முழுப் பழமொழியால் அரசியல் முகமூடி கழலும் அவலம்

முழுப் பழமொழியால் அரசியல் முகமூடி கழலும் அவலம் புகழ்பெற்ற பழமொழி ஒன்றை கூறி நண்பர் ஒருவர் அதற்கு விளக்கம் கேட்டிருந்தார் . இந்த பழமொழியின் முதல் இரண்டு வரியை மட்டுமே அறிந்திருந்த அந்த நண்பர் இதற்கு மேலும் இரண்டு வரிகள் உண்டு என்று கூறியதும் வியப்புற்றார் . அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளின் அடுத்த வரிகளை கூறினால் திருவள்ளுவர் சனாதனி ஆகிவிடுவாரோ என்ற அச்சத்தில் நாசுக்காக அந்த குறிளின் முதல் வரியை வைத்து எவ்வாறு அரசியல் செய்தனரோ அதுபோல கணியன் பூங்குன்றனாரின் " யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற முதல் வரியை தூக்கிக்கொண்டு உலா வரும் போராளிகள் அடுத்த வரிகளை கூறுவதில்லை ! இதுபோன்று மறைக்கப்பட்ட திருமாலுக்கு அடிமை செய் என்ற முத்தமிழ் மூதாட்டியின் ஆத்திச்சூடியின் வரிகள் வரை இன்று நம்மிடம் மறைக்கப்பட்டு வருகின்றன . அவ்வகையில் இந்த நண்பர் என்னிடம் விளக்கம் கேட்ட பழமொழியானது " ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி " என்ற இரு வரிகளுக்கும் த...