குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 – Citizenship Amendment Act (CAA) - 2019



குடியுரிமைச் சட்டம் இந்தியா சுதந்திரம் பெற்ற ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1955-ல் நிறைவேற்றப்பட்டது. இந்தியக் குடிமகன் என்பதை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 1-ல் – 5-லிருந்து 11-வரையிலுள்ள ஆர்ட்டிகிள் வரையறை செய்யும். அதற்கான விரிவான விதிகள் குடியுரிமைச் சட்டம் 1955-ல் காணப்படும். இந்தச் சட்டம் 1986, 1992, 2003, 2005 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறைகள் திருத்தப்பட்டுள்ளன. இப்போது மோடி அரசால் கொண்டுவரப்பட்ட திருத்தம் 2019 அந்த குடியுரிமைச் சட்டத்தின் ஐந்தாவது திருத்தமாகும். ஆகையால் இது ஏதோ மோடி அரசால் புதிதாகக் கொண்டுவரப்படும் சட்டம் போல் சித்திரிக்கப் படுவது தவறு.

மேலும் 2003-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்திருத்தம் (இரண்டாவது திருத்தம்) இந்திய குடிமக்களின் தேசிய பதிவு ஏடு (National Register of Citizens – NRC) இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும். அதை அஸ்ஸாமில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1951 அடிப்படையில் இந்த இந்திய குடிமக்களின் தேசியப்பதிவு நடத்தபட 2005 வருடத்தில் அப்போதைய அரசு உறுதி அளித்தும் அந்தச் செயல் சரிவர நடைபெறாத காரணத்தினால், உச்ச நீதிமன்றம்கடந்த 10 வருடங்களாக இந்தத் குடிமக்களின் தேசியப் பதிவு சரிவரச் செயல்படவில்லை. ஆகையால் அதைத் துரிதப்படுத்த எங்கள் நேரடிப் பார்வையில் கண்காணிப்போம்என்று 2013 வருடம் எச்சரித்தனர். அதற்குப் பிறகு பதவி ஏற்ற மோடி அரசு தான் அந்த மிகப் பெரிய வேலையை முடித்து, அதன் விவரங்களை 31-08-2019 வெளியிட்டு அதில் மொத்தமுள்ள 33 மில்லியன் பேர்களில் 31 மில்லியன் பேர்கள் பதிவிற்கு ஏற்றதாகவும், 2 மில்லியன் பேர்கள் விடுபடும் நிலையிலும் இருப்பதால் அதிலும் பல சிக்கல்களைச் சமாளிக்கும் நிலையில் மோடி அரசு இருக்கிறது.
குடியுரிமைச் சட்டத் திருத்தம் – 2019-ப் பற்றி விவரிப்பதற்கு முன் இன்னும் இரண்டு விஷயங்களையும் தெரிந்து கொண்டால் தான் உண்மை நிலையை உணரமுடியும்.

அந்த இரண்டு விஷயங்கள் வடகிழக்கு எல்லை மா நிலங்களான அருணாசல் பிரதேசம், நாகாலந்து, மணிப்பூர், மிசோராம், அஸ்ஸாம், மேகாலயா, திருபுரா ஆகிய 7 மா நிலப் பிரச்சனைகளாகும் 

1. இன்னர் லைன் பெர்மிட்Inner Line Permit
2. ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகளில் பிறர் குடியேறுதலைத் தடுத்தல்
Restrictions for Rehabilitation of others in Tribal Areas

மிசோராம் மாநிலத்திற்கு மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு விதிகளும் பொருந்தும்.

இன்னர் லைன் பெர்மிட் என்பது மிசோராமுடன் அருணாசலப்பிரதேசம், நாகாலாந்து, மணிபூர் ஆகிய மாநிலத்திற்கும், ஆதிவாசிகள் வசிக்கும் பகுதியில் குடியேற்றத் தடையில் மிசோராமுடன் அஸ்ஸாம், மேகாலயா, திரிப்புரா ஆகிய மாநிலங்கள் வருகின்றன. மற்றவர்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்களாக இருப்பினும், அவர்களை எந்தக் கட்டுப்பாடும் இன்றி அனுமதித்தால் தங்கள் இனக் கலாச்சாரம், ஆதிவாசி மக்கள் தொகை பாதிக்கப்பட்டு, அவர்கள் மொழி, பண்பாடு அழியும் நிலை உண்டாவைத் தடுப்பதற்காக இந்த நிலைப்பாடு என்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவைகளை மோடி அரசு அங்கீகரித்து அதற்கு உட்பட்டே இந்தியக் குடியுரிமைத் திருத்த சட்டம் இந்திய குடிமகனின் தேசியப் பதிவுNational Register of Citizenship ஆகியவைகள் அமல் படுத்தப்படும் என்பதையும் தெளிவு படுத்து உள்ளனர்.

