இஸ்ரோவின் இமாலய வெற்றி


05-06-2017 – புதன் கிழமை இஸ்ரோவினால் ஜிஎஸ்எல்வி எம்கே 3 - டி1 (GSLV MkIII-D1) ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் டவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இது இந்தியாவின் இமாலய சாதனையாகும்.

இந்த ராட்சத ராக்கெட் சுமார் 3 டன் அதாவது 3,000 கிலோகிராமிற்கும் அதிகமான எடையுள்ள GSAT-19 என்ற தகவல் தொழில் நுட்ப சாட்டலைட்டை அதாவது செயற்கைக் கோளை விண் வெளியில் பூமியிலிருந்து சுமார் 36,000 கி.மீ. தூரத்தில் கொண்டு சென்று அதன் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தியது. இந்த ராக்கெட் 4 டன் அதாவது 4000 கிலோகிராம் வரையிலும் எடையுள்ள சாட்டலைட்டுகளைச் விண் வெளிக்குச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும். முன்பெல்லாம் இந்தியாவின் ராக்கெட்டினால் 2-3 டன் எடையுள்ள செயற்கைக் கோள்களைத்தான் விண்ணிற்கு அனுப்ப முடியும். ஆனால், இனிமேல் 4 டன் எடை வரையிலும் செயற்கைக் கோள்களை அனுப்பும் திறனை இந்தியா பெற்று விட்டது. இதன் மூலம். இந்தியா அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை அனுப்பும் திறன் கொண்ட உயர்மட்டக் குழுவில் 6-வது அங்கத்தினராக – அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா, ஜப்பான் ஆகிய தேச அங்கத்தினர்களுடன் இந்தியாவும் சேர்ந்து, புகழும், பலமும் பெற்றுத் திகழ்ந்துள்ளது.
இந்த ராக்கெட்டின் மொத்த எடையான 3 டன் என்பது 200 பெரிய யானைகளின் எடைக்குச் சமம். இந்த ராக்கெட் கடந்த 15 வருடங்களாக முயன்று சுமார் 400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியதாகும். திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ ஹைட்ரோஜன் ஆகியவற்றை எரிப்பொருளாக பயன்படுத்தி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதீத குறைவான எரிபொருளில் இயங்கும் எஞ்சினால் இந்த ராக்கெட் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டது என்பது இதன் சிறப்பு அம்சமாகும். மேலும், இந்த ராக்கெட் எதிர்காலத்தில், விண்வெளிக்கு இந்தியா மனிதர்களை அனுப்ப உதவக்கூடும்.  இஸ்ரோ இப்போதே மனிதர்களை அனுப்பும் விண்கலம் தயாராகி, அந்த மாதிரி விண்கலமும் 2014 ஆண்டு சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசை இஸ்ரோ 12,500 கோடி ரூபாய் இந்த மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு ஒதுக்கும் படி கேட்டுள்ளது. அந்தப் பணம் ஒதுக்கப்பட்டால், இன்னும் 7 வருடங்களில் இந்தியா மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தைச் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

ஜி.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட்டின் சிறப்பு அம்சம் இது தான்: திட,​​ திரவம் மற்றும் க்ரையோஜெனிக் (திரவமாக்கப்பட்ட வாயு) எரிபொருள் என மூன்று நிலைகளைக் கொண்டது. இதில் க்ரையோஜெனிக் திரவ எரிபொருள் நிலை தான் ராக்கெட்டை 36,000 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்வதில் பிரதான பங்கு கொள்கிறது.

க்ரையோஜெனிக் தொழில்நுட்பத்தை வழங்க முன் வந்த ரஷ்யாவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்தது அமெரிக்கா. அதன் விளைவாகவே இஸ்ரோ விஞ்ஞானிகள் 1995 முதல் க்ரையோஜெனிக் என்ஜினைத் தயாரிக்க இடைவிடாத முயற்சி மேற்கொண்டு,​​ அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இதனால், இந்திய விஞ்ஞானிகளின் திறன் உலக அரங்கில் போற்றப்பட்டு, இந்தியாவின் புகழ் திக்கெட்டும் பரவி உள்ளதை இங்கு குறிப்பிட வேண்டும்.

வாழ்க இந்திய விஞ்ஞானிகள்! வாழ்க பாரதம்! வாழ்க தேசியம்!

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017