பிரஹதாரண்ய உபநிடதம் யாஞ்யவல்கியரின் விளக்கங்கள் எழுத்து: ஜயந்திநாதன்
யாஞ்கவல்கியர் பெண் மேதையான கார்க்கியை 'பிரம்மத்த்தைப்பற்றி மேலும் மேலும் கேள்விகள் கேட்கவேண்டாம்' என்று ஜனகர் அரசரின் சபையில் எச்சரித்தார். ஆனால், ஜனகர் சபையிலுள்ள பிராம்மணர்கள் கார்க்கியை மேலும் இரண்டு கேட்விகள் கேட்க அனுமதிக்கிறார்கள். உண்மையில் இரண்டு கேள்விகள் அல்ல. ஒரே கேள்வியே இரண்டு முறை கேட்கப்பட்டு, ஒரே பதிலும் இரண்டு முறை யாஞ்யவல்கியரால் சொல்லப் படுகிறது. இது கேள்வியின் முக்கியத்துவத்தைத் தான் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். பிறகு, யாஞ்கவல்கியரே பிரம்மத்தைப் பற்றி விஸ்தாரமாக விளக்குகிறார்.
பதிலைக் கேட்ட கார்க்கி முத்தாய்ப்பாக சொல்லுகிறார்: பிரம்மணர்களே! மஹா பாண்டித்யம் வாய்ந்த யாஞ்கவல்கியர் நம்மிடையே இருப்பது பெரும் பாக்கியமாகும். அவரை வணங்குவோம். பிரம்மத்தைப் பற்றி விளக்குவதில் அவரை உங்களில் யாரும் வெற்றி கொள்ள முடியாது.
உபநிடத்தில் சொல்லப் பட்டவைகளை இப்போது பார்ப்போம்.
பிரம்மம் - யாஞ்கவல்கியரின் விளக்கங்கள்
கார்க்கி: மதிப்பிக்குரிய பிராமணர்களே! யஞ்யவல்கியரிடம் இரண்டு கேள்விகள் கேட்க அனுமதி வேண்டுகிறேன். அந்த இரண்டு கேட்விகளுக்கும் அவர் சரியான பதில்களை அளித்து விட்டால், உங்களில் யாரும் யாஞ்யவல்கியரைப் போல் பிரம்மத்தைப் பற்றி விளக்குவதில் மிஞ்சமுடியாது என்பது திண்ணம்.
அரச அவையில் உள்ள பிராம்மணர்கள்: ஓ, கார்க்கியே! நீ அந்த இரண்டு கேள்விகளையும் யாஞ்யவல்கியரிடம் கேட்கலாம்.
கார்க்கி மிகவும் சந்தோஷத்துடன் யாக்யவல்கியரிடம் கேள்விகள் கேட்கத் தயாரானாள்.
கார்க்கி: யாக்யவல்கியரே! போர்களத்தில் வெற்றி வாகை சூடும் அரச வம்சத்தைச் சேர்ந்த விதேஹ அரசனின் வில்லிருந்து தன் எதிரியின் மார்ப்பைத் துளைத்து துயரத்தை உண்டுபண்ணும் இரண்டு கூர்மையான மூங்கில் அம்புகளைப் போல் என் இரண்டு கேள்விக் கணைகள் இருக்கப்போகின்றன. அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராகுங்கள்.
யாஞ்யவல்கியர்: ஓ, கார்கியே! கேள்விகளைக் கேட்கவும்.
கார்க்கி: ஓ, யாஞ்யவல்கியரே! சொர்க்கத்திற்கு மேலே, பூமிக்குக் கீழே, சொர்கம்-பூமி இவைகளுக்கு இடையிலே ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்து இருக்கும் அந்த வஸ்து எது?
யாஞ்கவல்கியர்: சொர்கத்திற்கு மேலே, பூமிக்குக் கீழே, சொர்கம்-பூமி இரண்டையும் இணைத்து, இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் வருங்காலம் ஆகியவைகளையும் இணைத்து இயங்கும் அந்த வஸ்து கண்களுக்கு தெரியாத உருவமற்ற ஈதர் ஆகும்.
