கம்:
பவித்திரன்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் – என்பதை பிஜேபி தேர்தல்
அறிக்கையில் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்டு மக்களிடம் ஓட்டுக் கேட்டே ஜெயித்துள்ளது.
மற்ற கட்சிகள் ‘ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும்
இதைச் சொல்லியே ஹிந்துக்களை பிஜேபி ஏமாற்றி வந்துள்ளது. ராமருக்கு
அயோத்தியில் கோயில் எங்கே கட்டினீர்கள்?’ என்று குற்றம் சாட்டிவந்துள்ளார்கள்.
ஆனால் இப்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடிவாகி உள்ளது.
இதை உள்ளன்புடன் நேர்மையுடன் ஒத்துக்கொள்ள அரசியல் எதிர்க்கட்சிகள் முன்வராதது
ஆச்சரியமில்லை. ஆனால் ஹிந்து போன்ற பத்திரிகைகள் ‘இந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மதச் சார்பின்மைக்கு எதிரானது. அரசியல் சாசனத்தை மதிக்காத தீர்ப்பு’ என்று கூறுவது சுப்ரீம்
கோர்ட்டையும், அரசியல் சாசனத்தையும் ஏற்காத மனநிலையைத் தான் காட்டுகிறது.
‘முஸ்லீம்களுக்கு ஆதரவான செய்கைகள், சட்டங்கள்
தான் ஏற்போம்’ என்பது நேர்மையை அம்பால் குருதிவர எய்வதாகும்.
இந்தியாவில் அனைவருக்கும் பொதுவான சட்டம் கொண்டு வரவேண்டும். அது அனைத்து மதத்தினருக்கும்
பொதுவானதாக இருக்க வேண்டும் – என்பதை பிஜேபி தனது தேர்தல் அறிக்கையில்
குறிப்பிட்டு வெற்றி பெற்று அதன் முதல் ஆரம்ப நடவடிக்கையாக ‘முத்தலாக்
தடைச் சட்டம்’ இருசபைகளிலும் நீண்ட காரசாரமான விவாதங்களுக்குப்
பிறகு, ஓட்டெடுப்பு நடந்து இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதையும்
ஹிந்து பத்திரிகை ஏற்பதாக இல்லை. ‘இது முஸ்லீம்களின் மத நம்பிக்கையில்
தலையிடுவதாகும். அரசியல் சாசனத்தின் ‘செக்குலரிசம்’
இதன் மூலம் மீறப்படுகிறது’ என்று முஸ்லீம் பெண்களின்
கண்ணீரைத் துடைக்கும் தார்மீகச் செயலையும் எதிர்க்கிறது ஹிந்துப் பத்திரிகை.
370
& 35 A – ஆகிய தற்காலிக பிரிவுகளை வலுவிழக்கச் செய்து, ஜம்மு – காஷ்மீர் – லடாக் ஆகிய
பகுதிகளை இந்தியாவுடன் இணைத்து இரு அவைகளிலும் முறைப்படி விவாதித்து – ஓட்டெடுப்பு நடத்தி சட்டம் இயற்றியதையும் ஹிந்துப் பத்திரிகை ஏற்கத் தயாராக
இல்லை. இதுவும் பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் காலம்காலமாக அறிவித்த
கொள்கையாகும். ‘தற்காலிக என்ற பிரிவு எப்போது காஷ்மீர் அரசியல்
சாசன சபை கலைக்கப்பட்டதோ அப்போதே ஜம்மு- காஷ்மீர் தனி அஸ்தஸ்தை
நிரந்தரமாக ஒப்புக்கொள்ளப்பட்டதாகும்’ என்ற கருத்து கொண்ட கட்டுரைகளுக்கும்,
செய்திகளுக்கும் ஹிந்து முக்கியத்துவம் கொடுப்பதால் அதன் நேர்மை
– அரசியல் சாசன திட்டம் காக்கப்படவேண்டிய நேர்மை – சந்தேகத்திற்கு இடம் கொடுக்கிறது. இதுவும் இந்திய அரசியல்
சாசனத்தை அம்புகொண்டு குருதி வர குத்துவதற்குச் சமம்.
இந்திய குடியுரிமை திருத்த சட்டம் 2019 – என்பதும் அனைத்துக்
கட்சிகளும் பல கால கட்டங்களில் ஆதரித்த ஒன்று தான். தேசிய குடியிருப்பு
ரிஜிஸ்டர், கோர்ட் மூலம் செயல்படுத்த உத்திரவு இடப்பட்டவை தான்.
மேலும் தேசிய ஜனத்தொகை ரிஜிஸ்டர் அவசியம் என்பதும் முன்பு பல எதிர்க்கட்சிகளின்
நிலைப்பாடாகும். இந்திய குடியுரிமை திருத்த சட்டம் இரு அவைகளிலும்
பல மணி நேரங்கள் விவாவித்து, ஓட்டு எடுப்பு நடந்த பிறகு தான்
இந்தியாவில் சட்டமாகி உள்ளது. 70 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லீம்
மத நாடுகளான பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத ரீதியாக முஸ்லீம்களால் துன்பப்பட்டு,
துரத்தப்பட்டு, இந்தியாவில் அடைக்கலம் புகுந்தும்
அவதியுரும் சிறுபான்மையினரான ஹிந்து, கிருஸ்துவர்கள்,
பவுத்தர்கள் போன்றேர்களுக்கு குடியுரிமை கொடுப்பது தான் அந்தச் சட்டம்.
