நம்பி நாராயணின் தர்ம யுத்தம் – கேரள போலீஸின் தேசத்துரோகம்
நம்பி நாராயணின் தர்ம யுத்தம்
– கேரள போலீஸின் தேசத்துரோகம்
|
14-092018 – வெள்ளிக்
கிழமை ஒரு சரித்திர நாயகனான நம்பி நாராயணனின் (வயது 76) தர்ம யுத்தம் வெற்றி அடைந்த
நாளாகும்.
ஒரு தனி மனிதனாக
தன்னை ‘தேசத்துரோகி – இஸ்ரோவின் முக்கிய ஆவணங்களை கோடிக்கணக்கான பணத்திற்காக விற்ற
உளவாளி’ என்று குற்றம் சாட்டி அவருடன் அவரது சகாவான டி. சசிகுமாரன் ஆகியவர்களுடன் இரண்டு
மாலத்தீவுப் பெண்கள், ரஷியன் விண்வெளி ஏஜென்சியின் இந்தியப் பிரதிநிதியான கே. சந்திரசேகர்
(இவர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 14-ம் தேதி இறந்து போனார். 50,000 ரூபாய் வழங்கிய
14-ம் தேதி உச்ச நீதி மன்றத் தீர்ப்பை அறியாமலேயே இயற்கை எய்தினார்), இஸ்ரோ காண்ராக்டர்
எஸ்.கே.ஷர்மா மற்றும் ஒரு தொழிலாளி (மொத்தம் 7 பேர்கள்) ஆகிய அனைவருக்கும் மே 2,
1996 அன்றே விடுதலை வாங்கி வெற்றி கண்ட தீரர் நம்பி நாராயணனாவார்.
30 நவம்பர்
1994 அன்று கைதானார் நம்பி. 50 நாட்கள் ஜெயிலில் இருந்து 19-01-1995 அன்று பெயிலில்
வெளி வந்தார். கேரள போலீஸ் விசாரணை சி.பி.யை.க்கு மாற்றிய பிறகு தான் பல உண்மைகள் வெளி
வந்துள்ளன.
மே 2, 1996 – எர்ணாகுளம்
கோர்ட் சி.பி.ஐ. அறிக்கையை ஏற்றுக் கொண்டு, இது ஜோடிக்கப்பட்ட கேஸ் என்று தீர்ப்பு
வழங்கியது. சி.பி.ஐ. தனியாக இரண்டு ரகசிய அறிக்கைகளை தயாரித்து உளவுத் துறை
(Intelligent Bureau) பற்றியதை மத்திய அரசுக்கும், கேரள போலீஸ் தனிப்படை பற்றியதை கேரள
அரசுக்கும் வழங்கி உள்ளது.
உச்ச நீதிமன்றம்
29-04-1998 அன்று சி.பி.ஐ.யின் கேசை முடித்து வைத்த அறிக்கையை ஏற்ற எர்ணாகுளம் கோர்ட்டின்
முடிவை ஒப்புக் கொண்டது. அத்துடன் உச்ச நீதி மன்றம் நஷ்ட ஈடாக ரூபாய் 1 லட்சம் குற்றம்
சாட்டப்பட்ட ஆறு பேர்களுக்கு - நம்பி நாராயணன் உட்பட தீர்ப்பு வழங்கியது.
தேசிய மனித உரிமைக்
கமிஷனில் நம்பி நாராயணன் ‘தாம் ஒரு பெரிய உயர் பதவியில் இருந்தாலும், என்னை மிகவும்
கேவலமாக 24 மணி நேரமும் தண்ணீர் கூட பருக அனுமதிக்காமல், நின்ற படியே துன்புறுத்தப்பட்டேன்.
என் குடும்பத்தினரையும் கேவலப்படுத்தினர். அதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’ என்று முறையிட்டார்.
அதை விசாரித்த கமிஷன் கேரள அரசு ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு அளிக்க தீர்ப்பளித்தது. அப்போது
இருந்த முதன் மந்திரி சி.பி.எம். இ.கே.நாயனார் அதை நிறைவேற்றாமல், மேல் முறையீடு செய்து
காலம் தாழ்த்தி தன் பங்குக்கு அநியாயத்திற்கு துணை நின்றார்.
