யாரையும் சார்ந்திருக்க கூடிய கொடுப்பினை எனக்கு இல்லை ஜெயலலிதா உருக்கம்
தன்னை பற்றி
மறைந்த முதல்வர் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்
31-01-2013 அன்று
பேசிய உருக்கமான பேச்சு.
சில பெண்கள் இருக்கிறார்கள்,
பெரும்பாலான பெண்கள், இளம் வயதில் தகப்பனை சார்ந்திருப்பார்கள், பெரியவர்களான பிறகு கணவரை சார்ந்திருப்பார்கள், வயதான பிறகு பிள்ளைகளை சார்ந்திருப்பார்கள், ஆனால் என்னைப் போன்ற சில பெண்மணிகளும் இருக்கிறார்கள்.
நான் யாரையும்
சார்ந்திருக்க கூடிய கொடுப்பினை எனக்கு இல்லை .
யாரையும்
சார்ந்திருக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு வாழ்க்கையில் அமைய வில்லை.
எப்போதுமே
நல்லது என்றாலும் கெட்டது என்றாலும் , எனக்கு நானே
தான் முடிவுகளை எடுத்துக் கொண்டு, வாழ்க்கையில் எது வந்தாலும் நானே
தனித்து நின்று சந்தித்துக் கொண்டு, இப்படியே நான்
செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன.
இது என்னுடைய
தனித் திறமை என்று நான் சொல்ல மாட்டேன், இது விதி .
தலையெழுத்து.
Comments