Posts

Showing posts from April, 2018

ஶ்ரீ ராமஜென்மபூமி

Image
அயோத்தியா பிரச்சினையை இந்துக்களும் , முஸ்லீம்களும்   1990 ஆண்டிலேயே சுமுகமாக பேசி நல்லதீர்வை எட்டியபோது இடையில் புகுந்து இந்து , முஸ்லீம் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காக , முஸ்லீம்களைத்தூண்டிவிட்டு பிரச்சினையை பெரிதாக்கி , பெரும் கலவரங்களுக்கு காரணமாக இருந்தவர்கள் தேசவிரோதிகளான கம்யூனிஸ்ட்கள் -    என்று 90,95 களில்   தொல்லியல் துறை இணை ஆணையாளராக பணியாற்றிய K.K. முகம்மது தான் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார் . அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் பல்வேறு காலகட்டங்களில் , ஆய்வுகளை மேற்கொண்டு,   ராமர் கோயில் மீது தான் பாபர்மசூதி கட்டப்பட்டுள்ளது என முதன்முதலில் ஆதாரப்பூர்வமாக உலகிற்கு அறிவித்தவர் ஆர்க்கியோலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா இணை ஆணையாளராக பணியாற்றிய திரு   K.K. முகம்மது . இது தொடர்பான தகவல்கள்  K.K. முகம்மது மலையாளத்தில்   எழுதியுள்ள " ஞானென்ன   பாரதியன் "  ( ഞാനെണ ഭാരതിയൻ ) என்ற சுய சரிதை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது .   கேரளா மாநிலம் கோ...

ஒரு கைப்பிடி அரிசி

Image
சிருங்கேரியில் ஆதி சங்கரர் தங்கி இருக்கும் பொழுது, தன் தாயாரின் மரணம் நெருங்கி விட்டது என்று சொல்லி, உடனே தன் தபோ வலிமையால் காலடியில் வசிக்கும் தன் தாயாரின் பக்கத்தில் சென்றடைந்தார். தன் தாயாரின் தகனக் கிரிகைகள் முடிந்தவுடன் தாயாரின் மரணத்தை நினைவு கூர்ந்து, ஐந்து ஸ்லோகங்கள் இயற்றினார். இந்த ஐந்து பாக்களில் மட்டும் தான் கடவுளைப் பற்றியோ, தன் வேதாந்தக் கருத்துக்களையோ சொல்ல வில்லை என்பது இதன் சிறப்பாகும். ஸ்ந்நியாசம் வாங்கியதால், மகனாகத் தன் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யமுடியாது போய்விட்டதையும், தன் மனச்சாட்சி உறுத்துவதையும் தன் ஐந்து பாக்களிலும் மிக அருமையாக வர்ணித்திருக்கிறார். கடைசி வரியில் சொன்ன அவர் வாக்கியம் எவர் மனத்தையும் உருக்கும் என்பது திண்ணம்: மகனாகப் பிறந்த நான் என் தாய்க்குச் செய்ததெல்லாம் மரணத்தின் போது அவளது வாய்க்கு இட்ட ஒரு கைப்பிடி அரிசி மட்டுமே! ஐந்து பாக்களின் மொழி பெயர்ப்பு - தழுவலான மொழி பெயர்ப்பு - கீழே தரப்பட்டிருகிறது. இந்த ஐந்து பாக்கள் - மாத்ரு பஞ்சகம் என்ற தலைப்பில் ஆதி சங்கரால் இயற்றப்பட்டதாகும். 1. அன்னை ...

திண்ணைக் கச்சேரி

Image
பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம் பொதுஜனம்: சென்ற சில மாதங்களாக அறிவு ஜீவிகள், சிக்குலர் மேதாவிகள், காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவைகள் ஒன்றாக பிரச்சனைகளை தீவிரமாக ஆராயாமல், அரசியல் ஆதாயத்திற்கு போராட்டம் – ஊடகத்தில் கருத்துக்கள் என்று மிகவும் தீவிரமாகச் முஸ்லீம் சிறுமி கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் செயல்படுகிறார்கள். ஜம்மூவில் கதுவாவில் சமீபத்தில் எட்டு வயது பாக்கர்வால் என்ற நாடோடி. அந்தச் சிறுமி குதிரைகளை மேச்சல் செய்பவர். 2018 ஜனவரி 10-ல் மாலையில் குதிரையுடன் அந்தச் சிறுமி வீடு திரும்பாததால், ஜனவரி 12-ல் அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்ய, ஜனவரி 17-ம் தேதிதான் அந்தச் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டு பிரத பரிசோதனை செய்யப்பட்டதில், மயக்க மருந்து கொடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதை இந்துக்கள் செய்ததாகவும், அந்தச் சிறுமியை ஹிந்துக் கோயிலில் அடைத்து, கற்பழிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளதால், இது ‘ஹிந்து – முஸ்லீம்’ மத ரீதியான வழக்காகி, அது உலக அளவில் கண்டனங்களைத் தெரிவித்த வண்ணம் இருக்கின்றன. வாசகர்: இந்த ...