ரஃபேல் - திண்ணைக் கச்சேரி பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம்
வாசகர்:
ரஃவேல் போர் விமானம் வாங்க முந்தைய அரசு பேசிப் பேசியே நாட்களைக் கடத்தியது. பத்து
ஆண்டுகளாக எந்த உடன்படிக்கையும் செய்ய வில்லை. விமானம் வாங்க எங்கே இருக்கிறது பணம்?
– என்று அப்போதைய மந்திரி ஏ.கே.அந்தோனி வெளிப்படையாகவே ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், மோடி 36 போர் விமானங்கள் – இடைத்தரகர்கள் இன்றி – இன்றைய கால கட்டத்தில் உள்ள
அனைத்து திறனும் கொண்ட புதிய டெக்னாலஜியுடன் கூடிய விமானங்கள் – வாங்க முடிவெடுத்து
வெற்றி கண்டுள்ளார். இந்த துரித நடவடிக்கையிலும் விமானங்கள் இந்த வருடம் செப்டம்பரிலிருந்து
தான் இந்தியாவிற்கு வர இருக்கிறது. இது ஏதோ கடைக்குப் போய் ஒரு பொருள் வாங்குவது போல்
இல்லை. அடிப்படை விமானம் ஒரு விலை – அதில் இந்தியாவின் குறிப்பிட்ட அதிநவீன அம்சங்கள்
(India Specific Enhancement) சேர்த்து ஒரு விலை என்று ஒப்பந்தம் செய்த பிறகு தான்
அதற்கு ஏற்ப தயார் செய்யப்படும். இதற்கு கால அவகாசம் ஆகும். அந்த கால கட்டத்தில் சில
புதிய கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வந்தால் அதற்கான விலையையும் கொடுத்து, அதையும் சேர்க்க
வைப்பது தான் நாட்டு நலனில் அக்கரை கொண்ட தலைவர்களின் கடமையாகும். ஏனென்றால் இது ஏதோ
உள்ளாட்டு மக்களுக்கு சேவை செய்ய வாங்கும் பொருள் அல்ல. அப்படி இருப்பின், புதிய கண்டுபிடிப்புகளுடன்
மேம்பட்டவைகளைப் பிறகு வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இது நமது ராணுவம் – பாதுகாப்பு –
அண்டை நாட்டினரின் விமானத் தரம் ஆகியவைகளைப் பொருத்தது. மேலும், ராணுவ வீரர்களின் உயிரும்
மிகவும் முக்கியம். ஆகையால் விலை அதிகம் என்று சொல்லி, தரம் இல்லாத ராணுவ விமானங்களை
வாங்குவது தேசத் துரோகமாகும்.
பொது ஜனம்:
என். ராம் சமீபத்தில் ஹிந்துவில் – 36 ரஃவேல் விலை ஒவ்வொரு விமானமும் 41% அதிகம் கொடுத்து
மோடி அரசு வாங்கி உள்ளது என்று தலைப்புக் கொடுத்து ஒரு நீண்ட கட்டுரை எழுதி உள்ளார்.
(அதன் மின் இணைப்பு:
https://www.thehindu.com/news/national/modis-decision-to-buy-36-rafales-shot-the-price-of-each-jet-up-by-41/article26019165.ece)
இந்தத் தலைப்பே
தவறு என்பதை ராமின் முதல் பாராவிலேயே அவரே தெரியப்படுத்தும் விதமாக உள்ளது. இது
2007-ல் உள்ள € 90.41 மில்லியன் ஒப்பந்தத்துடன் 2016 பிரான்ஸ்-இந்திய அரசாங்க ஒப்பந்தம்
2016-ல் உள்ள € 127.86 உடன் ஒப்பிட்ட்டால், அது 41.42% அதிகம் என்று அவர் முதலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், விலையில் Escalation Cost என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டால், விலையில் ஒவ்வொரு
விமானமும் வாங்குவதிலும் 14.20% மட்டும் தான் அதிகம் என்கிறார் ராம். அப்படி என்றால்
41% அதிகம் என்று கொட்டை எழுத்தில் தலைப்பு கொடுத்தது எந்த விதத்தில் நியாயமாகும்.