கார்க்கி: ஓ, யாஞ்கவல்கியரே! உம்மைத் தலை வணங்குகிறேன். முதல் கேள்விக்குத் தாங்கள் தக்க பதில் அளித்துள்ளீர்கள். என் இரண்டாவது கேள்விக்குப் பதில் சொல்லத் தயாராகுங்கள்.
கார்க்கி கேட்ட இரண்டாவது கேள்வி முதல் கேள்விதான். யாஞ்கவல்கியர் அளித்த பதிலும் முதல் கேள்வியின் பதில் தான். அதாவது அந்த வஸ்துவின் முக்கியத்துவம் கருதி இரண்டாவது முறை அதே கேள்வி கேட்கப்பட்டதாகத் தான் கொள்ள வேண்டும். கார்க்கி இப்போது அந்த வஸ்துவான ஈதரைப் பற்றி யாஞ்கவல்கியரிடம் விளக்கும் படி வினவுகிறார்.
கார்க்கி: இந்த உருவமற்ற நுண்ணியமான கண்களுக்குத் தெரியாத ஈதர் எப்படி எங்கும் பரவி உள்ளது?
யாஞ்கவல்கியர்: ஓ, கார்க்கி! பிரம்மத்தை அறிந்த பிராம்மணர்கள் இதை - அழிவற்றது என்கிறார்கள். அதாவது இது பிரம்மம் என்று அறியச் சொல்கிறார்கள். இது கடினமானது அல்ல. இது மிகவும் துல்லியமான சிறிய இழையைப் போன்றதும்அல்ல. இது குட்டையானது அல்ல. இது நீளமானதும் அல்ல. இது நெருப்பைப் போல் சிவப்பானதும் அல்ல. தண்ணீரைப் போல் திரவமும் அல்ல. அதற்கு நிழல் கிடையாது. இருட்டோ, காற்றோ, ஈதரோ அதற்குக் கிடையாது. அது எதிலும் பற்றுதல் கிடையாது. ருசி, மணம் ஆகியவைகளும் அதற்குக் கிடையாது. அதற்குக் கண்கள் இல்லை. காதுகள் இல்லை. பேச வாய் இல்லை. நினைக்க மனது இல்லை. ஒளிப் பிரபை இல்லை. மூச்சு இல்லை. அதை அளக்க முடியாது. வெளி அல்லது உள் என்ற அமைப்பில்லை. அது உண்ணுவதில்லை. அதையும் யாரும் உண்ணுவதும் இல்லை.
பிரம்மத்தைப் பற்றி யாஞ்கவல்கியர் மேலும் மூன்று ஸ்லோகங்களில் இன்னும் விரிவான விளக்கத்தைத் தெரிவிக்கிறார் அந்த ஜனகர் சபையில். இதில் ஒரு விசேஷம் என்ன வென்றால், பிரம்மத்தின் ஒவ்வொரு குணாதிசயங்களைச் சொல்லும் பொழுது, கார்கியை முன்னிலைப் படுத்தி ஒவ்வொன்றாகப் பட்டியிடுகின்றார்.
யாஞ்கவல்கியர்:
ஓ, கார்க்கி! அந்த அழிக்க முடியாததும், மாறாததுமான அக்ஷரா என்ற சக்தியின் கட்டளைப்படி தான் சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்கள் அவைகளின் பாதைகளில் ஒழுங்காகச் செல்லுகின்றன.
ஓ, கார்க்கி! இந்த மஹத்தான சக்தியின் கட்டளையால் தான் சுவர்க்கம், பூமி ஆகியவைகள் தங்கள் தங்கள் இடங்களிலிருந்து செயல்படுகின்றன.