என் தனிப்பட்ட கருத்து இந்தமாதிரியான தடைகள் வடகிழக்கு பின் தங்கிய மாநிலங்களின் வளர்ச்சியையும், முற்போக்கு கருத்துக்களுக்கும் இடையூறாக இருக்கும் என்பதாகும். மேலும் மோடி அரசு தான் இந்த ஏழு மாநில வளர்ச்சியை ஊக்கபடுத்தியும், அந்த மாநில மக்கள் இந்தியாவின் மற்றப் பகுதிகளில் வேலை செய்யும் சூழ்நிலையும் உண்டாக்கி உள்ளார். ஆகையால் பழைமைவாதிகள் போல் பல புதிய கருத்துக்களுக்கும், புதிய கருவிகளுக்கும், புதிய சமூக நலத் திட்டங்களுக்கும் தங்கள் மாநிலத்தில் ஏற்படுத்த அனுமதிக்க வேண்டும். அவர்கள் மாநிலம் முந்தைய காஷ்மீர் போல் தனித் தீவாக உருமாற வழிவகிக்கக் கூடாது என்பது தான் என் கவலை. ஆனால் இது மோடியால் கூட தீர்க்க முடியாது என்று தான் படுகிறது. அந்த மாநிலத்தலைவர்களே சுய நலத்தை விட்டுஒரே நாடுஒரே இனம்அனைவரும் இந்தியர்களேஎன்ற மோடியின் ‘‘IDEA OF INDIA” என்ற உயர்ந்த கருத்தில் பாடுபட்டால் தான் சாத்தியமாகும். அதற்கு இன்னொரு மோடி பிறக்க வேண்டும்.

இப்போது தேசிய குடியுரிமை திருத்த சட்டம்இந்தியக் குடிமகனின் தேசியப் பதிவு ஆகிய இரண்டினையும் விரிவாக இப்போது பார்க்கலாம்.
இதுவரை குடியுரிமைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட முந்தைய நான்கு திருத்தங்களும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு அவர்கள் குடியுரிமையைப் பெறுவதைத் தடை செய்யவே இயற்றப்பட்டன

தகுந்த பயண ஆவணங்கள் இல்லாவிடிலோ அல்லது பயண ஆவணங்களால் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு அப்பால் நாட்டில் தங்கியிருந்த பிற நாடுகளின் குடிமக்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என இந்தச் சட்டம் வரையறை செய்துள்ளது. இந்த நபர்களை நாடு கடத்தவோ அல்லது சிறையில் அடைக்கவோ இந்த முந்தைய நான்கு சட்டத் திருத்தம் அனுமதித்தது.

மோடி அரசு இப்போது கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் – 2019 ஒரு விதிவிலக்கு கொண்டு வந்துள்ளது.

அந்த திருத்தத்தின் மூலம் இந்தியாவின் அண்டை முஸ்லீம் நாடுகளான பாகிஸ்தான், பங்களா தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய முன்று நாடுகளிலிருந்தும் அங்குள்ள பெரும்பான்மை முஸ்லீம் மதத்தினர்களால் பலவித கொடுமைகளுக்கு ஆட்பட்ட சிறுபான்மை மதத்தினர்களான ஹிந்துக்கள், சீக்கியர்கள், புத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள், கிருஸ்துவர்கள் ஆகியவர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வந்து கடந்த 70 ஆண்டுகளாக அவதிப்பட்டவர்களுக்கு குடியுரிமையை வழங்க வழி வகுத்துள்ளது. இந்த ஆறு சிறுபான்மை மதத்தினர்கள் அந்த மூன்று முஸ்லீம் மத நாட்டிலிருந்து மதக் கொடுமைகளால் இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களாக இருக்க வேண்டும். 31-12-2014-க்கு முன் இப்படி தஞ்சம் புகுந்த ஆறு சிறுபான்மை மத்தினர்களுக்குஅவர்கள் 11 வருடங்கள் இந்தியாவில் தங்கி இருக்க வேண்டிய காலத்தையும் 5 வருடங்களாகவும் குறைத்துஅவர்கள் இந்தியக் குடியுரிமையை பெற வழி வகுத்துள்ளது இந்த 2019 சட்ட திருத்தம்.

