மோடியின் 77-வது சுதந்திர தின விழாவில் ஆற்றிய எழிச்சி உரை
மோடி 2014 லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்று முதன் முறையாக புது டெல்லி
செங்கோட்டையில் நமது பாரத தேசத்தின் மூவர்ணக் கொடியினை ஏற்றி முதன் முறையாக பாரதப்
பிரதமராக உரையாற்றி பிறகு அடுத்த 2019 வருட லோக் சபா தேர்தலில் இன்னும் அதிக அளவிலான
இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவி வகித்து மீண்டும் நமது தேசியக் கொடியை
ஏற்றி ஆறாவது முறையாக உரையாற்றி இப்போது அடுத்த லோக் சபா தேர்தல் வர இருக்கும் நிலையில்
10-வது முறையாக கொடி ஏற்றி ஒரு நீண்ட உரையை – 80 நிமிடங்களுக்கும் மேலாக – நிகழ்த்தி
உள்ளார்.
அப்போது மோடி தனது உரையின் இறுதியில் மிகவும் ஆணித்தரமாகவும், அபரிமிதமான
நம்பிக்கையுடனும் முழங்கிய வாசகம்:
என்னை 2014 லோக் சபா தேர்தலில் அமோக வெற்றி அடையச் செய்தீர்கள். அப்போது
நான் – சீர்திருத்தம், செயல், மாற்றங்கள் – என்ற மூன்று மந்திர வாக்குறிதிகளை அளித்து
நாட்டின் முன்னேற்றத்திற்காக இரவும் – பகலும் ‘தேச முன்னேற்றம் தான் முதலும் முடிவும்’
என்று உழைத்ததைப் பார்த்து பாரத தேச மக்களாகிய நீங்கள் என்னை மீண்டும் அதிக இடங்களில்
2019 ஆண்டு நடந்த லோக் சபா தேர்தலில் வெற்றி பெறச் செய்தீர்கள்.
அடுத்த ஐந்து வருடங்களில் தான் வரலாறு காணாத முன்னேற்றத்தை பாரத நாடு அடைய
இருக்கிறது. வர இருக்கும் 2024 வருடம் லோக் சபா தேர்தலிலும் வெற்றி பெற்று இதே செங்கோட்டையில்
2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கடந்த 10 ஆண்டில் என் அரசு செய்த சாதனைப் பட்டியல்
– அரசு அடைந்த வெற்றிகள் ஆகியவைகளை உங்கள் முன் இன்னும் அதிக தன் நம்பிக்கையுடன் சமர்ப்பிப்பேன்
என்பது உறுதி.
புது டெல்லி செங்கோட்டை கொடியேற்று விழாவிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும்
அரசாங்க அதிகாரிகள், அயல் நாட்டு தலைவர்கள் ஆகியவர்களுடன், மோடி அரசு சென்ட்ரல் விஸ்டா கட்டுமானத் தொழிலாளர்கள், கிராமத் தலைவர்கள், மீனவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் உட்படபிரதமரின் சிறப்பு அழைப்பாளர்களாக 1,800 பேர் வந்திருந்தனர். இதன் மூலம் பாரதப் பிரதமர் மோடி மக்கள் பிரதமராக பார்க்கப்பட்டு
மதிக்கப்படுகிறார்.
மோடி அடிக்கடி தமது பலத்திற்கு
பாரத தேசத்தின் 140 கோடி ஜனங்களின் ஆதரவு தான் ஆதார சுருதி என்று சொல்வது அவரது மனத்தின்
குரலாகும்.
மோடியின் உரையின் முக்கிய அம்சங்கள்:
புராதன பாரத தேசமான இந்தியாவை
‘தங்கப் பறவை’ என்று அழைப்பார்கள். ஏனென்றால் நமது தேசம் பல துறைகளில் உலக
அரங்கில் ஜெலித்த ஒப்பற்ற புண்ணிய பூமியாகும்.