இதையும் எதிர்த்து
முறையிட்ட பிறகு, கேரள உயர்நீதி மன்றம் மார்ச் மாதம் 2001 அன்று இடைக்கால நஷ்ட ஈடாக
– உச்ச நீதி மன்றம் 29-04-1998 அன்று ஏற்கனவே வழங்கிய 1 லட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டைக்
கருத்தில் கொண்டு, 10 லட்சம் ரூபாயை கேரள அரசு அளிக்க உத்திரவிட்டது.
“2001-ம் வருடம்
நான் ஓய்வு பெற்றேன். இஸ்ரோவின் தலைவராக அப்போது இருந்தவர் கஸ்தூரி ரங்கன். ஆனால் இஸ்ரோ
எனக்கு ஒரு உதவியும் செய்ய முன் வரவில்லை. ஆனால், உச்சநீதி மன்றம் என்னை நிரபராதி என்று
தீர்ப்பளித்த உடன், இஸ்ரோ நிருவனம் என்னை வேலையில் சேர்த்துக் கொண்டதுடன், எனக்குப்
பதவி உயர்வும் அளித்தது. மேலும் இஸ்ரோவின் தலைமை அகத்திலேயே எனக்கு வேலை செய்ய அனுமதித்தது.
ஒன்றை மட்டும் நான் நிச்சயமாகச் சொல்ல முடியும். இந்த ஜோடிக்கப்பட்ட உளவுக் குற்றம்
சாட்டப்படாமல் இருந்திருந்தால், நான் இஸ்ரோவின் சேர்மனாகப் பதவி உயர்வு பெற்றிருப்பேன்.
அப்துல் கலாம் அவர்கள் கூட ‘இந்தக் கேஸ் எல்லாம் போதும். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்’
என்று அறிவுரை கூறியும், என்னை நிரபராதி என்பதை நிரூபிப்பதுடன், என்னை இந்த கேசில்
கைது செய்து, சித்திரவதை செய்த மூன்று கேரள போலீஸ் அதிகாரிகளான சிபி மேத்தூஸ், கே.கே.ஜோஸ்வா
மற்றும் எஸ். விஜயன் ஆகியவர்களுக்குத் தகுந்த தண்டனை வாங்கித் தருவதைத் தான் என் முக்கியபணியாகக்
கருதினேன்’ என்கிறார் நம்பி. மற்றவர்கள் – ஏன் அவரது சகாவான சசிகுமாரும் போதும் என்று
விலகிய பிறகும், ஒரு தனி நபராக நம்பி போராடி வெற்றி பெற்றுள்ளார்.
இஸ்ரோவின் அப்போதைய
சேர்மன் கஸ்தூரி ரங்கன் ‘இது போலிஸ் கேஸ்’ என்று தப்பிப்பதை ஏற்க முடியாது. இது சதாரணமான
கேஸ் இல்லை. இது இஸ்ரோவின் மதிப்பை எடைபோடும் விவகாரமாகும். இஸ்ரோ தானே தன்னிட்சையாக
ஒரு ஆய்வு செய்திருக்க வேண்டும். மேலும், இஸ்ரோவின் மூத்த அதிகாரிகளைக் கைது செய்யுமுன்
இஸ்ரோவின் அனுமதி இல்லாவிடினும், தெரியப்படுத்தி இருக்கலாம். நம்பி நாராயணன் – சசிகுமார்
ஆகியவர்களின் நேர்மை – அவர்களின் வேலையின் நம்பகத்தன்மை ஆகியவைகளை கருத்தில் கொண்டு
அவர்களுக்கு குறைந்த பட்சம் வாதாட இஸ்ரோ வக்கீல்களை அனுப்பி உதவி இருக்கலாம்.
இப்போது தனி நபராக
கேரள அரசு தவறிழைத்த போலீஸ் அதிகாரிகளின் மேல் நடவடிக்கைகள் எடுக்க வில்லை என்பதைச்
சுட்டிக் காட்டத்தான் உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அதில் நம்பி வெற்றி
பெற்றுள்ளார்.
