தமிழகம் – தமிழ் நாடு – பெயரில் எழுந்த பிரச்சனை

 சென்ற வருடம் ஏப்ரல் 6 – ல் நடந்த முடிந்த தமிழக சட்ட மன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மொத்த இடங்களான 234-ல் 125 இடங்களையும் அதன் மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் 34 இடங்கள் என்ற அளவில் மொத்தம் 159 இடங்கள் (அதில் முக்கிய கட்சியான காங்கிரஸ் 18 இடங்கள்) பெற்று அதுவும் திமுக தனியாக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் - தனிபெரும்பான்மைக்கு 118 இடங்கள்- 7 இடங்கள் அதிகம் பெற்று - திமுக ஆட்சி 12-வது தமிழக முதல் அமைச்சராக ஸ்டாலின் தலைமையில் அமைந்தது

திமுக தேர்தல் சமயத்தில் ஹிந்து மத வெறுப்பினை வெளிப்படையாகவே பல சமயங்களில் தெரியப்படுத்தி உள்ளது. கந்த சஷ்டி கவச எதிர்ப்பு, ஆண்டாள் அவதூறு, ஹிந்து மத எதிர்ப்பு என்று பல செயல்பாடுகள் உடன் பிறப்புகளால் வெளிப்படையாக வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆனால் ஓட்டு அரசியலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின்அவரது மகன் உதயநிதி ஆகியவர்கள்தாங்கள் ஹிந்துக் கடவுளுக்கு எதிரிகள் இல்லை என்பதைக் காட்ட வேல் எடுத்துஅதைப் படம் எடுத்து பிரசார உத்திக்குப் பயன்படுத்தினர்.

திராவிட இயக்கக் கொள்கைபெரியார் அபிமானம்ஹிந்து மத எதிர்ப்பு அனைத்தும் ஸ்டாலினுக்கு அடிப்படை கொள்கை என்பதை பல தருணங்களில் அவர் நிரூபித்துள்ளார்.

பதவிக்கு வந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த உடன்அனைத்து ஜாதியினரும்  கோயில் அர்ச்சகர் திட்டம் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்டது. நீட் தேர்வு எதிர்ப்பு, முன்னேறிய சமூகத்தினருக்கு 10% இட ஒதிக்கீடு எதிர்ப்பு, அரசுக் கல்வியில் இந்தி விருப்ப பாடத்திற்கு எதிர்ப்பு, பல இந்திய திட்டங்களை அமல் படுத்தாமல் அதன் பயன்கள் தமிழக மக்களுக்குக் கிடைக்க இடையூறாகச் செயல்படுதல் ஆகியவைகள் ஸ்டாலினால் கடைப்பிடிக்கப்படுகின்றன.

விடியல் அரசுஉங்கள் அரசுஓட்டளியுங்கள்என்ற தேர்தல் முழக்கம் அரசு கட்டிலில் அமர்ந்தவுடன்திராவிட மாடல் அரசு என்று உருமாறி தாய் இயக்க திராவிட கழகக் கொள்கையை கையில் எடுத்து விட்டாரோ என்ற நிலையில் தமிழகம் இருக்கிறது. தமிழ் மாடல் அரசு என்று சொல்வதில் தயக்கம் ஏன்? – என்ற தேசியவாதிகளின் கேள்விக்கு சரியான பதில் இல்லை. பதில் சொல்லவும் தயாரில்லை.