உண்மையை ராம் ஆதாரிப்பவராக இருப்பின், 41% என்பதற்குப் பதில் 14% என்று தான் தலையங்கத்தில்
போட்டிருக்க வேண்டும். 41% எங்கே, 14% எங்கே? மேலும், இந்த விலைதான் ராம் கட்டுரையின்
ஆதார ஸ்ருதி. இதில் ராமின் தவறு 3 பங்கு அதிக அளவில் உள்ளதை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு
வருகிறேன். அதுவே அபஸ்ருதியாக ராமே ஒப்புக் கொண்ட பிறகு இதற்கு விளக்கம் ஒரு கேடா?
என்று தான் உண்மையான, நேர்மையான வாசகர்கள் தலையில் அடித்துக் கொள்வார்கள். இருப்பினும்,
இதற்கு நீண்ட விரிவான பதில் இந்த கீழே உள்ள மின் இணைப்பைச் சொடுக்கி அறிந்து கொள்ளலாம்.
மின் இணைப்பு:
https://www.opindia.com/2019/01/n-ram-is-lying-in-his-the-hindu-article-about-the-rafale-deal-heres-how/
விமரிசகர்:
ராகுலின் குற்றச் சாட்டில் ஒன்று: மோடி தான் யாருடனும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிட்சையாக
– சர்வாதிகாரி போன்று முடிவெடுத்தார். ராம் கட்டுரையைப் படிப்பவர்களுக்கு மோடி அரசு
பலவித அரசாங்க விதிகளின்படி படிப்படியாக ஒவ்வொரு கால கட்டத்திலும் விவாதம் நடத்தப்பட்டு,
சிலவற்றில் கருத்து வேறு பாடு இருக்கும் போது, மெஜாரிடியின் முடிவை ஏற்று செயல்பட்டதையும்
பல பாராக்களில் விவரித்துள்ளார். எந்த விதி முறை மீறலும் இல்லை என்பதை உச்ச நீதி மன்றமும்
தீர்ப்பு வழங்கி உள்ளதை இங்கே குறிப்பிட வேண்டும்.
நிருபர்:
ராம் இதில் ஊழல் உள்ளது என்பதை நேரடியாகச் சுட்டிக் காட்டவில்லை. அதற்கான எந்த ஆதாரங்களையும்
முன் வைக்க வில்லை. ‘விலை அதிகம். ஆகையால் ஊழல் நடந்திருக்க முகாந்திரம் உண்டு’ என்ற
அளவில் ராம் சொல்வதாகப் படுகிறது. என்றாலும், ஊழல் என்பதற்கு ராம் ராஹுலை மேற்கோள்
காட்டுகிறார். மேலும் இதில் ஊழல் என்று மூன்று மிகவும் பிரபலமான மக்கள் நல விரும்பிகளான
யஷ்வந்த் சிங்கா, அருண் ஷோரி, பிராசந்த் பூஷன் ஆகியவர்களும் சொல்லி இருக்கிறார்கள்
என்று தமது கட்டுரையில் குறிப்பிட்டு – ஆனால் அதுவும் நிரூபணமாகாமல் போய் விட்டது என்று
அங்கலாப்புடன் எழுதுகிறார். இது தான் பத்திரிகை தர்மமா? உச்ச நீதி மன்றமே – விலை –
ஒப்பந்தம் செய்ய எடுத்துக்கொண்ட வழிகாட்டு முறைகள் – ஆப் செட் விவகாரம் – ஆகியவைகளில்
மோடி அரசை எந்த வகையிலும் குற்றம் சொல்ல முடியாது என்று தீர்ப்பளித்த பிறகும், அதைப்
பற்றி ஒரு நீண்ட கட்டுரையை இந்து பத்திரிகை பிரசுரித்தது நேர்மையான செய்கையாகக் கொள்ள
முடியாது.
வாசகர்:
ஆப் செட் மொத்த தொகை 30,000 கோடி. அதில் 10% அளவில் தான் – அதாவது 3000 கோடியில் அனில்
அம்பானியின் ரிலையன்ஸ் டிவன்ஸ் கம்பனிக்கு கொடுப்பதாக உள்ளது. இந்தியாவில் இன்னும்
30 கம்பனிகளுடன் ரஃபேல் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் ஹிந்துஸ்தான்
ஹரால்ட் ஊழல் வழக்கில் பெயிலில் இருக்கும் ராஹுல் ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல
– பல முறைகள் மோடி 30000 கோடியை அனில் அம்பானிக்குக் கொடுத்து மோடி அதனால் லாபம் பெற்றார்
என்று கூறுகிறார். பல தேர்தல் கூட்டங்களிலும், பாராளுமன்றத்திலும் சொல்லி உள்ளார்.
