வக்ஃப் திருத்தச் சட்டம் - 2025 அலசுவோம் & ஆராய்வோம்

வக்ஃப் என்பது ஒரு அரேபிய மொழிச் சொல். அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் - நிறுத்து, தடு என்பதாகும். இதன் மூலம் இந்த வக்ஃப் என்ற பதம் சொத்தை தனிநபரின் உரிமையிலிருந்து தடுத்து, பொது நலமான மசூதி, முஸ்லீம் மதப் பள்ளி, முஸ்லீம் அனாதை விடுதி ஆகியவைகளுக்கு நிரந்தரமான உபயோகித்திற்கு தானமாக அளிப்பதைக் குறிக்கும். இந்த வக்ஃப் சொத்துக்களை விற்கவோ அல்லது பிறருக்கு அளிக்கவோ முடியாது. ஆகையால் வக்ஃப் என்பது இஸ்லாம் மதத்தினர் தமது சொத்துக்களை - அது நிலமாகவோ, கட்டிடமாகவோ அல்லது பணமாகவோ - இருப்பதை தானமாக அளிப்பதாகும். அந்த தானமாக அளிக்கபடும் நிலம் - கட்டிடம் ஆகியவைகள் தானம் செய்பவரின் சொத்து என்பதற்கான ஆதாரம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை அவர் அனுபவித்திருந்தாலே அதை வக்ஃபிற்கு தானம் செய்து விடலாம். அதை எதிர்த்து கோர்ட்டில் வழக்குப் போட முடியாது. இந்த நிலை இந்தியாவில் வக்ஃப் முதன் முதலில் 12-ம் நூற்றாண்டிலிருந்து நடை முறையில் இருந்தாலும், அதில் பல மாற்றங்கள் அவ்வப்போது ஏற்பட்டு உள்ளது

இந்த வக்ஃப் நடைமுறை முகமது கோரியால் 12-ம் நூற்றாண்டுல் பிர்த்விராஜ் சவுகானை வென்ற பிறகு அதைக் கொண்டாடும் விதமாக முகமது கோரி இரண்டு கிராமங்களை வக்ஃப் சொத்தாக பதிவு செய்யப்பட்டு வக்ஃப் தானத்திற்கு வித்திட்டார். அதன் பிறகு ஆட்சி செய்த முஸ்லீம் மன்னர்களான இல்துமிஷ், முகமது பின் துக்ளக், அல்லாவுதீன் கில்ஜி போன்றவர்களால் வக்ஃப் சொத்துக்கள் விரிவடைந்தன

இதனால் இந்துக் கிராமங்கள் வக்ஃப் தானம் மூலம் அந்த கிராம மக்கள் முஸ்லீம்களாக மதம் மாற்றி, அங்கெல்லாம் மசூதிகள், மதராசாக்கள் உருவாக்கப்பட்டன. வக்ஃப் சொத்தின் வருவாய் மூலம் இந்த முஸ்லீம் மதம் மசூதிகள் - மதராசாக்கள் என்று பெருகின

வக்ஃப் சொத்துக்களை முறையாக செயல்படுவதற்கு பிரிட்டிஷ் அரசால் 1913-ம் ஆண்டு முஸ்லீம் வக்ஃப் சட்டம் 1913-ல்  இயற்றப்பட்டது. அதன் பிறகு பிரிட்டிஷ் அரசு 1923-ம் ஆண்டு அதில் சில திருந்தங்களைக் கொண்டு வந்தது. அதன் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இந்த வக்ஃப் சட்டம் 1954, 1995 & 2013 ஆண்டுகளில் பல திருத்தங்கள் முஸ்லீம் சட்டங்களை ஒட்டியே - அதாவது முஸ்லிம் தனிநபர் ஷாரியத் சட்டம் 1937 ஒட்டியே - கொண்டு வரப்பட்டனஇந்திய சட்டங்களான இந்தியா டிரஸ்ட் சட்டம் 1882 - சோசட்டி ரிஜிஸ்டிரேஷன் சட்டம் 1860 ஆகியவைகளின் அடிப்படையில் - அந்த இந்திய சட்டங்கள் தானம் செய்யும் சொத்துக்களை எந்தவிதமான மத பேதமும் இன்றி செயல்படுத்தும் ஷரத்துக்கள் கொண்டவைகளாக இருப்பினும் - அந்த வக்ஃப் சொத்துக்களை அந்த செக்குலர் சட்டங்களின் கீழ் கொண்டு வராமல் தனியாக முஸ்லீம்களின் சட்டங்களின் அடிப்படையில் செயல்பட பல ஆண்டுகளாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது

