நெஞ்சு பொறுக்குதில்லையே! – பசியால் வாடிய ஆதிவாசி அடித்துக் கொலை



ஒரு கிலோ அரிசி திருடியதற்காக ஆதிவாசி 27 வயது வாலிபன் மாது அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளான். கேரளாவில் பாலக்காட்டிற்குப் பக்கத்தில் உள்ள அட்டபாடியில் உள்ள கடுகுமன்னா என்ற கிராமத்தில் உள்ள மளிகைக் கடையில் அரிசி திடினான் என்பதற்காக அந்த ஏழை ஆதிவாசி மாது 22-ம் தேதி பிப்ரவரி 2018 அன்று மிகவும் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு, கம்பால் அடிக்கப்பட்டு, தாகத்தால் தவித்த அவனுக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் நெடுந்தூரம் நடத்தியும் கொடுமைப்படுத்தி உள்ளனர். 

காட்டிலாகா அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து விட்டார்களா? என்பதும் தெரியவில்லை. ஏனென்றால், அந்தக் காட்டிற்குள் நுழைய அனுமதி வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

பாலக்காடு ஊரில் ஆட்டபாடியில் உள்ள கடுகுமன்னா ஆதிவாசி காலனியைச் சேர்ந்தவன் மாது. ஆட்டப்பாடி கேரளாவில் இருக்கும் ஒரு முக்கியமான ஆதிவாசி காலனியாகும். சரியான சத்துணவில்லாமலும், பட்டினியாலும் அங்குள்ள பல ஆதிவாசிக் குழந்தைகள் சமீப வருடங்களில் இறந்துள்ளார்கள். அங்குள்ள ஆதிவாசிகளின் மக்கள் தொகை சுமார் 30% அளவில் 1951-ல் உள்ள மக்கள் தொகையை விட குறைந்து விட்டது. 

பக்கத்தில் உள்ள சமவெளியில் குடியிருக்கும் கேரளமக்கள் ஆதிவாசிகளின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பாளர்கள் தான் மாதுவை அடித்துக் கொன்றுள்ளனர் என்று தெரிகிறது.

மாதுவின் மேல் மூன்று திருட்டு வழக்கு முன்பு பதிவாகி உள்ளது என்று, அவனைப் பிடிப்பதற்கு சிலர் அவன் வசிக்கும் காட்டிற்குள் சென்றுள்ளனர். அவனை அங்கு கண்டவுடன், அவன் கைகளைக் கட்டி, பலமணி நேரங்கள் அவனை காட்டிலேயே அடித்துத் துன்புறுத்தி உள்ளனர். பிறகு அவனை முக்காளி என்ற பஸ் நிறுத்தும் கொட்டகையில் அடைத்து வைத்துள்ளனர். அவனை பிறகு வெளியே இழுத்து, பொது மக்கள் முன்னிலையில் அவன் வைத்துள்ள பையைச் சோதனை போட்டதில், அதில் கொஞ்சம் அரிசி மற்றும் சில பொருட்கள் மட்டுமே இருந்துள்ளன.

மாதுவைக் காட்டிலிருந்து பிடித்துக் கொண்டு வந்தவர்களின் பெயர்கள்: கே. ஹுசைன் என்ற பாக்குலம் வியாபாரி, அப்துல் கரீம் என்ற முக்காலி வியாபாரி. இவர்களுடன் ஏ.பி.உமர், அப்துல் ரஹ்மான், அப்துல் லதீஃப், மனு, மதாசன் ஜோசப் ஆகியவர்கள் தான் அகாலி போலீஸ் ஜீப்பில் மாதுவை ஒரு மூட்டை அரிசையையும் அவன் திருடியதாக ஜீப்பில் தள்ளி ஏற்றி உள்ளனர்.

அகாலி போலீஸ் ஸ்டேஷனில் மாது வாந்தி எடுத்துள்ளான். அவனை அகாலி அரசாங்க மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே உணர்வு இழந்துள்ளான். டாக்டர்களும் மாது ஏற்கெனவே உயிர் இழந்து விட்டான் என்று சொல்லி விட்டார்கள். 

பிரேத பரிசோதனை அறிக்கையில், மாது மிகவும் கடுமையான உள் ரத்தக் கசிவினால் இறந்துள்ளான் என்று குறிப்பிட்டுள்ளது. மாதுவின் தலை, நெஞ்சு எலும்புகள், மார்பு ஆகியவைகளில் அடிபட்டதின் அடையாளங்கள் காணப்பட்டுள்ளன.      


