Posts

Showing posts from August, 2025

மோடியின் 12-வது இந்திய தேச சுதந்திர தின விழாவில் நிகழ்த்திய எழிச்சி உரை

Image
12 இந்திய சுதந்திர உரை - 12 விதமான தலைப்பாகைகள்  இந்தியா பல வெளி நாட்டு - உள் நாட்டு சவல்களை எதிர்கொள்ள வேண்டிய ஒரு மிகவும் கடினமான கால கட்டத்தில் இருக்கிறது.  வலுவான பொருளாதாரம், அதி நவீன பாதுகாப்பு, திறமையான வெளியுறவுக் கொள்கை, பலமான நிதி நிலை என்று இந்தியாவை மோடி அரசு முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 'மோடி என் உற்ற நண்பர்' என்று உறவு கொண்டாடி அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவுகளை மோடியின் அன்பினால் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு மனம் மாறி மோடிக்கு எதிராக செயல்பட ஆரம்பித்துள்ளார்.   'நான் தான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த சண்டையை நிறுத்தினேன்' என்று சுய தம்பட்டம் அடித்தார். ஒரு தரம் இல்லை; பல தரம் பொது மேடைகளில் முழக்க மிட்டார்.   'மோடி தன் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க வேண்டும்' என்று பகிரங்கமாகவும் உலக அரங்கில் முழங்கினார் டிரம்ப்.   இதை எல்லாம் விட 'இந்தியா ரஷ்யாவிடமிருந்து சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணையை வாங்கக் கூடாது. வாங்கினால் சுங்க வரியை அதிகரிப்பேன்' என்று சொல்லி இந்...

விநாயகர் சதுர்த்தி - 27 - 8 - 2025 - புதன் கிழமை

Image
  விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் பிறந்த நாளாகும். விநாயகரை முழு முதற் கடவுள் என்று துதிக்கப்படுகிறார் . எந்த சுப காரியங்களையும் விநாயகரை முதன் முதலில் பூஜை செய்த பிறகு தான் ஆரம்பிப்பார்கள் . ஏனென்றால் விநாயகரை விக்ன விநாயகர் - துன்பங்களைத் துடைப்பவர் என்று துதிக்கப்படுகிறார் .  பார்வதி தேவி களிமண் சிற்பமாக உருவாக்கிய சிறுவன் , சிவபெருமானால் தலையில் யானை முகம் பொருத்தப்பட்டு விநாயகராக உருவெடுத்தார் என்பது பாரம்பரிய புராணக் கதை.   பொது இடங்களில் பிள்ளையார் உருவச் சிலைகளை வைத்து வழிபடும் வழக்கம் முதலில் மஹாராஸ்டிராவில் சுதந்திர வீர ர் பால கங்காதர திலக மஹாராஜ் அவர்களால் தொடங்கப்பட்டு, அது இந்தியாவில் பல இடங்களில் பரவி இன்று அந்த விழா பொது மக்கள் விழாவாக மாறி, கொண்டாடப்படுகிறது. ஹிந்து மதம் பலப்பட நட த்தப்படும் விழாவாகும் இது. இந்த விழாவின் போது பிள்ளையார் சிலைகளை பூஜை செய்து , அவற்றை இறுதியில் நீரில் கரைத்துவிடும் வழக்கம் உண்டு. இது தீமைகளை நீக்கி புதுமை மற்றும் தேசிய ஒற்றுமையை குறிக்கிறது.   பிள்ளையாருக்கு பிடித்த வகையான மோதகம் , லட்டு போன்ற இனிப்புகளை தயார...

கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஆகஸ்ட் 16, 2025 - சனிக்கிழமை

Image
  ஆகஸ்ட் 16 , 2025 அன்று கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி , கிருஷ்ணரின் 5252வது பிறந்த தினமாகும்.   கிருஷ்ண அவதாரம் மகாவிஷ்ணுவின் 9 வது அவதாரமாகும். பவான் கிருஷ்ணர் , துவாபர யுகத்தில் பூமியில் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன.   அதர்மத்தை அழிப்பதற்காகவும் , மனிதகுலத்தை நேர்வழிப்படுத்தி , துன்பங்களில் இருந்து விடுவிப்பதற்காகவுமே கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.   வசுதேவர்-தேவகியின் எட்டாவது குழந்தையாக அவதரித்த கிருஷ்ணர் , அதே இரவில் கோகுலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு , நந்தகோபர் மற்றும் யசோதனையின் மகனாக மறைத்து வைத்து வளர்க்கப்பட்டார்.   சிறு குழந்தையாக இருந்த போதே கோகுலத்தில் பல மாய வேலைகள் செய்து , தன்னை கொல்ல வந்த அரக்கர்களை கொன்று , ஆயர்பாடியில் இருந்தவர்களை காத்தார்.   இறுதியாக தனது தாய்மாமனான கம்சனையும் வதம் செய்தார். கம்ச வதம் மட்டும் கிருஷ்ண அவதாரத்தின் நோக்கம் கிடையாது. பாரத போரில் அதர்மத்தை அழித்து , தர்மத்தை நிலை நாட்டியதுடன் , மனிதகுலத்தை துன்பத்தில் இருந்து மீட்டு , மோட்சத்திற்கான வழியை காட்டும் பகவத்கீதையை அரு...

