“ ஸர்வே ஸந்து நிராமயா “ – அனுப்பு: எஸ். ஷங்கர்.

ஸர்வே ஸந்து நிராமயா என்ற சம்ஸ்கிரதத்திற்கு ‘அனைத்து மக்களும் நோயில்லாமல் வாழட்டும்’ என்று பொருள். இப் பூமியில் உள்ள அனைத்து மக்களும் நலமுடன் இருக்க வேண்டும் ...! இதுவே பாரதத்தின் , பிரதமர் மோடியின் தாரக மந்திரம் ..! பிரேஸில் , மொராக்கோ , மியான்மார் , பங்களாதேஷ் , சௌதி அரேபியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்காக வரிசை கட்டி நிற்பதைப் பார்த்து ஜெர்மனிக்கு தலை சுற்றி வாயடைத்து போய் இருக்கிறது ..! ஜெர்மானிய சான்ஸலர் ஏஞ்சலா மார்க்கல் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் மோடியை தொடர்பு கொண்டு தன் கவலையைத் தெரிவித்தார் . அவர் கூறியது " இந்தியாவின் உள்நாட்டு தேவையே பயங்கரமானது . இந்நிலையில் மற்ற நாடுகளின் க்யூ ( வரிசை ) நீண்டு இருக்கிறது . அப்படியிருக்க எங்க நாட்டின் தேவையையும் மற்ற ஐரோப்பிய நாடுகளின் தேவையையும் எப்போது பூர்த்தி செய்வீர்கள் ..?" என்று கேட்டிருக்கிறார் " உங்கள் உள்நாட்டு தேவையுடன் எங்களையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் " என்று வேண்டிக் கொண்டிருக்கிறார் . மோடியும் க...