இந்த திருத்த மசோதாவைக் கொண்டு வருவோம் என்று பாரதிய ஜனதா கட்சி லோக் சபா தேர்தல்கள் 2014 & 2019 இரண்டிலும் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதன் படி 2016-ல் மோடி அரசு இதே திருத்தத்தை லோக்சபாவில் கொண்டு வந்து நிறைவேற்றினாலும், ராஜ்ய சபாவில் அதனால் திருத்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அந்த மசோதா 12-08-2016 அன்று கூட்டு பார்லிமெண்ட் கமிட்டிக்கு பரிந்துறை செய்து, அதுவும் 07-01-2019 அன்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன் பிறகு தான் இப்போதையை 2019 குடியுரிமை திருத்தம் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாகி உள்ளது.

இருசபைகளிலும் பலமணி நேரங்கள் விவாதம் நடந்துள்ளது. அதில் இப்போது எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளன. அனேகமாக அனைத்துக் கட்சிகளும் இந்த விவாதங்களில் பங்கேற்றுள்ளனர். அப்படி இருப்பினும் ஜனநாயக மரபுபண்பு ஆகியவைகளை மதிக்காமல் பயங்கரமாக பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் அளிக்கும் வகையில் எதிர்க் கட்சிகளும், இடது சாரிமுஸ்லீம் கல்லூரி மாணவர்களும், முஸ்லீம்களும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது ஜனநாயக தர்மத்தை மதிக்காமலும், மக்கள் தேர்தலில் வாக்களித்ததை ஏற்காமலும் இருக்கும் எதிர்க்கட்சிகளால் நாட்டிற்கு கேடு விளையும் என்பது திண்ணம்

உச்ச நீதி மன்றமும்சுதந்திரம் என்ற போர்வையில் மாணவர்கள் கலவரம்கல் எறிதல் ஆகியவைகள் ஈடுபடும் போது கோர்ட் தலையிடாது. கலவரம் நின்று அமைதி நிலவிய பிறகு தான் கோர்ட் இதை விசாரிக்கும்என்று கூறிவிட்டது.

இருப்பினும் எதிர்க்கட்சியினரின் கேள்விகளை எதிர்கொள்ளுவதும் அவசியம்.

  1.   கேள்வி: பாகிஸ்தானைச் சேர்ந்த அகமதியா மற்றும் ஷியாக்கள் போன்ற துன்புறுத்தப்பட்ட முஸ்லிம்கள், அண்டை பூட்டானைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் மற்றும் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியாக்கள் ஆகியோரை இந்த சட்டம் விலக்குகிறது. மேலும் ஸ்ரீலங்கத்தின் தமிழர்களுக்கு இந்த சட்டம் திருத்தத்தில் நிவாரணம் அளிக்கப்படவில்லை. ஏன் இந்த பாரபட்சம்?

பதில்: இது குறிப்பிட்ட மூன்று இஸ்லாமிய அண்டை நாடான பாகிஸ்தான், பங்களா தேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாட்டில் சிறுபான்மை இனமதத்தவர்கள் மதக் கலவரத்தால் அந்த நாட்டில் தங்கமுடியாமல் அண்டைநாடான இந்தியாவிற்குச் தஞ்சம் புகுந்தவர்களுக்கு மட்டும் ஒரே தவணையாக குடியுரிமை வழங்குவதில் உள்ள சட்டச் சிக்கலை நிவர்த்தி செய்து அவர்கள் இந்தியாவில் மற்றவர்களைப் போல் வாழ வகுத்துள்ளது. இது பரந்த இந்தியாவை மதத்தின் பேரால் பிரித்த அவலத்தால் நேர்ந்த தீய விளைவை 70 ஆண்டுகளுக்குப் பிறகு நீக்கிய செயலாகும். இதில் முஸ்லீம்கள் அஹமடையாஸ், ஹசாராத், ஷியாஸ் இவைகள் முஸ்லீம் மத்தின் பிரிவுகள் தானே அல்லாமல் தனி மதங்கலில்லை - ஆகியவர்கள் அந்த நாட்டில் மதத்தின் அடிப்படையில் தங்கும் உரிமை பெற்றவர்களாகவும், இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றுபவர்களாகவும், அதிகப் பெரும்பான்மை மதத்தினராகவும் இருப்பதால், அவர்களை சிறுபான்மை மதத்தவர்களுடன் சேர்ப்பது தவறான அணுகு முறையாகும். இது இந்த இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அப்பாற்பட்டதாகும். அவர்கள் தற்போது அமலில் உள்ள பல சட்டங்களின் மூலம் இந்திய குடியுரிமை பெறுவதற்கு எந்த தடையும் இல்லை