உச்ச நீதி மன்றம்
தனது 14-09-2018 தீர்ப்பில் ‘நம்பி நாராயணன் மேல் போட்ட உளவாளி வழக்கு பொய்யானது. ஆகையால்
அவரைக் கைது செய்த மனத்தை சங்கடப்படுத்தும் நிகழ்வு, அவரைக் கொடுமையாகத் துன்புறித்தியது
ஆகியவைகளை ஆராய ஓய்வு பெற்ற டி.கே.ஜெயின் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து, கேரள போலீஸின்
நடவடிக்கைகள் குறித்த அறிக்கைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும், நம்பி நாராயணன் அனுபவித்த
மன உளைச்சலுக்கு ரூபாய் 50 லட்சத்தை 8 வாரங்களுக்குள் நம்பிக்கு அளிக்க கேரள அரசுக்கு
உத்திரவு இட்டுள்ளது. இந்த 50 லட்சம் ஆர்டிகிள் 21 கீழ் – அதாவது வாழ்க்கை உரிமையைப்
பரித்த நஷ்டத்திற்காக – கொடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது. ஆர்டிகிள்
21-ன் கீழ் நஷ்ட ஈடு என்பது மிகவும் முக்கியமான உத்திரவாகும். மேலும் விசாரித்த போலீஸ்
அதிகாரிகளின் தவறான நடத்தைகளை அறிந்து, தண்டிக்க கமிட்டி அமைத்ததும் இதுவரை எந்த கோர்ட்டும்
உத்திரவிட்டாத ஒன்றாகும்.
நம்பி இந்த உச்ச
நீதி மன்ற வழக்கைத் தொடரக் காரணம் என்ன?
கேரள அரசு தவறு
இழத்ததாக நீதி மன்றங்கள் தீர்ப்புக் கூறிய அந்த மூன்று போலீஸ் அதிகாரிகளைத் தண்டிக்காமல்
இருப்பது ஒருபுரம் இருக்க, அவர்களுக்கு பதவி உயர்வும் கொடுத்தது தான் உச்ச கட்ட அதிகார
துஷ்பிரயோகம். இதை அறிந்த பிறகு தான் நம்பி நாராயணன் கொதித்தெழுந்து, உச்ச நீதி மன்றத்தை
நாடி உள்ளார்.
03-10-2012 அன்று வெளிவந்த
ஹிந்துப் பத்திரிகைச் செய்தியை நம்பி நாராயணன் படித்து அதிர்ச்சி அடைந்தார். சி.பி.மேத்யூஸ்,
கே.கே.ஜோஸ்வா மற்றும் எஸ்.
விஜயன் ஆகியவர்களின் மேல் உள்ள குற்றச் சாட்டுக்கள் 15 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டதால்,
அவைகளை தள்ளுபடி செய்வதாக கேரள அரசு உத்திரவு பிறப்பித்துள்ளது என்பது அந்தச் செய்தி.
மேலும், சிபி மேத்யூஸ் சீப் இன்பர்மேஷன்
கமிஷனராகப் பதவி உயர்வு பெற்றதுடன், அவன் ஒய்வு பெற்ற பிறகு காங்கிரஸ் ஒரு நல்ல பதவியையும்
அளித்துள்ளது. இந்த உத்திரவு உமன் சாண்டி கேரள முதல் மந்திரியாக இருந்த போது எடுத்ததாகும்.
உமன் சாண்டி அரசு ‘போலீஸ் அதிகாரிகளின் மேல் நடவடிக்கை எடுத்தால், அது அவர்களின் வேலையைப்
பாதிக்கும்’ என்பது எவ்வளவு வேடிக்கையான காரணம்!
இஸ்ரோவின் பெயரையே உலக அளவில் கெடுத்த
படு மோசமான காரியத்தைச் செய்தவர்களை தண்டிக்காமல் இருப்பது ஒரு தேசத் துரோகக் குற்றமாகும்.
ஆகையால் தான் உச்ச நீதி மன்றம் சரியான தீர்ப்பை எடுத்து, அவர்களைத் தண்டிக்க வழி வகுத்துள்ளது.
இந்த உளவு வழக்கை இரண்டு கோணங்களில்
இருந்து ஆராய வேண்டிய நிலை உள்ளது.
