அம்மா பெட்டக முத்துக்கள் தொகுப்பு: வாய்மை நிருபர் பவித்திரன்



 1987 ஆண்டு எம்.ஜி.ஆர். இறந்த போது, எம்.ஜி.ஆர். உடல் வைக்கப்பட்டிருந்த வண்டியிலிருந்து எம்.ஜி.ஆரின் உறவினரான தீபன் என்ற இளம் நடிகரால் ஜெயலலிதா தள்ளப்பட்டார். மார்ச் மாதம் 1985ல் எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த போதே ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதா சொன்னது: “என்னிடமிருந்து என்னை மிரட்டியோ அல்லது தாக்கியோ ஒருவரும் எதையும் பெறமுடியாது. அப்படிப்பட்டவர்களின் செய்கைகள் என்னை மேலும் உறுதியாகவும், வளைந்து கொடுக்காமலும், விட்டுக் கொடுக்காமலும் ஆக்கிவிடும். என் ஆதரவைப் பெற விரும்பினால், அதற்கு ஒரே வழிதான் உண்டு: என்னிடம் பணிவாகவும், என்னைப் புகழ்ந்தும், அன்பாகப் பேசியும், குரலில் இதமாகவும் இருக்க வேண்டும்.”

  எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை தனது வாரிசு என்று கூறவில்லை. அவரது மறைவுக்குப் பிறகு, அவர் தான் அந்த இடத்தை பெற போராட வேண்டி வந்தது.  எம்.ஜி.ஆர். எனக்கு கட்சியில் அவருக்குப் பிறகு நான் என்று சொல்லி, என் அரசியல் வாழ்க்கையைச் சுலபமாகச் செய்ய வில்லை. அவர் எதையும் நான் சுலபமாக .தி.மு.கவில் பதவியைப் பெற உதவவில்லை. நான் தான் சண்டை இட்டு, மிகுந்த போராட்டத்திற்குப் பிறகே மேலே வந்தேன்.’ - இது அவரே ஒரு பேட்டியில் கூறியவைகள்




Ø  என். ராம் - ஹிந்து பத்திரிகைக்கு 2009 ஆண்டு அளித்த ஒரு பேட்டியில் ஜெயலலிதா: நான் சினிமாவை வெறுத்தேன். ஆனால், என் தாயார் அதில் தள்ளிவிட்டார். நான் அரசியலை வெறுத்தேன். ஆனால், எம்.ஜி.ஆர். என்னை அதில் தள்ளி விட்டார். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் நான் ஒரு அட்வகேட்டாக - ராம் ஜெத்மாலானி அல்லது ஃபாலி எஸ். நாரிமன் ஆகியவர்களைப் போல் - திகழ விரும்பினேன். இன்றும் அரசியலை வெறுக்கிறேன்.

Ø  அதே பேட்டியில், என்.ராம்நீங்கள் தனிமையில் வாடுவதாகக் கருதுகிறீர்களா?’ என்ற கேள்விக்கு ஜெயலலிதா தன் அருகில் இருந்த தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான சசிகலாவைச் சுட்டிக் காட்டி, பதில் சொன்னார்: சசிகலா தான் என் உடன் பிறவாச் சகோதரி. இப்போது எனக்கு கூடப் பிறந்த அப்பா இல்லை. அம்மா இல்லை. சகோதரர் இல்லை. சகோதரி இல்லை. என்னுடைய மற்ற உறவினர்கள் - அத்தைகள், மாமாக்கள், ஒன்றுவிட்ட சகோதரிகள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு என்று தனியான வாழ்வுகள் - வேலைகள் உண்டு. அவர்கள் எனக்காக அனைத்தையும் துறந்து, என்னுடன் வாழ முன்வரவில்லை. ஆனால் அந்த இடத்தை சசிகலா தான் நிரப்பி உள்ளார். அவர் கட்சி விவகாரத்திலோ அல்லது அரசாங்க ஆட்சியிலோ தலையிடுவதில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் உள்ள நிருவனங்களை நான் தான் நிருவகித்து வருகிறேன். அவைகளில் சசிகலாவின் பங்கு இல்லை.

மேலும், தனது 60-வது வயது நிறைவடைந்த சம்ரதாய நிகழ்ச்சியில்  சசிகலாவை தன் பக்கத்தில் உட்கார வைத்து மாலை அணிவித்து தன் அன்பை வெளிப்படுத்தினார் ஜெயலலிதா. அம்மாவாக வலம் வந்த ஜெயலலிதா தன் உடன் பிறவா அன்புச் சகோதரி சசிகலாவைசின்ன அம்மாஎன்று அழைப்பதை அறிந்திருந்தாலும், அதை அவர் தடுக்கவில்லை. அவரது நம்பிக்கைக்கு அருகதை உள்ளவராக அவரின் நிழலாகவே கடந்த 30 ஆண்டுகள் கூடவே இருந்தார் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. ஜெயலலிதா தனது சகோதரர் மற்றும் உறவினர்களிடமிருந்து விலகியே இருந்த காரணங்கள் அவருக்கு மட்டும் தான் தெரியும். ஒரு போதும் வெளியிட்டதில்லை.

