திண்ணைக் கச்சேரி பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம்

திண்ணைக் கச்சேரி பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம் நிருபர்: ராஹுல் இப்போது கனவு உலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டார் என்றே தோன்றுகிறது. அதுவும் குஜராத்திற்குச் சென்றாலே அவரது கனவு விண்ணுலகத்தில் சஞ்சரிக்க அவரது பேச்சும் அதை ஒட்டியே ஓடுகிறது. சமீபத்தில் குஜராத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகிறார். ஹிந்தியில் பேசினார். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இதன் வீடியோவைப் பார்த்து ஊர்ஜிதம் செய்த பிறகு தான் இதை எழுதுகிறேன். ஆகையால் இதன் உண்மைத் தன்மையை ஒருவரும் சந்தேகிக்க வேண்டாம். ‘குஜராத்தில் உள்ள உங்கள் நிலத்தினால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. நான் சந்திரனில் இயந்திரங்களை உழ அனுப்பி வைப்பேன். அங்கு நீங்கள் சந்திரனில் உருளைக்கிழங்கு பயிர் செய்யலாம். நீங்கள் அங்கு பயிர் செய்த உருளைக்கிழக்கை குஜராத்தில் விற்பனை செய்வதற்கு நான் உதவி செய்வேன்.’ என்பது தான் ராஹுலின் பேச்சு. வாசகர்: இது பட்ரோடா குருவின் தாக்கமாக இருக்கலாம். அந்த மா மேதை சமீபத்தில் சொன்னார்: ‘தேர்தல் ஓட்டு இயந்திரம் ஒன்றை என்னிடம் ஒரு வருடம் கொடுங்கள். அதை நான் ஆராய்ந்து அதில் உள்ள குறைகளைக் கண...