ரோகிங்காஸ், பூடான் விவகாரம் ஒரு அநியாயத்தை நிவர்த்தி செய்யும் போது அனைத்து அவலங்களையும் தீர்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை. மேலும் மியமினார் இந்தியாவின் எல்லையை ஒட்டிய நாடும் இல்லை. மேலும் ரோஹிங்கியா என்பது ஒரு தீவிரவாத இனமாகப் பார்க்கப்பட்டு, அவர்கள் மியான்மார் பவுத்த மத மக்களை தாக்கிய போது, ராணுவத்தால் விரட்டி அடிக்கப்பட்டவர்கள். ஆகையால் அவர்கள் சிறுபான்மை மதத்தால் துன்பம் அனுபவைத்தவர்கள் இல்லை

அதே போல் தான் தனி ஈழம் கேட்டு, போரிட்டுத் தோற்றவர்கள் இந்தியாவிற்கு அடைக்கலம் வந்த தமிழ் இனத்தவர்களை அவர்கள் விருப்பப் படி இலங்கையில் குடியமர்த்தும் செயல் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காணும் போது மற்றப் பிரச்சனைக்கும் தீர்வு காணவேண்டும் என்று சொல்வதை விடுத்து, ‘மற்றப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வரை, 70 வருடங்களாக அவதியுறும் மூன்று முஸ்லீம் நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்து அவதியுறும் ஹிந்துக்கள்-சீக்கியர்கள் போன்றவர்களின் கஷடங்களை நீக்கக் கூடாது என்ற அளவில் வெறுப்பு காட்டி தீவிரமாக போராடுவது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. மேலும் ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேறும் சிங்களவர்களுக்கு குடியுரிமை வழங்கப் போராடுவது போல் தான் பெரும்பான்மை மதத்தினர்களான முஸ்லீம்களுக்கு குடியுரிமையை இஸ்லாம் மத அடிப்படையில் இந்தியாவில் கோறுவதற்குச் சமமாகும்.

   2.   கேள்வி: இந்த திருத்தச் சட்டம் இந்தியாவின் மதச்சார்பற்ற  அரசியலமைப்பையும்,  14 வது பிரிவின் கீழ் சமத்துவத்திற்கான வாக்குறுதியையும் மீறி உள்ளது என்ற குற்றச் சாட்டிற்கு என்ன பதில்?

பதில்: இந்த திருத்தச் சட்டம் ஒரு குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இயற்றப்பட்டதாகும்..  – இந்திய குடியுரிமை இல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க இயற்றப்பட்ட சட்டமாகும். அரசியல் சாதனம் இந்தியக் குடியுரிமை உள்ளவர்களுக்குத் தான் பொருந்தும். மேலும் பல சட்டங்கள் பல சலுகைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் கொண்டுள்ளன. அனைத்து இந்திய மக்களுக்கும் பொருந்தும் பொதுவான சட்டம் இல்லை. ஹிந்துக் கோயில்கள் அரசாங்க ஆளுகையில் இருக்கும் போது, மசூதி சர்ச்சுகள் அந்தந்த மதத்தலைவர்களின் கண்காணிப்பில் உள்ளன. அதே போல் ஹிந்துப் பள்ளிகளுக்கும், மற்ற மதத்தினர்கள் நடத்தும் பள்ளிகளுக்கும் சட்டங்கள் மாறுபட்டுள்ளன. ஹஜ் புனித யாத்திரைக்கு உதவித் தொகை, மசூதி இமாம்களுக்கு சம்பளம் என்று பல சலுகைகள் கொடுக்கும் சட்டங்கள் உள்ளன. அவைகள் எல்லாம் அனைவரும் சமம்என்ற அரசியல் சாசனத்திற்குப் புறம்பானதாகவும், மதச் சார்பற்றதற்கு எதிரானதாகவும் வாய்ப்பளிப்பதாகத் தான் கொள்ள வேண்டும். ஆனால் இந்த குடியுரிமை திருத்த மசோதா ஏதோ முஸ்லீம்களைச் சேர்க்க வில்லை என்ற காரணம் காட்டி குறைகூறுவது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. சமூக நீதி, மனிதாபமான நியாயம் என்ற அடிப்படையில் இந்த திருத்தச் சட்டம் எந்த விதத்திலும் யாருடைய அடிப்படை உரிமையிலும் தலையிடவில்லை. மேலும், இது ஆர்டிக்கிள் 13, 14, 15, 16, 21 ஆகியவைகளை மீறவில்லை என்பது தெளிவு.