இது பொய் என்று – அதுவும் குறிப்பாக 30,000 கோடி என்ற தொகை அப்பட்டமானது என்று ராமுக்குத்
தெரிந்தும் அதை ஏன் மறைத்தார்? இதை ஏன் சொல்கிறேன் என்றால் ராஹுல் ‘மோடி ஊழல்’ என்று
சொன்னதைச் சுட்டிக் காட்டியதால் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. உண்மைக்கு மதிப்பளிக்காத
இந்த ராமையும், ராஹுலையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஒரு பொறுப்புள்ள பத்திரிகை
ஆசிரியர் – அதுவும் ஹிந்து போன்ற பாரம்பரிய மிக்க பத்திரிகையில் இப்படி பொய்யான தகவல்களை
வெளியிடுவதற்கு அவர்கள் வெட்கப்படவேண்டும்.
விமரிசகர்:
ராம் தமது கட்டுரையில் குறிப்பிட்ட விபரங்கள் தாமே ஆராய்ந்து திரட்டிய மிகவும் முக்கியமான
தகவல்கள் என்று மார் தட்டுகிறார். ஆனால், அவைகள் அனைத்தும் முன்பே வெளியிடப்பட்டு விமரிசிக்கப்பட்ட
தகவல்கள் தான் என்பதால், ஏன் இப்படி மூத்த பத்திரிகையாளரான ராம் தரம் தாழ்ந்து காப்பி
அடித்து கட்டுரை எழுதுகிறார்? என்ற குற்றச் சாட்டு எழுகிறது. மேலும் நீங்கள் எழுதிய
குற்றச் சாட்டுக்களை மறுத்து எழுதிய கட்டுரைகளுக்கு உங்களின் பதில் என்ன? என்று ராமைக்
கேட்டால், அவர் டிவிட்டரில் ‘நான் என் தரப்பு வாதங்களைச் சொல்லி விட்டேன். அவ்வளவு
தான்’ என்று நழுவுகிறார்.
பொது ஜனம்:
இதை எல்லாம் தூக்கி அடிக்கும் ஒரு விவரம் ஒரு குற்றச் சாட்டாகவே ராம் – ராஹுல் – அருண்
ஷோரி – யஷ்வந்த் சிங் – பிரசாந்த் பூஷண் ஆகியவர்களின் மேல் எழுகிறது. ரஃபேலில் ஊழல்
இல்லை என்பதை உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கி விட்டது. மேலும், இது ஒரு அரசாங்கம்
இன்னொரு அரசாங்கத்துடனான ஒப்பந்தம் என்பதால் இடைத் தரகரோ – ஊழல் எழவோ வாய்ப்போ இல்லை
என்பதும் நிரூபணமாகி விட்டது. என்றாலும் ஏன் ராஹுல் – ராம் மீண்டும் மீண்டும் ரஃபேல்
பெயரை மீடியாவில் பரவவிடுகிறார்கள் என்ற சந்தேகம் எழுவது நியாயமே. Eurofighter
Typhoons என்ற யு.எஸ். போர் விமானம் ரஃபேலின் போட்டி கம்பனியாகும். இரண்டு விமானங்களும்
தரத்தில் ஒன்று என்றாலும் (இது முந்தைய காங்கிரஸ் அரசின் தீர்ப்பு. அதை மோடி ஏற்றுக்
கொண்டுள்ளார். ஏற்காவிடில் ஜெட் விமானம் வாங்குவதில் இன்னும் காலதாமதம் ஆகும் என்பது
தான் அப்போதைய நிலை) அப்போதைய காங்கிரஸ் அரசு விலை குறைவு என்பதால் ரஃபேலை வாங்க ஒப்பந்தம்
செய்ததாக ராம் சொல்கிறார். ஆனால், தனக்கு ஒப்பந்தம் கிடைக்காது என்பதை அறிந்த இரோஃபைட்டர்
டைபூன் கம்பனி விலையை 20% குறைப்பதாக ஜூலை 4, 2014 அன்று மோடி அரசிடம் தெரிவித்துள்ளதால்,
ஏன் யு.எஸ். விமானத்தை வாங்கவில்லை? என்று ராம் கேள்வி கேட்கிறார்.