ரக்ஷா பந்தன் 09 - 08 - 2025

Image
ரக்ஷா பந்தன் என்பது சமஸ்கிருத வார்த்தைகளான ' ரக்ஷா ' ( பாதுகாப்பு) மற்றும் ' பந்தன் ' ( பிணைப்பு) ஆகியவற்றிலிருந்து உருவானதாகும். இதன் பொருள் "பாதுகாப்புப் பிணைப்பு" ஆகும். இந்த இந்துப் பண்டிகை , சகோதரிக்கும் சகோதரனுக்கும் இடையிலான அன்பையும் , சகோதரிக்கும் தனது சகோதரனுக்கும் தன் பாதுகாப்பிற்கும் அளிக்கும் உறுதிமொழியையும் குறிக்கிறது. அந்த உறுதி மொழியை வெளிப்படுத்தும் விதமாக சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ' ராக்கி ' எனப்படும் புனித நூலைக் கட்டி , அவர்களின் நீண்ட ஆயுளையும் , மகிழ்ச்சியையும் , வளத்தையும் வேண்டிப் பிரார்த்தனை செய்வார்கள். இதற்குப் பதிலாக , சகோதரர்கள் தங்கள் சகோதரிகளை எப்போதும் பாதுகாப்பதாக உறுதியளித்து , அவர்களுக்குப் பரிசுகளை வழங்குவார்கள்.   ரக்ஷா பந்தன் பண்டிகை வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது என்றாலும் , தற்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.   ரக் க்ஷாபந்தன் பண்டிகை உருவான கதை   கிருஷ்ணர் - திரெளபதி சகோதர உணர்வு:   போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தைப் பார்த்த திரெளபதி தன் புடவையின் ஒரு...

வரலக்ஷ்மி விரத நோன்பு - 08 - 08 - 2025 - வெள்ளிக் கிழமை

Image
  வரலட்சுமி விரதம் என்பது மகாலட்சுமியைப் போற்றி வணங்கும் ஒரு சிறப்புமிக்க விரதமாகும். இந்த விரதம் , திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நலன் , நீண்ட ஆயுள் , மற்றும் குடும்பத்தில் செல்வச் செழிப்பு பெருக வேண்டி கடைப்பிடிக்கும் ஒரு முக்கியமான பண்டிகை. கன்னிப் பெண்களும் நல்ல வரன் அமைய இந்த விரதத்தை மேற்கொள்வது உண்டு.   வரலட்சுமி விரதத்தின் முக்கியத்துவம்   ' வரம் ' என்றால் வரம் தருதல் , ' லட்சுமி ' என்றால் செல்வம். எனவே , இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு கேட்ட வரங்களை லட்சுமி தேவி வழங்குவாள் என்பது நம்பிக்கை. இந்த நாளில் மகாலட்சுமியை வழிபட்டால் , செல்வம் , தைரியம் , வெற்றி , கல்வி , புகழ் , மகிழ்ச்சி , வலிமை , மற்றும் குழந்தைச் செல்வம் என எட்டு வகையான செல்வங்களையும் அருளும் அஷ்டலட்சுமிகளையும் வழிபட்டதற்குச் சமம் என்று கருதப்படுகிறது.   விரத முறைகள்   கலசம் வைத்தல்: பூஜைக்கு முதல் நாளே வீடு சுத்தம் செய்யப்பட்டு , வாழை மரம் , மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்படும். ஒரு கலசத்தில் அரிசி , மாவிலை , மஞ்சள் பூசப்பட்ட தேங்காய் ஆகியவை வைத்து , அதை மகாலட்சுமியாக பாவித்த...

ஆடிப்பெருக்கு 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி, சனிக்கிழமை

Image
  ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாளில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய தமிழ் பண்டிகைதான் ஆடிப்பெருக்கு அல்லது 18- ம் பெருக்கு ஆகும். இது நீர்நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு விழா. குறிப்பாக , காவிரி டெல்டா பகுதிகளில் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.   தென்மேற்குப் பருவமழையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாகி , புது வெள்ளம் பெருக்கெடுத்து வரும். இந்த நீர் , விவசாயத்திற்கும் , மக்களின் வாழ்க்கைக்கும் மிகவும் அவசியம். இதை வரவேற்று , நன்றி சொல்லும் விதமாகத்தான் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் , விவசாயிகள் நல்ல விளைச்சல் வேண்டி விதை விதைப்பார்கள்.   முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்ட முறைகள்   தாலிப் பெருக்கி: திருமணமான பெண்கள் தங்கள் தாலிக் கயிற்றை மாற்றி , கணவரின் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தனை செய்வார்கள்.   புதுமணத் தம்பதிகள்: புதுமணத் தம்பதிகள் , ஆடிப்பெருக்கு நாளில் ஆற்றங்கரைக்குச் சென்று வழிபடுவது வழக்கம்.   வழிபாடுகள்: மக்கள் ஆற்றங்கரைகளில் சென்று காவிரி அம்மனுக்குப் படையலிட்டு , வாழை மட்டைத் தெப்பங்களில் பூக்கள் , பழங்கள் , இனிப்புகள் போன்...