வெண்ணிற ஆடை சினிமா வெற்றிக்குப் பிறகு, அவரை திரை உலகம்வெண்ணிற ஆடை ஜெயலலிதா என்று அழைக்க விரும்பியது. ஆனால், அவர்நான் நானாகவே இருக்க விழைகிறேன்என்று அந்த அடைமொழிப் பெயரைத் தவிர்த்தார். ஆனால், எம்.ஜி.ஆர். உடன் ஜெயல்லிதா நடித்த வெற்றிப் படமான ஆயிரத்தில் ஒருவன் தான் தனது அரசியல் வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமைந்தது என்றால் அது எந்த வகையிலும் மிகை அல்ல என்பது ஜெயலலிதா வெளிப்படையாக அந்த சினிமாவின் 50-வது வருட வெளியீட்டின் போது சொன்ன வாசகம். எம்.ஜி.ஆர். அவர்களுடன் ஜெயலலிதா 28 சினிமாப் படங்கள் வரை நடித்துள்ளார். 1973-ல் எம்.ஜி.ஆர். அவர்களுடன் ஜெயலலிதா கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து, பிறகு ஜுன் 4, 1982 அன்று தான் எம்.ஜி.ஆர். அவர்களுடன் சமரசமாகி, .தி.மு..வில் அங்கத்தினராகச் சேர்ந்தார்.

1984-1989 - ராஜ்ய சபா மெம்பர்: அப்போது அவருடன் ராஜ்ய சபா மெம்பராக இருந்த குஷ்வந் சிங்கிடம் தெரிவித்தார்: எனது கனவு தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக ஆளுவதாகும். ஏன், நான் இந்தியாவின் பிரதமராகவும் வர ஆசைப்படுகிறேன். எனது ரோல் மாடல் இந்திரா காந்தி என்று சொன்னவர், அவர் முன்னிலையிலே தனது ராஜ்ய சபா கன்னிப் பேச்சை பேசி, அவரது பாராட்டைப் பெற்றார்.


1986 மதுரையில் உலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றக் கூட்டத்தில் ஜெயலலிதா எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அளித்த வெள்ளிச் செங்கோல் கேடயம் போட்டோ அவர் விரும்பிப் பாதுகாக்கும் ஒன்றாகும்.

Ø  1989 - ஆளும் தி.மு.. எம்.எல்.-க்களால் சட்டமன்றத்திலேயே அவரை மானபங்கப்படுத்திய சம்பவத்தால் அவர் சூளுரைத்தார்: இந்த மன்றத்தில் இனி நான் முதல் அமைச்சராகத்தான் நுழைவேன். அது 1991 ஆண்டு நிறைவேறியது. மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு அது நிகழ்ந்தது. எம்.ஜி.ஆர். .தி.மு.. இரண்டாகப் பிளந்தும் சேவல் சின்னத்தில் தனியாகப் போட்டி இட்டு, பிறகு இரண்டாகப் பிளவு பட்ட .தி.மு.. ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் கைப்பற்றி 225 எம்.எல்..க்களுடன் (ராஜிவ் காந்தியின் அகால மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலையும் ஒரு காரணம்) வெற்றி பெற்று, தமது 43-வது வயதிலேயே முதல் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றது சரித்திரச் சிறப்பு நிகழ்வு.

Ø  இரண்டு முறை - 1991 ஆண்டு பி.வி.நரசிம்ம ராவ் தலைமையில் உள்ள டெல்லி ஆட்சியிலும் பிறகு 1998 ஆண்டு வாஜ்பாய் தலைமையில் பெரும் சிந்தனைக்குப் பிறகு - வாஜ்பாயின் ஜெயலலிதாவின் ஆதரவுக் கடிதத்தை சிட்டி மிலிஎன்று குறிப்பிட்டுப் பேசிய புகழ்பெற்ற வேடிக்கை வாசகம் - வாஜ்பாய் ஆட்சியிலும் பங்கு பெற்றாலும், இரண்டிலும் தன் ஆதரவை நீக்கி அரசைக் கவிழ்த்தார்.