1. கேரள காங்கிரஸ் கோஷ்டி பதவி ஆசை
அரசியல் 2. சி.ஐ.ஏ (அமெரிக்காவின் உளவு அமைப்பு)
கேரள காங்கிரஸில் மூன்று கோஷ்டிகள்
உண்டு. 1. கருணாகரன் 2. உம்மன் சாண்டி 3. ஏ.கே. அந்தோனி.
1994 வருடத்தில் கருணாகரனை முதல்
மந்திரி பதவியிலிருந்து இறக்க ஏ.கே. அந்தோனி, உமன் சாண்டி – நிதி மந்திரியாக கருணாகரன்
மந்திரி சபையில் இருந்தவர் – மூலமாக முயன்று கொண்டிருந்த சமயம் அது. அப்போது ஐ.ஜி.
ராமன் ஸ்ரீவத்ஸவா கருணாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். இருப்பினும் அவர் மிகவும்
நேர்மையானவர். ஆனால் அவருக்குக் கீழ் வேலை செய்த டி.ஐ.ஜி. சிபி மேத்யூஸ் உமன் சாமண்டியின்
ஆள். அந்த சமயத்தில் தான் சீனியர் இன்ஸ்பெக்டர் எஸ். விஜயனை ஒரு அழகான மாலத்தீவுப்
பெண் மாரியம் ரஷீதா தனது விசா காலத்தை நீடிக்க அவரது அலுவலகத்திற்கு வந்தார். விஜயன்
அவளுடன் தவறான எண்ணத்துடன் நடந்து கொண்டதை அறிந்த அவள் ‘இதை உன் உயர் அதிகாரியான ஐ.ஜி.யிடம்
முறையிடுவேன்’ என்று பயமுறித்தி உள்ளாள்.
அத்துடன், கேரள உள் துறை அதிகாரியான
ரத்தன் ஸெகல் என்பவன் ஒரு சி.ஐ.ஏ. ஏஜெண்ட். அவன் இஸ்ரோவில் கிரோஜெனிக் எஞ்சின் தயாரிப்பை
உருக்குலைக்க அதில் ஈடுபட்டுள்ள நம்பி நாராயணன் மற்றும் சசிகுமாரை வீழ்த்த தருணம் பார்த்துக்
கொண்டிருந்தான் இந்த ஏஜெண்ட். அவனது கூட்டாளி தான் ஆர்.பி.ஸ்ரீகுமார் என்ற போலீஸ் அதிகாரி.
இவன் தான் 2002 குஜராத் கலவரத்தின் போது காங்கிரஸ் அரசுக்கு உதவியாக பொய்யான குற்றச்
சாட்டுகளைச் சொன்னவன் – இப்போது டீஸ்டா செடல்வாட் என்ற மோடி எதிர்ப்புக் கோஷ்டியுடன்
உள்ளான். இதற்கு அந்த அப்பாவி மாலத்தீவு பெண்ணைப் பயன்படுத்தி, இஸ்ரோவின் சயிண்டிஷ்களையும்
‘இஸ்ரோவின் முக்கிய வரைபடத்தை பல கோடி பணத்திற்காகவும், செக்ஸ்சுக்காகவும் பாகிஸ்தானுக்கு
மாலத்தீவுப் பெண்மூலம் விற்றார்கள்’ என்று ஊடகங்களில் செய்தியைப் பரப்பி, அது மலையாள
மனோரமா போன்ற பல கேரளா பத்திரிகைகளில் சூடாக மஞ்சள் பத்திரிகைகளை எல்லாம் தோற்கடிக்கும்
அளவில் வெளியிட்டு, நேர்மையான அதிகாரியான ராமன் ஸ்ரீவஸ்தாவைக் குறிவைத்து அவதூற்றைப்
பறப்பினர். உமன் சாண்டியை நிதி மந்திரி பதவியைத் துறக்கச் செய்தனர். கருணாகரனையும்
பதவி விலகச் செய்து, செயின்ட் அந்தோனியார் முதன் மந்திரி அரிசாதனத்தில் அமர்ந்தார்.