மாதுவை அடித்துத் துன்புறுத்தும் போது, அதை உபைட் டியு என்ற முஸ்லீம் லீக்கின் மன்னார்காட் எம்.எல்.ஏ. என். ஷாம்ஷுடினின் உதவியாளன் செல்ஃபி எடுத்துள்ளான். மாது காட்டிலே அடிக்கப்படும் போது இவனும் இருந்துள்ளான். படித்தவன் – ஆனால் கருணை சிறிதும் இல்லாத ஜடம் அவன் என்று தான் சாடத் தோன்றுகிறது.   




வாசகர்களை இந்த மூன்று வீடியோக்களையும் தயவு செய்து பார்க்க வேண்டுகிறேன்:




இந்த வீடியோக்களைப் பார்க்கும் போது உங்கள் கண்கள் கண்ணீரால் குளமாகும் என்பது திண்ணம். இது உங்கள் மனத்தைப் பல நாட்கள் வாட்டும் என்பதும் என் கருத்து.

ஏன் இந்த அநியாயம்? அதுவும் ஏழையின் காப்பாளன் என்று மார்தட்டும் கம்யூனிஸ்ட்கள் ஆளும் கேரளாவிலா?

இதில் சம்பந்தப் பட்டவர்கள் கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் தொண்டர்கள் என்பதால், அறிவு ஜீவிகள் மனமுவந்து குரல் கொடுக்கத் தயங்குவதேன்?

ஓரு கிலோ அரிசி திருடியதற்கா மாது என்ற ஆதிவாசியை பல முஸ்லீம் தொண்டர்கள் கொலை செய்ய வேண்டும்?

நடு ரோட்டில் அந்த ஏழை அப்பாவியைக் காப்பாற்ற அந்தக் கூட்டத்தில் ஒரு மனிதாபியும் இல்லையே! ஏன், ஏன், ஏன்? – என்று மனம் வெறுத்துக் கேட்கத் தோன்றுகிறது.

உண்மையிலேயே இது நடந்து ஒரு வாரம் ஆகி விட்டது. அவன் இடுப்பில் கட்டியிருந்த கந்தத் துணியாலேயே கைகள் கட்டப்பட்டு பசியால் வாடும் அந்த ஏழை மாதுவின் அப்பாவி முகம் என்னை ஒவ்வொரு நாளும் வாட்டியது. கண்ணீர் சிந்த வைத்தது.

‘எதிர்ப்பையாவது பதிவு செய்ய ஏன் இந்தத் தாமதம்?’ என்று என் மனச் சாட்சி குத்திக் கொண்டே இருந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் – பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் முஸ்லீம்களாக இருந்தால், இந்திய ஊடகங்கள் ஒருதலைப் பட்சமாக மவுனம் சாதிப்பது மிகவும் மூர்க்கமாகத் கண்டிக்கத் தக்கது. அதுவும் இதில் அப்பாவி ஆதிவாசி ஒரு கிலோ அரிசி திருடியதற்காக அவனையே கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றுள்ளனர். இதற்கு எந்த பிரயச்சித்தமும் இல்லை.

‘எங்கள் மதம் கருணை மதம். ஏழைகளுக்குப் பிச்சை போடுவது குரான் சொல்லும் போதனை’ என்பவர்கள் ஏன் இப்படி கொலை வெறி கொண்டு வீதியிலே தாக்குகிறார்கள்? அதுவும் அப்பாவி பசியால் வாடும் ஏழை ஆதிவாசியை? அந்தக் கந்தல் துணியில் இருக்கும் மாதுவைப் பார்த்தால் யாருக்கும் அடிக்க மனம் வராதே? ஏன் உங்களுக்கு மட்டும் இந்த கொலை வெறி?

அந்த மாதுவின் இறப்பு அனைவரையும் விழிப்படையச் செய்ய வேண்டும். ஏழையின் கண்ணீர் ஏழேழு ஜென்மத்திற்கும் தொடர்ந்து ஊறு செய்யும் என்பது வெறும் பயமுறுத்துவதற்கு அல்ல. அது முற்றிலும் உண்மை.

மாதுவின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன். 

மாதுவின் ஆத்மா இந்தியாவின் இதயக் கொள்கையான ‘கருணையே கடவுள் ஆணை’ என்பதை ஒவ்வொருவரின் இதயத்திலும் விதைத்து, இனியும் இது போன்ற அநியாயங்கள் நிகழாமல் இருக்க உதவ வேண்டுகிறோம்.

இந்தியவே! விழித்திடு! காத்திடு! 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017