ரஜினி பேச்சு ஆன்மீக அரசியலுக்கு ரஜினி போட்ட பிள்ளையார் சுழியா?
ஆமாம் என்று சொல்லத் தோன்றுகிறது. ஹிந்துக்கள் எந்தக் காரியத்தைத்
தொடங்கினாலும், முதலில் பிள்ளையார் பூஜை செய்து தொடங்குவார்கள்.
அந்த மாதிரித் தான் ரஜினியும் தன் ஆன்மீக அரசியலின் ஆரம்பத்திற்கு ஒரு
பெரிய பிள்ளையார் சுழியாகப் போட்டு ஊடகங்கள் அதைப் பற்றியே பேசும் நிலையையும் உருவாக்கி
விட்டார்.
ரஜினி ஒரு தடவை சொன்னா அது நூறு தரவை சொன்னதற்குச் சமம். அவரது பேச்சு – சும்மா அதிரிதில்லே – ரகம். தர்பார்
சினிமா பாணியில் சொல்வதென்றால் – சும்மா கிழி – என்று தான் கர்ஜிக்கத் தோன்றுகிறது. தி.க., திமுக மற்றும் அதிமுக கட்சிகள் ரஜினியின் இந்த விஸ்ரூப
அதிரடிப் பேச்சால் அதிர்ந்து எதிர்கொள்ளும் யுக்தி தெரியாமல் திக்குமுக்காடி இருக்கும்
நிலையையும் பார்க்கிறோம்.
திராவிடக் கழக வீரமணி கூட ‘ஹிந்துக்கள் எந்தக் காரியத்தைத் தொடங்குவதாக
இருப்பினும், பிள்ளையார் பூஜை செய்து தொடங்குவது வழக்கம்.
அதே போல் தான் பெரியாரும் ஹிந்து எதிர்ப்பிற்கு பிள்ளையார் சிலைகளை பொது
மேடைகளில் உடைக்கும் போராட்டத்தைத் தொடங்கிகினார்’ என்று விளக்கம்
கூறினார்.
ரஜினிகாந்
14-01-2020 அன்று நடந்த 50-வது துக்ளக் விழாவில்
இரண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்:
ஒன்று:
முரசொலி வைத்திருப்பவர்
தி.மு.க.தொண்டர். துக்ளக் வைத்திருப்பவர் அறிவாளி.
மற்றொன்று:
24-01-1971-ல் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு
பெரியார் ஊர்வலம் சென்றார். அதை யாரும் பத்திரிகையில் போடவில்லை. சோ அதை அட்டைப்படத்தில்
போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அப்போது முதல்வர் கருணாநிதிக்குச் சிக்கல்
உருவானது. அதன் பின்னர் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். அதற்கு அடுத்த வாரம்
மீண்டும் அச்சடித்து கருப்பு நிறத்தில் அட்டை வெளியிட்டார் சோ. அந்தப் பத்திரிகை
அதிக அளவில் விற்றது. அதன்மூலம் பத்திரிகை உலகில் பிரபலமானார் சோ. அதற்குக்
காரணமானவர் கருணாநிதி. அதற்கு அடுத்த இதழில் தங்கள் பத்திரிகையின் பப்ளிசிட்டி
மேனேஜர் என்று கலைஞர் படத்தைப் பெரிதாகப் போட்டார் சோ.
24
ஜனவரி. 1971-ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில்
நடந்த இந்து விரோத பேரணியில் ராமர், சிவன், விநாயகர், பார்வதி, பூமாதேவி போன்ற
கடவுள்களின் படங்களை நிர்வாணமாக வரைந்து, செருப்பால் அடித்துக்கொண்டே
ஊர்வலமாகச் சென்றனர். இந்த சம்பவத்தை அப்போது துணிச்சலாக படங்களுடன்
துக்ளக் பத்திரிகை வெளியிட்டது. இதனால் துக்ளக்
பத்திரிகையின் பிரதிகள் அனைத்தையும் அன்றைய கருணாநிதி அரசு பறிமுதல் செய்தது. இதன்
மூலம் துக்ளக், அகில இந்திய அளவில்
பிரபலம் ஆனது.
தி.க.வினர் இந்த ரஜினியின் பேச்சிற்கு எதிர்ப்புத் தெரிவித்து,
ரஜினி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது வீட்டின் முன் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
ரஜினி அதற்கு தன் வீட்டின் முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து
விளக்கினார்: ‘நான் நடந்ததைத் தான் சொன்னேன். அப்போது அவுட்லுக் போன்ற
பத்திரிகைகளில் வந்த செய்தியைத் தான் வெளியிட்டேன். அதன் நகல்கள்
இதோ இருக்கிறது. நான்
கற்பனையாக எதையும் கூறவில்லை.
எனது
பேச்சிற்கு மன்னிப்போ அல்லது வருத்தமோ தெரிவிக்க முடியாது.
