ஜம்மூ காஷ்மீர் செனானி - நஸ் ரீ சுரங்கப்பாதை
வீடியோ இணைப்பு:
https://www.thequint.com/news-videos/2017/03/25/chenani-nashri-tunnel-in-jammu-and-kashmir
(குறிப்பு: இந்த சுரங்கப்பாதையைப் பற்றிய விபரம் மேலே இணைப்பைச் சொடுக்கி அதன் வீடியோ இணைப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும். மிகச் சிறிய வீடியோ - கட்டாயம் பார்க்கவும் - ஆசிரியர்)
1200 மீட்டர்
உயரத்தில் அமைந்துள்ள இந்தச் சுரங்கப் பாதையின் நீளம் 9.2 கி.மீ. அது செனானி - ரஸ் ரீ ஆகிய இரு
இடங்களை இணைக்கும் ஹிமாலயமலையின் சுரங்கப்பாதை. இதற்கு ஜூலை மாதம்
2011 அன்று
முன்பு பனிப்பொழிவின்
போது தொடர்ந்து ஐந்து நாட்கள் வாகனகங்களின் போக்கு வரத்து நிறுத்தப்படும். இதனால், பொருட்கள் டெல்லி போன்ற இடங்களுக்குச் செல்வது தடைப்பட்டு, பழங்கள் - காய்கறிகள் சேதமடையும் நிலையும் ஏற்பட்டு,
விவசாயிகளுக்கு பண நஷ்டம் ஏற்படும் நிலை இருந்தது. மேலும், இதனால் சுற்றுலாப் பிரயாணிகளும் சொல்லனாத் துன்பங்களை
அனுபவித்து, அவர்கள் மீண்டும் இங்கு வருவதைத் தவிற்கும் மனநிலையும்
உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கீழே சில போட்டோப்படங்கள், விவரங்கள் சுரங்கப்பாதையை
இன்னும் தெளிவாக விளக்கும்:
https://www.thequint.com/news-videos/2017/03/25/chenani-nashri-tunnel-in-jammu-and-kashmir
(குறிப்பு: இந்த சுரங்கப்பாதையைப் பற்றிய விபரம் மேலே இணைப்பைச் சொடுக்கி அதன் வீடியோ இணைப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும். மிகச் சிறிய வீடியோ - கட்டாயம் பார்க்கவும் - ஆசிரியர்)
₹
2,519 ரூபாய் செலவில் ஐந்து வருடத்தில் கட்டி முடிப்பதாக காங்கிரஸ் மன்மோஹன்
சிங்கின் ஐக்கிய முற்போற்கு கூட்டணி அரசு சர்க்கார் அடிக்கல் நாட்டியது. மோடி அரசு பதவி வகித்தவுடன் அந்த கட்டுமானப் பணிகள் முடிக்கி விடப்பட்டு,
அந்த சுரங்கப்பாதையில் உலகத் தரம் வாய்ந்த அளவில் பல நவீன பாதுகாப்பு
நடவடிக்கைகள், கேமராக்கள், ரேடியோ,
காற்றோட்டம், தீ தடுப்பு, சிக்னல்கள், தகவல் தொடர்பு மற்றும் மின் சாதனங்கள் அனைத்தும்
தானாக இயங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. அதன் மொத்த செலவும்
இதனால் ₹ 3720 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தப்
பாதையில் கார் போன்ற இலகுரக வாகனங்களுக்கு ரூ.55 (ஒரு முறை), ரூ.85
(இரு முறை), ரூ.1,870 (ஒரு
மாதம்) வசூலிக்கப்படும். மினி பஸ் போன்ற பெரிய வாகனங்களுக்கு ரூ.90 (ஒரு முறை), ரூ.135 (இரு முறை),
பஸ், டிரக்கு களுக்கு ரூ.190 (ஒரு முறை), ரூ.285 (இரு முறை) சுங்கக்
கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச்
சுரங்கப்பாதை முன்பு 41 கி.மீ.தூரப் பாதையை வெறும்
10.9 கி.மீ.பாதையாக சுருக்கி,
பயண நேரத்தையும் 2 மணிகள் குறைத்துள்ளது.
இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் சுமார் ₹ 27 லட்சம்
வாகன எரிவாய்வு மிச்சமாகும். இந்த சுரங்கப்பாதை தேசிய நெடுஞ்சாலை
44-ல் இருக்கிறது. அது ஜம்மூ - ஸ்ரீநகர் இரண்டையும் இணைக்கிறது.
