லோக் சபா தேர்தல் திருவிழா – 2024


லோக் சபா 2024 தேர்தல் எழு கட்டங்களாக 19 ஏப்ரல் தொடங்கி 1 ஜூன் முடிய 42 நாட்கள் தேர்தல் விழா நடக்க இருக்கிறது. தேர்தல் முடிவுகள் 4 ஜூன் 2024 வெளியாகிவிடும். 

பிஜேபி தாமரை 370 இடங்களையும் மற்ற தோழமைக் கட்சிகள் 30 இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கினை முன் வைத்து தேர்தல் களம் இறங்கி உள்ளது. அதன் தேர்தல் கோஷமே – ‘அப் கி பார், என்.டி.ஏ.சர்க்கார், 400 பார்’ – மிகவும் வலுவுள்ளதாக இருக்கிறது. 

பிஹாரில் நிதிஷ் குமார் – புள்ளி இந்தியாவின் இதயமாக இயங்கியவர் – இப்போது மோடி அணியில் உள்ளார். தெலுங்கானா – ஆந்திராவிலும் மோடியை எதிர்த்து அரசியல் செய்து படி தோல்வியைத் தழுவி அரசியல் சன்னியாசியாகவே போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட சந்திரபாபு நாயுடு – சினிமா நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவான் கல்யாண் ஆகியவர்கள் இப்போது பிஜேபி அணியில். ஆந்திராவில் லோக் சபாவுடன் மா நில சட்டசபைக்கும் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இந்த மூன்று கட்சிகளின் கூட்டணி தற்போது பதவியில் இருக்கும் முதன் மந்திரிக்கு சக்தி வாய்ந்த எதிரணியாக இருந்து அதனால் ஜகன் பதவி இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

இதனை எல்லாம் தூக்கி அடிக்கும் நிலையில் நவீன் பட்நாயக் கட்சியான பிஜுஜனதா தளம் பிஜேபியுடன் தேர்தல் உடன்படிக்கை கொண்டுள்ளது. இது அந்த இரு கட்சிகளின் சாணக்கிய தந்திரத்தைக் காட்டுகிறது. இதனால் இரு கட்சிகளும் நன்மை அடையும் என்பது தான் என் கணிப்பு. இந்த கூட்டணையைப் பற்றி நவீன் பட்நாயக்கின் முக்கிய ஆலோசகரான தமிழ் நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் தமது ஐ.ஏ.எஸ். பதவியை சென்ற வருடம் அக்டோபரில் ராஜினாமா செய்து இப்போது நவீன் பட்நாயக் கட்சியின் முழு அங்கத்தினராகச் சேர்ந்துள்ளார். அவர் பிஜேடி – பிஜேபி அரசியல் கூட்டணையைப் பற்றி மிகவும் அழகாக, அழுத்தம் திருத்தமாக சொன்ன விளக்கம் குறிப்பிடத் தக்க ஒன்றாகும்: ‘மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக வருவதற்கு எங்கள் கட்சியின் தயவு அவசியமில்லை. அதே போல் நவீன் பட்நாயக் மீண்டும் ஆறாவது முறையாக ஒடிசா முதல் அமைச்சராக வருவதற்கு பிஜேபி கட்சியின் ஆதரவு தேவையில்லை. இரண்டு நிகழ்வுகளும் நிச்சயம் நடக்கும். ஆனால் இரு கட்சிகளும் இணைவது ஒடிசாவின் முன்னேறத்திற்காகவே கட்சிகளின் முன்னேற்றித்தாகாக அல்ல!’ 

மோடியின் தமிழ் நாட்டு சேலம் விஜயத்தின் போது பிஜேபியின் கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக ஒரே மேடையில் அமர்ந்து அந்தக் கூட்டணியும் திமுக – அதிமுக கூட்டணைக் கட்சிகளுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும் அளவில் அண்ணாமலையின் அயராத உழைப்பு பிஜேபியை உயர்த்தி உள்ளது. மதில் மேல் பூனையாக இருந்த மாம்பழ பாமக – ராமதாஸ் கட்சி பிஜேபியில் சேர்ந்துள்ளது இருவருக்கும் நன்மை பயக்கும். இதனால் பிஜேபி கூட்டணிக்கு கூடுதல் பலம் உண்டாகியதை நான் காண்கிறோம். உடைந்த அதிமுகவின் ஓபிஎஸ், அம்மா அதிமுக தினகரன் ஆகியவர்களும் இப்போது அண்ணாமலையுடன் கைகோர்த்து களம் காணுகின்றனர். 