Ø  2004-ல் ஒரு எம்.பி.கூட இல்லாத .தி.மு..வை 2014 ஆண்டு லோக்சபா தேர்தலில் 37 எம்.பி.க்களாகச் செய்து, தி.மு..வை ஒரு எம்.பி.கூட ஜெயிக்க முடியாமல் செய்து சாதனை படைத்தார். இது இந்தியாவில் மோடி அலை வீசியதையும் மீறி ஜெயல்லிதாவின் சாதனை என்பதை உணரவேண்டும். இருப்பினும், மோடியின் கட்சி பெரும்பான்மை பெற்றதால், இந்த அபார வெற்றி டெல்லி அரசில் எடுபடாமல் போய்விட்டது.  ‘மோடியா அல்லது லேடியா?’ என்று தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா சொன்னாலும், அவர்கள் இருவரின் தனிப்பட்ட நேசம் பாதிக்கப்படவில்லை. இது அவ்விருவரின் அரசியல் நாகரீகம் என்று தான் கணிக்கத் தோன்றுகிறது.

வாஜ்பாய் டெல்லி அரசில் ஜெயலலிதாவை மந்திரி சபையில் அங்கம் வகிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது, ‘தான் ஒரு போதும் எந்த ஒரு ஆண் அல்லது பெண் தலைமையின் கீழ் பணி செய்ய மாட்டேன்என்ற கொள்கையை நிலை நிறுத்திய தீரமான சிங்க மங்கை ஜெயலலிதா

மந்திரிகளை பல முறை நீக்குதல், புதியவர்களை ஆட்சியில் அமர்த்தல், கட்சிப் பதவியிலும் அடிக்கடி மாற்றங்கள் செய்தல் ஆகியவைகளைப் பற்றி ஜெயலலிதா எந்த விளக்கமோ அல்லது காரணங்களையோ கூறவில்லை. கூறும் படி யாரும் கேட்கவும் இல்லை, கேட்கவும் முடியாது. அதைப் பற்றிய சிறு முணுமுணுப்பு கூட .தி.மு..வில் எழாது. ஏனென்றால் ஜெயலலிதாவின் ஆளுமை அப்படி.


Ø  மூன்று நிகழ்வுகள் ஜெயலலிதாவிற்கு புகழ் சேர்க்காதவைகளாகக் கருத இடம் உண்டு. ஒன்று: 1992 ஆண்டு கும்பகோணம் மகாமகம் குளத்தில் புனித நீராடச் சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இரண்டு: வி.என். சுதாகரனைத் தமது சுவீகர மகனாக ஏற்று, அவரது திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக அரசியல் எந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தி நடத்தியதுடன், அதனால் வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்த வழக்கு போடப்பட்டு 27 நாட்கள் 2014 ஆண்டு சிறைவாசம் அனுபவிக்க நேறிட்டது. மூன்று: சுந்தரராமன் கொலை வழக்கில் காஞ்சி பீடாதிபதிகள் ஜெயேந்திரர், விஜேந்திரர் மற்றும் காஞ்சி மடத்தின் கணக்காளர் என்று பலரையும் கைது செய்து சிறையில் அடைத்து பொய் வழக்குப் போட்டு, பிறகு அவர்கள் அனைவரும் வழக்கிலிருந்து கோர்ட் மூலம் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டனர்.

டிசம்பர் 1996 - இந்த தேதிக்கு முன் உள்ள நாட்கள் தான் ஜெயலலிதாவை மிகவும் வாட்டிய துயரமானவைகளாகும் என்று அவரே சொல்கிறார். அந்த வருடத்தில் மே மாதம் பதவி இழந்தவுடன் அவர் பேரில் பல வழக்குகள் தி.மு.. அரசால் போடப்பட்டு, அவர் கைதாகி, ஜெயிலுக்குச் செல்லும் அளவில் அரசியல் சூழ்நிலை மாறியது. அந்த சமயத்தில் அவர் அரசியலிருந்து விலகவும் துணிந்தார். அதற்கு அப்போது .தி.மு..வில் கட்சிப் பதவியில் இருந்த எஸ். திருநாவுக்கரசரை எம். கருணாநிதியை ஜி.கே.மூப்பனார் மூலம் தொடர்பு கொண்டு, ‘அனைத்து வழக்குகளையும் வாபஸ் வாங்கினால், ஜெயலலிதா அரசியலில் இருந்தே விலகத்தயார்என்று தூது அனுப்பியும், அதற்கான எந்தப் பதிலும் வரவில்லை. இதற்கு ஜெயலலிதாவின் கருத்து: “கருணாநிதி அரசியல் சாணக்கியர் இல்லை. இருந்திருந்தால், என் வேண்டுகோளை ஏற்று, என்னை அரசியலில் இருந்து விலகச் செய்து, சுலபமாக தொடர்ந்து ஆட்சி செய்திருக்கலாம்.” அத்துடன் மார்ச் 1989ல், சசிகலாவின் கணவர் வீட்டிலிருந்து ஜெயலலிதா சபாநாயகருக்கு அவர் தமது எம்.எல்.. பதவியை ராஜிநாமா செய்ததாக எழுதிய கடிதம் கண்டெடுக்கப் பட்டதாக போலீஸ் தரப்பில் சொன்னதை சட்ட சபையில் இந்தப் பிரச்சனையை ஜெயலலிதா பேச முயன்றபோது அவர் சட்டசபையிலேயே தாக்கப்பட்ட நிகழ்வு மக்களிடையே ஜெயலலிதாவுக்கு அனுதாப அலைகளை அபரமிதமாக அளித்து, ஆதரவைப் பெற்றுத் தந்தது. 