அதுவும் குறிப்பாக 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கும் சில மாதங்களுக்கு முன்னால், வக்ஃப் சட்டத்தில்  முஸ்லீம் ஓட்டு வங்கிக்காக திருத்தங்களை அவசர அவசரமாக கொண்டு வந்தனர். அதன் மூலம் ஆக்கிரமிப்பாளர் பற்றிய புதிய விளக்கம், டிரிபுலனின் அங்கத்தினர்களை அதிகரித்தல், வக்ஃப் போர்டு வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்ப்பதில் மாற்றம் என்ற திருத்தங்களால், பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் தலைநகரில் உள்ள 123 வக்ஃப் சொத்துக்களை டெல்லி வக்ஃப் வாரியத்திற்கு மாற்றும் முடிவால் அதன் சொத்து பெருகியது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய நீதிபதி (ஓய்வு பெற்ற) எஸ்.பி. கார்க் தலைமையில் இரண்டு பேர் கொண்ட குழுவை மோடி அரசு அப்போதே அமைக்க வேண்டிய நிலை உருவாகியது. 

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலில் வக்ஃப் சொத்து தொடர்பான வழக்கில், நான்கு பிரிட்டிஷ் நீதிபதிகள் வக்ஃப்பை "மிக மோசமான மற்றும் மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒரு நிரந்தரமான முஸ்லிம் நிறுவனம்" என்று கண்டித்து, அது செல்லாது என்று தீர்ப்பளித்தனர். இருப்பினும், இந்த முடிவு இந்தியாவில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மேலும் 1913 ஆம் ஆண்டின் முசல்மான் வக்ஃப் என்ற சட்டம் வக்ஃப் நிறுவனத்தைப் பாதுகாத்தது. 

அந்த கால கட்டத்தில் இந்தியாவில் வக்ஃப்களை ஒழிக்கக் கோரி ஒரு இயக்கம் தோன்றியது என்பதும் ஒரு சரித்திரச் செய்தியாகும். அதன் பின்னர், வக்ஃப்களை ஒழிப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. 

2006 ஆம் ஆண்டு சச்சார் குழு வக்ஃப் சொத்துக்கள் குறைவாக மதிப்பிடப்பட்டு தவறாக நிர்வகிக்கப்பட்டதாகக் கண்டறிந்தது. இந்தியாவில் வக்ஃபின் சொத்து மொத்தம் 8.7 லட்சம் அசையா சொத்துக்கள். மொத்தம் 940,000 ஏக்கர் (3,808 சதுர கி.மீ) பரப்பளவில் வக்ஃப் நிறுவனம் இந்திய ரயில்வே மற்றும் இந்திய ஆயுதப்படைகளுக்குப் பிறகு இந்தியாவில் மூன்றாவது பெரிய சொத்து வைத்திருப்பவராக மாறியுள்ளதது. 

இதன் சந்தை மதிப்பு ரூபாய் 1.2 லட்சம் கோடியாகும். இதில் என்ன அநீதி என்றால் - இந்த சொத்துக்களில் 7% சொத்துக்கள் முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்டவைகள். 2% நீதிமன்ற வழக்குகளாகும். 50% அளவில் அந்த சொத்துக்களின் விபரங்கள் இல்லை. இதன் மூலம் ரூ.6,000 கோடி மதிப்புள்ள 4.9 லட்சம் சொத்துக்கள் ரூ.163 கோடி மட்டுமே வருமானம் ஈட்டித் தந்தன. 

வருவாய் இழப்பு, மோசமான நிர்வாகம், மேற்பார்வையில் நேர்மை இன்மை போன்ற பிரச்சினைகளை சச்சார் குழு எடுத்துக்காட்டியது. 

