மத்திய அரசின் 3 விவசாய புதிய சட்டங்கள் – எதிர்த்துப் போராடும் பஞ்சாப் விவசாயிகள் – ஆக்கம்: பவித்திரன்

கடந்த 50 நாட்களுக்கு மேலாகியும் தொடர்ந்து தொய்வில்லாமல் அதே சமயத்தில் சாத்வீகமாக விவசாயிகள் சங்கத்தினர் போரட்டம் நடத்துகிறார்கள். விவசாயிகள் பலர் தங்கள் மனைவிமார்களுடன் போராட்டக் களத்தில் உள்ளார்கள். பலரின் குழந்தைகளும் போராட்டக் களத்தில் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடுகிறார்கள். ‘மத்திய அரசே! 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்’ என்பது தான் தங்களது ஒரு வரிக் கோரிக்கை என்று போராடும் விவசாயிகள் சொல்கிறார்கள். ‘போராடும் விவசாயிகளே! 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. அதில் உள்ள ஷரத்துகளில் காணும் குறைகளை நீக்க நாங்கள் தயார்’ என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ‘மத்திய அரசே! பேச்சு, பேச்சு, பேச்சு ! என்ன தான் இந்த 50 நாட்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ? ஏன் இதற்கு ஒரு முடிவு வரவில்லை ? நாங்கள் இதற்கு ஒரு முடிவு கட்ட களம் இறங்குகிறோம். அதற்கு முதல் படியாக போராடும் விவசாயிகளின் நம்மிக்கையைப் பெற, உங்கள் 3 வேளாண் சட்டங்களையும் முடிவு காணும் வரை நிறுத்தி வைக்கிறோம். இது நாங்கள் துணிந்து எடுக்கும் மிகவும் அசாதாரணமான செயலாகும். வேளாண் சட்டங்களில் உள்ள க...