இந்தியா 2014-ல் உலகப் பொருளாதாரத்தில்
10-வது இடத்தில் இருந்து இப்போது 5-வது இடத்திற்கு 9 வருடங்களுக்குள் – அதுவும்
கொராணா பாதிப்பையும் மீறி – வந்துள்ளது நம் இந்திய மக்களின் உன்னத சாதனையாகும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில்
இந்தியா இன்னும் முன்னேறி 3-வது இடத்திற்கு வந்து விடும் என்று நான் உறுதிபடக்
கூறுவேன். இதை நான் கூறுவதற்குக் காரணம் நமது இந்திய மக்களின் – ‘தேச முன்னேற்றம்
தான் என் முதல் லட்சியம்’ என்ற கொள்கையுடன் உழைப்பதால் தான்.
இந்தியாவின் வட கிழக்கு எல்லை
மாகாணங்களை கடைசி கிராமம் என்று ஒதுக்கும் மன நிலையை மாற்றி அங்கு பல முன்னேற்றத்
திட்டங்களைச் செயல்படுத்தி வெற்றியும் அடைந்துள்ளோம்..
அங்குள்ள நக்சலைட்டுகளின்
தீவிரவாதச் செயல்கள் நசுக்கப்பட்டு அங்குள்ள மக்களின் நன்மதிப்பைப் பெற்று, பல
நல்ல பல திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்படுகின்றன.
இந்த மாதிரியான நலத்திட்டங்கள்
செயல்படுத்தும் போது பல எதிர்ப்புகளும், எதிர்பார்ப்புகளும் எழத்தான் செய்யும்.
இந்த நிலையில் தான் மணிப்பூர் விவகாரமும் உருவெடுத்துள்ளது. அங்கு அமைதி உண்டாகி
சகஜ நிலை ஏற்பட எல்லா நடவடிக்கைகளும் மாநில – மத்திய அரசுகள் செய்யும் என்ற உறுதி
மொழியை அளிக்கிறேன்.
விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின்
கீழ் முடிதிருத்துவோர், பொற்கொல்லர் ஆகியவர்கள் பயனடையும் திட்டத்திற்கு முதற்
கட்டமாக 13 – 15 ஆயிரம் கோடி வரையில் செலவிடப்பட்டுள்ளது.
டிஜிடல் இந்தியாவால் இந்தியாவின் ஆற்றல் பல மடங்கு விரிவடைந்துள்ளதை உலகமே
வியந்து பாராட்டுகிறது. அது பெரும் நகரங்களிலிருந்து சிறு நகரங்களுக்கும் பரவி பலவிதமான
புதிய கண்டுபிடிப்புகளும் உருவாக வழிவகுத்துள்ளது.
இந்தியாவில் கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும்
சாடலைட்களை உருவாக்கி விண்ணில் பறக்க விடும் அளவில் இந்திய மாணவர்களின் ஆற்றல் வெளிப்படவும்
டிஜிடல் இந்தியா உதவுகிறது.
டிஜிடல் பண பரிவர்த்தனை என்பது சிறிய கிராமக் கடைகள், கைவண்டி விற்பனையாளர்கள், பல சில்லரை சிறு வியாபாரிகள் என்று இந்தியா முழுவதும் பரவி, பணப் பரிவர்த்தனையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி விட்டது.
5 ஜி என்ற மிகவும் துரிதமான அலைக்கற்றை இந்தியாவில் செயல்பாட்டிற்கு வந்து விட்டது. இந்த புதிய அலைக்கற்றை 700 மாவட்டங்களுக்கு மேலாக செயல்பாட்டிற்கு வந்து விட்டது. 6 ஜியையும் அதிவிரைவில் இந்தியாவில் செயல்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளோம்.
இந்திய இளைஞர்களின் ஆற்றலை மேம்படுத்த திறன்
வளர்ச்சிக் கழகம் என்ற தனியான அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல் நீர்
நிர்வாகத்தினைச் செயல்பட நிர்வகிக்க ஜல் சக்தி என்ற புதிய அமைச்சகம்
உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டு மக்களின் உடல் நலத்தை காக்கும் பல
திட்டங்களைச் செயல்படுத்த தனியாக ஆயுஷ் என்ற அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த
ஆயுஷ் உருவான காரணத்தால், யோகா உலக அளவில் ஒரு பெரும் சுகாதார அலையையே உண்டாக்கி
பிரபலமாகி விட்டது.