மஹாராஷ்டிராவிலும் மதின் மேல் பூனையாக இருந்த ராஜ் தாக்கரே இப்போது பிஜேபி கூட்டணியில். இது உத்தவ் தாக்கரேக்கும் அவரைச் சார்ந்த சரத்பவார் – காங்கிரஸ் கட்சிகளின் மஹா விகாஸ் அகாடி மற்றும் புள்ளி இந்தியா கூட்டணிகளுக்கு ஒரு பின்னடைவு என்பது ஒரு அதிர்ச்சியாகும். இதனால் பிஜேபி வலுவுடனும், புள்ளி இந்தியா வலிவிழந்தும் போய் உள்ளதை வாசகர்கள் உணரவேண்டும். 

கள நிலவரங்களை அகில இந்திய அளவில் பார்க்கும் பொழுது, வலுவான என்.டி.ஏ. கூட்டணியால் அதன் இலக்கான 400 + லோக் சபா சீட்டுக்கள் வெற்றி பெறும் நிலையில் தான் இருக்கிறது. 

எதிரணியான புள்ளி இந்தியாவில் மம்தா பாணர்ஜி காங்கிரஸ் எதிர்ப்பில் உள்ளார். ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன் சில இடங்களில் கூட்டணி – பஞ்சாபில் எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் ராஹுல் கேரளாவில் லோக் சபா தேர்தலில் மீண்டும் நிறபதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கேரளாவில் காங்கிரஸ் தான் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக போட்டு போடும் கட்சியாகும். பிஹார் லல்லு கட்சி – அகிலேஷ் யாதவ் கட்சி – முக்கியமாக தமிழ் நாட்டு ஸ்டாலின் கட்சி ஆகியவைகள் தான் காங்கிரசிற்கு கை கொடுக்கும் கட்சிகள். இந்த நிலையால் இந்த இந்தியா கூட்டணி அதிகப்படியாக 100 என்ற இலக்கை எட்ட முடியாது என்று கணிக்கிறார்கள்.

ராஹுலில் பாத யாத்திரைகள் – இரண்டு யாத்திரைகள் – மக்களிடையே எதிர்பார்த்த அளவில் ஆதரவைப் பெறவில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. உத்திரப்பிரதேசத்தில் நேரு குடும்பத்தினர் ஒருவரும் லோக் சபா தேர்தலில் நிற்கமுடியாத அளவில் காங்கிரஸ் வலுவிழந்துள்ளதை ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. 

மேலும் ராஹுலின் தன்னிச்சையான நடவடிக்கைகள் – முதிர்ச்சியற்ற பேச்சுக்கள் – அவர் செல்லும் இடங்களில் மக்கள் ‘மோடி மோடி – ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிடுவதைக் கேட்கும் ராஹுல் ‘என்ன மோடி மோடி கோஷங்கள் ... 24 மணி நேரமும் ஏன் இந்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களா?’ என்று தன் கோபத்தைக் காட்டி, மேலும் மேலும் மக்களின் நன் மதிப்பை இழந்து, தமது கட்சிக்கும் அவப்பெயரையும், ஆதரவு இழப்பையும் பெற்றுத் தந்துள்ளார். 

இதன் உச்ச கட்டமாக ராஹுலின் பாத யாத்திரையின் இறுதிக் கட்ட உரை அமைந்து அதனால் ராஹுலும் – காங்கிரஸ் கட்சியும் பெரும் பாதிப்பைச் சம்பாதித்துள்ளது. 17-ம் தேதி மார்ச் மாதம் 2024 – ஞாயிற்றுக் கிழமை ராஹுலின் பாத யாத்திரையின் நிறைவு நாளில் பல அரசியல் தலைவர்கள் – ஸ்டாலின் உட்பட - கூடியிருந்த கூட்டத்தில் உரை நிகழ்ந்தி உள்ளார். அப்போது அவர் உதிர்த்த சொற்கள் இதோ: ஹிந்து மதத்தில்  ‘சக்தி’ என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. நாங்கள் அந்த சக்தியை எதிர்த்துத் தான் போராடுகிறோம்.’ 

இந்த சமயத்தில் ராஹுல் காந்தி தனது முதல் கட்ட பாத யாத்திரையின் ஆரம்ப நிலையில் கன்யாகுமரியில் பிரச்சனையில் சிக்கியுள்ள ஜார்ஜ் பொன்னையா என்ற ஒரு கத்தோலிக்க பாதிரியாரைச் சந்தித்து உரையாடி உள்ளார். ராஹுல் வேண்டுமென்றே அந்தப் பாதிரியாரைச் சந்தித்துள்ளார் என்பது வெளிப்படை உண்மையாகும். 