நில அபகரிப்பு மற்றும் வக்ஃப் சொத்துக்களின் ஆக்கிரமைப்பு ஆகியவற்றி லிருந்தும் சர்ச்சைகள் எழுந்துள்ளன

இதற்கு உதாரணம்: தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தால் 1,500 ஆண்டுகள் பழமையான சுந்தரேஸ்வரர் கோயில் உட்பட பல இந்து கிராமங்கள் வக்ஃப் சொத்துக்கள் என்று வக்ஃப் வாதாடுகிறது. எந்தவிதமான எழுத்து மூலமான பத்திரம் இல்லாமல் வக்ஃப் நிருவாகம் எந்த சொத்துக்களையும் உரிமை கொண்டாடலாம் என்ற அதீதமான அதிகாரத்தால் பல அன்னிய மதத்தினர் - குறிப்பாக இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நாம் உணரவேண்டும்

வக்ஃப் திருத்தச் சட்டம் என்பது வக்ஃப் சொத்துக்களை அடையாளம் கண்டு, அதை முறைப்படுத்தும் விதிமுறைகளைச் சட்டமாக கொண்டு வந்துள்ளது. இது முஸ்லீம்களின் மத வழிபாட்டினையோ, மசூதி, மதராசாக்கள் ஆகியவைகளை நெறிப்படுத்தும் சட்டமோ இல்லை என்பதை முதலில் அறியவேண்டும்

வக்ஃப் சரியாகச் செயல்படவில்லை என்பதும் ஒரு சில முஸ்லீம் சமூகத்தினரின் கருத்தாகும். அவர்களும் வக்ஃப் நிர்வாகத்தின் மேல் நம்பிக்கை அற்று உள்ளார்கள் என்பதும் தெரிய வருகிறது

இதற்கு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க மோடி அரசு விரும்பி அதை நிறைவேற்ற வக்ஃப் சட்டம் 2025 லோக் சபா, ராஜ்ய சபா என்ற இரு சபைகளிலும் நீண்ட விவாதத்திற்குப் பிறகு சட்டமாகி உள்ளது

இது லோக் சபாவில் 288 ஓட்டுக்கள் ஆதரவாகவும் 232 ஒட்டுக்கள் எதிராகவும், அதே சமயத்தில் ராஜ்ய சபாவில் ஆதரவாக 128 ஓட்டுக்கள் - எதிராக 95 ஓட்டுக்கள் என்ற நிலையில் இந்த வக்ஃப் புதிய இந்திய சட்டமாகி உள்ளது. முந்தைய வக்ஃப் சட்டம் 1995 என்பது Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act, 1995 (UWMEED Act 1995) என்ற புதிய நாமகரணம் பெற்று ஜனாதிபதியின் ஒப்புதல் ஏப்ரல் 5, 2025-ல் பெற்று அமலுக்கு வந்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் - சில முஸ்லீம் குழுக்கள் வழக்குத் தொடர்ந்து அது நடந்து வருகிறது. 

இந்த புதிய வக்ஃப் சட்டத்தில் என்ன மாற்றங்கள் உள்ளன, அவைகளின் சாதக பாதகங்கள் யாவை என்பதை இப்போது சுருக்கமாகப் பார்க்கலாம். 

1. இந்த புதிய சட்டம் முசல்மான் வக்ஃப் சட்டம் 1923-யை ரத்து செய்கிறது. 

2. வக்ஃப் சொத்துக்கள், மசூதிகள், மதராசாக்கள், முஸ்லீம்களின் அனாதை இல்லங்கள் போன்றவைகளை நிர்வகிக்கும் அதிகாரம் - வக்ஃப் கவுன்சில், வக்ஃப் போர்ட், வக்ஃப் டிரிபுனலின் அதிகார மையம் முடவாலி என்ற முஸ்லீம் மதத்தலைவர் - ஆகியவர்களிடம் உள்ளது. இந்த குழுக்கள் அனைத்தும் முஸ்லீம்களால் முழுமையாக அதிகாரம் செலுத்துவதால் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காது என்ற நிலை உள்ளது. ஆகையால் வக்ஃப் கவுன்சில் - வக்ஃப் போர்ட்டு ஆகியவைகளில் முஸ்லீம் அல்லாத இரண்டு அரசு அதிகாரிகள், இரண்டு முஸ்லீம் பெண்கள் ஆகியவர்களை இடம் பெற வழி வகுத்துள்ளது இந்தப் புதிய சட்டம். மேலும் எதாட்சதிகாரமாகச் செயல்படும் முடவாலி முஸ்லீம் மதத் தலைவர் டிரிபுனலிருந்து நீக்கப்படுகிறார். இதன் மூலம் வக்ஃப் தனதாக்கிக் கொண்ட சொத்துக்களின் உரிமை குறித்து கோர்ட்டில் 90 நாட்களுக்குள் முறையிடுவதற்கு வழி வகுத்துள்ளது. 