இந்த இந்திய குடியுரிமை திருத்த சட்டம் பார்லிமெண்டில் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனம் ஆர்டிகிள் 11-ல்பார்லிமெண்ட் குடியுரிமையை சட்டம் இயற்றி வரையறை செய்து ஒழுங்கு படுத்தும் அதிகாரம் பெற்றுள்ளது. இந்த அரசியல் சாசனத்தில் உள்ள எந்த ஷரத்துக்களும் பார்லிமெண்டின் இந்த அதிகாரத்தில் குறிக்கிடமுடியாது. ஒருவரின் குடியுரிமையைப் பறிப்பதோ அல்லது குடியுரிமையை ஒருவருக்கு கொடுப்பதோ அல்லது பிற பல குடியுரிமையைப் பற்றிய அனைத்து விஷயங்களிலும் பார்லிமெண்ட்டிற்கு முழு அதிகாரம் உண்டுஎன்று எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடம் இன்றி வழி வகுத்துள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

  3.   கேள்வி: இந்த குடியுரிமை திருத்த சட்டத்தால், இந்திய முஸ்லீம்கள் தங்கள் குடியுரிமையை இந்தியாவில் தொடர்ந்து இருக்க மீண்டும் நிரூபிக்க வேண்டும். அதற்கான ஆவணங்களை அவர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இது உண்மையா?

பதில்: அப்பட்டமான பொய். அபாண்டமான குற்றச் சாட்டு. இது இந்திய முஸ்லீம்களையோ வேறு யாரையும் பாதிக்காது. இது பாதிக்கப்பட்ட மதத்தின் பெயரால் கொடுமைகளை அனுபவித்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஆறு இனத்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகுக்கும் சட்டமாகும். இது யாருடைய குடியுரிமையையும் பறிக்க இயற்றப்பட்ட சட்டம் இல்லை.

  4.   கேள்வி: பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் முஸ்லீம்கள் இந்திய குடியுரிமை அல்லது அகதிகளாக வருவது இந்தச் சட்ட திருத்தம் தடை செய்கிறதா?

பதில்: இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் அந்த நாட்டு முஸ்லீம்கள் குடியுரிமை பெறமுடியாவிடினும், தற்போதுள்ள சட்டங்கள் விதிகள் மூலம் இந்திய அரசாங்கத்தை அனுகி குடியுரிமை பெறலாம்.

  5.   கேள்வி: என்.ஆர்.சி. என்ற தேசிய குடியுரிமை பதிவு ஏடு முறை முஸ்லீம் மதத்தினரைக் குறிவைத்து செயல்படும் விதிமுறையா?

பதில்: இல்லை. இந்த குடியுரிமைப் பதிவு என்பது இந்தியாவில் தங்கி இருக்கும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும். இதில் மதம்ஜாதிஇனம் ஆகிய பாகுபாடுகள் கிடையாது. இதன் நோக்கமே இந்தியாவில் சட்ட விரோதமாகத் தங்கி இருக்கும் மக்களை அடையாளம் காண பல வருடங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்டு ஆனால் நடைமுறைப் படுத்தாமல் இருக்கும் நிலையால், உச்ச நீதிமன்றம் தலையிட்டு, இதை முடிக்கி விட்டு, முதன் முதலில் அஸ்ஸாம் மாநிலத்தில் கொண்டு வரப்படுகின்றது. சட்ட விரோதமாக குடியேறியர்களை இப்போது அடையாளம் மட்டும் காணும் காரியம் நடைபெறுகிறது. அவர்களை உடனேயே நாடுகடத்துவதுதனிமைப் படுத்துவது ஆகியவைகளைப் பற்றிய ஒரு முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்த முயற்சி இந்தியா முழுவதும் முடிவடைய பல வருடங்கள் கால அவகாசம் அவசியம். மேலும் மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் அவசியம்.

  6.   கேள்வி: என்.ஆர்.சி.க்கு குடியுரிமை அத்தாட்சிப் பத்திரம் அவசியமா?