அதன் பின்னணியில் தான் மத்திய அரசை ஸ்டாலின் அரசுஒன்றிய அரசுஎன்று அழைக்க தன்னிட்சையாக முடிவெடுத்து செயல்படுத்தி விட்டது. ஒன்றிய அரசு என்ற சொல் மத்திய அரசின் பங்கையும், ஆட்சி செலுத்தும் உரிமையையும், தேசிய சிந்தனையை சிதைக்கும் சொல்லாக தெரிந்தே ஸ்டாலின் இப்போதைய ஆட்சி இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுகிறது. இது திராவிட மாடல் அரசுக்கு நன்கு தெரியும். அண்ணாதுரையால் ஆட்சி ஆசையால் கைவிடப்பட்ட பிரிவினை திராவிட நாடு கொள்கை ஸ்டாலினால் உயிரூட்டப்படுகிறதோ என்ற ஐயம் இந்திய இறையாண்மையையும், தேசீயத்தையும் இருதயத்தில் வைத்து பூஜித்துப் போற்றும் தமிழகமற்றும் இந்திய மக்களிடம் எழுந்துள்ளது. திமுக-வின் தொடர்ந்து கடைப்பிடிக்கும் திராவிட பிரிவினைவாதஇந்திய ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிர்மறையான கொள்கையால் தான் திமுக-விலிருந்து பிரிந்த எம்ஜியார் தமது கட்சிக்கு ஆரம்பத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயரிட்டாலும், பிறகு தமது கட்சியினருக்கு திராவிட குறுகிய கண்ணோட்டத்திலிருந்து மீட்டு தேசிய சிந்தனைகளை மனத்தில் பதிய வைக்க தமது கட்சியின் பெயரை அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முடிசூடாத் தலைவர்தம்மை திராவிடர் என்று சொல்வதில் பெருமை கொள்பவர்தம்பட்டம் அடிப்பவர்- தெலுங்கர்எம்ஜியாரை அரசியல் ரீதியாக அழிக்க நினைத்துதமிழ் நாட்டை ஒரு மலையாளி ஆள்வதா?’ என்று எதிர்ப்புத் தெரிவித்தது எந்த வகையில்  திராவிடச் சிந்தனைக்குப் பொருந்தும்? அது மட்டும் அல்ல. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தைகன்னடிகன் தமிழக விரோதிஎன்ற அளவில் பல முறை இந்த உடன் பிறப்புக் கட்சி குற்றம் சாட்டி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது வெளிப்படை.

ஆகையால் திராவிடத்தின் நான்கு தூண்களான தமிழ்தெலுங்குகன்னடம்- மலையாளம் ஆகியவைகளில் இரண்டு தூண்களான மலையாளம்கன்னடம் ஆகியவைகளைப் பிடுங்கி எறிந்து விட்டார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட தலைவர் கருணாநிதியின் குரல்கொள்கை தெலுங்கு மொழிப் பிரதேசத்திலும் இது வரை எடுபட வில்லை. அவர்கள் யாரும் கருணாநிதி திராவிடத்தை ஏற்கத் தயாராக இல்லை.

கருணாநிதியே கை விட்ட அந்த திராவிடத்தைதிராவிட மாடல்என்ற மாயை முகமூடியைப் போட்டுக் கொண்டு தேசியத்தையும் ஆன்மீகத்தையும் அழிக்க முயல்கிறார் இப்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின்.

திராவிட மாடல் ஸ்டாலின் அரசு சமீபத்தில்சேது சமுத்திர திட்டம்அமல் படுத்த வலியுறுத்தி சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டது.

திராவிட மாடல் அரசு ஹிந்துக்களை வெறுப்படையச் செய்யவும், நாஸ்திகவாத தனது தாய்க் கழகமான திராவிடக் கழகத்தினரைத் திருப்தி செய்யவும் கோயில் அர்ச்சகர்கள் அனைவரும் இனி காவி வேஷ்டியில் வராமல், வெள்ளை வேஷ்டியில் தான் வரவேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழ் நாட்டில் வசிக்கும்வேலை செய்யும் வடநாட்டினர்களைப் பற்றிய கணக்கெடுப்பு நடக்கவும் திராவிட மாடல் அரசு உத்திரவிட்டுள்ளது. இதுஒரு தேசம்ஒரு ரேஷன் கார்ட்என்ற ஒரே இந்தியாவின் தேசியச் செயலுக்கு எதிரான செயலை திட்ட மிட்டே செய்கிறது ஸ்டாலின் அரசு.

இந்த செயல்கள் திமுகவின் அதன் கடந்த கால செல்லாக் காசாகி விட்ட திராவிட நாட்டுக் கொள்கையை நினைவூட்டுபவைகளாகவே உள்ளன. இவைகள் மோடியின் தலைமையில் நடக்கும் மத்திய அரசை கவலைப்பட வைக்கும். அதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவும் தயக்கம் காட்டக் கூடாது என்பது தான் வாய்மையின் தீர்க்கமான கருத்து.

அண்ணாவால் கைவிடப்பட்ட திராவிட நாடு கொள்கைஅடைந்தால் திராவிட நாடுஇல்லை யெனில் சுடுகாடு என்ற கொள்கை திராவிட மாடல் என்ற புது அவதாரம் எடுத்துள்ளதோ என்ற ஐய்யம் மத்திய அரசுக்கு வந்துள்ளது என்பதாகக் கருத இடமிருக்கிறது. 