முன்பு ஒரு நபர் டிரிபுனலானக இருந்தது இப்போது நீதிபதிகள், முஸ்லீம் சட்டம் தெரிந்த நிபுணர் என்று மூவராக உருவாகி உள்ளது. ஏனென்றால் இது சொத்து உரிமையைப் பற்றி தாக்கல் செய்யப்படும் கோரிக்கையை தீர்மானிக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த விரிவாக்கம் பாதிக்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கலாம்

3. நீண்ட கோரிக்கையான பல முஸ்லீம் பிரிவினர்கள் தங்களையும் வக்ஃப் நிர்வாகத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதால், ஷியா, சுன்னி, போஹ்ரா மற்றும் அகாகானி முஸ்லீம் சமூகத்தினர்களும் வக்ஃப் கவுன்சில் - போர்ட் ஆகியவைகளின் அங்கத்தினர்களாகின்றனர். 

4. இந்த சட்டத்தின் மூலம் மத்திய அரசாங்கம் அனைத்து வக்ஃப் சொத்துக்களும் பதிவு, அவைகளை நிர்வகுக்கும் வரசு செலவுகளை தணிக்கை செய்ய அரசாங்கத்திற்கு அதிகாரம்  ஆகியவைகளுக்கு தகுந்த விதிமுறைகளை வகுக்க அதிகாரம் அளிக்கப்படுகிறது.  

5. வக்ஃப் சொத்துக்கள் அனைத்தும் பதிவு செய்ய ஒரு மத்திய மின் வலை உருவாக்கி, அதன் மூலம் அதன் சொத்துக்களின் முழு விவரங்களும் தெரிய வழிவகுத்தல். 

6.  வக்ஃப் சொத்துக்களாகப் பதிவு செய்வதற்கு முன் ரெவினியூ சட்டங்களின் படி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புதல் போன்ற நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வழி வகுத்தல்

7. வக்ஃப் டிரிபுனலின் உத்திரவு ஒரு முடிவானதாகவும், அதை எதிர்த்து எந்த கோர்ட்டிலும் வழக்குத் தொடரமுடியாது நிலை முன்பு இருந்துள்ளது. இந்த டிரிபுனல் முஸ்லீம் முடவாலி என்ற முஸ்லீம் மதத்தவரின் கட்டுப்பாட்டில் இருந்ததை இங்கு குறிப்பிட வேண்டும். ஆனால் இப்போது இந்த புதிய சட்டத்தின் மூலம் 90 நாட்களுக்குள் நீதி மன்றங்களில்  டிரிபுனலின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியும்

8. ஐந்து வருடம் முஸ்லீமாக இருப்பவர்கள் தான் வக்ஃபுக்கு தன் சொத்தை தானம் செய்ய முடியும். மேலும் சொத்தை உபயோகித்த காரணத்தால் மட்டும் அந்த சொத்தை வக்ஃப் சொத்தாக தானம் செய்ய முடியாது. அந்த சொத்து அவர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இனி முஸ்லீம் பெண்களும் வக்ஃப் சொத்தை நிர்வகிக்க முடியும்

9. உச்ச வரம்புச் சட்டம் 1963 - விதி எண் 107 - என்பது வக்ஃப் சொத்துக்களுக்கும் பொருந்தும் என்பதால் சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களாக இருப்பின் அவைகளை மீட்டு உரியவர்களுக்கு அளிக்கலாம்

இந்தத் திருத்தங்களை முஸ்லீம் குழுவினர் - எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனர். அவர்கள் சொல்லும் காரணங்களை இப்போது பார்க்கலாம்.