ஓ, கார்கி! அந்த மஹத்தான சக்தியின் கட்டளையால் தான், நிமிடங்கள், மணிகள், முகூர்த்தங்கள், பகற்பொழுதுகள், இரவு நேரங்கள், பாதி மாதங்கள், மாதங்கள், பருவகாலங்கள், வருடங்கள் அனைத்தும் சரியாகச் செயல்படுகின்றன.
ஓ,கார்க்கி! அந்த மஹத்தான சக்தியின் கட்டளையால் தான், சில ஆறுகள் பனி மலைகளிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கின்றன; சில ஆறுகள் மேற்கு நோக்கிப் பாய்கின்றன; மற்ற ஆறுகள் அவைஅவைகளின் பாதைகளில் சென்று பாய்கின்றன.
ஓ, கார்க்கி! இந்த மஹத்தான சக்தியின் கட்டளையால் தான், தானம் செய்பவர்களை மக்கள் பாராட்டுகிறார்கள். கடவுள்கள் யாகத்தை நம்பி இருக்கிறார்கள்.
ஓ, கார்க்கி! இந்த மஹத்தான சக்தியை அறியாமல் அக்னியில் செய்யப்படும் யாகங்கள், தர்மங்கள் பல ஆயிரம் வருடங்கள் செய்தாலும், அதனால் எந்த விதப் பலனும் இல்லை. அந்த கர்மாக்கள் அனைத்தும் வீண். ஓ, கார்க்கி! அந்த மஹத்தான சக்தியை எவன் அறிந்து கொள்ளாமல் இந்த உலகத்தை விட்டு உயிரை விடுகிறானோ, அவன் மிகவும் துக்கப்படுவான்.
ஓ, கார்க்கி! ஆனால், அந்த மஹத்தான சக்தியை எவன் ஒருவன் முழுதும் அறிந்து உயிரை விடுகிறானோ, அவன் பிரம்மத்தை அறிந்தவனாகிறான்.
ஓ, கார்க்கி! அந்த மஹத்தான சக்தியைப் பார்க்க முடியாது. ஆனால், அது தான் எல்லாவற்றிற்கும் சாட்சியாகிறது. அது பேசுவதைக் கேட்க முடியாது. ஆனால், அது எல்லாவற்றையும் கேட்கும். அது நினப்பதை அறியமுடியாது. ஆனால், அது எல்லாருடைய நினைப்பையும் அறியமுடியும். அதை அறியமுடியாதது. ஆனால், அது எல்லாவற்றையும் அறியும். எல்லா நடப்புகளுக்கும் வேறு சாட்சி இல்லை இந்த ஒரே சாட்சியைத் தவிர. அதே போல், எல்லா பேச்சுக்களுக்கும், எல்லா நினைப்புகளுக்கும், எல்லா அறிய வேண்டியவைகளுக்கும் அதுதான் மூலாதாரம்.
ஓ, கார்க்கி! இந்த மஹத்தான சக்தியால் தான், ஈதர் எங்கும் பரவி இருக்கிறது.
இந்த அற்புதமான பிரம்மத்தைப் பற்றிய விளக்கங்களை அந்த ஜனகர் சபையிலுள்ள அனைத்து வேத வித்துக்கள் கேட்டு மகிழ்ந்தனர். இறுதியாக, அனைவரின் சார்பில், கார்க்கி யாஞ்யவல்கியரைப் புகழ்ந்து பேசுகிறாள்.
கார்க்கி: பெருமதிப்பிற்குரிய பிராமணர்களே! யாஞ்கவல்கியரை வணங்குவதன் மூலம், நீங்கள் பெரும் பாக்கியசாலைகள என்று பெருமைப் படலாம். பிரம்மத்தைப் பற்றி உங்களில் யாரும் இம்மாதிரி விளக்கி அவரை வெல்ல முடியாது.இப்படிச் சொல்லி விட்டு, கார்க்கி என்ற வாகக்ணுவின் மகள் மெளனமானாள். (உபநிடதம் தொடரும்.)

Comments