திராவிட மாடல்என்ற ஸ்டாலின் அரசின் சொற்றொடரைச் சற்று அலசுவோம்.

இது திராவிடம் + மாடல் என்ற இரு சொற்களைக் கொண்டது. இந்த சொற்களில் திராவிடம் சம்ஸ்கிருதம்மாடல் ஆங்கிலம். இந்த சொற்றொடரிலேயே தமிழ் புறக்கணிப்பு உள்ளது. ‘திராவிடம்என்ற சொல் தமிழகத்தைப் பொறுத்தமட்டில்பிரிவினைக் கொள்கை, நாஸ்திகம், தேசீய விரோத சிந்தனை, இந்திய இறையாண்மையைச் சிதைக்கும் சொல்என்ற அளவில் உள்ளதால் ஆதி சங்கரர் அற்புதமாகப் பயன்படுத்திய இந்த ஆன்மீகச் சொல் வலுவிழந்து கருப்புச் சட்டைகளால் இழிவு பட்டு சிதைந்து ஜீவனற்றுப் போய்விட்டது.

மேலும் உடன் பிறப்புகள் கொண்டாடும் பெரியாரேதிராவிடம் ஒரு வெங்காயம்என்று ஒரே சொற்றொடரில் திராவிடத்தை ஒரே அடியாக வெட்டிச் சாய்த்து விட்டார்.

இதே போல் நாடு என்ற சொல் இந்த திராவிடம் என்ற சொல்லின் தொடர்பால் அதன் பொருள் உடன் பிறப்புக்கள் பயன்படுத்தும் பொழுது பிரிவினை துர்நாற்றம் வீசும் அவலமும் தமிழகத்தில் நிலவுகிறது.

திராவிட நாடு லட்சியம்திராவிட மாடல் நிச்சயம்என்று முன்பு அண்ணா ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருவோம் என்ற தேர்தல் வாக்குறிதியை நிறைவேற்றாமல் இருக்கும் நிலையை தமிழ் சொல்லாடலால் மக்களை மயக்கிய மாதிரி ஸ்டாலினும் செயல்படுகிறாரோ என்று கருதத் தோன்றுகிறது.

ஒவ்வொரு சொல்லும் அதை உபயோகிப்பவரின் இதய சுத்திக்கு ஏற்ப நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் அரசியலில்சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்என்பது வெறும் வெற்று தேர்தல் முழக்கமாகத் தான் பல அரசியல் தலைவர்களிடம் காணப்படுகிறது. அதுவும் உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் அரசியல் தலைவர்கள் திராவிட இயக்கத்தினர்களுக்கு கைவந்த கலை.

இப்போது தமிழ் நாடு என்ற சொல்லை ஆராய்வோம்.

நாடு என்றால் தேசம் என்று தான் நமக்கு நினைவில் முதலில் வரும். ஒரு சொல்லிற்கு பல பொருட்கள் இருப்பினும், தலையாய பொருள் ஒன்று இருக்கும். மேலும் அந்தச் சொல்லைச் சொல்பவர்களின் தரத்தின் தகுதியிலும் அந்தச் சொல்லின் பொருள் மாறுபடும். நேர்மையான உள்ளம் கொண்ட அரசியல்வாதிகள் திராவிட இயக்கத்தில் மிகவும் குறைவு என்பது ஒரு சரித்திர உண்மை. நாடு என்ற சொல் பெயர்ச்சொல்லாக பயன்படுத்தப்படும் போது தேசம் என்ற தலையாக பொருளுக்குப் பிறகு, நிலம், இடம் என்ற பொருட்கள் உண்டு. நாடு என்பது வினைச் சொல்லாகவும் பயன்படுத்தலாம்.

கருணாநிதி வக்கணையாக தமிழ் நாடு என்பதற்கு, தமிழை நாடுஎன்று பல விளக்கங்களைப் பதிவு செய்துள்ளது கீழே உள்ளது


ஆனால் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு தேசியப் பற்று சிஞ்சித்தும் கிடையாது என்பது தெரிந்த ஒன்று தான். ஆனால் அவர்கள் தாங்கள் தமிழின் மேல் பற்றுக் கொண்டவர்கள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள். ஆனால் அவர்கள் தமிழை அடுக்கு மொழி அடை மொழி என்று ஆபாசத் தமிழை டாஸ்மாக் போதை மாதிரி குட்டிச் சுவராக்கி விட்டனர். அவர்கள் உருவாக்கிய கதைகள், நாவல்கள், உரை நூல்கள் அனைத்தும் கண்ணதாசன் பார்வையில்நச்சு இலக்கியங்கள்தமிழை வாழ வைக்காமல், தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழைக் கடைச் சரக்காக்கி வியாபரமாக்கி ஆட்சியைக் கைப்பற்ற ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி மக்களை மயக்கி ஏமாற்றிய புண்ணியாத்மாக்கள்.