1. இது முஸ்லீம்களின் மதத்தில் தலையிடுவதாகும். ஆகையால் இந்த திருத்தங்கள் இந்திய அரசியல் சட்டம் ஆர்டிகிள் 14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம், ஆர்டிகிள் 19 - பேச்சுத் சுதந்திரம், ஆர்டிகிள் 21 - சொத்தின் உரிமை, ஆர்டிகிள் 26 - மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம், ஆர்டிகிள் 300 A - சொத்தில் உரிமை (இது அடிப்படை உரிமையாக இருந்த நிலை 44-வது இந்திய அரசியல் சட்டத் திருத்தம் படி ரத்தாகிவிட்டது) ஆகியவைகளுக்கு எதிரானவைகள் என்பது எதிர்த்தரப்பினரின் வாதம். 

2. வக்ஃப் போர்டு, கவுன்சில், டிரிபுனல் ஆகியவைகளில் மற்ற மதத்தினர்களை அங்கம் வகிக்க முயலும் இந்த சட்டம் முஸ்லீம் மதத்தில் தலையீடுவதாகும். இந்துக்கள், ஜெயின்கள், சீக்கியர்கள் ஆகியவர்களின் அறக்கட்டளைக் குழுக்களில் பிற மதத்தினர்கள் அங்கம் வகிப்பதில்லை என்பதால் வக்ஃப் போர்டில் மற்ற மதத்தவர்களை அனுமதிப்பது தவறான அணுகுமுறை

3. ஐந்து வருடம் முஸ்லீம்களாக உள்ளவர்கள் தான் வக்ஃப் சொத்து தானம் செய்ய முடியும் என்பது முஸ்லீம்களின் மத உரிமையில் தலையிடுவதாகும்

இதற்கு பதில் சொல்வது நமது கடமையாகும். சுருக்கமாக நமது பதிலைப் பதிவு செய்கிறோம்

மோடி அரசு ஏதோ புதிதாக வக்ஃப் சட்டம் கொண்டு வந்தது போல் ஒரு எதிர்ப்பு வீதிகளிலும், லோக் சபா - ராஜ்ய சபாக்களிலும் எதிர்க்கட்சிகள் போராடுகிறார்கள்

முந்தைய வக்ஃப் சட்டம் 1995-ல் பலவகையான ஓட்டைகள் உள்ளன என்று பல முஸ்லீம் மதத்தினர்களே கோர்ட் படி ஏறி அது இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கின்றன. அதற்கு ஒரு தீர்வு காணவே பல குழுக்கள், பல அலோசனைகள், பல மாற்றங்கள் என்று நிகழ்ந்த பிறகு தான், அந்த மாற்றங்களை உள்ளடைக்கி வக்ஃப் சட்டம் 1995 என்பது Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act, 1995 (UWMEED Act 1995) என்ற புதிய நாமகரணம் பெற்று சட்டமாகி உள்ளது

இதை எதிர்ப்பவர்கள் வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 அரசியல் சாசனத்தின் சில ஆர்டிக்கிள் 14, 19, 26 & 300 A ஆகியவைகளுக்கு எதிரானவைகள் என்று வாதிடுகிறார்கள். வக்ஃபின் சொத்துக்களை ஒரு முறைப்படுத்தவே இந்தத் திருந்தங்கள் கொண்டு வந்துள்ளன என்பதை நாம் அறியவேண்டும். இந்த ஒரு திருத்தம் கூட முஸ்லீம்களின் மத வழிபாட்டினை எந்த விதத்திலும் நேரிடையாகப் பாதிக்கும் என்று ஒருவரும் குற்றம் சாட்ட முடியாது. 

உண்மையில் ஆர்டிக்கிள் 14, 19 & 26 என்பதை தங்க முக்கோணம் என்பர். இதில் ஆர்டிகிள் 14 என்பது அனைவரையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்கிறது. ஆனால் பக்ஃப் சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்கள் 'முஸ்லீம்களை முஸ்லீம் சட்டம் மூலம் தான் கட்டுப்படுத்த வேண்டும். அது அவர்களது மத உரிமை' என்று தனி ஆவர்த்தனம் வாசிப்பதை எப்படி அனுமதிக்க முடியும். அனுமதித்தால் தங்க முக்கோணம் முஸ்லீம் மத முக்கோணமாகி தகர முக்கோணமாகி விடும்

மேலும் ஆர்டிக்கிள் 19 & 26 ஆகியவைகளிலும் முஸ்லீம்கள் தங்களை மத ரீதியாக பார்த்து அதற்கு ஏற்ப சட்ட திருத்தம் கொண்டு வந்தால் தான் நாங்கள் ஏற்போம் என்பது எந்த விதத்திலும் சரியாகப்பட வில்லை. 

