பிரான்ஸ் நைஸ் நகரத்தை நரகமாக்கிய முஸ்லீம் தீவிரவாதி
14-ம் தேதி ஜீலை பிரான்ஸ் தேச மக்களுக்கு ஒரு முக்கியமான தினமாகும். அது நாடு சுதந்திரமடைவதற்கு முதற்கட்ட போராட்டமான பாஸ்டில் சிறை தகர்ப்பு நாளாகும்.
அதை பிரான்ஸ் நாடு தங்களது தேசிய தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.
நைஸ் நகர மக்கள் 14-ம் நாள் ஜூலை 2016 அன்று அங்குள்ள கடற்கரையில் திரளாகக் கூடி வாணவேடிக்கைகளைப் பார்த்துக் களித்துக்
கொண்டிருந்தனர். அப்போது இரவு நேரம். யாரும்
எதிர்பார்க்காத நிலையில் மொஹமத் லஹோயஜ் பவுஹ்லெல் என்ற துனிஷியாவில் பிறந்து பிரான்ஸ்
நாட்டு குடியுரிமை பெற்று நைஸ் நகரில் வசிக்கும் 31-வது நிரம்பிய
இந்த முஸ்லீம் வெடிபொருட்கள் நிரம்பிய ஒரு 19 டன் கொள்ளளவுள்ள
பெரிய டிரக் வண்டியை அந்த மக்கள் திரண்டிருந்த கடற்கரையில் வேகமாகவும், தாறுமாறாகவும் கொலைவெறித் தாக்குதலுடன் ஓட்டியும், துப்பாக்கியால்
சுட்டும் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அவனது வெறிச்செயல் தொடர்ந்துள்ளது.
ஒரு இருசக்கர வாகன ஓட்டி அந்த டிரக் வண்டியின் கதவைப் பிடித்து உள்ளே
செல்ல முயன்ற போது கீழே விழுந்து இறந்து விட்டான். பிறகு அந்த
முஸ்லீம் கொலைவெறி பிடித்த தீவிரவாதியை போலீஸ் சுட்டு வீழ்த்தியது. ஆனால் அந்த முஸ்லீம் தீவிரவாதி 84 பேர்களை - குழந்தைகள் உட்பட பலபேர்களைக் தெருவிலேயே பிணமாக்கி விட்டான். 303 பேர்கள் காயம். அதில் பலர் கவலைக்கிடம். உயிருக்குப் போராடும் நிலை.
தெருவெல்லாம்
பிணக்குவியலாகவும், ரத்தக்கறையாகவும் இருப்பதைப் பார்த்த மக்கள் மிகவும் கவலையும், பீதியும், கோபமும் அடைந்துள்ளார்கள்.
இந்த தாக்குதலுக்கு
ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது.
துப்பாக்கி, மனித வெடிகுண்டு ஆகிய தாக்குதல் போல்
இல்லாமல், இந்த தாக்குதல் ஒரு புதிய மிகவும் அபாயகரமான
- கண்டுபிடித்து, தடுக்க மிகவும் கடினமான ஒன்றாகும்.
பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்ட் மிகவும் துணிவாகவும், துல்லியமாகவும், ‘இது ஒரு இஸ்லாமிய தீவிரவாதத் தாக்குதல்’
என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டு, மூன்று
நாட்கள் தேசிய துக்க தினமாகவும் அறிவித்து, எமர்ஜென்சியையும்
இன்னும் 3 மாதங்கள் நீடித்து, பாரீஸ் மக்களையும்
போலீஸ்-ராணுவம் ஆகிய துறைகளில் சேரும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில்
உயிரழந்த 84 பேர்களில், 38 பேர்கள் பிரஞ்சு நாட்டினர். மீதமுள்ள 46 பேர்கள் வெளிநாட்டவர்கள்.
அந்தத்
துயரச் சம்பவத்தில் உயிரழந்த அத்துனைபேர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடையப்பிரார்த்திப்போம். காயமடைந்தவர்கள் பூர்ண குணமாக
எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.
இது போன்ற
தீவிரவாதம் நடைபெறாமல் தடுக்க அனைத்து வழிகளையும் எல்லா நாட்டவர்களும் ஒருங்கிணைந்து
செயல்பட வேண்டும். இதில் முக்கியமாக முஸ்லீம் நாட்டினர் முழுமனதோடு ஒரே குரலாக தீவிரவாதத்திற்கு
எதிராகக் குரல் கொடுப்பதோடு, செயலிலும் இறங்க வேண்டும்.
அது பெரும்பான்மை முஸ்லீம்களுக்கு நன்மை பயக்கும். இது உலக அமைதிக்கு முஸ்லீம்கள் செய்யும் ஒரு தொண்டாகவே பாராட்டப்படும்.
மதத்திற்கு
அப்பாற்பட்டு, உலக அமைதியை முக்கிய அம்சமாகக் கொண்டு, நல்ல மனசுல்ல
அனைத்து முஸ்லீம்களும், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள
அனைத்து முஸ்லீம் இயக்கங்களையும் இனம் கண்டு ஒழிக்கத் தீவிரமான நிலைப்பட்டையும்,
செயலையும் செய்ய வேண்டியதை அல்லாவின் ஆணையாகவும், கடமையாகவும் நினைக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அதன் மூலம் அல்லாவின் அருளும், அகில உலக மக்களின் நன்மதிப்பையும்
பெறுவார்கள்.
‘இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரி’ என்று சொல்லும் பொழுது,
அதே இஸ்லாம் மதத்தின் பேரால் நடக்கும் முஸ்லீம் தீவிரவாதங்களை எதிர்ப்பது
தானே உண்மையான முஸ்லீம்களின் கொள்கையாக இருக்க வேண்டும்?
‘மதத்தின் பேரால் துவேஷமும், ரத்தம் சிந்தியது போதும்.
இனி, உலக அமைதியை நிலை நாட்ட அனைவரும் ஒன்று படுவோம்.
இதில் நம்பிக்கை இல்லாதவர்களை வேரோடு கருவறுப்போம்’ என்ற உறுதிமொழியை உலக மக்கள் அனைவரையும் ஏற்க வைப்போம்.
Comments