ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு - ஆணவமா? அவசியமா?
சங்கரராமன் கொலை வழக்கு - ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு
- இந்த இரண்டு வழக்குகளும் தமிழக அரசின் ஆணவமான போக்கின் உச்ச கட்டம்
என்பதுதான் நிதரிசன உண்மை.
நவம்பர்
2004 சமயத்தில் சங்கராச்சாரிய ஸ்வாமிகள் ஸ்ரீஜயேந்திரர் ஜெயிலில் அடைபட்டிருக்கும்
போது கூட, மீண்டும் அவர் ஜெயிலிருந்து பெயிலில் வெளியே வரக் கூடாது
என்ற எண்ணத்தால், ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் அவரைக்
கைதி செய்ய தமிழக அரசால் உத்திரவு விடப்பட்டது.
நவம்பர்
17, 2004 அன்று தமிழ் நாட்டு முதல் அமைச்சரான செல்வி ஜெயல்லிதா அவர்கள்
சட்ட சபையில் தெரிவித்தது:’ராதாகிருஷ்ணன் ‘சோமசேகர கனபாடிகள்’ என்ற புனைப்பெயரில் தன்னைப் பற்றி
மிகவும் கடுமையான குற்றச் சாட்டுக்களை கடிதங்களாக எழுதியுள்ளார் என்று ஜெயேந்திரர்
சந்தேகப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் ஜெயேந்திரர்
அடியாட்களை நியமித்து, ராதாகிருஷ்ணனைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளது
வெளிச்சத்திற்கு வந்துள்ளது.’
ஆனால் இதே புனைப்பெயரில் சங்கரராமன் ஜெயேந்திரரைப் பற்றிப் புகார்
கட்டுரைகள் எழுதியுள்ளார் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒரு புராதன மடத்தின் பீடாதிபதியை தமிழ் நாட்டுப் பத்திரிகைகள், மீடியாக்கள், மஞ்சள் பத்திரிகைகள், அரசியல் தலைவர்கள் என அனைவரும்
மிகவும் கீழ்த்தரமாக உண்மைக்குப் புறம்பாக பல அவதூறுகளை மக்கள் மத்தியில் பரப்பி,
மடத்தையே மட்டம் தட்டினார்கள்.
அதுவும் குறிப்பாக,
அனுராதா ரமணன் என்ற தமிழ்க் கதாசிரியை வைத்து போலீஸ் மீடியாவில் ஜெயேந்திரரை
கேவலப்படுத்தியது, ஒவ்வொரு உண்மை ஹிந்துவுக்கும் ஏற்படுத்திய
ரணமாகும் என்றால் மிகையாகாது. தோண்டித் தோண்டி பலவிதமான கடந்த
கால நிகழ்வுகளை எல்லாம் இந்த வழக்குகளுக்கு வலுசேர்க்க முயன்ற போலீஸ் உண்மையைக் கண்டறியும்
புனிதமான செயலிலிருந்து வழிதவறி தமிழ் நாடு போலீஸ் ‘ஆட்சியில் இருக்கும் அரசுக்கு ஏற்ப
செயல்படும்’ என்ற அவப்பெயரும் அதற்கு நிலைநாட்டப்பட்டு விட்டது.
பல சாட்சிகள் பல விதங்களில் மிகவும் மூர்க்கமாகத் துன்புறுத்தப்பட்டார்கள்
என்பது இந்த வழக்கினைத் தொடர்ந்து படித்தவர்களுக்கு நன்கு விளங்கும். அதில் பெண்களும் அடங்கும் என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. ஆனால், எவரும் அந்த போலீஸின் கொடுமையான விசாரணைக்கு உண்மைக்குப்
புறம்பான சாட்சியாக மாறாமல் இருந்தது ஆண்டவனின் சக்தி என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
நியூ இந்தியன் எக்பிரஸ் - துக்ளக் போன்ற ஒரு சில பத்திரிகைகளே இந்த வழக்கின்
அரசுக்கு எதிரான கட்டுரைகளைத் துணிந்து பிரசுரித்துள்ளன. அதற்கு
நியூ இந்தியன் எக்பிரஸ் தமிழக அரசின் கொடுமைகளை - பத்திரிகைச்
சுதந்திரம் என்பதை நாங்கள் தான் தீர்மானிப்போம் - என்ற தமிழக
அரசின் தனிச்சையான செயலால் - அனுபவிக்க வேண்டிய நிலையையும் வாசகர்களுக்கு
நினைவூட்ட வேண்டும். கட்டுரை ஆசிரியர்களும் - குறிப்பாக எஸ். குருமூர்த்தி என்ற கட்டுரை ஆசிரியரை
- போலீஸ் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியது பத்திரிகைச் சுதந்திரத்தைப்
பறிப்பதாகும் என்று எந்த ஒரு மீடியாவும் எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை என்பது ஒரு சோக
கீதமாக தமிழ் நாட்டில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்.
சங்கர மடம் ஒரு பிராமண மடம் என்பது போல் ஆகிவிட்ட நிலையில், பிராமணர்களிடம் எந்தவிதமான
ஒற்றுமையோ, தர்மத்தைக் காக்கப் போராடும் எண்ணமோ - சக்தியோ இல்லாத நிலையில், ஜெயேந்திரரை எந்த விதமாக நடத்தினாலும்
ஹிந்துக்களும் - பிராமணர்கள் உள்பட -கேட்பதற்கு
ஆள் இல்லை என்பதால் தமிழக போலீஸும், தமிழக அரசும் ஆணவப்போக்கில்
செயல்பட்டது.
‘கோர்ட் என்ன தீர்ப்பு அளித்தாலும், ஜெயந்திரர் குற்றவாளி.
அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்’ என்று அரசாங்கமே
அரசியல் ரீதியாகச் செயல்படும் போது, மக்கள் எழுச்சியுடன் எதிர்த்தால்
அன்றி நீதியும் குற்றவாளிக் கூண்டில் தள்ளப்படும். அது நிகழாமல்
நீதி மன்றம் தீர்க்கமாக மீண்டும் செயல்படும் என்று நம்புவோமாக.
கங்கரராமன் கொலை வழக்குத் தொடரும் முன் தமிழ் நாட்டுப் போலீஸ்
அதிகாரி காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் அந்த கேஸ் கோப்புகளை பெருமாள் சன்னிநிதியில்
வைத்துப் பூஜை செய்து பிறகு கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார். ஆனால், மேல்முறையீட்டில் தீர்ப்பு தமிழக அரசுக்குச் சாதகமாக இல்லாத நிலையில்,
கோயில் பூஜை முடியாது போயிற்று.
புராதனமான சங்கர மடத்தை மீண்டும் கறைபடும் படிச் செய்யும் தமிழக
அரசின் செயல் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை வாய்மை ஆசிரியர் தீர்க்கமாக உணர்கிறார். ஆணவம் ஆட்சி செய்யும் மனதில்,
அறிவு மழுங்கும் என்பது அறிவோர் மொழி. ஆனால்,
அரசியல் அகராதியில் ஆணவம் அவசியம் தேவை என்பதாக தமிழ அரசு கருதுவதாகவே
படுகிறது. ஆனால் மீண்டும் நீதிமன்றம் ஆணவம் அழிய தீர்ப்பு வழங்கும்
என்பது சர்வ நிச்சயம்.
Comments