இந்திய – இஸ்ரேல் உறவில் இமாலய வெற்றி





மோடியின் இஸ்ரேல் நாட்டின் மூன்று நாட்கள் பயணம்ஜீலை 4-லிருந்து ஜீலை 6-ம் தேதி வரைமிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இஸ்ரேலியப் பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தன்யாஹு மோடி கூடவே பயணித்து கவுரவித்த விதம் பற்றி உலகமே வியந்துள்ளது. மோடியை வரவேற்க வரும் பொழுது, அவரது கோட்டில் இஸ்ரேல் நாட்டுக் கொடி பொரித்த சிறிய உலோகச் சின்னத்துடன் அதே அளவு  இந்திய தேசியக் கொடிச் சின்னத்தையையும் அணிந்து வந்து தமது நாட்டு மக்கள் இந்தியாவை மனதார மதிக்கிறார்கள் என்பதை இதன் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். மோடியை தமது இல்லத்திற்கு வரவழைத்து, தமது மனைவியை அறிமுகப்படுத்தி, விருந்தும் அளித்துக் கவுரவித்திருக்கிறார் இஸ்ரேல் நாட்டுப் பிரதமர்.

இது ஒரு அசாதரணமான செயல் என்பதை உலகமே ஒப்புக் கொண்டுள்ளது. அது இஸ்ரேல் இந்தியர்களுக்குச் செலுத்தும் நன்றிக் கடன் என்று தான் சொல்ல வேண்டும்.


யு.எஸ்.ஜனாதிபதி மற்றும் போப் ஆகியவர்களுக்கு கொடுக்கும் மரியாதையைப் போல் மோடிக்கு இஸ்ரேல் அளித்துள்ளது. டெல் அவிவ் விமான நிலையத்தில் மோடியை ஹிந்தி மொழியிலேயே வரவேற்றதுடன், மரபை மீறி விமானநிலத்திற்கே இஸ்ரேல் பிரதமர் நேரிலே வந்து மோடியை அன்பாகக் கட்டித்தழுவி வரவேற்றதுடன், அவரது மந்திரிசபையே மோடியை வரவேற்க அங்கு கூடியது.



இஸ்ரேல் பிரதம மந்திரி இது குறித்து வெளியிட்ட கருத்து மிகவும் உருக்கமானதாகும்.

இந்தியப் பிரதமரின் இஸ்ரேல் வருகைக்காக கடந்த 70 வருடங்கள் இஸ்ரேல் காத்திருக்க வேண்டியதாகி விட்டது. 2000 வருடங்களுக்கு முன், உலகம் பூராவும் யூதர்கள் ஒதுக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும், தண்டிக்கப்பட்டும் இருக்கும் போது அவர்கள் தப்பி வந்த கப்பல் மூழ்கி, அதில் உள்ள யூதர்கள் இந்தியாவின் மஹாராஷ்ராவில் உள்ள நெளகானில் குடியேறிய போது, இந்தியர்கள் காட்டிய அன்பையும், ஆதரவையும் நினைத்து, இந்தியாவை ஆள்பவர்கள் இஸ்ரேலுக்கு வருகை தரும் தருணத்தை இஸ்ரேல் வெகு ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்திய மக்கள் காட்டிய அன்பை நினைத்து, இந்தியாவை ஆள்பவரை தங்கள் மண்ணில் வரவழைத்து, அவரை ஆரத்தழுவ இஸ்ரேல் மக்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள். அது மோடியின் வரவினால் பூர்த்தி ஆகியது. இந்தியாவில் வாழும் இஸ்ரேல் மக்கள் இந்தியாவை தங்கள் தாய் நாடாகவும், இஸ்ரேலை தங்கள் தர்ம நாடாகவும் கொண்டாடுகிறார்கள்.” இதை விட எந்த நாட்டு அரசியல் தலைவர்களும் இந்தியாவைப் பாராட்டியதில்லை என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை.” என்று இஸ்ரேல் பிரதமர் இந்தியப் பிரதமரின் விஜயத்தை மனம் விட்டுப் பாராட்டினார்.  