இது அந்தக் கம்பனியின்
நம்பகத் தன்மையை கேலிகுறியதாக்குகிறது. ஏன் இதை முன்பே அந்தக் கம்பனி அரசுக்கு தன்
குறைந்த விலையைத் தெரியப்படுத்த வில்லை என்பதற்கு பதில் இல்லை.
மோடி அரசு ரபேல் விமானம் வாங்குவது நிச்சயமான நேரத்தில்
இந்த 20% குறைவான விலையை வெளிப்படுத்துவதில் ஒரு நேர்மை இருப்பதாகத் தெரியவில்லை. மேலும்
இந்த ரபேலுக்குப் பதில் வேறு விமானம் வாங்குவதானால் - இந்த மாற்றத்தினால், விமானம்
பெற இன்னும் கால தாமதம் ஆகும்.
இதை எல்லாம் ஒன்றாகப் பார்க்கும் போது, ராம்-ராஹுல்
கூட்டணி ஏதோ அந்த யு.எஸ். கம்பனிக்கு விளம்பரத் தூதராகவும், வியாபாரத் தரகராகவும் செயல்படுவதாகவே
ஐய்யம் கொள்ளத் தோன்றுகிறது. இதையே செயற்கையான பூகம்பத்தை உருவாக்கும் செயல் என்று
நிர்மலா சீதாராமன் குறிப்பிடுகிறார். இவர்களுக்கு இந்தியாவின் ஆகாயப்படையைத் துரிதமாக
– விலையைப் பார்க்காமல் சந்தையில் உள்ள அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய போர் விமானங்களை
– நமது படைவீரர்களின் பாதுகாப்பை முன்னிலைப் படுத்தி – வாங்கி இந்தியாவின் விமானப்
படையை சக்தி வாய்ந்ததாக ஆக்குவதில் ஆர்வம் கிடையாது என்பதைத் தான் அவர்களது கீழ்த்தரமான
மனது – சிந்தனை செய்கிறது. மோடியை எப்படியாவது குறைகூறி, அவரை 2019- தேர்தலில் தோற்கடிக்க
வேண்டும் என்ற சதிதான் ராமின் கட்டுரைக்கு அடித்தளம்.
இதற்கு ராம்-ராஹுல் எவ்வளவு பணம்
யு.எஸ். கம்பனியிடம் பெற்றார்? என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது.
பொது ஜனம்:
சமீபத்தில் முஸ்லீம் தேசங்களுக்கு ராஹுல் பயணம் செய்து உரை ஆற்றி உள்ளார். ஒரு இடத்தில்
ராஹுல் வீராவேசமாகப் பேசுகிறார்: காந்திஜியின் சத்தியாக்கிரஹத்தின் பின்னணி எது தெரியுமா?
அவர் புராதனமான இந்து தத்துவம் மற்றும் இஸ்லாம் மதக் கோட்பாடு ஆகியவைகளின் அடிப்படையில்
உருவானதாகும் என்று முழங்கினார். இது தான் ராஹுல் பப்பு என்பதை உறுதி செய்கிறது. குரானில்
‘இஸ்லாம் வாளை நம்பும் மதம்’ என்ற வாசகம் பல இடங்களில் வரும். ஆகையால் காந்திஜியும்
முஸ்லீம் மதத்தினர் தங்கள் மன நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பல கட்டுரைகளை
யங் இந்தியா பத்திரிகையில் எழுதி உள்ளார். இது ஓட்டை மனத்தில் வைத்துச் சொன்னதாகவே
எடுத்துக் கொள்ள வேண்டும்.
நிருபர்:
இதை விட ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ராஹுலின் அந்த முஸ்லீம் நாட்டு இரண்டு நாள் பயணத்தில்
நடந்தேறியது. ராஹுல் துபாயில் இந்திய வம்சாவளியினரிடம் பேசும் போது, ஒரு 14 வயது தமிழ்
நாட்டு சிவகங்கையைச் சேர்ந்த சிறுமி இரண்டு கேள்விகளைக் கேட்டாள்.