ஐ.பி. அடிஷனல் டைரக்டர் ராட்டன் சேஹல்
பிறகு இந்தியாவின் அணு ரகசியத்தை சி.ஐ.ஏ.விற்கு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு,
பதவி இழந்தான் என்பதும், அவன் யு.எஸ். பறந்து சென்று விட்டான் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக
வேண்டும்.
இப்படிப் பட்ட தேச விரோத சக்திகளுக்குத்
துணை போகும் இதே செயிண்ட் அந்தோனி நமது ராணுவ மந்திரியாக இருந்தது இந்தியாவின் போராத
காலமாகும்.
இந்த காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகளால்,
இஸ்ரோவின் க்ரியோஜெனிக் எஞ்சின் திட்டம் தடைபட்டு, பத்தாண்டுகள் எந்தவிதமான முன்னேற்றமும்
அடைய முடியாமல், 2017 ஆண்டு தான் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்த முடிந்தது. காங்கிரசுக்கு
பாரத தேசப் பற்றோ, தேச முன்னேற்றத்தில் அக்கரையோ கிடையாது என்பது இதன் மூலம் நிரூபணமாகி
உள்ளது. அதை எல்லாம் விட காங்கிரஸ் சி.ஐ.ஏ.யின் கைக்கூலியாகச் செயல்பட்டதைத்தான் நம்மால்
ஜீரணிக்க முடியவில்லை.
‘நான் தொடர்ந்து 18 வருடங்களாக தனி ஆளாகப் போராடியதற்கு மூல காரணம் ‘என் குழந்தைகள் உளவாளியின் பிள்ளைகள்’ என்ற அவப்பெயரைப் பெறக்கூடாது என்பது தான். நான் ஒரு சமயம் என்னையே மாய்த்துக் கொள்ள முயன்ற போது, என் மகள் ‘அப்பா! நீங்கள் நிரபராதி என்று நிரூபித்த பின் நீங்கள் தற்கொலை செய்து கொள்ளுங்கள். நாங்கள் ‘உளவாளியின் பிள்ளைகள்’ என்ற அவப்பெயரைக் களைய முயலுங்கள்’ என்று சொன்ன வார்த்தைகள் தான் என்னை தொடர்ந்து போராடும் சக்தியைக் கொடுத்தது’ என்று நம்பி நாராயணன் மனம் விட்டுச் சொல்கிறார்.
இந்த சமயத்தில் இரண்டு செய்திகளை
வாசகர்களாகிய உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும்.
ஒன்று:
கேரள உளவுத் துறை உயர் அதிகாரிகள்
இரண்டு பேர்கள் நம்பியை டிசம்பர் 1994 இரவு திருவனந்தபுரத்திலுள்ள லேடக்ஸ் கெஸ்ட் ஹவுஸில்
அவரது இஸ்ரோவின் மேல் அதிகாரியான ஆப்ரஹாம்.இ.முத்துநாயகம் என்பரின் பெயரை இந்த உளவில்
சம்பந்தப்படுத்த நிர்பந்திக்க நம்பி சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் அதற்கு அவர்
ஒரு அணுஅளவு கூட உடன் படவில்லை. நம்பியை விசாரித்த அதிகாரிகள் அவருக்கு உட்கார அனுமதிக்க
வில்லை. குடிக்க தண்ணீர் கேட்டதற்கு ‘நீ ஒரு தேசத்துரோகி. நாட்டை விற்ற உளவாளி. தண்ணீர்
கிடையாது’ என்று சொல்லி மறுத்து விட்டனர்.
ஆனால் இந்த கொடூரத்தைப் பார்த்த ஒரு வயது
முதிர்ந்த RAW (Research and Analysis Wing)
அதிகாரி அவர் மேல் பரிதாபப் பட்டு, ‘நம்பி நாராயணன்! தயவு செய்து உட்காருங்கள்.