இஸ்ரேல் 8 மில்லியன் ஜனத்தொகை கொண்டு வெறும் 20,770 சதுர கிலேமீட்டர்  பூமியின் அளவுடைய நாடு. யூதர்களை முழுமையாக வெறுக்கும் முஸ்லீம் அராபிய அரசுகள் நாலாபுரமும் சூழ்ந்து அந்த நாட்டை தீவிரமாக தாக்கும் சூழ்நிலையில் இஸ்ரேலியர்கள் வாழ்ந்தார்கள்.  ஆனால், அந்த நாட்டு மக்களின் இரும்பு போன்ற மனவலிமை, ராணுவ சக்தி, மின்வளை அறிவியலில் உலக அளவில் கோலோச்சும் தீரம், ஒரு பெரிய வீரன் போல் விவசாயத்தில் புதுமைகளை புகுத்தியும், நீர் வளத்தைப் பெருக்கியும், பாதுகாத்தும் வளம் கொழிக்கச் செய்யும் திறன், உலக நாடுகள் போற்றும் சிறந்த பல்கலைக் கழங்கள், தங்கள் தாய் மொழி, தங்கள் கலாச்சாரம், தர்மம் ஆகியவைகளைக் காப்பதில் தீராத பெருமையுடன் பலரும் போற்றும் அளவில் அரசியல் முதிர்ச்சி ஆகியவைகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு பெருமை சேர்க்கும் செயல்களாகும்.

இஸ்ரேலின் இந்தப் பெருமைகளுக்கெல்லாம் மூலவேர் எது என்றால் அதற்கு ஒரே ஒரு பெயரைத்தான் சொல்ல வேண்டும்பென் குரியன். அவரை இஸ்ரேல் நாடு தங்களது புதிய இஸ்ரேலின் தந்தை என்று கொண்டாடுகிறது. அவர் யூதர்களை ஒன்று சேர்த்து, 14-05-1948 அன்று இஸ்ரேலை ஒரு சுதந்திர நாடாக அறிவித்தார். ஹீப்ரூ என்ற யூதர்களின் மொழி – 2000 வருடங்கள் பேசப்படாமல் வழக்கொழிந்து, செத்த மொழி என்று ஏளனமாக இகழப்பட்ட மொழிஅதை உயிர்ப்பித்து ஹெப்ரூ மொழியை உலக அரங்கில் உயர்த்தினார். இஸ்ரேலின் ராணுவத்தைச் சீரமைத்து, 1948-ஆண்டு ஒன்றிணைந்து தாக்கிய அராபியப் படைகளைத் தோற்கடித்து, இஸ்ரேலின் முதல் பிரதம மந்திரியாகவும் பதவி வகித்தார்.

1947-ம் ஆண்டு ஐக்கிய தேச சபை - சுதந்திர அராபிய நாடு, யுதர் நாடுஜெருசலம் உலகப் பொது நகரம் என்று உருவாக்கிய திட்டம் பாலஸ்தீன யுதர்கள் ஏற்றாலும், அந்த திட்டம் அராபியத் தலைவர்களால் எதிர்க்கப்பட்டது. ஆனால், யுதர்கள் எரட்ஸில் இஸ்ரேல் தேசத்தை சுதந்திர நாடாக அறிவித்த பிறகு, இஸ்ரேல் பல சண்டைகளுக்குப் பிறகு, மேற்கு கடற்கரைப் பகுதி, கோலன் மலைப் பகுதி, காஸா நிலப்பகுதி என்று இஸ்ரேல் தனது நாட்டின் எல்லைகளை விரிவு படித்தியுள்ளது. பாலஸ்தீனர்களுடன் சமாதான உடன்பாடு ஏற்படாவிடினும், இஸ்ரேல் தனது அண்டை நாடான எகிப்து, ஜோர்டன் நாடுகளுடன் சமாதான உடன்படிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது.

இஸ்ரேலை ஆதரித்தால், இந்தியாவின் மதச் சார்பற்ற நிலையுடன், இந்திய முஸ்லீம் சமுதாயத்தின் நட்பையும், முஸ்லீம் அரேபிய நாட்டினருடைய நட்பையும் இழக்க வேண்டிய நிலை உண்டாகும் என்ற பயத்தினால், இந்தியா இஸ்ரேலை பல வருடங்கள் ஆண்ட காங்கிரஸ் ஆட்சி ஒதிக்கியே வைத்துள்ளது.

இது ஆரம்பத்தில் சரியான வெளிநாட்டுக் கொள்கையாகக் கொண்டாலும், சீனாவின் படை எடுப்பு, பாகிஸ்தான் யுத்தம், வங்காள தேசப் போர் ஆகியவைகளின் போது, நாம் கேட்காமலேயே நமக்கு ஆதரவாகச் செயல்பட்ட இஸ்ரேலுக்குப் பிறகாவது இந்தியா தனது இஸ்ரேலுடனான உறவைப் புதிப்பித்து அதனால் இந்தியா மிகவும் பலனடைந்திருக்கலாம். ஆனால் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் இந்த வெளியுறவுக் கொள்கையில் தவறிழைத்து விட்டது என்று தான் கணிக்கத் தோன்றுகிறது.  

