பாரதியின் அனைத்து இலக்கியப் படைப்புகள் வெளியீடு
ரதியின் அனைத்து இலக்கியப் படைப்புகளையும் வெளியிட்டு தமிழ்த்தாயின் ஆசியைப் பெறும் பாரதப் பிரதமர் மோடி இதன் இணைப்பு : https://www.youtube.com/watch?v=M-NQKA8cuoo டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியிலுள்ள தனது இல்லத்தில் 11-ம் தேதி நடைபெற்ற விழாவில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகள் அடங்கிய 23 தொகுப்பு நூல்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். உடன் நூல்களைத் தொகுத்த சீனி விசுவநாதன் , அல்லயன்ஸ் பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர் சீனிவாசன் உள்ளனர். மோடி: பாரதியின் இலக்கியப் படைப்பு தமிழ் மொழியின் மிகப் பெரிய பொக்கிஷம். டிசம்பர் 11, 2024 தமிழ்த் தாய்க்கு ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது. அந்த தினம் மஹாகவி சுப்பிரமணிய பாரதியின் 143- வது பிறந்த தினமாகும் . நாடு முழுவதும் கொண்டாடப்படும் அதே வேளையில் நமது பாரதப் பிரதமர் தமது அரசு இல்லத்தில் பாரதியாரின் படைப்புகள் அனைத்தும் அடங்கிய 23 பாகங்களை ஒரு விழா எடுத்து வெளியிட்டுள்ளார் . அன்னை தமிழ்த் தாயின் பரிபூரண அருள் மோடிக்கு கிட்டி உள்ளதை தமிழ் உலகம் நினைத்துப் பெருமைப் படலாம் . மத்திய கலாச்சாரத் துறையின் கீ...