பதில்: இது ஒவ்வொருவரின் பெயர்களைப் பதிவு செய்து ஒரு பதிவு ஏடு தயார் செய்யும் முயற்சி ஆகும். எந்த ஆவணமும் இல்லாவிடினும், ஒரு சாட்சியின் வாக்கின் அடிப்படையிலும் அந்த நபர் பெயர் பதிவு செய்யப்படும். அதன் பிறகு தான் அந்த நபரின் குடியுரிமை நிர்ணயிக்கப்படும். அது ஏற்கனவே இருக்கும் குடியுரிமைச் சட்டம் – 1955-ன் கீழ் வரும் குடியுரிமை விதிகள் – 2009 அடிப்படையில் அந்த நபரின் குடியுரிமை தீர்மானிக்கப்படும். அதற்கு தற்போது ஐந்து வழி முறைகள் உண்டு: 1. பிறப்பு. 2. வம்சாவளி      3. பதிவு முறை 4. இயற்கையான பிறப்பு முறை 5. இந்தியாவில் புதிய பகுதிகள் சேர்க்கும் போது அங்குள்ள குடிமக்கள் குடியுரிமை.

  7.   கேள்வி: என்.ஆர்.சி. மோடி அரசின் புதிய வழிமுறையா?

பதில்: இல்லை. இது பத்தாண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் இருந்து, உச்ச நீதிமன்றம் தலையீட்டில் இது அதன் மேற்பார்வையில் முதன் முதலாக அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்படுத்தபடுகிறது. ஆகையால் இதை எதிர்ப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்புச் செயலாகும். சட்ட விரோதமாக அஸ்ஸாமில் புகுந்த ஊடுருவர்களை அடையாளம் காண 1985-ல் ராஜீவ் காந்தி அரசு என்.ஆர்.சி. ஏட்டை உருவாக்க ஒப்பந்தம் செய்து அதில் 25-03-1971 என்ற தேதியை இதற்கு ஒரு இலக்காக வைத்தார்கள். இது தான் ராஜிவ் காந்தியின்அஸ்ஸாம் ஒப்பந்தம்என்று சொல்லப்படுகிறது. அதன் படி இந்த தேதிக்கு முன் வந்த ஊடுருவல்காரர்கள் எந்த ஆவணவும் கொடுக்காமல் தங்கள் பெயரைப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். இதைச் செயல்படுத்துவதிலும் பல சிக்கல்கள் உள்ளன. ஆனால், இந்த என்.ஆர்.சி. எந்த ஒரு மதத்தினரையும் பழிவாங்க எழுந்த விதி அல்ல. இது அனைத்து இந்தியாவிற்கும் பொதுவான ஒன்று.

இதை எல்லாம் விட முக்கியமான சரித்திரச் சான்றுகளை அமித் ஷா மக்கள் முன் வைத்துள்ளார். அவைகள் மிகவும் அழுத்தமான வலிசேர்க்கும் காரணங்களாகும்.

அமித் ஷா ஜவஹர்லால் நேரு பாகிஸ்தான்இந்தியா மதத்தின் அடிப்படையில் துண்டாடப்பட்ட போது பேசியதாகக் குறிப்பிட்டது: ‘அரசியல் சுவரினால் பிரிக்கபட்டு நமது சுதந்திரக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் நமது சகோதரர்கள். அவர்கள் எப்போதும் சகோதரர்களாகவே இருப்பார்கள். நாம் அனைவரும் அவர்களது சுக துக்கங்களில் பங்குகொள்ளும் நமது சம உரிமை பங்குதாரர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்பொழுது விரும்பினாலும் இந்தியாவிற்கு வரலாம். அவர்களை வரவேற்போம்’.

அதே போல் ராஜேந்திரபிரசாத் ஜனாதிபதியாக பதவி ஏற்ற போது பேசியதையும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். ‘இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றவர்களை நாங்கள் குடியமர்த்த மிகவும் ஆவலோடு இருக்கிறோம். அவர்கள் சொல்லொனா கஷ்டங்களையும், சிரமங்களையும் பட்டவர்கள். அவர்கள் எப்போது இந்தியாவிற்கு வர முடிவெடுத்தாலும், அவர்களை நாங்கள் வரவேற்போம்என்று ராஜேந்திரபிரசாத் பேசி உள்ளார்.