மேலும் இந்த திருத்தங்களால் மோடி அரசு ஒரு இஞ்சு வக்ஃப் நிலத்தையும் அபரிக்க வில்லை என்பதையும் மக்கள் அறிய வேண்டும். வக்ஃப் நிர்வாகத்தில் முறைகேடுகள் உள்ளன என்று ஒரு சில முஸ்லீம் வகுப்பினர் குமுறி உள்ளனர் என்பதையும் அறியும் போது, இந்த முறைகேடுகளுக்கு ஒரு நிரந்தர முடிவு உண்டாக வேண்டும் என்று மோடி அரசு நினைப்பது சரியான அணுகு முறையாகும். 

மீண்டும் மீண்டும் சொல்கிறோம்: இந்த திருத்தங்கள் வக்ஃப் சொத்துக்களைப் பற்றியதே அன்றி முஸ்லீம் மதம் பற்றியது இல்லை. 

இந்த திருத்தங்களை எதிர்த்து முக்கியமாக வங்காளத்தில் களவரம் மூண்டுள்ளது

1. கம்யூனிஸடுகள் ஆளும் மா நில அரசாக கேரளா இருப்பினும் இந்த புதிய வக்ஃப் சட்டம் 2025 அங்கு அமல் செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.  

அதற்குக் காரணம் இதோ

கேரளா கிருஸ்துவர்கள் 'தங்கள் குடியிருப்புகளை வஃக் வாரியம் சொந்தம் கொண்டாடுகின்றன. இதனால் நில உரிமையில் பிரச்சனை எழுந்துள்ளது' என்று போராடுகின்றனர். குறிப்பாக கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில், சுமார் 600 கிருஸ்துவ குடும்பங்கள் தங்களது நிலங்கள் வஃக் வாரியத்தால் சட்டவிரோதமாக கோரப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலங்கள் பல தலைமுறைகளாக கிருஸ்துவ குடும்பங்களின் வசிப்பிடம் ஆக இருந்தாலும், தற்போது வஃக் வாரியம் அந்த நிலங்கள் தங்களுடையவை எனக் கூறி உரிமை கோருகிறது. 

2. தாவூதி போஹ்ரா சமூகத்தின் ஒரு குழு, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்‌ஃப் (திருத்தச் சட்டம்) குறித்து 'இது எங்கள் சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கைக்கு பதிலளித்ததாக அவர்கள் மோடிக்கு நேரிடையாக அவரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். 

3. ஏழை முஸ்லீம்கள் புதிய திருத்தப்பட்ட சட்டத்தை இது தங்களுக்கு நன்மை தரும் என்று வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்துள்ளனர். பீகாரில் பாஸ்மண்டா முஸ்லீம்கள் மற்றும் பெண்கள் இந்த சட்டத்தை வரவேற்றுள்ளனர். அவர்கள் இந்த புதிய சட்டத்தின் மூலம் வஃக்ப் சொத்துக்கள் ஏழை முஸ்லீம்கள் மற்றும் பெண்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் உள்ளன என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் . 

4. உத்தரகாண்ட் வஃக் வாரிய தலைவர் ஷம்ஸ், பிரதமர் நரேந்திர மோடி ஏழை முஸ்லீம்களின் துன்பங்களை புரிந்து கொண்டு இந்த திருத்தங்களை கொண்டு வந்ததாக தெரிவித்தார். பாஸ்மண்டா முஸ்லீம்கள் இந்த சட்டத்தை வரவேற்று கொண்டாடி உள்ளார்கள். 

எதிர்ப்பு கருத்துகள்

முஸ்லீம் சமூகத்தின் ஒரு பகுதி, குறிப்பாக அகில இந்திய முஸ்லீம் தனிப்பட்ட சட்ட வாரியம் (AIMPLB), இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். அவர்கள், இந்த திருத்தம் முஸ்லீம் சமூகத்தின் உரிமைகளை பாதிக்கும் எனக் கூறுகின்றனர். 

