அப்துல் கலாமின் எழுச்சி தீபங்கள்

“வறுமை தான் நமது பகைவன்” என்று எனது கேள்வியான ‘நமது பகைவன் யார்?’ என்பதற்குப் பதில் அளித்த குஜராத் மாநிலம் ஆனந்த் நகர ஆனந்தாலயா உயர்நிலைப் பள்ளிச் சிறுமி சினேகாவிற்கு இந்த ‘எழுச்சி தீபங்கள்’ புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன் – என்று அதன் ஆசிரியரான நமது மதிப்புக்குரிய அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். அந்த புத்தகத்திலிருந்து சில செய்திகள் உங்கள் பார்வைக்கு. - ஆசிரியர். ‘மகாபாரதத்தில் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் யார்?’ என்று கேட்ட குழந்தைக்கு கலாம் அளித்த பதில்: ‘நல்லது கெட்டது என்ற மனித இயல்பின் அனைத்து அம்சங்களையும் பிரதிபலிக்கும் பன்முகப் பரிமாணம் கொண்ட கதாபாத்திரங்கள் நிறைந்தது அந்தக் காவியம். என்னைக் கவர்ந்த கதாபத்திரம், ‘விதுரர்’. அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறிழைக்கும் போது, துணிச்சலாக எதிர்த்தவர் விதுரர். அதர்ம ஆட்சி செய்த கொடுங்கோலன் முன்னே எல்லோருமே மண்டியிட்ட போது, தனித்து நின்று மாற்றுக் கருத்தைத் தைரியமாக எடுத்துரைத்த அஞ்சா நெஞ்சர் விதுரர். பூமத்திய ரேகைப் பகுதியில் விண்வெளி ஆய்வு மையத்தை நி...