முதல் கேள்வி:
ராஹுல்ஜி! இந்தியாவில் ஜாதி வித்தியாசங்கள் அதிகம் உள்ளன என்கிறீர்கள். ஆனால், அதே
சமயத்தில் நீங்களோ குஜராத்தில் ஹிந்துவாக உங்களைக் காட்ட நெற்றியில் விபூதி அணிந்து
கொள்கிறீர்கள். காஷ்மீரில் நீங்கள் முஸ்லீமாக உங்களைக் காட்ட தலையில் முஸ்லீம் குல்லாவைத்
தரிக்கிறீர்கள். ஏன்?
ராஹுல் பதில்:
அனைத்து மதங்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்தச்
செய்கைகள்.
இரண்டாவது கேள்வி:
காங்கிரஸ் பல பத்தாண்டுகளாக இந்தியாவை ஆண்டதாகப் பெருமை கொள்கிறது. அப்போதெல்லாம் நலத்
திட்டங்கள், வளர்ச்சிகளை ஏற்படுத்தாத போது, இப்போது காங்கிரசால் அவைகளை எப்படி நிறைவேற்ற
முடியும்?
இதை எதிர்பார்க்காத
காங்கிரஸ் அமைப்பாளர்கள் உடனேயே நேரடி ஒலிபரப்பை நிறுத்தி விட்டார்கள்.
அந்தச் சிறுமி
மேலும் சொன்ன சொற்கள் ராஹுலை நிலை குலைய வைக்கும் என்பது திண்ணம்.
சிறுமியின் உரை:
பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்டங்கள் இந்தியாவை உயர்த்தி உள்ளது. இப்போது தான் இந்தியா
ஒரு மதிக்கப்படும் நாடாக உருவாகி உள்ளது. நீங்கள் ஊழல் அற்ற ஆட்சியை அளிப்போம் என்று
சொல்லி ஓட்டுக் கேட்பதை விட்டு, சாதியின் பேரால் சமூகத்தைப் பிளவு படுத்தி ஓட்டுக்
கேட்காதீர்கள்.
இதைக் கேட்ட அங்குள்ள
மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவர்கள் கர ஒலி எழுப்பி அரங்கமே அதிர வைத்தார்கள்.
அப்போது ராஹுலின் முகபாவனையைப் பார்க்க வேண்டும்.
கண்ணடித்து புகழ் பெற்ற ராஹுலுக்கு
அந்தச் சிறுமி சரியான சவுக்கடி – அதுவும் அயல் நாட்டில் – முஸ்லீம் தேசத்தில் கொடுக்கப்பட்டது.
ஆனால் ராஹுல் இதிலிருந்து எந்தப் பாடமும் கற்க முயலமாட்டார் என்பது மட்டும் திண்ணம்.
இது தான் காங்கிரசின்
நேர்மை. ராஹுல் ‘காங்கிரஸ்காரர்கள் அனைவரும் அன்பு, மதிப்பு ஆகியவைகளைத் தான் நம்புகிறோம்’
என்று சொல்லி பார்லிமெண்டிலேயே கண்ணடித்து மக்களை ஏமாற்றும் ராஹுலை எப்படி எடை போடுவது
என்பதே தெரியவில்லை.
விமரிசகர்:
ராஹுல் காந்தி இந்தியாவின் அடுத்த பாரதப்பிரதமராக தி.மு.க. ஆதரிக்கிறது என்று ஸ்டாலின்
ராஹுல் – சோனியா முன்னலியில் சொன்ன வேளையில் அவர்கள் இரண்டு பேர்களும் ஆனந்த சாகரத்தில்
மூழ்கினார்கள். ஆனால், ஸ்டாலின் எந்த வேளையில் இதைச் சொன்னோரோ தெரியவில்லை. ஸ்டாலின்
சொற்கள் சனிபுகுந்த அவச் சொல்லாக மாறி ராஹுலை அலைக்கழிக்கும் அவல நிலைக்கு தள்ளி விட்டது.
காங்கிரஸை அகிலேஷ் – மாயாவதி உத்திரப்பிரதேசத்தில் தள்ளி வைத்து கூட்டணி அமைத்து விட்டனர்.
சந்திரபாபு நாயுடுவும் காங்கிரசை ஒதுக்கும் நிலை தெரிகிறது. ஏன், தி.மு.க.ஸ்டானிலும்
‘ராஹுல் பிரதமராவது தமிழ் நாட்டு மக்களின் விரும்பம். அது தி.மு.க.வின் விருப்பம் என்று
கொள்ள முடியாது’ என்று பின் வாங்கி உள்ளார்.
மேற்கு வங்காளத்தில் மமம்தா முன்னிலையில்.
