காந்திஜியின் தனிச் செயலாளர் வெங்கட்ராம் கல்யாணம்:

வெங்கட்ராம் கல்யாணம் – 1922-வது வருடம் ஆகஸ்ட் 15-ல் பிறந்தவர் – இப்போது அவருக்கு வயது 95. அவர் மஹத்மா காந்தியின் தனிச் செயலாளராகப் பணி ஆற்றியவர். இந்தியா சுதந்திரம் பெற்ற தினத்தில் காந்திஜியுடன் இவரும் கல்கத்தாவிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கும் பெலியகாட்டா என்ற இடத்தில் தங்கி இருந்தனர். நேரு காந்தியை சுதந்திரத் தினத்தன்று டெல்லிக்கு வரும்படி அழைத்த போது, காந்திஜி சொன்னார்:’ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமை எனக்கு சுதந்திரத்தை விட மிகவும் முக்கியமானதாகும்.’ காந்திஜி பிளவுபடாத இந்தியாவையே விரும்பினார். ஆனால், நேருவும் – ஜின்னாவும் அவர்களின் திட்டப்படி இந்தியாவைப் பிளவு படுத்திவிட்டனர் என்று கல்யாணம் குற்றம் சாட்டுகிறார். அவர் மேலும் சொன்ன தகவல்கள்: கல்கத்தாவில் ‘நேரடி செயலில் இறங்கும் நாள்’ என்று 16-08.-1947 நாளை குறிப்பிட்டு, மொஹமத் ஜின்னா அழைப்பு விடுத்தார். அப்போது வங்காளத்தின் பிரதம மந்திரியாக ஹுசைன் ஷஹீட் சுஹ்ராவார்டி இருந்தார். அவர் எல்லா ஹிந்துக்களையும் சூரையாடும் படி உத்திரவு பிறப்பித்தார். இதனால், 10,000 பேர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் பெரும்பான்மையினர் இந்துக்...