இந்தியாவில் உள்ள சிறுபான்மை மதங்களில் மிகவும் செல்வச் செழிப்பு மிக்க மதம் என்றால் அது முஸ்லீம் மதம் என்று சொல்லி விடலாம். ஆனால் அந்த மதம் பல விதமான சலுகைகளை பல மாநில அரசுகள் மூலமாகப் பெறுகிறது. மதராசா முஸ்லீம் மத போதர்களுக்கு மாதச் சம்பளம், சிறுபான்மையினர் என்ற தகுதியில் பல சலுகைகள், அவர்கள் நடத்தும் கல்வி நிறுவினங்களுக்கு பல சலுகைகள், அவர்களின் புனித யாத்திரைக்கு பணம் அளித்து உதவி என்று பல உதவிகளை முஸ்லீம்கள் பெறுகிறார்கள். அவர்களுக்கு அளிக்கும் பண உதவி அரசுப் பணம் என்பதை நோக்கும் போது, இது இந்திய அரசியல் சட்டம் முன்னுரையில் சொல்லப்பட்ட செகுலரிசம் என்ற தூய கொள்கையையே கேலிக்குறியதாக்கி விடுவதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். அதுவும் இந்தப் பணம் பெரும்பான்மை இந்து மதத்தினரின் வரிப்பணம் என்பதையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும். 

இந்திய முஸ்லீம்களில் சிலர் இன்னும் தாங்கள் ஆளும் வர்கத்தினரின் மன நிலையிலேயே செயல்படுகின்றனர். இந்திய இறையாண்மையை அவர்கள் மதித்துப் போற்றுவதாகவும் தெரியவில்லை. அவர்கள் கோஷம் 'அல்லாஹூ அக்பர்' தான். வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் - எல்லாம் பத்வா என்று மதத்தில் பெயரால் தடை செய்யப்படுகிறது. முஸ்லீம்கள் இந்தியாவின் சட்ட திட்டங்கள், கொள்கைகள், பெண்களின் உரிமைகள் என்று தங்களை முழுமையாக மாற்றிக் கொள்ளும் பொழுது தான் அவர்களும் முழுமையான இந்திய குடியுரிமைக்குத் தகுந்தவர்களாகிறார்கள். இதைச் சொல்வதற்கு பலருக்குத் தயக்கமாகவும், பயமாகவும் இருக்கிறது. மோடி அரசு தான் ஒரளவு முஸ்லீம் மக்களுக்கு - குறிப்பாக ஏழை முஸ்லீம்கள் - முஸ்லீம் பெண்கள் ஆகியர்களின் நன்மைக்கு தமது கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து ஓட்டு வங்கியின் தாக்கத்தையும் மீறி தைரியமாகத் துணிந்து செயல்படுகிறது. 

புதிய வக்ஃப் திருத்த மசோதா 2025 வெற்றிகரமாக இரு அவைகளிலும் நிறைவேறியதற்கு மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் மிகையாகாது. இருவரும் உக்கிரமாக வாதாடி வெற்றி கண்டார்கள். 

இந்த நேரத்தில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இரண்டு அவைகளிலும் இந்தத் திருத்தங்கள் விவாதிக்கும் பொழுது பிரதம மந்திரி வெளி நாட்டில் அரசுப் பயணமாக இருந்தார். இருப்பினும் அவரது அமைச்சர்கள் மிகுந்த நம்பிக்கை, மிகுந்த திறமை ஆகியவைகளுடன் செயல்பட்டு சரித்திரம் படைத்து விட்டனர். மோடிக்கு தமது மந்திரிகளின் திறமைகளின் மேல் உள்ள நம்பிக்கை இதனால் தெரியவருகிறது. இது மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும். தாய் பத்தடி பாய்ந்தால், குட்டி இருபதடி பாயும் என்ற பழமொழிக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். 

ஆகையால் இந்த தலையங்கத்தை ஜெய் ஹோ அமித்ஷா! ஜெய் ஹோ, கிரண் ரிஜிஜு, என்று வெற்றிக் கோஷங்களுடன் பூர்த்தி செய்கிறோம்.

அவர்களுக்கு பூச்செண்டு கொடுத்து வாய்மை தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறது.




Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017