அசோசியேட் ஜர்னல் லிமிடெட் - நேஷனல் ஹாரால்ட் - யங்க் இந்தியன் - இந்திய நேஷனல் காங்கிரஸ் விவகாரம்
இந்த விவகாரங்களைப் பற்றித் தெரிய பல இருப்பினும் , கீழ்க்கண்ட மூன்று முக்கிய கட்டுரைகள் / பேட்டி உதவும் . 1. சட்ட நுணுக்கங்கள் , சட்ட விதிமுறை மீறல்களின் விவரங்கள் , தண்டனை விளக்கங்கள் ஆகியவைகள் இதில் அறியலாம் . - இணைப்பு . 2. எஸ் . குருமூர்த்தியின் கட்டுரை - அனைத்துச் செயல்களும் ஊழல் மயம் - இணைப்பு 3. மஹாத்மா காந்தியின் செயலாளராக இருந்த எஸ் . கல்யாணம் பேட்டி - இணைப்பு இந்த இணைப்புகளில் சொல்லப்பட்ட விவரங்களின் முக்கியமானவைகளைப் பற்றி எந்தவிதமான உள் நோக்கமும் இன்றி , வாய்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொன்டு இந்த கட்டுரையை எழுதத் துணிந்துள்ளேன் . இது ஏதோ புதிதாக எழுப்பிய குற்றப் பத்திரிகை அல்ல . கடந்த பல வருடங்களாக சுப்பிரமணிய ஸ்வாமியால் வெளிப்படையாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒன்று தான் . ‘ நான் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறேன் . என் மேல் மான நஷ்ட வழக்கோ அல்லது வேறு வழக்கோ காங்கிரஸ் என் மேல் போட்டால் , நான் அதன் மூலம் என் குற்றச் சாட்டுகளை ஆதாரத்துடன் கோர்ட்டில் சமர்ப்பிக்க ஏதுவாக இருக்கும் ’ என்று சொன்னாலும் , காங்கிரஸ் , “ தைரியமிருந்தால் , கோர்ட்...