Posts

Showing posts from 2018

ராகுல் காங்கிரசின் ஹிமாலய மாநிலத் தேர்தல் வெற்றிகள்

Image
ஹிந்தி பேசும் இந்தியாவின் ஹிருதயமான ராஜஸ்தான் – மத்தியப் பிரதேசம் – சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் அளவில் பெற்ற வெற்றி மிகச் சாதரணமானது அல்ல. அதிலும் சத்தீஸ்கரில் கடந்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று 15 ஆண்டுகள் ஆட்சிப் பீடத்தில் கோலோச்சிய பி.ஜே.பியை. படு தோல்வி அடைய வைத்துள்ளது ராகுல் காங்கிரஸ். சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 68 தொகுதிகளிலும் (முன்பு 18) பி.ஜே.பி. வெறும் 15 தொகுதிகளிலும் (முன்பு 72) வெற்றி பெற்றுள்ளன. மாயாவதி – அஜித் ஜோகி கூட்டணி காங்கிரசின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்க வில்லை. அது பி.ஜே.பி.யின் ஓட்டைத் தான் பிரித்தது என்று சொல்லப்படுகிறது. அதல பாதாளத்தில் இருந்த காங்கிரஸ் ராஜஸ்தானிலும், மத்தியப் பிரதேசத்திலும் – (15 வருட ஆட்சியில் இருத்த பி.ஜே.பி.யை) ஆட்சி அமைக்கும் அளவில் பி.ஜே.பி.யைத் தோற்கடித்தது காங்கிரசின் அசுர சாதனை என்று தான் சொல்ல வேண்டும். ராஜஸ்தானில் வெறும் 11 தொகுதிகளை 2014 தேர்தலில் வென்ற காங்கிரஸ் இந்த தேர்தலில் 99 தொகுதிகளிலும், 180 தொகுதிகளை சென்ற தேர்தலில்...

உச்ச நீதி மன்றத்தின் உச்சக் கட்ட தலையீடுகள்

Image
நாட்டின் சுதந்திரத்தையும், நேர்மையான ஆட்சியையும் நிலைநாட்டும் கடமை அரசு – உச்ச நீதிமன்றம் – பார்லிமென்ட் ஆகியவைகளுக்கு உண்டு. அதற்கான விதிகள் அடங்கிய பைபில் தான் அரசியல் சாசனமாகும். அதை இந்த மூன்று அமைப்புகளும் நேர்மையாக எந்தவிதமான உள்நோக்கமும் இன்றி நாட்டின் நலனை மட்டுமே மனதில் நிலைநிறுத்தி நினைவில் கொண்டு கடைப்பிடித்து, நாட்டு மக்களுக்கு ‘நண்பன், தத்துவஞானி, வழிகாட்டி’ என்ற மூன்று நிலைகளில் ஒரு சிறந்த நேர்மையான ஆட்சியை மக்களுக்கு அளிக்கும் நிலையில் இந்த ஒவ்வொரு மூன்று அமைப்பும் செயல்பட வேண்டும். இருப்பினும் இந்த மூன்று அமைப்பிலும் அமர்ந்திருப்பவர்கள் பொதுமக்களைப் போன்ற ஆனால், அவரவர்களின் துறைகளில் படித்த அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் ஜனநாயக அரசியலில் இறுதிக் குரல் பொதுவாக மக்கள் கருத்துக்களை மதிப்பதாக இருப்பது ஒரு பொது விதி என்பதையும் இங்கு நாம் மனத்தில் கொள்ள வேண்டும். சமீபகாலமாக உச்சநீதி மன்றம் சட்டத்தின் அடிப்படையை மட்டும் கருத்தில் கொண்டு, தங்கள் முன் வைக்கப்படும் வாதங்கள் – சாட்சிகள் ஆகியவைகளின் ஆதாரத்தில் தீர்ப்பு வழங்கும் போது, தங்களின் தனிப்பட்ட கொள்கைகளுக்கும் இட...