இந்த நீரைப் பருகுங்கள்’ என்று சொன்னதற்கு ‘ஐயா, எனக்கு உட்காருவதற்கோ, நீர் குடிப்பதற்கோ
உங்கள் அதிகாரிகளின் கருத்துப்படி எனக்கு அருகதை இல்லை’ என்று சொன்னதைக் கேட்ட அந்த
நல் இதயம் உள்ள அதிகாரி ‘எவ்வளவு நேரம் தான் இப்படி இருப்பீர்கள்?’ என்று கேட்டதற்கு,
நம்பி ‘என் உடல் தாங்கும் வரை’ என்று பதில் உரைக்கும் போது தான் சத்யாக்கிரத்தின் உக்கிரமும்,
பலமும் தனக்குத் தெரிந்தது என்கிறார் நம்பி. சுமார் 24 மணி நேரம் தூங்காமலும், நீர்
பருகாமலும், சாப்பிடாமலும், நின்று கொண்டே இருந்ததால், நம்பி அப்படியே கீழே சாய்ந்து
விட்டார்.
அப்போது அங்குள்ளவர்கள் பேசுவது அந்த மயக்கத்திலும் நிற்க முடியாத நிலையிலும்
நம்பிக்குக் கேட்டது.
அந்த நல்ல வயதான அதிகாரி ‘என் பேச்சை நீங்கள் கேட்க வில்லை. ஏன்
இந்தக் கொடூரம்? இது உங்கள் முட்டாள் தனம். இந்த மனிதனுக்கு ஏதாவது ஆனால், நீங்கள்
எல்லோரும் தொலைந்தீர்கள். நான் போகிறேன்’ என்று கத்தியபடி சென்று விட்டார்.
இரண்டு:
இந்த நம்பியின் நிலையால்,
பூஜுரா கிளீனிக் நடத்தி வந்த டாக்டர் சுகுமாரன் வரவழைக்கப்பட்டார். அவர் ‘ஏன் இப்படி
இவரைச் சித்திரவதை செய்தீர்கள். இவர் மிகவும் கவலைக் கிடமாக உள்ளார். இனியும் இவரை
சித்திரவை செய்தீர்கள் என்றால், அவர் செத்துவிடுவார். இந்த உங்கள் முட்டாள் தனத்தை
விடுங்கள் என்று தான் நான் சொல்வேன்’ என்று எச்சரித்தார்.
நம்பி வெளியே வந்த பிறகு,
என் சகோதரரை அந்த டாக்டரைப் பார்க்க அனுப்பினேன். அந்த உத்தம டாக்டர் உடனே ஒரு காகிதத்தில்
நம்பி எங்கிருந்து எந்தந்த போலீஸ் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டார், நம்பியின் மோசமான
உடல் நிலை ஆகியவைகளை தம் கைப்படவே எழுதி என் சகோதரிடம் கொடுக்கும் போது அந்த டாக்டர்
சொன்னார்: சார், இதை என் கைப்பட எழுதிக் கொடுத்துள்ளேன். ஏனென்றால், எனக்கு மட்டும்
தான் உண்மை தெரியும். நானும் ஒரு சராசரி மனிதன். நாளை ஒரு வேளை போலீஸ் துன்புறுத்தலால்,
நான் மாற்றிச் சொல்லும் நிலை ஏற்படலாம். ஆகையால் தான் நானே கைப்பட இந்த உண்மையை உங்களிடம்
தெரிவித்துள்ளேன். என் கைப்பட எழுதிய இந்தக் காகிதத்து வாசகத்தை நான் நிர்பந்தம் காரணமாக
வெளிப்படுத்தினேன் என்று ஒருவரும் சொல்ல முடியாது.
அத்துடன் நில்லாது, அந்த டாக்டர்
நம்பியின் கேசில் சாட்சியும் சொல்லி உள்ளார்.
இப்படிப்பட்ட அதிகாரிகள் இன்னமும்
செயல்படுவதால் தான் பாரத தேசம் தர்ம தேசம் என்று பாராட்டப் படுகிறது.
‘என்னை விசாரித்த போலீஸ் அதிகாரிகள்
– நீ தேசத்துரோகி என்பது பொய்யானால், எங்களைச் செருப்பால் அடி – என்று சொன்னார்கள்.
நான் என் செருப்புகளை கையில் வைத்துக் கொண்டு அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்’
என்று பொருமுகிறார் அந்த நேர்மையான – பாரத தேசத்தினை தன் உயிரினும் மேலாக நேசிக்கும்
உத்தமரான நம்பி நாராயனன்.