கவர்ச்சிக்குத் தடையில்லை. கருத்துக்குத் தடையுண்டு என்பது அந்த திராவிடக் கட்சியின் கொள்கையாக இருந்ததுஇருக்கிறது.

சங்க இலக்கியங்களும், பக்தி இலக்கியங்களும் செழுமைப்படுத்திய தமிழ்மொழியை பகுத்தறிவு என்ற போர்வையில் பக்தி இலக்கியங்களைக் குறிவைத்துத் தாக்கினார்கள். பகுத்தறிவின் எல்லை இந்துமதம் வரையில்தான் என்பதைக் கூறவே தேவையில்லை. பிள்ளையார் சிலையை உடைத்த ஈ.வெ.ரா வுக்கு திமுக அரசு தமிழகம் முழுவதும் சிலை வைத்து அதில் – ‘கடவுள் இல்லை; இல்லவே இல்லை  என்று பொறித்து தங்களது நாத்திகத்தை உறுதி செய்தனர். பெரும்பாலான ஆஸ்திகர் அடங்கிய தமிழ் நாட்டில் அரசு வரிப்பணம் இதற்குச் செலவழிக்கப்பட்டது அநியாயம். அண்ணாத்துரையின்தமது கட்சியின் கொள்கை நாஸ்திகம் அன்று. ஒருவனே தேவன் என்ற கடவுள் கொள்கையை உடையதுஎன்ற விளக்கம் வலிவிழந்தமக்களை ஏமாற்றும் ஒன்று. ஏனென்றால்தந்தை பெரியார் என்று திமுகவினரால் பெரிதும் மதிக்கப்படும் ஈவேரா சிலையில்கடவுள் இல்லை’ – என்ற வாசகத்துடன் தான் திமுக அரசு பல இடங்களில் திறந்து வைத்துள்ளதால், இது அப்பட்டமான ஏமாற்று என்பதை மக்கள் மனத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் தமிழினத்தின் ஒற்றுமையை சிதைப்பதிலும் தமிழ் மொழியின் வளர்ச்சியை தடுப்பதிலும் தமிழகத்தின் வழி வரும் பண்பை கெடுப்பதிலும் திமுகவுக்கு நிகர் திமுக தான். 

தமிழக நலனில் இவர்களுக்கு ஆர்வம் இருந்தால் ‘தமிழர் முன்னேற்ற கழகம்’ என்பதாக தங்கள் இயக்கத்திற்கு பெயர் சூட்டியிருப்பார்கள்.  தமிழர்கள் என்று தங்களைப் பற்றி பெருமையோடு கூறிக் கொள்வதை விடுத்து ‘திராவிடர் என்று வெட்கமின்றி தங்களை தாங்களே அழைத்துக் கொள்ளும் கெடுமதியே அவர்களது வழி தவறிய மனநிலையை காட்டுகிறது அல்லவா?

திராவிடம் என்பது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற நான்கு மொழிகள் பேசும் மாநிலங்களை உள்ளடிக்கியது. ஆனால் அந்த மாநிலங்கள் தமிழகத்துடன் ஒன்று சேர விருப்பம் இன்று வரை தெரிவிக்க வில்லை. வரும் காலத்திலும் விருப்பம் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையும் துளியும் இல்லை. சில மாநிலங்கள் தமிழகத்துடன் நதி நீர் பங்கீட்டுப் பிரச்சனை, அணை கட்டுவதில் பிரச்சனை என்று அரசியல் ரீதியாக போட்டி போட்டுக் கொண்டு முட்டி மோதுகின்றன. இந்த நிலையில் ஸ்டாலின் திராவிட மாடல் என்று எதை வைத்துக் குறிப்பிடுகிறார் என்று விளங்க வில்லை. ஒருவேளை தமிழ் பேசும் மக்கள் போல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் தமிழகத்தில் வந்து குடிபுகலாம் என்று வரவேற்கிறாரா? என்று தெரியவில்லை. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பதை வந்தாரை வாழவைக்கும் திராவிடம் என்று மாற்றிச் சொல்ல விழைகிறாரா திராவிட மாடல் பிரம்மா ஸ்டாலின்? – தெரியவில்லைபுரியவில்லை.