அதே பாணியில் மஹாத்மா காந்தியும் 07-7-1947 அன்று பேசியது: ‘பாகிஸ்தானில் இப்போது வசிக்கும் ஹிந்துக்களும், சீக்கியர்களும்அவர்கள் பாகிஸ்தானில் வசிக்க விரும்பவில்லை என்றால் அவர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு தடையேதும் இல்லை. அவர்களுக்கு வேலை வாய்ப்பு, குடியுரிமை, கண்ணியத்துடனும், சந்தோஷமாகவும் வாழ வழிவகுப்பது இந்திய அரசின் முதல் கடமையாகும்.’

இப்போதைய காங்கிரஸ் ராஜஸ்தான் முதன் மந்திரி அசோக் கெய்லட் 2009-ல் அப்போதைய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மந்திரி ப. சிதம்பரத்திற்கு எழுதிய கடிதத்தையும் அமித் ஷா மேற்கோள் காட்டி உள்ளார்

அதன் வாசகம்: ‘பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவிற்கு வந்துள்ள ஹிந்துக்கள், சீக்கியர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்கள் எஸ்.சி/எஸ்.டி. இனத்தவர்கள். அவர்கள் மிகவும் மோசமான ஏழ்மை நிலையில் வாழ்கிறார்கள். அவர்கள் குடியுரிமை கேட்கிறார்கள். அவர்களுக்கு உடனேயே குடியுரிமை வழங்க வேண்டும்.’

ஆகையால், மோடி அரசின் குடியுரிமை திருத்த சட்டம் (CAA) இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு, ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் ஆகியவர்களின்முஸ்லீம் மதப் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு மதக் கலவரத்தினாலோ அல்லது தாங்களாகவோ வந்த சிறுபான்மை இந்துக்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுக்க வேண்டும்என்று சொன்னதைத் தான் நிறைவேற்றி உள்ளது

மேலும் 1950-ல் காங்கிரஸ் கமிட்டி  தீர்மானத்தில்பாகிஸ்தானிலிருந்து வரும்முஸ்லீம் அல்லாதவர்களைஇந்தியாவில் அனுமதித்து அடைக்கலம் கொடுக்க வலியுறுத்தி உள்ளது. இதேயே மஹாத்மா காந்தியும் 1947-ல் வற்புறித்து உள்ளார்

மேலும் 2003-ம் ஆண்டு மன்மோஹன் சிங் வாஜ்பாய் அரசு ஆட்சியின் போது ராஜ்ய சபாவில், ‘வங்காள தேசத்திலிருந்து விரட்டப்பட்ட சிறுபான்மை ஹிந்துக்களுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும். அதை உள் துறை அமைச்சர் அத்வானி உடனடியாகக் கவனித்து ஆவன செய்ய வேண்டும்என்று கோரிக்கை விட்ட போது, அத்வானியும்நியாயமான கோரிக்கை. அதைச் செய்வோம்என்று உறுதி அளித்தார்

ஆனால், அதற்குப் பிறகு பிரதம மந்திரியான மன்மோஹன் சிங் அதைச் செயல்படுத்தி இருக்கலாம். ஆனால் செய்ய வில்லை. ஆனால், இப்போது அவரது பரிந்துரையையே எதிர்க்கிறார். இது படித்த மேதைக்கு அழகா? என்று கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.

எல்லாம் கூட்டணி நெருக்கடி. சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தைத் திருப்திப்படுத்தும் காங்கிரஸ் தர்மம். சிறுபான்மையினருக்கு பொருளாதாரத்தில் முதல் உரிமைஎன்று தப்பிக்கும் குணவான் மன்மோஹன் சிங். ஆனால், காங்கிரசின் கொள்கையை அமல் படுத்தியதற்கு தற்போதையை சோனியா காங்கிரஸ் மூர்க்கமாக எதிர்க்கிறது

மேலும் யுகாந்தாவிலிருந்து வந்த ஹிந்துக்களுக்கு அப்போதைய காங்கிரஸ் அரசு அடைக்கலம் கொடுத்ததே? அப்படி இருக்கும் போது மதத்தின் அடிப்படையில் பிரிந்து போன பாகிஸ்தானிலிருந்து பெரும்பான்மை பாகிஸ்தான் முஸ்லீம் மதத்தினர்களால் கொடுமைப் படுத்தப்பட்டு 70 ஆண்டுகளுக்கும் மேலாக துன்பத்தில் உழன்று கிடக்கும் ஹிந்துசீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு சில சலுகைகள் அளித்து இந்திய குடியுரிமையை அளிப்பதை எதிர்ப்பது என்ன ஞாயம்

மேலும் அது இங்குள்ள குடியுரிமை பெற்ற இந்திய முஸ்லீம்களை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று டெல்லி ஜும்மா மசூதித் தலைவர் ஷாகி இமாம் சொல்லியும், அதையும் மீறி எதிர் கட்சிகள்இடது சாரி அமைப்புகள்மம்தா பானர்ஜீசில முஸ்லீம் யுனிவர்சிட்டிகள் கலவரம் செய்து, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்துள்ளனர்.