இந்த சுரங்கப்பாதையை
உதம்பூரிலிருந்து மோடி அவர்கள்
02-04-2017 அன்று இந்தியாவின் மிகவும் நீளமான சுரங்கப்பாதையை அங்கு கூடி
உள்ள மக்கள் அனைவரையும் ஒன்றாகத் திறந்து வைக்க அழைப்பு விடுத்தார்.
“உங்கள் அனைவரையும் இந்த சுரங்கப்பாதையைத் திறந்து வைக்கும் படி அழைப்பு விடுக்கிறேன்.
நீங்கள் அனைவரும் உங்கள் மோபைல் போன்களை கையில் எடுத்து, அதிலுள்ள பிளாஷ் விளக்கை எரியவிட்டு, ‘பாரத் மாதாவிற்கு
ஜே!’ கோஷம் எழுப்பி சுரங்கப்பாதையினை நாட்டிற்கு அர்ப்பணியுங்கள்.
அனைத்து போட்டோகிராபர்களும் உங்களை போட்டோ எடுப்பதைப் பாருங்கள்!
இந்த அற்புதமான காட்சியை இந்தியாவே பார்க்கிறது!’ என்று பாரத் மாதா கி ஜே என்ற கோஷங்களை மோடி எழுப்பி, அனைத்து கூட்டத்தினரையும் இதில் ஈடுபட வைத்தார்.
அப்போது
மோடி ஆற்றிய உரையின் சுருக்கம்:
‘ஜம்மு - காஷ்மீர இளைஞர்கள் பல ஆயிரம் நாட்கள் கற்களை
வெட்டி, இந்த சுரங்கப்பாதையினை அமைத்துள்ளார்கள். இதன் மூலம், நான் இந்தப் பள்ளத்தாக்கு இளைஞர்களுக்கு
சொல்லுவதெல்லாம், ‘பாருங்கள்! கற்களின்
சக்தியினை’ என்று. ஒரு புரம் தவறான வழிகாட்டுதலால்,
சிலர் கற்களை கையில் எடுத்து வீசும் காரியத்தில் இறங்கும் போது,
இங்கே காஷ்மீர இளைஞர்களோ கற்களை உடைத்து, அந்த
உடைத்த கற்களால் காஷ்மீரத்தின் எதிர்காலத்தை கட்டுகிறார்கள். இந்த சுரங்கப்பாதை உதம்பூர் - ராம்பான் ஆகிய ஊரை இணைத்தாலும்,
இது காஷ்மீர் பள்ளத்தாக்கின் விதியையே தீர்மானிக்கும் சின்னமாகத் திகழப்போகிறது
என்பதை நீங்கள் மறக்காதீர்கள்.
கடந்த 40 ஆண்டுகளாக இந்தப் பள்ளத்தாக்கு,
தீவிரவாதத்தால் ரத்தம் சிந்திவிட்டது. இதனால் சுற்றுலா
பாதிக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை சுற்றுலாவைப் பலப்படுத்தும்.
அதில் தான் காஷ்மீரின் பலமே அடங்கி உள்ளது. இதைப்
போல் இன்னும் ஒன்பது - ஆமாம் ஒன்பது - சுரங்கப்பாதைகள்
அமைக்கும் திட்டம் இருக்கிறது. இந்த இணைப்புகளால் மக்கள் இதயங்களும்
இணையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. முன்னேற்றம் என்பது
தான் எங்களது தாரக மந்திரம். மக்களை\ பங்குபெறவைப்பது
தான் எங்களின் வழி. அதிலும் இளம் சமூகத்தினரை எங்களுடன் இணைத்து,
ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதுதான் எங்களது நோக்கம்.’
முன்னேற்றம்
தான் இந்தியாவை உயர்த்தும் என்பதை மோடி செயலில் காட்டி வருவதை இந்த மூன்று ஆண்டுகளில்
கண்கூடாகப் பார்க்கிறோம். அதை பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். அத்துடன் நில்லாமல்
மோடியை தேர்தல்களிலும் நம்பி ஓட்டுக்களைப் பதிவு செய்கிறார்கள். ஆகையால், மோடியும் இன்னும் உற்சாகமாகச் செயலில் இறங்கி,
இந்தியாவை உன்னத நிலையை அடையச் செய்வார் என்ற நம்பிக்கை நமக்கும் இருக்கிறது.
Comments