சபரிமலை தரிசனத்தில் தலையிடும் உச்ச நீதிமன்றம்

Image
சபரிமலை தரிசனத்தில் தலையிடும் உச்ச நீதிமன்றம் உச்ச நீதி மன்றத்தின் ஐந்து நீதிபதிகளில் ஒரு பெண் நீதிபதியைத் தவிர்த்து நான்கு ஆண் நீதிபதிகள் 28-09-2018 வெள்ளிக் கிழமை அன்று ‘அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம். பெண்களில் மாதவிடாய் வயதான 10-லிருந்து 50-வரையில் உள்ள பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் செல்லும் தடை நீக்கப்பட்டுள்ளது’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். அதற்கு அவர்கள் கூறி உள்ள காரணங்கள்: “பக்தியில் ஆண்-பெண் பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. பெண்கள் ஆண்களை விட கீழானவர்களோ அல்லது மதிப்பில் குறைவானவர்களோ இல்லை. மத ஆணாதிக்கம் நம்பிக்கையின் அடிப்படையில் வெற்றி கொள்ள அனுமதிக்க முடியாது. நம்பிக்கைச் சுதந்திரத்தில் பெண்ணின் உடல் மற்றும் பாலியல் ரீதியான காரணங்களைக் காட்டுவதை அனுமதிக்க முடியாது. மதம் என்பது அடிப்படையில் ஒரு வாழ்க்கை முறையாகும். இருப்பினும், கடைப்பிடிக்கப் படும் சில வழிமுறைகள் தவறானவைகளாக இருக்கும். அதைக் களைவது அவசியம். ஐயப்ப்ப பக்தர்கள் இந்து மதத்தின் தனியான பிரிவில்லை. கேரள ஹிந்து மத வழிபாட்டுத் தல விதிகள் 1965-ல் உள்ள விதி 3 (b) தான் கு...

நம்பி நாராயணின் தர்ம யுத்தம் – கேரள போலீஸின் தேசத்துரோகம்

Image
நம்பி நாராயணின் தர்ம யுத்தம் – கேரள போலீஸின் தேசத்துரோகம் 14-092018 – வெள்ளிக் கிழமை ஒரு சரித்திர நாயகனான நம்பி நாராயணனின் (வயது 76) தர்ம யுத்தம் வெற்றி அடைந்த நாளாகும். ஒரு தனி மனிதனாக தன்னை ‘தேசத்துரோகி – இஸ்ரோவின் முக்கிய ஆவணங்களை கோடிக்கணக்கான பணத்திற்காக விற்ற உளவாளி’ என்று குற்றம் சாட்டி அவருடன் அவரது சகாவான டி. சசிகுமாரன் ஆகியவர்களுடன் இரண்டு மாலத்தீவுப் பெண்கள், ரஷியன் விண்வெளி ஏஜென்சியின் இந்தியப் பிரதிநிதியான கே. சந்திரசேகர் (இவர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 14-ம் தேதி இறந்து போனார். 50,000 ரூபாய் வழங்கிய 14-ம் தேதி உச்ச நீதி மன்றத் தீர்ப்பை அறியாமலேயே இயற்கை எய்தினார்), இஸ்ரோ காண்ராக்டர் எஸ்.கே.ஷர்மா மற்றும் ஒரு தொழிலாளி (மொத்தம் 7 பேர்கள்) ஆகிய அனைவருக்கும் மே 2, 1996 அன்றே விடுதலை வாங்கி வெற்றி கண்ட தீரர் நம்பி நாராயணனாவார்.   30 நவம்பர் 1994 அன்று கைதானார் நம்பி. 50 நாட்கள் ஜெயிலில் இருந்து 19-01-1995 அன்று பெயிலில் வெளி வந்தார். கேரள போலீஸ் விசாரணை சி.பி.யை.க்கு மாற்றிய பிறகு தான் பல உண்மைகள் வெளி வந்துள்ளன. மே 2, 1996 – எர்ணாக...

திண்ணைக் கச்சேரி - ராஹுலின் குற்றச் சாட்டுக்கள்

Image
திண்ணைக் கச்சேரி பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம் முன் குறிப்பு: ராகுல் திரும்பத்திரும்ப இரண்டு குற்றச் சாட்டுக்களை கூறிவருகிறார். 1. ராஃபேல் ஜெட் வாங்குவதில் பெரிய ஊழல் செய்துள்ளார் மோடி. 2. மோடி அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. ராகுல் குற்றச் சாட்டுகளின் உரையை இங்கே கிளிக் செய்து அறியலாம். இந்த இரண்டு குற்றச் சாட்டுக்களை அலசுகிறார்கள் திண்ணைக் கச்சேரி பங்குபெறுவோர். மற்றவைகளும் கொசுராக அங்கங்கே அலசப்படும். பொதுஜனம்: இளவல் ராஜா ராஹுல் கட்டிப்பிடி அரசியலில் இறங்கி விட்டாரே! பார்த்தீர்களா? வாசகர்: ராஹுல் பிரதம மந்திரியையே அதுவும் பார்லிமென்ட் கூடத்திலேயே ‘மோடி, பொய் பேசுகிறார். ஊழல் செய்கிறார். வேலை வாய்ப்பு தருவாதகச் சொல்லி ஓட்டு வாங்கி ஏமாற்றுகிறார். ஒவ்வொருவர் பாக்கெட்டிலும் 15 லட்சம் போடுவதாக வாக்குறிதி அளித்து அதை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறார். பெண்களுக்கு பாதுகாப்பில்லை. நான் கேட்கும் கேள்விகளுக்கு மோடி பதில் சொல்வதில்லை. என் கண்களை நேரடியாகப் பார்க்க மோடிக்குத் தைரியம் கிடையாது. மோடி என்னை வெறுக்கக் கூடும். என் மேல்...