திராவிடக் கட்சித் தலைவர் ராமசாமிப் பெரியாருக்கு ஜெயகாந்தனின் மறுப்பு உரை

சத்தியமேவ ஜெயதே! பெரியாரின் பேச்சுக்கு மிகவும் ஆணித்தரமாகவும், அழுத்தமாகவும், மனத்தில் உறைக்கும் அளவுக்கு பெரியாரின் கடவுள் மறுப்பு, பிரமணத் துவேஷம் ஆகியவைகளை எதிர்த்து எழுத்தாளர் ஜெயகாந்தனின் உரை மிகவும் அற்புதம். அனைத்தும் பகுத்தறிவுவாதிகளாலும் எதிர்த்து வாதாட முடியாத அளவுக்கு சக்தி வாய்ந்த மேடைப் பேச்சு. அதுவும் பெரியார் முன்னிலையில் தி.க.தொண்டர்கள் கூடி இருக்கும் கூட்டத்தில் - அதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். ஜெயகாந்தனின் மேடைப் பேச்சு இத்துடன் இணைத்துள்ளோம். வாசகர்கள் அனைவரையும் தவறாமல் படிக்க வேண்டுகிறோம். பிராமணனுக்கு தைரியம் குறைவுதான். அதற்கு அவன் கடப்பிடிக்கும் சத்துவ குணமே காரணமாகும். ரஜஸ் குணமுள்ள சத்திரியர்களைத் தான் அவன் தன்னைக் காக்க நம்பி இருக்கிறான். இது பிராமணனின் குறையாகக் கொள்ள வேண்டியதில்லை. பிராமணர்களுக்குக் கேடயமாக பல அப்பிராமணர்கள் அவ்வப்போது கேடயமாக இருந்துள்ளார்கள். அவர்களில் ஒருவர் தான் எழுத்தாளர் ஜெயகாந்தன். திரு ஈ வே ரா முன்னிலையில் பேசியது – ஜெயகாந்தன் 1959-ல் என்று நினைக்கிறேன். திருச்சி தமிழ் எழுத...