பூமாதேவியின் உச்ச கட்ட உக்கிரம்

பூமித் தாய் பொறுமையின் பொக்கிஷம். பொறுத்தவர் பூமி ஆள்வார் – பொறுமை கடலிலும் பெரிது என்ற முதுமொழிகள் பூமியின் அசாத்திய பொறுமையையும், சகிப்புக் தன்மையையும் காட்டுகின்றன. ஆனால் மனிதன் மண்ணை மதிப்பதில்லை; மலையைப் பாதுகாப்பதில்லை; வருங்கால சந்ததியினரை மனத்தில் கொண்டு பூமியை மதிப்பதில்லை; பேராசை என்ற வலையில் விழுந்து இயற்கைச் செல்வங்களை பொக்கிஷமாக காத்து வாழவில்லை. பூமியின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. மனிதன் லக்ஷ்மண் ரேகாவை பலமுறை மீறி செயல்பட்டுள்ளான். உலகளாவிய மக்கள் செவிடர்களாகி பூமியின் அபல அழுகுரலைக் கேட்க வில்லை. பூமி பல சமயங்களில் தன் உக்கிரத்தை பூமி அதிர்ச்சி, பூகம்பம், எரிமலை ஆகியவற்றுடன் உலக மக்களைப் பழிவாங்கிய சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்தும் உலகம் பாடம் கற்கவில்லை. பூமிக்கு உலக மனிதர்களால் உண்டான பல அழிவுகளின் வலிகள் ஏராளம். அத்துடன் மனித ஜனத்தொகையின் பாரமும் அதிகம். பூமித்தாய் உலகத்து மனிதர்களுக்கு தகுந்த பாடத்தைக் கற்பிக்கும் விதமாக கொரோனா என்ற ஆள்கொல்லி கிருமியை தற்போது ஏவி உள்ளாள். பூமியின் உஷ்ணத்தைக் குறைக்கும் நீர் நிலைக...