அது மட்டுமா ?
- கோவாபரேட் என்ற உன்னதமான நிறுவனங்கள் சரியான முறையில் செயல்படாத
காரணங்களால், அவைகளை சீர்திருத்தம் செய்ய கோவாபரேட்டிவ் மினிஸ்ட்ரி அமைக்கப்பட்டு,
பல முறைகேடுகள் அகற்டப்பட்டுள்ளன.
மோடி அவர்கள்
உருக்கமாக எனது 10 வருடச் சாதனைகளை இந்த நான் செங்கோட்டையில் ஏற்றிய நமது மூவர்ணக்
கொடியினைச் சாட்சியாக வைத்து பட்டியலிட விழைகிறேன் என்று சொன்னதில் சுருக்கம்:
1 1. முன்பு மைத்திய அரசிடமிருந்து மாநில அரசு பெற்ற நிதி உதவி 30 லட்சம் கோடி. ஆனால் கடந்த 9 வருடங்களில் மாநில அரசுக்கு மத்திய அரசு அளித்த நிதி – 100 லட்சம் கோடி ரூபாய்.
2. முன்பு உள்ளூர் மேம்பாட்டு நிதி 70 ஆயிரம் கோடியாக மத்திய அரசு கொடுத்தது. அந்த நிதி சென்ற 9 ஆண்டுகளில் 3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
3. 3. முன்பு ஏழைகளுக்கு வீடு கட்ட உதவித் தொகை – 90 ஆயிரம்
கோடி ரூபாய் என்றால், சென்ற 9 ஆண்டுகளில் அந்தத் தொகை 4 மடங்கு உயர்ந்து 4 லட்சம்
கோடியாக உயர்ந்துள்ளது.
4. 4. உலக சந்தையில் ஒரு மூட்டை யூரியாவின் விலை 3000.
ஆனால் இந்த மைத்திய அரசு 10 லட்சம் கோடி மான்யம் அளித்து ஒரு மூட்டை யூரியாவை
மிகக் குறைந்த விலையான ரூபாய் 300-க்கு கிடைக்க வழி வகுத்துள்ளது.
5. 5. முத்திரா யோஜனா திட்டத்திற்கு ஒதுக்கிய தொகை 20
லட்சம் கோடிக்கும் மேல். இதன் மூலம் சுய தொழில் செய்வோர், சிறு வியாபாரிகள், புதிய
தொழில் முனைவோர் என்று சுமார் 8 கோடி பேர்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளார்கள்.
இதன் மூலம் 8-10 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்துள்ளது.
6. 6. ஒன் ரேங்க் – ஒன் பென்ஷன் – என்ற ராணுவ வீரர்கள்
ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் 70,000 கோடி ரூபாய்கள் பட்டுவாடா செய்யப்படுள்ளது.
7. 7.பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதியின் மூலம்
இதுவரை விவசாயிகளுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய்கள் அவர்கள் வங்கிக் கணக்கில்
நேரிடையாக பட்டுவாடா செய்யப்பட்டது.
புதிய பாராளுமன்றக் கட்டிடம், புதிதாக பல ஆஸ்பத்திரிகள், மருத்துவக் கல்லூரிகள் – அதனால் பலர் எம்பிபிஎஸ் சேரும் நிலை – ஆகியவைகளும் மத்திய அரசின் சாதனையாகும்.
தரைப் போக்குவரத்து சாலைகள் மேம்பாடு, துறைமுகங்கள் மேம்பாடு, ரயில்வே மேம்பாடு, ரயில் நிலையங்கள் புதிப்பித்தல், புதிய விமான நிலையங்கள், மேக்-இன்-இந்தியா திட்டத்தில் தன்னிறைவு காணும் லட்சியம் ஆகியவைகள் குறிப்பிடத்தக்கவைகள்.
எனது முதல் ஐந்தாண்டு கால கட்டத்திலேயே 13.5 கோடி ஏழை
ஜனங்கள் வறுமைக்கோட்டிலிருந்து விடுபட்டு நடுத்தர வர்க்கத்தினராக பொருளாதார
முன்னேற்றம் அடைந்துள்ளதை நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்.