ஆகையால் நான் மன்னிப்புக் கேட்கும் அவசியமே எழவில்லை. இந்த சம்பவம் மறுக்கப்பட வேண்டிய விஷயமில்லை. மறக்கவேண்டிய
விஷயமே!’ என்று நறுக்து தெரித்தாற்போல் பேசிவிட்டு, தம் வீட்டிற்குள் ரஜினி சென்று விட்டார்.
25-01-1971-ல்
– அதாவது திகவின்
‘மூட நம்பிக்கையை
ஒழிக்கும் மாநாடு’ பற்றி ஆங்கில ஹிந்து நாளிதழ் ‘ஆபாச உருவங்களை எதிர்த்துப்
போராட்டம்’ என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டுள்ளது.
24-01-1971
அன்று திகவினர் ஹிந்துக்கடவுள்களான முருகனின் பிறப்பு, மோஹினி அவதாரம், 10 அடி உயர ராமர் மர கட் அவுட் ஆகியவைகளை
மிகவும் அருவருக்கத் தக்க முறையில் சித்தரித்து வண்டிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அந்த வண்டிகளில் உள்ள ஹிந்துக்கடவுள்களை வண்டிகளில் உள்ள
10-12 பேர்களுக்கும் மேல் செருப்பால் அடித்துக்கொண்டே இருந்தனர். இந்த வண்டிகள் பெரியார் அமர்ந்து
செல்லும் டிராக்டருக்கு முன்னே சென்றன.
ஊர்வலம் முடிந்தவுடன்
10 அடி உயரமுள்ள மரத்தினால் செய்யப்பட்ட ராமர் உருவம் எரியூட்டப்பட்டது.
‘ராமர் ஒழிக’ என்ற கோஷங்கள் அப்போது எழுப்பப்பட்டன.
சேலம் செவ்வாய்
பேட்டையில் இராமபிரானை செருப்பால் அடித்த பெரியார் என்று துக்ளக்கில் கட்டுரை
வெளிவந்தது இது உண்மை சம்பவம் ஆகும் ஆனால் அன்றைய திமுக கருணாநிதி இந்த கட்டுரையை
வெளியிட தடை விதித்தார். துக்ளக் நிறுவனர் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த
வழக்கில் சோ வெற்றி பெற்றார். மேலும் சின்ன அண்ணாமலை ‘ஸ்ரீ ராமனையும், முருகனையும்
செருப்பால் அடித்த பெரியாருக்கு சிலைகளைத் திறந்த சீடருக்கா உங்கள் ஓட்டு?’
என்ற போஸ்டர்கள் அப்போதைய கருணாநிதி அரசு பறிமுதல் செய்ததை எதிர்த்து
கோர்ட்டில் வாதாடி அந்த போஸ்டர்களை திரும்பப் பெற உத்திரவாகி அந்த கேசில் வெற்றி அடைந்தார்
சின்ன அண்ணாமலை.
முன்பெல்லாம்
திகவினர் ஹிந்து கடவுள்கள் அவமதிப்பு – ராமர் பட எரிப்பு – பிள்ளையார் சிலைகள் உடைப்பு ஆகியவைகளை
எல்லாம் தங்களின் வெற்றியாக முழங்கி பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும்
பிரசாரம் செய்வார்கள். ஆனால் இப்போது காலம் மாறி விட்டது.
ஹிந்துக்கள் விழித்து விட்டார்கள்.
ஆகையால்
தான் ‘ராமரை செருப்பால் அடிக்க வில்லை. ஜனசங்கத்தினர் வீசிய செருப்பால் அடித்தோம்’ என்று சப்பை
கட்டு கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனால்,
கடந்தகால ஆவணங்களை இப்போது பலர் வெளியிட்டு திக – திமுக வின் முகத்திரையைக் கிழிக்கிறார்கள். இதிலிருந்து
அவர்கள் தப்புவது சற்று கடினம் என்பது தான் இப்போதையை அரசியல் நிலை.
ஹிந்துக்களும்
ஒற்றுமையாக ஓட்டு வங்கியாகச் செயல்பட ஆரம்பித்துள்ளனர். அது ரஜினிக்குச் சாதகமாக அமையவும் வாய்ப்புள்ளது.
அரசியலுக்கு
ரஜினி லேட்டா வந்தாலும், லேட்டஸ்ஸாக வருவார்
என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் நாட்டு
அரசியலில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து விட்டது. திராவிட இயக்கக் கொள்கைகள் காலாவதி ஆகி விட்டன. புதிய
ரத்தம் அவசியம். இது அவசரத் தேவையாகும். அதற்கு ரஜினியின் ஆன்மீக அரசியல் ஒரு தீர்வாகும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
ரஜினி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர் கொண்டால்
பலன் கிட்டும் என்று நம்பத் தோன்றுகிறது.
இனியும்
காலம் தாழ்த்தாமல் களம் இறங்கவேண்டும். தைரியம் அவசியம். நம்பிக்கையோடு செயல்பட வேண்டும்.
வெற்றி நிச்சயம்.
Comments