பொறுமை காத்தனர் தேச பக்தி உள்ள தமிழக மக்கள். இந்த திராவிட மாடல் அரசுக்கு ஒரு கடிவாளம் போட ஒருவரும் இல்லையா? என்று ஏங்கிய தமிழக மக்களுக்கு கடவுளின் வரப்பிரசாதமாக இருவர் தமிழக அரசியல் களத்தில் உதித்தார்கள்.

இருவரும் ஐபிஎஸ் என்பது ஒரு ஒற்றுமை. ஒருவர் ஆளுனர் ஆர்.என். ரவி. இன்னொருவர் மோடிஅமித் ஷா கண்டெடுத்த மாணிக்கம் கே. அண்ணாமலைதமிழக பிஜேபி மாநிலைத்தலைவர்.

ஆளுனர் ஆர். என். ரவி அவர்கள் ராஜ்பவனில் ஜனவரி 4-ல் நடந்த நிகழ்ச்சியில்தமிழ் நாடு என்பதை விட தமிழகம் என்பது மிகவும் பொருத்தமான ஒன்றுஎன்று தமது கருத்தைச் சொல்லி அதற்குரிய காரணங்களை தமது உரையில் கீழ்க்கண்டபடி குறிப்பிட்டுள்ளார்:


தமிழகத்தில் ஒரு தவறான பிற்போக்குக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை என்ற கருத்தின் அடிப்படையில் பல படித்த மேதாவிகளும் கண்மூடித் தனமாக அனைத்து இந்திய மக்களுக்கும் பயன்படும் முறையில் செயல் படுத்தப்படும்  இந்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த முடியாமல் தடுக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடு இந்தியாவின் ஒரு அங்கம் இல்லை என்பதைச் சொல்லிச் சொல்லி அந்தத் தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் புகுத்தும் முயற்சிகள் இங்கு நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ் நாடு இந்திய தேசத்தின் ஆத்மா, ஒரு கருத்து, ஒரு அடையாளம் என்பதை மக்கள் மனத்தில் பதிய வைத்து அந்த கருத்து  எப்போதும் உயிர்ப்புடன் சுடர்விட்டு தமிழ் மாநிலத்தில் நிலவும் தவறான வழிகளை ஒரே அடியாகப் போக்க (பொசுக்க) நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.”

தமிழகத்தில் திராவிட மாயை பொசுங்கி சாம்பலாகி ஆன்மீக தீச் சுடர் பிரகாசிக்கும் நிலைக்கு அடிக்கல் நாட்டி விட்டார் கவர்னர் ரவி. ரவி என்றால் சூரியன்ஆன்மீகச் சூரியன் திராவிட உதய சூரியனை ஓட வைக்கும் பணிக்கு தமிழ்பாரதத் தாய் ஆகியவர்களின் பரிபூர்ண ஆசி அவருக்கு உண்டு என்பதால் அவர் பணி இனிதே வெற்றி அடையும் என்பது திண்ணம்.

ஜனவரி 9-ம் தேதி நடந்த சட்ட சபையில் கவர்னர் உரையில் திராவிட மாடல் ஸ்டானின் அரசு தயாரித்த அறிக்கையில் சில வரிகள் சில கருத்துக்களை விடுத்து ரவி அவர்கள் சட்ட சபையில் உரை நிகழ்த்தி உள்ளார். அதை மறுக்கும் முகத்தான் திராவிட மாடல் அரசு தயாரித்து அச்சிட்டு வெளியிட்ட அறிக்கைதான் கவர்னர் உரையாகும் என்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிப்பதற்குப் பதில் மறுத்து ஸ்டாலின் அவையில் உரை நிகழ்த்தி உள்ளார். இதைக் கண்டிக்கும் முகத்தான் ஆளுனர் அவையிலிருந்து வெளிநடப்பும் செய்துள்ளார்.

இந்த இருவரின் செயல்களும் மரபு மீறிய செயல்களா? – என்ற விவாதத்தைத் தவிர்த்து, யார் சொல்வது தர்மம், நியாயம், நேர்மைஎன்பதைச் சிறிது ஆராய்வோம்.