ஏழை மக்களின் மெடிகல் செலவைக் குறைத்து, அவர்களுக்கு
சிறந்த சிகிட்சை கிடைக்க வழிவகுக்கும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தில் £70
ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
£40 ஆயிரம் கோடி அளவில் கொராணா தடுப்பூசி
மக்களுக்குச் செலுத்த செலவிடப்பட்டது அதே சமயத்தில், கால் நடைகளை கொராணாவிலிருந்து
காப்பாற்றவும் £15 ஆயிரம் கோடி அளவில் தடுப்பூசிகள் போடப்பட்டதையும் அறிந்து
நீங்கள் சந்தோஷப்படுவீர்கள் என்று நான் நினைக்கிறேன்.
இந்தியா அனைத்துத் துறைகளிலும் நவீனமயமாக்கலை நோக்கி பயணிக்கிறது. இன்னும்
25 வருடங்களுக்குள் – அதாவது 2047 ஆண்டில் இந்தியா உலக பொருளாதாரத்தில் ஒரு வளர்ச்சி
அடைந்த தேசமாக உருவாகும் கனவை நினைவாக்கவே நவீனமயமாக்கல் அவசியமாகிறது.
மகளிர் சுய உதவிக் குழுக்களின் நமது சகோதரிகளில் சுமார் 2 கோடிப் பேர்களை
லட்சாதிபதிகளாக ஆக்கும் திட்டமும் செயல்பட இருக்கிறது. நமது இந்தியப் பெண்கள் – சயன்ஸ்,
டெக்னாலஜி, இன்சினியரிங், மேத்ஸ் – STEM – ஆகியவைகளில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆகையால்
15 ஆயிரம் சுய உதவிக் குழுவின் மகளிருக்கு முதற்கட்டமாக ட்ரோன் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் ட்ரோன்களைப் பழுபார்க்கும் பயிற்சியும் அளிக்கப்படும். இதன் மூலம் அந்த மகளிர்களின்
வருவாய் அதிகமாகி அவர்கள் லட்சாதிபதியாகும் வாய்ப்பும் கிட்டும்.
இந்தியாவை முன்னேறாமல் தடுப்பவைகள் மூன்று தீய
சக்திகளாகும். அவைகள் – ஊழல் அரசியல், குடும்ப அரசியல், சலுகை அரசியல்.
இந்த மூன்று கரையான் போன்ற அரக்க தீய சக்திகளால் தான்
இந்தியாவின் முன்னேற்றம் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளது. இவைகளை ஒழிப்பது தான்
என்னுடைய வேலை. இவைகளை ஒழிக்காமல் நான் ஓயப்போவதில்லை.
அதிலும் சலுகை அரசியல் என்பது சமூக நீதியை கொலை
செய்யும் ஒரு ஆயுதமாகவே கணிக்க வேண்டும்.
ஒரு சில அரசியல் வாதிகள் – அவர்களின் அரசியல்
கட்சிகளை – குடும்பத்திற்காக, குடும்பத்தினால், குடும்பத்தினுடையதாக – ஆட்சியில்
அமர்ந்து தங்களையும், தங்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையையும் வளம்படச் செய்து
நாட்டை மறந்து செயல்படுகிறார்கள்.
ஆனால் 140 கோடி இந்திய மக்கள் இந்தியாவின்
மேம்பாட்டிற்கு உழைக்கவும், உயிர்த்தியாகம் செய்யவும் தயாராக உள்ளனர். ஆகையால்
2047-ம் ஆண்டு செங்கோட்டையில் நமது நாட்டு மூவர்ணக் கொடி ஏற்றப்படும் போது,
இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக உலகம் போற்றும். இந்த நம்பிக்கையுடனும்,
உறுதியுடனும், அனைவருக்கும் என் இனிய சிறந்த வாழ்த்துக்கள்.
ஜெய் ஹிந்த் ! ஜெய் ஹிந்த் ! ஜெய் ஹிந்த் !
