கர்நாடகா மாநிலத் தேர்தல் – 2018 – ஒரு கண்ணோட்டம்
கர்நாடகாவில்
உள்ள மொத்த இடங்களான 224-ல், 222 இடங்களில் தேர்தல் நடந்து அதன் தீர்ப்பு பா.ஜா.க.வுக்கு
104 இடங்களையும், காங்கிரசுக்கு 78 – ஜே.டி.எஸ். + பி.எஸ்.பி. 37 + 1, மற்றவைகள் –
2 என்ற அளவில் அமைந்துள்ளது. ஆட்சி அமைக்க 8 இடங்கள் அதிகமாக பா.ஜா.க.வுக்குக் கிடைக்காத
நிலையில், காங்கிரஸ் – ஜே.டி.எஸ். கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது.
பா.ஜா.க.
அதிக இடங்களைப் பெற்ற காரணத்தல், ஆட்சி அமைக்க கவர்னரால் அழைக்கப்பட்டும், முதல்வராகப்
பதவிப் பிரமாணம் செய்யப்பட்டும், சட்டசபையில் ஓட்டெடுப்பிற்கு முன்பே பதவி விலகி விட்டார்.
இதற்கு காங்கிரஸ் – ஜே.டி.எஸ். எதிர்ப்பைக் காட்டியும், உச்ச நீதிமன்றத்தை நாடியும்
அதில் முக்கியமாக உடனேயே முதல்வர் எடியூரப்பா தன் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று
தீர்ப்பைப் பெற்று, எடியூரப்பாவைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடி உள்ளது.
இதில்
எதிர்கட்சிகள் கவர்னர் பா.ஜா.வை முதலில் ஆட்சி அமைக்க அழைத்தது சுப்ரீம் கோர்ட் பொம்மை
வழக்குத் தீர்ப்புக்கு எதிரானது என்றும், தங்கள் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.க்குத்
தான் ப்ரோ டெர்ம் ஸ்பீக்கர் பதவி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தை நாடியது.
அந்த இரண்டு காரணங்களையும் ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘அடுத்த 24 மணி நேரத்தில் முதல்வர்
எடியூரப்பா தனது பலத்தை சட்ட சபையில் நிரூபிக்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்தனர்.
சர்காரியா
கமிஷன் தீர்ப்பு, எம்.எம்.பஞ்சி கமிஷன் தீர்ப்பு ஆகியவைகள் கவர்னர் கீழ்க்கண்ட வரிசைப்
படி எந்தக் கட்சிகளும் ஆட்சி அமைக்கும் அளவில் பெரும்பான்மை பெறாவிடில் தேர்வு செய்ய
வேண்டும் என்று விதித்துள்ளது.
1.
1. தேர்தலுக்கு முன் கூட்டணி அமைத்த கட்சிகள்
பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருந்தால்.
2 2. அதிக இடங்களைப் பெற்ற கட்சி மற்றவர்களின்
துணையுடன் ஆட்சி அமைக்கக் கோரினால்.
3. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைக்கும் அதிக
இடங்களைப் பெற்ற கட்சிகள் ஒன்றாக ஆட்சி அமைக்கக் கோரினால்.
4 4. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைக்கும் கட்சிகள்
சில ஆட்சியில் அமரவும், மற்ற சுயேட்சைகள் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் நிலையில்
ஆட்சி அமைக்கக் கோரினால்.
இதன்
மூலம், கர்நாடகாவின் கவர்னர் இரண்டாவது விதியை அமல்படுத்தியதைத் தவறு என்று கூற முடியாது.
ஆனால், காங்கிரஸ் – ஜே.டி.எஸ். கட்சிகள் கவர்னரை மூன்றாவது விதியை அனுசரித்து அவர்களுக்கு
ஆட்சி அமைக்க முதலில் அனுமதி வழங்க வேண்டும் என்பது இப்போதைய விதிக்குப் புறம்பானது.
ஆகையால் கர்நாடகாவின் கவர்னர் பாரபட்சமாகச் செயல்படுகிறார் என்ற குற்றச் சாட்டை உச்ச
நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இந்தத்
தேர்தல் முடிவுகளை இரண்டு கோணங்களில் பார்க்க வேண்டும். ஒன்று - வெற்றி பெற்ற இடங்கள்.
இரண்டு தார்மீகக் கொள்கைகள்.
பா.ஜ.க.
அதிக இடங்களைப் பெற்றுள்ளதால், அது மற்ற இரு கட்சிகளான காங்கிரஸ். ஜே.டி.எஸ். ஆகிய
இரு கட்சிகளை விட மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது என்பது உண்மை என்றாலும், ஆட்சி அமைக்கும்
அளவில் அதற்கு சீட்டுகள் இல்லை – 8 சீட்டுகள் குறைவு. ஆகையால், ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின்
எம்.எல்.ஏக்களை இழுக்கும் – குதிரை பேரத்தில் இறங்க வேண்டிய நிலை உண்டாவதால், அது தார்மீக
கோணத்தில் பார்க்கும் போது மிகவும் தவறானதும், தண்டிக்கத் தக்கதாகவும் இருப்பதால்,
ஆட்சி அமைக்கும் தகுதையை அது இழந்து விடுகிறது.
காங்கிரஸ்
கட்சி 78 இடங்களைப் பெற்றாலும், பா.ஜ.க. ஆட்சி அமைக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே
ஜே.டி.எஸ். கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், ஜே.டி.எஸ்.
