மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து – இந்திய நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டார் மோடி

 

மத்திய அரசின் மூன்று புதிய சட்டங்களும் ஒரு விளக்கு வெளிச்சம் போல் மிகவும் தூய்மையானது. என்றாலும், என்னுடைய நல்லது செய்ய நினைத்த செயல்கள் சில சிறிய எண்ணிக்கையில் உள்ள எனது விவசாய நண்பர்களை நம்பச்செய்ய எங்களால் முடியாது போனதால் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுஎன்று தமது மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் செய்தியை வெளியிட்டபோது விளக்கி உள்ளார்.

இனி நாம் வேளாண் சட்டங்களை புதிய கண்ணோட்டத்துடன் ஆரம்பிப்போம். இந்தப் புதிய ஆரம்பத்துடன் நாம் முன்னேறிச் செல்வோம்.

அதற்கு உதவியாக ஒரு கமிட்டியை மத்திய அரசாங்கம் அமைக்கப் போகிறது. அந்தக் கமிட்டி லாபகரமான தொழிலாக விவசாயத்தை உருவாக்கும் செயல் திட்டத்தை தீர்மானிக்கும்.  இயற்கை விவசாயம், நாட்டிற்குத் தேவையான அனைத்து விவசாயப் பொருட்களும் உள்ளூரிலேயே கிடைக்கும் அளவில் பயிர் விளைச்சல்களில் நிலத்தின் தன்மைதரம் ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு மாற்றங்களை கொண்டு வருதல், விவசாயப் பொருட்களின் நியாயமான கொள்முதல் விலைகளை நிர்ணயிப்பதில் நேர்மையான வெளிப்படையான நிலையை உருவாக்குதல் ஆகியவைகளில் அந்தக் கமிட்டி கவனம் செலுத்தும். மேலும் அந்தக் கமிட்டியின் அங்கத்தினர்கள் மத்திய மாநில அரசு அதிகாரிகள், விவசாயிகள், விவசாய விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுனர்கள் என்று வலுவானதாக அமையும்என்று மேற்கொண்டு எடுக்க வேண்டிய செயல் திட்டங்களையும் மோடி வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டஇப்போது ரத்து செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலையை மோடி இப்படி விளக்குகிறார்: “இந்தியாவில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள 100 விவசாயிகளில் 80 விழுக்காடு சிறு-குறு விவசாயிகள். அவர்களின் சாகுபடி செய்யும் நிலம் இரண்டு ஹெக்டேர் அளவை விடக் குறைவாகும். அப்படிப்பட்ட சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 10 கோடிக்கும் மேலாகும்.

முக்கியமாக அப்படிப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் வண்ணம் இயற்றப்பட்டது தான் இந்த இப்போது ரத்து செய்யப்படும் வேளாண் சட்டமாகும். அதன் பயன்தரும் தன்மையால், இந்தியாவின் பல பாகங்களில் உள்ள பல விவசாயிகள், விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றாலும் அனைத்து விவசாயிகளும்சிறுகுறு விவசாயிகளிலிருந்து, பெரும் விவசாயிகள் வரை ஏற்றுக் கொள்ளும் அளவில் புதியதாக இந்தப் பிரச்சனையை அனுக முடிவு செய்யப்பட்டுள்ளது.”

மாநில அதிகாரத்தில் தான் வேளாண் துறை உள்ளது. ஆகையால் மாநில அரசுகள் விவாசயிகளின் பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கப் போகிறார்கள்என்பது மக்களுக்குத் தெரியப் போகிறது.

மோடி அரசின் கடந்தகாலங்களில் விவசாயிகள்அதுவும் குறிப்பாக சிறு விவசாயிகள் மேம்பட செய்த பல செயல்கள் இதோ:

இயற்கைச் சீற்றங்களால் சேதம் அடைந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்கும் வகையில் ஏற்படுத்தப்ப்பட்ட பயிர் காப்பீடு, (இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகள் பெற்ற காப்பீட்டுத் தொகை ஒரு லட்சம் கோடி ரூபாய் ), விவசாயிகளின் தேவைகளுக்குப் பணமாக அவரகள் வங்கிக் கணக்கில் வரவு வைத்த தொகை – 1,62,000 கோடி, புதியதாக நாடுமுழுவதும் 1000-க்கும் அதிகமான புதிய மண்டிகளை ஏற்படுத்தி, -நாம் திட்டப்படி (e-NAM scheme) இந்தியாவின் எந்தப் பகுதிகளிலும் தங்கள் விளை பொருட்களை விற்று அதிக லாபம் பெற வழி வகுத்தது, வேளாண் பட்ஜெட் 1.25 லட்சம் கோடி என்ற அளவில் மெகா பட்ஜெட், பயிர்கடன் 16 லட்சம் கோடி அதிகரிப்பு.

இந்த பல மோடியின் அரசின் செயல்கள் ஒரு சில பெரிய மண்டிவாலாபெரு விவசாயிகளால்அதுவும் குறிப்பாக பஞ்சாப்ஹரியான மாநிலங்களில் உள்ள பெரு விவசாயிகளின் சுயநலத்தால் இந்தியாவின் விவசாய நலன் பாதிக்கப்படுகிறது.

வருங்காலம் இந்த சிறிய ஆனால் பணத்தாலும், ஆள் பலத்தாலும் விவசாயிகளின் பொது நலத்தைப் புறக்கணித்து, போராடுபவர்களை இனம் கண்டு தூற்றும் என்பது மட்டும் உண்மை.

இது மோடிக்கு ஒரு பின்னடைவு என்பதை விட, இந்திய பெரும்பான்மை சிறு விவசாயிகளுக்கு ஒரு பெரும் ஏமாற்றம் தரும் செயல் என்று தான் கணிக்கத் தோன்றுகிறது.

இனி கொண்டு வரப்படும் விவசாயச் சட்டங்கள் எந்தவகையில் நன்மை பயக்கப் போகிறது என்பது ஒரு பெரிய கேள்விக் குறியாகும்.

ஒளியை விரும்பாத வொவ்வால் குணமுள்ளவர்களின் தலைமையில் நடக்கும் விவசாயப் போராட்டம் விவசாயிகளை தெரிந்தோ தெரியாமலோ இருளுள் தள்ளும் நிலைதான் ஏற்படப்போகிறது.

பார்லிமெண்ட் இயற்றிய சட்டங்கள், தெருப்போராட்டத்தால் ரத்து என்பது ஜனநாயக மரபுக்கு ஒரு பெரும் கறை என்றால் மிகை அன்று.

மோடி சாணிக்கியமாகச் செயல்பட்டாலும், இந்தக் கறையை மோடி சுமக்க வேண்டிய நிலை என்பது மிகவும் துர்பாக்கியமாகும்.

ஒளியாக மிளிர வேண்டிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்தது, விவசாயிகளின் வீடுகளின் விளக்குகளை அணையும் படிச் செய்து விட்டது.

இனி யார் அணைந்த விளக்கை ஏற்றப்போகிறார்கள் ? – என்பது தான் வாய்மையின் கேள்வி.


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017