அந்த உரையாடல்களின் முக்கிய அம்சங்கள். இது செப்டம்பர் 2022 ஆண்டு நிகழ்ந்ததாகும்: 

ராஹுல்: யேசு கிருஸ்து கடவுள் உருவமா?

கன்னியா குமாரி கதோலிக்க பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா: யேசு இருஸ்து உண்மையான கடவுள். கடவுள் ஒரு மனிதனாக உருவெடுக்கிறார். இது ஹிந்து மத சக்தி கடவுள் போல் அல்ல. 

(இந்த கத்தோலிக்கப் பாதிரி ஹிந்து மதக்கடவுள்களை அவமதித்த குற்றங்களுக்கு முன்பு கைதாகி உள்ளவர். ‘நான் ஏன் ஷூக்களைக் கால்களில் அணிகிறேன் தெரியுமா? பாரத மாதாவின் அசுத்தம் கிருமிகளாகி என்னைத் தாக்கி நான் பாதிக்கப்படக் கூடாது என்பதால் தான் என்று கருத்தையும் அந்த பாதிரி தெரிவித்துள்ளார்.)

 இந்த ராஹுலின் ‘ஹிந்து மதத்தின் சக்தி தெய்வத்தை எதிர்த்துப் போராடுவேன்’ என்ற சூளுரை எந்த விதத்திலும் ஏற்புடையதன்று. 

இது மக்கள் சக்தியை – குறிப்பாக ஹிந்து மத பெண்களை இழிவுபடுத்திப் பேசிய பேச்சாகும். ஆகையால் இதைக் கேட்ட நமது பாரதப் பிரதமர் பொங்கி எழுந்துள்ளார். 

‘பெண் சக்தியை அழிக்கும் எதையும் அனுமதியோம். இதற்கு என் உயிரையும் ஈந்து, அந்த சக்தியைக் காப்போம்’ என்ற அளவில் மோடி உணர்ச்சி வசப்பட்டு மக்களிடம் சூளுரைத்துள்ளார். 

ராஹு ஒரு தீய சக்தி என்பதை இதன் மூலம் தெள்ளத் தெளிவாகக் காட்டி உள்ளார். 

இது ராஹுல் பிறப்பின் கோளாறு என்று தான் சொல்ல விழைகிறேன். 

மற்ற எந்த மதத்தையும், மற்ற மதக் கடவுள்களையும், அவர்களின் சடங்குகளையும் ராகுல் குற்றமோ, இழிந்துரையோ அல்லது பழிப்போ சொல்வதில்லை என்பதையும் வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இது வேண்டு மென்றே ராஹுல் செய்யும் அரசியல் அராஜகம். இதற்கு ராஹுல் தண்டனையைப் பெற்று அரசியல் சந்நியாசம் வாங்க வேண்டும். 

மோடியை “சாய்வாலா? அவரா பாரதப் பிரதமர்?’ என்று கேலி செய்த காங்கிரசார், மோடிக்கு யுஎஸ் விசா மறுப்பை எழுத்து பூர்வமாக யுஎஸ். அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அதை யுஎஸ் அரசும் ஏற்ற அவலம் காங்கிரஸ் உபயம்,  ‘மோடி நீச்சன், மோடி காவலாளித் திருடன், சாவை வியாபாரம் செய்பவர், குடும்பமில்லாதவர்’, ஹிட்லர், ராவணன் என்று பலவிதமாக கீழ்த்தரமாக விமரிசித்துள்ளனர். இந்த கீழ்ந்தரமான விமர்சனங்கள் லோக் சபா தேர்தல்களின் போது தான் அதிகம் நடைபெறும்.

போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்

தூற்றுபவர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன்

ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்

எடுத்துரைப்பேன். எவர்வரினும் நில்லேன்.! அஞ்சேன்.!

-                      என்ற கவியரசர் கண்ணதாசன்  கவிதை வரிகளுக்கு இலக்கணமாக நமது கர்ம வீரர், கடவுள் பக்தர், சக்தி தேவியின் அருள் பெற்றவர், உலக அரங்கை ஒளிமயமாக ஆக்கிய உன்னத அரசியல் தலைவர் – நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி பீடத்தில் அமர்வது அந்த சக்தி அன்னையின் கட்டளையாகும். 

ராஹுல் போன்ற தீய சக்திகள் தோற்று, பாரத நாடு முன்னேற எல்லாம் வல்ல அந்த சக்தி தெய்வத்தை வேண்டுகிறோம். 




                                                                                                                                 

காணோளியை கட்டாயம் கேட்கவும். 


 

Comments

Popular posts from this blog

தமிழில் நான்கு வேதங்கள்

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017