மோடி பாரதப் பிரதமராக மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி

 

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபி தனித்துப் பெரும்பான்மை பெறும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இருப்பினும் பிஜேபி மட்டும் 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் தோழமைக் கட்சிகள் 53 இடங்களில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் 293 இடங்களில் வெற்றி பெற்று மோடியும் மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக ஆட்சிப் பெறுப்பில் அமர்ந்து விட்டார். இரண்டு கிங்க் மேக்கர்களான தெலுங்குதேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், ஜனதா தால் யுனைட்டட் கட்சியின் தலைவர் நிதிஷ் குமாரும் மோடியை வெகுவாகப் புகழ்ந்து அவருக்கு மனப்பூர்வமான ஆதரவையும் தெரிவித்துள்ளனர். நிதிஷ் குமார் ஒரு படி மேலே சென்று, மோடியின் கால்களில் வணங்கவும் முற்பட்டுள்ளார்.

மோடியின் மந்திரி சபை சென்ற அவரது ஆட்சியில் உள்ளவர்களே பல முக்கியமான இலாக்காக்களைப் பெற்றுள்ளனர். இதிலிருந்தே மோடி முழுமையான பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது போல் தான் அரசியல் நிலவரம் இருக்கிறது. இதில் வரும் ஐந்து வருடங்களிலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது என்பதை முழுமையாக நம்பலாம். மேலும் சபாநாயகர் தேர்விலும் மோடியின் முடிவை நாங்கள் முழுமனதுடன் ஏற்போம் என்பது தான் தோழமைக் கட்சிகளின் கருத்தாக இருக்கிறது.

பிஜேபி 2013 லோக் சபா தேர்தலில் சுமார் 37% ஓட்டுக்களைப் பெற்று 303 இடங்களில் வென்றது. இந்த 2024 தேர்தலில் சுமார் 1% ஓட்டு குறைவான வித்தியாசத்தில் 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆகையால் இது மிகப் பெரிய சரிவு என்று சொல்வதற்கில்லை. வெற்றி பெற்ற இடங்கள் குறைந்ததற்கு உத்திரப் பிரதேசம் – மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் மிகவும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றது தான் காரணம்.

காங்கிரஸ் கட்சியோ 2013 லோக் சபா தேர்தலில் சுமார் 19% ஓட்டு சதவிகிதத்தில் 52 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த 2024 தேர்தலில் சுமார் 2% அதிக ஓட்டு விகித வித்தியாசத்தில் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது காங்கிரசுக்கு ஒரு பெரும் வெற்றி என்பதில் ஐயம் இல்லை. இதனால் கடந்த 10 வருடங்களாக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்ததை இந்தத் தேர்தலில் லோக் சபாவில் பெற்றது குறிப்பிடத் தக்க வெற்றியாகும்.

இந்த 2024 18-வது லோக் சபாவில் தேர்வானவர்களில் 7 சுயோட்சைகளும், இந்த இரு அணிகளிலும் சேரா மற்ற கட்சிகளைச் சேர்ந்த 9 பேர்கள் என மொத்தம் 16 பேர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்தியா கூட்டணியில் சேர்ந்தாலும் 234 + 16 = 250 என்ற அளவில் தான் உள்ளது. அதாவது இந்த எண் 272 என்ற பெரும்மான்மை இலக்குக்கு 22 இடங்கள் குறைவாகவே உள்ளன.

ஆகையால் எந்த நிலையிலும் மோடி அரசுக்கு ஆபத்தில்லை என்பது தான் உண்மை. இருப்பினும் இந்தியா கூட்டணியின் கூக்குரல் லோக் சபாவில் ஓங்கி ஒலிக்கும் என்பது என்னவோ உண்மைதான். இந்தியா கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி – மம்தா பானர்ஜி விலகி விட்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

இதை எல்லாம் விட பிஜேபியின் தடம் பாரத தேசமெங்கும் இந்தத் தேர்தலில் பரவி உள்ளதையும் குறிப்பிட வேண்டும். கேரளாவில் தடம் பதித்துள்ள பிஜேபி ஆந்திரா – தெலுங்கானா ஆகிய மாகாணத்திலும் வென்றுள்ளது.

தனியாக போட்டி இட்ட ஒடிசா மாகாணத்தில் நவீன் பட்நாய்க் அரசை வீழ்ந்த்தி ஆட்சியில் பிஜேபி அமர்ந்துள்ள அற்புதத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மேலும் அருணாசலப் பிரதேசத்திலும் மீண்டும் பிஜேபி வென்றுள்ளது. அதே சமயத்தில் காங்கிரஸ் அசம்பளியில் ஒரு இடத்தில் கூட ஆந்திராவில் வெற்றி பெற முடியவில்லை என்பது வெக்கக்கேடாகும். ஆனால் காங்கிரஸ் கேரளாவில் லோக் சபாவில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆளும் கம்யூனிஸ்ட் ஒரு இடத்தில் தான் வெல்ல முடிந்துள்ளது.

இந்தத் தேர்தலில் மோடிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பல முக்கியமான தேர்தல் வெற்றிகள் அவ்வளவாக முழு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை தான். ஆனால் நிதானமாக யோசித்தால் பிஜேபி பல புதிய இடங்களில் வென்றுள்ளது. புதிய சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளது.

மோடியின் மூன்றாவது மத்திய அரசு தனது ஐந்தாண்டுகளில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தி பாரத தேசத்தை மிகவும் சக்தி மிக்க நாடாக உருவாக்கி உலகத்திற்கே ஒரு உதாரணமாக உருவாக பாரத மாதா அருள வாய்மை வேண்டுகிறது.

வாய்மை மோடிக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்துகிறது.

ஜெய் ஹோ மோடி











Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017