மூத்தவர் தேவ கவுடா – காங்கிரசுடன் கூட்டணை ஆட்சி செய்யும் ஜனதா தளம் (செக்குலர்) கட்சியின்
தலைவர் – ‘தேர்தல் முடிந்த பிறகு தான் பிரதமந்திரித் தேர்வு’ என்று உபதேசம் செய்கிறார்.
அவரது மகனும், இப்போதைய காங்கிரசின் தயவில் கர்நாடக முதல் மந்திரியாக இருக்கும் குமாரஸ்வாமியும்
‘மம்தா தான் மோடியை எதிர்க்கும் சக்தி வாய்ந்த பிரதம மந்திர் வேட்பாளர்’ என்று அப்பாவிற்கு
ஆமாம் போடுகிறார்.
மமம்தா கூட்டிய ‘ஜனநாயகத்தை காப்போம் – மோடியை தோற்கடிப்போம்’ என்ற
கோஷத்துடன் கூடிய 22 கட்சிகள் ஒன்றில் மட்டும் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். ராஹுலை
பிரதம மந்திரியாக நாங்கள் ஏற்கப்போவதில்லை என்பதில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளார்கள்.
மூன்று பெரிய ஹிந்தி பேசும் மாநிலங்களில் வெற்றி வாகை சூடினாலும், ராஹுலின் மதிப்பு
கூடாமல் குறைந்துள்ளது காங்கிரசை அதிர வைத்துள்ளது. ஆனால் மமம்தா அந்தக் கூட்டத்தில்
ஒதிங்கி இருந்த காங்கிரசின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயின் கைகளைப் பிடித்து தன்
பக்கத்தில் இழுத்து, அனைத்து தலைவர்களும் கைகளை உயர்த்தி போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளனர்.
தேர்தலுக்குப் பிறகு காங்கிரசைத் தேவையானால் சேர்த்துக் கொள்வோம் என்ற ரீதியில் பழம்
பெரும் காங்கிரசை தகுந்த மதிப்புக் கொடுக்காமல் இருப்பதையும் காங்கிரஸ் ஜீரணித்துக்
கொண்டு இருப்பது அரசியல் தற்கொலைக்கு ஒப்பாகும் என்பதை அது உணர்வதாக இல்லை. அங்கு கூடி
உள்ள 22 கட்சிகளும் ‘பி.ஜே.பி. முக்த் – காங்கிரஸ் முக்த்’ என்ற அளவில் செயல்பட்டாலும்,
ராஹுல் – சோனியா அந்த மஹா கூட்டணிக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பியது தான் வேடிக்கை. மோடி வெறுப்பில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை அதள பாதாளத்திற்குக் தள்ளுவதைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
பொதுஜனம்:
அரசியலில் என்ன வேண்டுமாலும் நடக்கும் என்று திண்ணை வேதாந்தம் இனி கூடாது. ஓட்டர்கள்
விழித்து ஊழல் கட்சிகளையும், தேசிய சிந்தனை இல்லாத இந்தியாவைத் துண்டு போடத் துணைபோகும்
தலைவர்களையும் இனம் கண்டு, மோடியின் தலைமையில் நம்பிக்கை வைத்து வரும் 2019-ல் மோடியை
ஆதரித்து மீண்டும் பிரதம மந்திரியாக ஆட்சிப் பீடத்தில் அமர்த்த உறுதி பூண வேண்டும்.
இது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் வலுப்பெறுகிறது.
விமரிசகர்:
மம்தா பானர்ஜியே அவர் கூட்டிய அந்த பிரம்மாண்டமான கூட்டத்தில் ‘வந்தே மாதரம்’ என்றும்
கோஷம் போடும் நிலையை பி.ஜே.பி. மேற்கு வங்காளத்தில் ஏற்படுத்தியதே ஒரு பெரிய மாறுதலாகும்.
மேலும், மம்தா இப்போது இடது சாரி கம்யூனிஸ்ட்களை விட மோடி – அமிர்த் ஷா இருவரைக் கண்டு
தான் பயப்படுகிறார்.
நிருபர்:
இந்தியா மேலும் வளர்ச்சி அடைய தாமரை மீண்டும் மலரும் என்பது தான் பெரும்பாலானோர்களின்
எண்ணம். நம்பிக்கையோடு காத்திருப்போம்.
Comments