ஜெயலலிதா உடலுக்கு, அவருக்கு பிடித்தமான பச்சை நிறத்தில் பட்டுப் புடவை அணிவிக்கப்பட்டிருந்தது. அவர் அணிந்திருந்த தங்கச் சங்கலி, வளையல் மற்றும் கம்மலுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சந்தனப் பேழையில் அவரது பெயர் இருபுறமும் - புரட்சித் தலைவி செல்வி ஜெ. ஜெயல்லிதா என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் பொறிக்கப்பட்டு இருந்தது. இறுதிச் சடங்கு மெரினா கடற்கரையில் சசிகலாவுடன் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இறுதிச் சடங்குகள் செய்தனர்.



Ø  வீட்டின் போர்டிகோ வாசலுக்கு எதிரே சுவரில் அழகிய விநாயகர் படம் ஒன்று செதுக்கப்பட்டு இருக்கும். காரில் வெளியில் கிளம்பும் போதும், திரும்பி வரும் போதும் அந்த விநாயகர் தரிசனம் தவறாது.

Ø  கல்கியில் தொடராக வெளிவந்த நாவல்: உறவின் கைதிகள். துக்ளக்கில்எண்ணங்கள் சிலஎன்று தொடர். தாய் வார இதழில்எனக்குப் பிடித்த ஊர்’, ‘எனக்குப் பிடித்த வாத்தியார்’, ‘எனக்குப் பிடித்த ஓவியர்’, ‘எனக்குப் பிடித்த எழுத்தாளர்’, ‘எனக்குப் பிடித்த நாவல்’, ‘எனக்குப் பிடித்த த்த்துவ ஞானிகள்என 45 கட்டுரைகள் எழுதி, அவைகள்மனதைத் தொட்ட மலர்கள்என்ற நூலாக வெளிவந்துள்ளது.1968ல் பொம்மை இதழுக்காக எம்.ஜி.ஆரிடம் நேர்காணல் எடுத்திருக்கிறார்.

குறிப்பை வைத்து சட்ட சபையில் பேசுவது குறித்து ஜெயலலிதா: சிலர் கேட்கலாம் குறிப்பில்லாமல் பேச முடியாதா என்று. பேச முடியும், மணிக்கணக்கில் பேச முடியும். பொதுக் கூட்டங்களில் பேசுவது போல் முழங்க முடியும். செந்தமிழில் முழங்க முடியும். ஆனால், இத்தனை புள்ளி விவரங்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?



Ø  2011ல் .தி.மு.. வின் முதல் மந்திரியாக ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் மோடியும், அதற்கு அடுத்த ஆண்டு குஜராத் முதல் மந்திரியாக மோடி பதவி ஏற்ற போது - குஜராத் வன்முறையால் மோடியின் நன்மதிப்பு உலக அளவில் பாதிப்பு அடைந்த நிலையிலும் - ஜெயலலிதாவும் பங்கேற்று அரசியல் கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு அவர்களின் நட்பு தொடர்ந்தது. சமீபத்தில் சம்பிரதாயத்தையும் தளர்த்தி, மோடி பிரதமராக பதவி வகித்தும், ஜெயலலிதாவின் வீட்டில் உணவு உண்டது அதையே ஊர்ஜிதம் செய்தது. 2014ல் பா.. தேர்தல் குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்ட போது, ‘மோடி என் மிகச் சிறந்த நண்பர். சிறந்த நிர்வாகி. அவர் குஜராத் முதல்வராக இருந்தாலும் சரி, அவரது கட்சியில் அதைவிட இன்னும் பெரிய பதிவுக்கு போனாலும், என் ஆதரவு அவருக்கு எப்போதும் இருக்கும் என்றார் ஜெயலலிதா

குஜாராத் வன்முறையை கோத்ரா வன்முறையைத் தவிர்த்து விமரிசிப்பது தவறு என்று வெளிப்படையாக விமரிசித்தவர் ஜெயல்லிதா. இதே கண்ணோட்டத்தில் தான் காஷ்மீர் பண்டிட்கள் முஸ்லீம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு டெல்லி வீதிகளில் அனாதைகளாக குடிபெயர்ந்து துயரப் பட்டபோதும் பலர் மவுனம் சாதித்த போதும், அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த உண்மையான செக்குலர் பெண்மணி ஜெயலலிதா

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017