பிஜேபியின் அரசு முதன் முதலாக வாஜ்பாயி தலைமையில் அமைந்த பிறகு தான் 2003-ம் ஆண்டு முதன் முறையாக ஏரியல் ஷரான் இஸ்ரேல் பிரதம மந்திரி இந்தியாவிற்கு அரசுப் பயணமாக வந்தார்.

இஸ்ரேல் நாடு தான் இந்தியாவின் எதிரிகள் 1962, 1965, 1999 ஆகிய ஆண்டுகளில் படையெடுத்த போது உடனேயே உதவ முன் வந்துள்ளது. போபர்ஸ் பீரங்கிகளுக்கு வேண்டிய தாக்கும் உபகரணங்களை இஸ்ரேல் தான் தானாகவே முன் வந்து எந்தவிதமான ஒப்பந்தமும் இன்றி உதவி உள்ளது.  

இந்தியாவின் ராணுவ லெப்டினெண்ட் ஜே.எஃப்.ஆர். ஜாகப்அவரது மூதாதையர்கள் பாக்தாத் நகரத்திலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள்யூத வம்சாவளியினர்அவர் தான் பங்களா தேச விடுதலைப் போரில் பாகிஸ்தானை வெற்றி கொள்ள முக்கிய பங்காற்றியவர். 1971-ம் ஆண்டு 90,000 பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவத்தினரிடம் சரணடைய வழிவகுத்தவர். ஆனால் அப்போதும் இந்திரா காந்திதுர்கா தேவி என்று இந்த வெற்றியை கொண்டாடினாலும், அதற்கு மிகவும் உதவிய இஸ்ரேலுடன் தொடர்பை வலுப்படுத்த விரும்ப வில்லை

மோடியின் இந்தப் பயணத்தின் போது தான் எந்தவிதமான ஒளிவு மறைவும் இன்றி இந்தியா-இஸ்ரேல் நாட்டு உறவுகள் பலப்பட்டு, ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அறிவியலில் ஆய்வு ஒப்பந்தம், உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம், நீரைப் பாதுகாத்துச் சேமிக்கும் திட்டம், வேளாண் துறையில் ஒருங்கிணைப்பு, விண் வெளி ஆராட்சி மற்றும் அணுக் கடிகாரங்கள் அமைப்பதில் கூட்டாகச் செயல்படுதல்ஆகியவைகளாகும்.

இந்திய கலாச்சார மையம் இஸ்ரேலில் அமைப்பது, டெல் அவிவ்பம்பாய் - டெல்லி நேரடி விமானப் போக்குவரத்து, இந்திய மரபு இஸ்ரேல் வம்சாவளியினர் கட்டாய ராணுவப் பயிற்ச்சி பெற்றாலும், அவர்களுக்கு வெளிநாட்டு இந்திய பிரஜா உரிமைச் சான்றிதழ் அளிக்கப்படும் திட்டம்ஆகியவைகள் இஸ்ரேலின் இந்திய உறவை பலப்படுத்தும் என்பது உறுதி.


இஸ்ரேல் நாட்டில் டான்ஸிகர் என்ற துறையினர் தங்கள் நாட்டில் அதிகமாக விளையும் பூவிற்குமோடிஎன்று பெயர் சூட்டிக் கவுரவித்தது இந்தியாவின் 125 கோடி மக்களுக்கு இஸ்ரேல் காட்டும் நன்றியாகும்.
இந்தியா உண்மையான நண்பனை முஸ்லீம் நாடுகளின் கோபத்திற்குப் பயந்துநீர்த்துப் போன போலியான மதச் சார்பற்ற கொள்கையின் பிடியினால், உதாசினப் படுத்திய நிலை மாறி, இந்தியா இஸ்ரேல் நாட்டுடன் நேசக் கரம் நீட்டியது ஒரு சரித்திர நிகழ்வாகும். அதனால் பலன் அடையப் போவது இரு நாடுகளும் தான்.

முஸ்லீம் தீவிரவாதப் பிடியில் சிக்கி இரு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகையால் உலக அளவில் இந்த உறவு உலக அமைதிக்கு உதவும் என்று நம்பலாம்.

இந்தியஇஸ்ரேல் உறவு தழைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.










Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017