‘Ready To Fire: How India and I
Survived the ISRO Spy Case’ என்ற புத்தகத்தை அருண் ராமுடன் நம்பி நாராயணன் எழுதி உள்ளார்.
அவரது இந்த சோக சரித்திரம் ஆர்.மாதவன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க சினிமாப் படமாக
வெளிவர இருக்கிறது.
அதற்குள் உச்ச நீதிமன்றம் அமைத்த
டி.கே.ஜெயின் அறிக்கை வெளியாகி அந்த மூன்று அயோக்கிய – அராஜக – தேச விரோத போலீஸ் சக்திகள்
தண்டனையைப் பெறுவார்கள் என்று நம்புவோமாக.
ஒரு
சொசுறுச் செய்தி:
இஸ்ரோவிற்கு நம்பி
நாராயணன் கைது பெரும் அவப்பெயரை உண்டாக்கி விட்டது. இதை கேரள உள்துறையின் உதவியுடன்
யு.எஸ். உளவுத் துறையான சி.இ.ஏ. (Central Intelligence Agency) இஸ்ரோவின் கிரோஜெனிக்
தொழில்நுற்பத்தைக் கெடுக்கும் வேலையில் வெற்றி அடைந்து விட்டார்கள் என்பது தான் மிகவும்
வேதனை அளிக்கும் விஷயமாகும்.
இதற்கு அப்போதைய
காங்கிரஸ் அரசு துணை நின்றது என்பதைப் பார்க்கும் போது, இப்போது ராஹுல் ரஃபேல் ஊழல்
என்று சொல்லுவதைக் கேட்கும் போது பாரத தேச மக்களின் ரத்தம் கொதிக்கிறது.
இது ஏதோ மோடி
– ராஹுல் என்ற வட்டத்தையும் தாண்டி, விவாதிக்கப்பட வேண்டும். கூடிய விரைவில் ராஹுல்
காங்கிரஸ் அதற்குரிய விலையையும், தண்டனையையும் பெறத்தான் வேண்டும். அது தான் தெய்வத்தின்
கட்டளை என்று நினைக்கத் தோன்றுகிறது.
1998 ஆண்டு உச்ச
நீதி மன்றம் நம்பியின் சி.பி.ஐ. கேசை முடித்தது. அதற்கு அடுத்த ஆண்டான 1999-ல் ஜே.ராஜசேகர்
நாயர் என்பவர் ‘Spies from Space’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.
அதில் சி.ஐ.ஏ.யின் இந்திய இஸ்ரோவின் வளர்ச்சிக்கு எவ்வாறு ஊறு விளைத்தது என்பதை விளக்கி
உள்ளார். 2000-ல் பிரியன் ஹார்வி என்ற பிரபலமான விண் வெளி விஞ்ஞானியும் தமது புத்தகத்தில்
உறுதி செய்துள்ளார்.
ராஜசேகர் நாயர்
எழுதிய புத்தகம் கோனாரக் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. கேரள உளவுத் துறை மூலம் அது
வெளியிடப்பட்ட மறு நாளே அனைத்து புத்தகங்களும் வாங்கப்பட்டு, எரிக்கப்பட்டுள்ளன. மீண்டும்
மறுபதிப்பு மறுக்கப்பட்டுள்ளது. நம்பி நாராயணன் நேரடியாகவே கோனாரக்கிடம் ஒரு புத்தகம்
கேட்டும் மறுக்கப்பட்டுள்ளது. ‘உங்கள் அலுவலகம் வந்து உங்கள் காப்பியைப் படிக்க அனுமதியுங்கள்’
என்று நம்பி நாராயணன் வேண்டு கோளும் மறுக்கப்பட்டுள்ளது.
இது தான் காங்கிரஸ்
– இடது சாரி அறிவு ஜீவிகள் – கம்யூனிஸ்ட் காம்ரேட்கள் – ஆகியவர்களின் ‘கருத்துச் சுதந்திரம்’!
நெஞ்சு பொறுக்குதில்லையே!
– என்று தான் நாம் கூக்கிரலிட வேண்டிய நிலையில் இருக்கிறேன்.
Comments