அண்ணாமலையை ஆதரிப்போம் – அரசு கட்டிலில் அமரவைப்போம்

காங்கிரஸின் தூய காமராஜரின் ஆட்சி பதவி இழந்து திராவிடர் கழகம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழக அரசியல் மிகவும் தரம் தாழ்ந்து, ஊழல் மலிந்து, தர்மம் சீர்குலைந்து தமிழக மக்கள் இந்த இழிவான ஆட்சிக்கு முடிவு கட்ட ஒரு உத்தமன் வந்து சீர் செய்ய மாட்டானா? என்று கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக காந்திருந்த தமிழகத்திற்கு தீய தீராவிட மாடல் ஒழியும் காலம் வந்து விட்டது என்று அண்ணாமலை அரசியல் களத்தில் குதித்த பிறகு நம்பிக்கை பிறந்துள்ளது. திராவிடக்கழக வளர்ச்சியை மிகவும் மூர்க்கமாக காங்கிரசைவிட அப்போதையை கம்யூனிஸ்ட் தலைவர்கள் ராமமூர்த்தி, ஜீவானந்தம் போன்றோர்கள் கூட்டங்கள் போட்டு எதிர்த்தார்கள். ஆனால் அந்த அவர்களின் கொள்கை வழி எதிர்ப்புகளை தங்களது திராவிடக் கொள்கைகளை பொது மக்கள் மைத்தியில் வைக்காமல், ‘கம்யூனிஸ்ட் ஒரு பாப்பான் கட்சி .. ராமமூர்த்தி ஒரு நொண்டி, ஜீவானந்தம் செவிடு .. “ என்று தனிப்பட்ட முறையில் தர்க்கம் செய்து, அடுக்கு மொழி – ஆபாச மொழி – சபை இங்கிதம் சிறிதும் இல்லாத தாசித்தனமான மேடைப் பேச்சுக்கள் என்று தமிழக அரசியல் 60 ஆண்டுகளுக்கு மேல் விமோசனம் கிடைக்காமல் தத்தளித்தை இங்கு நினைவு கூறவேண்...