கட்சி காங்கிரசை விட பாதிக்கும் குறைவாகவே பெற்றாலும், காங்கிரஸ் அந்தக் கட்சிக்கு
முதல் அமைச்சர் பதவியுடன், நிபந்தனை அற்ற ஆதரவு அளித்து தேர்தலுக்குப் பிறகு கூட்டணி
என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. தார்மீக நோக்கில் பார்த்தால், இதுவும் ஒரு விதத்தில்
தவறுதான்.
ஒரு அகில இந்திய கட்சி குறுகிய நோக்குடன் செயல்படுவது அதன் வளர்ச்சிக்கு
தடையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அதைப் பற்றி அந்தக் கட்சி கவலைப் படாவிட்டாலும்,
அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்ட மக்கள் மனத்தில் காங்கிரசின் மேல் வெறுப்பை வெளிப்படுத்தும்
நிலையை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
காங்கிரஸ்
கர்நாடகாவின் ஆறு பகுதிகளிலும் – பரவலாக தேர்தலில் வென்றுள்ளது. ஆனால் ஜே.டி.எஸ். தென்
கர்நாடகாவிலும் (24 இடங்கள்), மத்திய கர்நாடகாவிலும் (7 இடங்கள்) மட்டுமே அதிக இடங்களைப்
பெற்றுள்ளது. மற்ற இடங்களில் மிகவும் குறைவான இடங்கள். அதன் ஓட்டு சதவிகிதம் 18% -
இது காங்கிரஸின் 38%க்கு மிகவும் கீழ். மேலும் அந்தக் கட்சி பல இடங்களில் டெபாசிட்
இழந்துள்ளது. மக்களின் ஆதரவு பரவலாக இல்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.
அப்படிப்
பட்ட கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டதைக் குற்றம் சொல்ல முடியாது என்றாலும், அந்தக்
கட்சிக்கு முதல்வர் பதவியை அளித்ததை மக்கள் ஏற்பார்களா? என்பது பிறகு தான் தெரியவரும்.
தார்மீகக் கோணத்தில், இந்த காங்கிரசின் முடிவு ஏற்புடையதாகத் தெரியவில்லை.
காங்கிரஸின்
31 அமைச்சர்களில் 17 பேர்கள் (முதலமைச்சரின் சாமுண்டேஸ்வரி தொகுதி தோல்வி உட்பட) தோல்வியைத்
தழுவு உள்ளனர். இது பாதிக்கும் அதிகம். அத்துடன் 2013ல் வென்ற இடங்களான 122, இந்தத்
தேர்தலில் 78 ஆக சுருங்கி விட்டது – அதாவது 64% என்ற அளவில் பெரும் சரிவைச் சந்துள்ளது.
ஆனால், பா.ஜ.க.வோ 40 இடங்களிலிருந்து 104 இடங்களைப் பெற்றுள்ளது. அதாவது 38% அதிகம்.
ஓட்டு விகிதம் – காங்கிரஸ் – 38%, பா.ஜ.க. – 36% என்ற அளவில் உள்ளது.
இதன் மூலம் கர்நாடக
மக்கள் முந்தையை காங்கிரஸ் ஆட்சியை வெறுத்து, ஓட்டளித்துள்ளார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
ஆகையால் காங்கிரஸ் ஜே.டி.எஸ். கட்சிக்கு ஆதரவு அளித்தாலும், அதை ஜே.டி.எஸ். தார்மீக
ரீதியில் கணித்து, அதை ஏற்காமல், பா.ஜ.க. வுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தால், அது மக்களை
மதித்த செயலாக ஏற்கப்படும். ஆனால், ஜே.டி.எஸ். ‘பி.ஜே.பி. மதவாத கட்சி’ என்ற அடிப்படைக்
கொள்கையால் – முஸ்லீம்களின் ஆதரவை நம்பி இருப்பதால் – இது இப்போது ஏற்படவில்லை. ஆனால்,
இந்த நிலை நீடிக்காமல், அந்தக் கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணை அமையும் வாய்ப்பும் இருக்கிறது.
அதனால், கர்நாடக மக்களுக்கு நன்மை உண்டாகுமா? என்பதைக் காலம் தான் நிரூபிக்க வேண்டும்.
எடியூரப்பா
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததை முன் கூட்டியே தெரிந்து, ஓட்டெடுப்பிற்கு முன்பே
தமது முதல்வர் பதவையைத் துறந்ததை வாய்மை பாராட்டுகிறது. ஏனென்றால், அதனால் வரும் விளைவுகளான
– சில எம்.எல்.ஏ.க்கள் பதவி துறக்க வேண்டிய நிலை – அந்த இடங்களுக்குத் தேர்தல், இதனால்
உண்டாகும் அரசியல் காட்புணர்ச்சிகள் – ஆகியவைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அவர் வெற்றி
பெற்றாலும், கட்சி மாறி ஓட்டளித்தவர்களுக்கு பதவி, பணம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம்
ஆகியவைகளும் தவிர்க்கப்பட்டுள்ளன.
தற்போது
அமைய இருக்கும் முதல் அமைச்சர் குமாரசாமியின் காங்கிரஸ் கூட்டணை ஆட்சி கர்நாடக மக்களுக்கு
நல்லது செய்ய ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக.
Comments