காங்கிரசின் முன்னால் மற்றும் இன்னாள் தலைவர்கள் இந்தியா சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து சொன்ன கோரிக்கையைத் தான் அமித் ஷா இந்த இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றி உள்ளது. அதைத் தான் இப்போது அதே காங்கிரஸ் இந்தத் திருத்தம் மதவாதம் என்றும், அரசியல் சாசனச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், மதச் சார்பற்றதற்கு புரம்பானது என்றும் குற்றம் சாட்டியதுடன், அதற்கு எதிராக வன்முறைப் போராட்டங்களையும் தலைமை ஏற்று பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்க ஊக்குவிக்கின்றனர்.

இந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் உடனடியாக பலன் அடைபவர்கள் வெறும் 25,000 ஹிந்த்துக்கள், 6,000 சீக்கியர்கள், 55 கிருஸ்துவர்கள், 2 பவுத்தர்கள், 2 பார்சிகள் மட்டும் தான். அதற்கே இத்தனை எதிர்ப்பா? என்று இந்தியாவின் பெரும்பான்மை ஹிந்துக்கள கவலைப் படவைத்துள்ளது ஒரு நல்ல அறிகுறி இல்லை

மோடி அரசு இதுவரை இந்தியாவில் உள்ள தற்போதைய சட்ட விதிகளின் படி 600 பாகிஸ்தான்பங்களா தேசம் - ஆப்கானிஸ்தான் முஸ்லீம்களுக்கும், 6 லட்சம் ஸ்ரீலங்கை தமிழ் அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்கி உள்ளது.

ஞாயமாக முஸ்லீம் அல்லாதவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இந்தச் சிறு சலுகைகளுக்கும் இந்துக்கள் போராட வேண்டி இருப்பதைப் பார்க்கும் பொழுது, இந்துக்கள் இன்னும் வலுவாக ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணம் வரும். இது தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயம் என்று இந்துக்கள் செயல்படுவது, இரு சமூகத்தவர்களுக்கும் நல்லதல்ல.

பொறுத்தது போதும், பொங்கி எழுஎன்று இந்துக்கள் ஒரு போதும் கொதித்து எழ மாட்டார்கள். ஏனென்றால் இந்து மதம்லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து; சர்வே ஜனா சுகினோ பவந்துஎன்பதை தாரக மந்திரமாக ஒவ்வொரு கணமும் தியானிக்கச் சொல்கிறது. ஆனால் முஸ்லீம்களின் தீய செயல்களிலிருந்து இந்துக்கள் அனைவரும் தங்களைக் காக்கஅரசியல்சமூகம்கலாச்சாரம்வாழ்வியல்ஆகிய அனைத்திலும் ஒன்று பட்டு செயல்பட வேண்டும். அதற்கு பெரும்பான்மையான இந்துக்கள் மோடி- அமித் ஷா அரசை மனமுவந்து ஆதரிக்க வேண்டும். எதெல்லாம் நடக்க முடியாது என்று நினைத்தோமோ அவைகள் எல்லாம் நிஜமாகி நடந்துள்ளன.

370 & 35 – தடை செய்யும் சட்டம், ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, முத்தலாக் தடைச் சட்டம், கங்கை சுத்திகரிப்பு, ஸ்மார்ட் சிட்டி, தூய்மைத் திட்டம், காசிக் கோயில்கள் மீட்பு, வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலன் காத்தல்பலரைச் சிறையிலிருந்து விடுவித்த அதிசயம், இலங்கை மீனர்களை தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றிய விந்தை, நேர்மையான ஊழலற்ற அரசு, சக்தி வாய்ந்த ராணுவம், அண்டை பாகிஸ்தானின் கொட்டத்தை அடக்கிய விதம்பட்டியல் நீளம். எதிர்க்கட்சிகள் சொல்லும் ஆதாரமற்ற குற்றச் சாட்டை செவிமடுக்காது, மோடி அரசை ஆதரிப்பது தான் இந்துக்களுக்குஏன் அனைத்து மதத்தவர்களுக்கும் நல்லது உண்டாகும்.





Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017