குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா – 09-07-2017
குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில்
வரும் பவுர்ணமியாகும். இந்த வருடம் 09-07-2017 அன்று குரு
பூர்ணிமா.
இந்த நாளில் தான் வியாச பகவான் பிரம்ம சூத்திரத்தை
– வேதங்களின் சாரமாகக் கருதப்படும் பிரம்ம சூத்திரத்தை – எழுத ஆரம்பித்த நன்னாள்.
ப்ரஸ்தான த்ரயம் என்று போற்றப்படும் மூன்று மூல நூல்களை இயற்றி குரு ஸ்தானத்தில்
வீற்றிருக்கும் பேறு பெற்றவர் வியாசர் முனி. நான்கு வேதங்கள், பகவான் அருளிய கீதை,
பிரம்ம சூத்திரம் ஆகியவைகள் தான் அந்த மூன்று மூல நூல்களாகும்.
‘குரு’ என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு ‘இருளை விலக்குபவர்’ என்று பொருள். வியாச குருவானவர் தாம் இயற்றிய மூல நூல்கள் மூலம் மனிதர்களின்
அறியாமையாகிய இருளை அகற்றி, ஞானோதய மார்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஆகையால் அவரே மூல குருவாகப் போற்றப்படுகிறார்.
குருவின்
அநுக்கிரஹத்தில்தான் ஞானம்
கிடைக்கும் என்ற
விஷயம் சாந்தோக்ய
உபநிஷத்தில் சொல்லியிருக்கிறது.
ஆசார்யவான்
புருஷோ வேத
– ஆசார்யனைப் பெற்ற
புருஷன் தான்
ஞானத்தை அடைகிறான்
– என்று அதில்
இருக்கிறது.
ஒரு
சின்னக் கதை
போல இதைச்
சொல்லியிருக்கிறது. கந்தார
தேசத்தை (இந்த
நாள் காண்டஹார்
என்பது அதுதான்)
சேர்ந்த ஒருத்தனின்
கண்ணைக் கட்டிக்
கொண்டு போய்
ஜனசஞ்சாரமில்லாத ஒரு
இடத்தில் விட்டு
விட்டால் எப்படி
– யிருக்கும்?அவன்
எப்படித் தன்
ஊருக்குத் திரும்புவான்?கிழக்கா,
மேற்கா, தெற்கா,
வடக்கா என்று
தெரியாமல்தானே தவித்துக்கொண்டிருப்பான்?
இந்த
மாதிரிதான் மாயை
நம் கண்ணைக்
கட்டி இந்த
லோகத்தில் விட்டிருக்கிறது.
அப்புறம் கண்ணைக்
கட்டிக் காட்டில்
விடப்பட்டவனிடம் ஒருவன்
வருகிறான். கட்டை
அவிழ்த்து விடுகிறான்.
கந்தார தேசத்துக்குப்
போகிற வழியையும்
சொல்லிக்கொடுக்கிறான். அதற்கப்புறம்
இவன் அழவில்லை.
பயப்படவில்லை. அவன்
சொன்ன மாதிரியே
போய்த் தன்
ஊரை அடைகிறான்.
இந்த மாதிரிதான்
ஆசார்யனின் உபதேசத்தால்,
நாம் எங்கேயிருந்து
வந்தோமோ அந்தப்
பரமாத்ம ஸ்தானத்துக்கு
வழியைத் தெரிந்து
கொண்டு அங்கே
போய்ச் சேருகிறோம்
என்று சாந்தோக்யம்
சொல்கிறது.
ஆதி சங்கரரும்
குருதான். அவரே குருவின் பெருமையை மிகவும் அழுத்தமாக ஆணித்தரமாக –”ஒருவனுக்கு
எத்தனைதான் பெருமை
இருந்தால் என்ன?
குருவின் சரணாரவிந்தங்களில்
அவன் தன்
மனஸைக் கட்டிப்
போட்டிருக்காவிட்டால் என்ன
பிரயோஜனம்?’ என்று
ஒரே ஒரு
தரம்
கேட்கவில்லை. நாலு
தரம், ” தத:கிம்?
தத:கிம்?தத:கிம்?
தத:கிம்?”
என்று கேட்கிறார்.
‘
‘குர்வஷ்டகம்”
(குரு ஸ்துதியான
எட்டு ஸ்லோகங்கள்)
என்ற ஸ்தோத்தரத்தில்,
ஒவ்வொரு அடி
முடிவிலும் இப்படி
நான்கு தரம்,
மொத்தம் முப்பத்திரண்டு
தடவை கேட்கிறார்.
முடிவில்,
தம் சரீரத்தைவிட்டு
அவர் புறப்படுவதற்கு
முந்திப் பண்ணின
உபதேசத்திலும்,
ஸத்
வித்வான் உபஸ்ருப்யதாம்
ப்ரதிதினம் தத்பாதுகா
ஸேவ்யதாம் ப்ரஹ்மைகாக்ஷரம்
அர்த்யதாம் ச்ருதிசிரோவாக்யம்
ஸமாகர்ணயதாம்
என்கிறார்.
”ஸத்தான
வித்வானை ஆசார்யனாக
வரிப்பாயாக! தின்தோறும்
அவருக்குப் பாத
பூஜை பண்ணுவாயாக!அவரிடமிருந்து
உபதேசம், பிரணவ
உபதேசம், உபநிஷத
மஹாவாக்ய உபதேசம்
எல்லாம் வாஙகிக்
கொள்வாயாக!”
என்கிறார்.
இதன் மூலம் குரு பூர்ணிமாவின் முக்கியத்துவம் விளங்கும்.
வியாச பகவானை நினைத்து, ஒவ்வொரும் தம் வாழ்நாளில் தமக்கு வித்தையை அளித்த
ஆசிரியருக்கு வந்தனம் செய்து வணங்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்வு ஒளிவிடும்.
தர்மம் தழைக்கும். சாந்தி நிலவும்.
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ:
Comments