ரவி அவர்கள் திராவிட மாடல் அரசு அனுப்பிய உரையின் நகலில் சில திருத்தங்கள் செய்ய விரும்பி தம் எண்ணத்தை வெளியிட, அதற்கு நீங்கள் அந்தத் திருத்தங்களை உரை படிக்கும் போது செய்து கொள்ளுங்கள் என்று சொன்னதாக ராஜ்பவன் அறிக்கை கூறுகிறது.

ரவி அவர்கள் அரசு தயாரித்து தமது ஒப்புதலுக்கு அனுப்பிய உரையில்தமிழ் நாடு தொடர்ந்து அமைதி மற்றும் அமைதியின் மாநிலமாகவும், வன்முறையில் இருந்து விடுபட்ட மாநிலமாகவும் உள்ளது என்ற வரிகளைத் தவிர்க்கவும், மாநில அரசின் முயற்சியால் தான் இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்ற வாசகத்தில்மாநில மற்றும் மத்திய அரசியின் முயற்சியால்என்று மாற்றவும், மற்ற மாநிலங்களை விட அதிக அந்நிய நேரடி முதலீட்டை தமிழகம் ஈர்த்தது என்ற பிழையான விவரத்தை திருத்தவும்  விரும்பி உள்ளார். ஆனால் இதற்கு திராவிட மாடல் அரசு தயாராக இல்லை. அதே போல் ரவியும் அவைகளை தம் உரை நிகழ்த்துகையில் தவிர்த்துப் படித்தார்.

ரவி அவர்கள் தமிழ் நாடு என்று சொல்வதில் அரசியல் செய்யும் கட்சிகளால் தான் தமிழகம் என்று பெயர் சொல்லி அழைப்பது சாலச் சிறந்தது என்று தமது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கான காரணங்களை மறைக்காமல் கூறி இருக்கிறார். அவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு. கவர்னர் பதவியில் இருப்பவர் இந்த மாதிரி கருத்தினை வெளியிடக்கூடாது என்று அவருக்கு கண்டன ஆர்ப்பாட்டங்கள் செய்வதுமாண்புகளுக்குஅழகல்ல. அதை மறுத்துக் கருத்துக்களைப் பதிவு செய்யமாண்புகளுக்குஉரிமை உண்டு. அதை வரம்பு மீராமால் கண்ணியத்துடன் தெரிவிக்கலாம்.

தமிழகமா ? – தமிழ் நாடா? – என்று பிரச்சனையை எழுப்பாமல், இந்தியாவிற்கேஇந்தியாபாரதம்என்று இரு பெயர்கள் இருப்பது போல் முந்தையை சென்னை மாநிலத்திற்கும் தமிழகம்தமிழ் நாடு என்ற இரு பெயர்களையும் அவரவர்கள் விருப்பத்திற்கு ஏற்பப் பயன்படுத்தும் படி செய்து இப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டி விடலாம்.

தமிழகம் என்பது சட்ட பூர்வமாக இல்லையே? – என்று யாராவது கேள்வி எழுப்பினால், தமிழகம் என்ற சொல்லாடல் வழக்கில் பலராலும் பயன்பாட்டில் உள்ளது. தேர்தல் ஆணையம்தமிழகத் தேர்தல் என்று தான் குறிப்பிடுகிறது.

ஏன், திராவிட மாடல் அரசின் முதல்வரேதலை நிமிர்ந்த தமிழகம் மனங்குளிருது தினந்தினம்என்று தமிழகம் என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளார்.

1967ல், சென்னை மாநிலத்தின் பெயரை, தமிழ் நாடு என மாற்ற, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தில், அப்போதைய முதல்வராக இருந்த அண்ணாதுரை, புதிய பெயர் மற்றும் அதன் அர்த்தம் குறித்து இது இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம். தனி நாடு அல்லஎன்று கூறினார். ஆகையால் இப்போதைய திராவிட மாடல் (மாயை?) ஆட்சி செய்யும் முதல்வர் ஸ்டாலின்திராவிட மாடல் தமிழ் மாடல் தான். அதில் பிரிவினை இல்லைதேசியம் காப்போம்என்று தெளிவு படுத்த வேண்டியது அவசியமாகிறது.