வாய்மையின் பின்னுரை:
பிஜேபி தோன்றிய நாளிலிருந்தே காஷ்மீரின் 370 ஷரத்து ஒழிப்பு, முஸ்லீம் பெண்கள் சமூதாய மக்களின் வாழ்வை நாசமாக்கும் முத்தலாக் முறையை ஒழித்தல், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுதல், இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் – மதங்களின் அடிப்படையில் உருவாகிய சட்டங்களை ஒழித்து அனைத்து இந்திய மக்களுக்கும் ஒரே சிவில் சட்டம் இயற்றல் ஆகியவைகள் தான் அதன் கொள்கையாக பிரகடணம் செய்யப்பட்டது.
இவைகள் எல்லாம் இந்தியாவில் இயலாத ஒன்று என்று
நினைத்தவர்கள், சொன்னவர்கள், பிஜேபியை பல தேர்தல்களில் கண்டனமும் – கேளியும்
செய்தவர்கள், மதச் சார்புக்கு எதிரானாவைகள் என்று வாதிட்டவர்கள் அனைவரும் தோற்கும்
அளவிற்கு பொது சிவில் சட்டம் தவிர்த்து மற்றவைகள் மோடி என்ற ஒரு பெரிய அரசியல்
வித்தகரால் நிறைவேற்றப் பட்டதை உலகமே வியந்து பார்க்கிறது.
இந்தியா விடுதலை பெற்றாலும், ஹிந்துக்களின் நியாயமான
கொள்கைகள் – கோரிக்கைகள் முந்தைய அரசால் – மோடி குறிப்பிட்ட கரையாண் கொள்கையான
சிறுபான்மையினரைத் திருப்திப் படுத்தும் சலுகை அரசியலால் புறக்கணிக்கப்பட்டுள்ளதை
யாராலும் மறுக்க முடியாது. அதற்கு முந்தைய அரசின் போலி மதச் சார்பின்மைக் கொள்கை
தான் காரணம். அதைச் சரிசெய்ய மோடி ஒரு அவதார புருஷராக பாரத தேசத்தில் தோன்றி
ஹிந்துக்களுக்கு நியாயம் வழங்கியும், அனைத்து மதத்தவர்களுக்கும் அவர்களின்
நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றியும் – அனைவரும் சமம் – அனைவருக்கும் நியாயம் –
என்ற தர்மத்தை பாரத தேசத்தில் நிலைநிறுத்தி உள்ளார்.
வரும் 2024 ஆண்டு நடக்கும் லோக் சபா தேர்தலில்
மீண்டும் மோடி இன்னும் அதிக இடங்களில் வென்று இந்தியாவை முன்னேற்றப் பாதையில் வேக
நடை போட அன்னை பாரத மாதாவின் அருளை வேண்டுகிறோம்.
பாரத் மாதாக்கி ஜே ! வந்தே மாதரம் ! ஜெய் ஹிந்த் !
காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கப்பட்டு அது
இந்தியாவின் ஒரு அங்கமாக – யுனியன் பிரதேசமாக மாற்றப்பட்டவுடன் அங்கு தீவிரவாதம்
ஒடுக்கப்பட்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் அங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்
அமைதி நிலை அங்கு நிலைவுகிறது.
ஸ்ரீ நகர் லால்பாக் மணிக்கூண்டில் இந்திய மூவர்ணக்
கொடி முன்பு சுதந்திர தினத்திலும் கூட ஏற்றப்படாமல் அந்த இடம் காஷ்மீர்
தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து அங்கு பாகிஸ்தான் நாட்டுக் கொடிதான்
பறக்கும் நிலை இருந்தது. ஆனால் இன்றோ அதே
மணிக்கூண்டு மூவர்ணத்தில் ஒளி பெற்று காஷ்மீர் லெப்டிலெண்ட் கவர்னர் அங்கு நின்று
போட்டோ எடுத்துக் கொண்டு கொண்டாடும் நிலையை மோடி அரசு உருவாக்கியதை எவ்வளவு
பாராட்டினாலும் தகும்.
அந்த சுதந்திர தாகம், பாரதத் தாயின் தளைகளைக் களைவதில் தீவிரம்-ஆகியவைகள் அப்போதே மோடி வெளிப்படுத்தி உள்ளார் என்பதை இப்போதும் நினைவு கூறுவோமாக.
Comments