‘அந்த முஸ்லீம் நாடுகளிலிருந்து வெளியேறிய முஸ்லீம்களுக்கும் இந்தச்
சட்டத்தில் வழிவகுத்தால் தான் ஹிந்துக்கள் போன்றேர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க
வேண்டும். இது இந்திய அரசியல் சாசனத்தின் செகுலரிசம் மீறப்பட்டதாகும்’
என்பதில் ஹிந்துப் பத்திரிகையும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது.
முஸ்லீம் நாடுகளிலிருந்து இந்தியாவில் இடம் பெயர்ந்துள்ள பெரும்பான்மை
முஸ்லீம்களை அதே முஸ்லீம் நாடுகளிலிருந்து மதரீதியாக இந்தியாவிற்குத் துரத்தபட்டவர்களோடு
இணைப்பது நேர்மையான அணுகுமுறை ஆகாது. அந்த முஸ்லீம்கள் இந்த திருத்தச்
சட்டத்தின் மூலமாக குடியுரிமை பெற முடியாவிடினும், அவர்கள் தற்போதையை
நடைமுறையில் உள்ள சட்டங்கள் மூலம் குடியுரிமை பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.
மேலும் முஸ்லீம்கள் மற்ற முஸ்லீம் நாடுகளில் அடைக்கலம் கோரமுடியும்.
ஆனால், ஹிந்துக்களுக்கு அந்த வசதி இல்லை.
இந்தியாவில் மட்டும் தான் அவர்களால் குடியுரிமை பெற்று வாழ முடியும்.
இது மத ரீதியான சட்டம் என்றால் அதற்கு அண்டை முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம்
அல்லாத சிறுபான்மையானவர்களை அங்குள்ள பெரும்பான்மை முஸ்லீம்கள் பலவிதமான இன்னல்களை
அளித்த காரணத்தால், இந்த திருத்த சட்டம் தார்மீக ரீதியாகவும்
அவசியமாகிறது. முஸ்லீம்களுக்கு சலுகைகள் அளிப்பது தான் இந்திய
அரசியல் சாசனத்தின் செக்குலரிசத்தின் சாராம்சம் என்று கருத்துக்கொண்டுள்ள ஹிந்துப்
பத்திரிகையால் தர்மத்தையும் தார்மீகத்தையும் கடைப்பிடிக்க முடியவில்லை. தன் எதிர்ப்பின் மூலம் இந்திய அரசியல் சாசனத்தை அம்புகளால் இந்தியாவின் இறையாண்மை
– தார்மீகச் செயல்கள் ஆகியவைகளை ஹிந்து தினசரி ரத்தம் சொட்டச் சொட்ட
தாக்குவது அநீதி என்பதை ஹிந்துக்கள் உணரும் காலம் வந்து விட்டது.
மேலே குறிப்பிட்ட அயோத்தியா பிரச்சனை, முத்தலாக் சட்டம்,
370 & 35 A திருத்த சட்டம், குடியுரிமை திருத்த
சட்டம் ஆகியவைகள் அனைத்தும் நேர்மையாக அரசியல் சாசனத்தை மீறாமல் கொண்டு வரப்பட்டாலும்
அவைகள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் கோர்ட்டிலும், மீடியாவிலும்,
பத்திரிகைகளிலும் சர்ச்சையாக விவாதிப்பதைப் பார்க்கும் போது,
இவர்கள் அனைவரும் கோர்ட்டையோ – அரசியல் சாசனத்தையோ
– தேர்தல் வெற்றியையோ மதிக்காத கூட்டம் என்று தான் கணிக்கத் தோன்றுகிறது.
இவர்கள் இந்தியா ஒரு முஸ்லீம் நாடாக மாற வேண்டும் என்று மறைமுகமாக விரும்புவதாகவே
படுகிறது. இந்துக்களுக்கு இருப்பது இந்தியா ஒன்று தான்.
அதிலும் இந்துக்கள் இரண்டாந்தர அடிமைகளாக இருக்க வேண்டும் என்று தான்
ஹிந்துப் பத்திரிகை விரும்புகிறதா? – என்ற ஐயம் எழுகிறது.
காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்டும், கொடூரமாக கற்பழிக்கப்பட்டும்
அவதிப்படும் போதும் இந்த ஹிந்துப் பத்திரிகை முஸ்லீம்கள் தான் அதற்குக் காரணம் என்று
அறிந்த ஒரே காரணத்தினால் அப்போதுள்ள காங்கிரசையோ, முஸ்லீம்களையோ
எந்த அம்பைகளையும் எய்து ரத்தம் வர தன் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. ஜம்மு – காஷ்மீர் இப்போது இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதையும்
நையாண்டி செய்வதையே ஹிந்து பத்திரிகை தனது கொள்கையாகக் கொண்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் – பயம். முன்பு அயல் நாட்டுப் பத்திரிகையின் கார்ட்டூன் படத்தினால் முஸ்லீம் சமூகம்
உலக அளவில் உக்கிரமாக போராட்டங்களில் ஈடுபட்டிருந்த தருணத்தில் ஹிந்துவில் ஒரு கார்ட்டூன்
போடப்பட்டு – அது என்ன என்று அறிவதற்கு முன்னேயே – தமிழ் நாட்டு முஸ்லீம்களின் எதிர்ப்பால் பயந்து – அதை
எடுத்ததுடன் பகிரங்கமான மன்னிப்புக் கேட்டது ஹிந்து. அதே பயத்தின்
அடிப்படையில் தான் ஹிந்துவின் மனநிலையும், வெளிப்பாடும் மாறாமல்
இன்றும் இருக்கிறது.
ஹிந்துக்களை அம்புகொண்டு ரணமாக்குவதில் ஹிந்து பத்திரிக்கை மாறும் நாள் என்னாளோ?
Comments