மஹா கவி பாரதியார் தமிழ் நாடு/தமிழ்த் தாய் பற்றிப் பாடிய மிக முக்கிய

பாடல்கள் ஆறு என்றால் பாரத நாடு/பாரதத் தாய் பற்றிப் பாடிய முக்கிய பாடல்கள்

19 ஆக இருக்கிறது. பாரதிக்கு பாரத நாடும்தமிழ் நாடும் மட்டுமில்லாமல்

பக்தியும்ஆன்மீகமும்இரு கண்கள். தமிழும் சம்ஸ்கிரதமும் கூட இரு

கண்கள் மஹா கவி பாரதிக்கு.




பாரதி பாரத நாடு/பாரதத் தாய் பற்றி பாடிய பாட்டுகளிலிருந்து சில வரிகள்:

முப்பது கோடியும் வாழ்வோம்வீழில்

முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்

 

பாருக்குள்ளே நல்ல நாடுஎங்கள்

பாரத நாடு

 

பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்மிடி

கொல்லுவார் துயர்ப் பகைவெல்லுவார்.’

 

பாரத நாடு பழம் பெரும் நாடே

பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே

 

தாயின் மணிக்கொடி பாரீர்அதைத்

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்.’

 

தேர்ந்தவர் போற்றும் பரதநிலத்

தேவி துவஜம் சிறப்புற வாழ்க

 

பாரத ஸமுதாயம்வாழ்கவே ! – வாழ்க வாழ்க

 

முப்பது கோடி ஜனங்களின் ஸங்கம்

முழுமைக்கும் பொது உடைமை

ஒப்பிலாத ஸமுதாயம்

உலகத்துக்கொரு புதுமை.’

 

இழிவு கொண்ட மனிதரென்பது

இந்தியாவில் இல்லையே!’

 

நாமிருக்கும் நாடு நமது

என்பதறிந்தோம்இது

நமக்கே உரிமையாம்

என்பதறிந்தோம்இந்தப்

பூமியில் எவர்க்கும் இனி

அடிமை செய்யோம்பரி

பூரணனுக்கே யடிமை

செய்து வாழ்வோம்

 

பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ?

நீரதன் புதல்வர்; இந்நினைவகற்றாதீர் !’

 

தாய்த் திருநாட்டைத் தகர்திடு மிலேச்சரை

மாய்த்திட விரும்பான் வாழுவுமோர் வாழ்வுகொல்?

ஈனமுற்றிருக்க எவன்கொலோ விரும்புவான்?

தாய்பிறன் கைப்படச் சகிப்பவனாகி

நாயீன் வாழ்வோன் நமரிலிங்குளனோ?

பிச்சை வாழ்வுகந்து பிறருடை யாட்சியில்

அச்சமுற்றிருப்போன் ஆரியனல்லன்.

புன்புலால் பாக்கையைப் போற்றியே தாய்நாட்டு

அன்பிலா திருப்போன் ஆரியனல்லன்.’

 

இனி தமிழ் நாடுதமிழ்த் தாய் பற்றி பாரதி பாடி பாட்டிலிருந்து சில வரிகள்:

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே.’

 

வேதம் நிறைந்த தமிழ் நாடுஉயர்

வீரம் செறிந்த தமிழ் நாடு.’

 

கல்வி சிறந்த தமிழ் நாடுபுகழ்க்

கம்பன் பிறந்த தமிழ் நாடு.’

 

வள்ளுவன் தன்னை உலகினுக்கேதந்து

வான் புகழ் கொண்ட தமிழ் நாடுநெஞ்சை

அள்ளும் சிலப்பதிகாரமென்றோர்மணி

யாரம் படைத்த தமிழ் நாடு.’

 

யாமறிந்த மொழிகளிலே

தமிழ் மொழிபோல் இனிதாவது

எங்கும் காணோம்.’

 

எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி

என்னென்றும் வாழியவே

 

வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித்திரு நாடு!



அதே போல் தமிழகம் என்பதைக் குறிக்கும் நம் சங்க காலப் பாடல்கள் இதோ;

v  வையக வரைப்பில் தமிழகம் கேட்ப (புறநானூறு, 168 :18)

v  இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க (பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5) 

v  இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை : 38)  

v  சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் (மணிமேகலை, 17: 62

ஆகையால் கவிஞர்களால் தமிழ் நாடும், தமிழகமும் போற்றுதலுக்குறிய சொற்கள்

என்பது தெளிவு


சில தகவல் பலகைகள் உங்கள் பார்வைக்கு:





Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017