பி.எஸ்.எடியுரப்பாவின் 10 கோடி ஊழலில் கோர்ட் தீர்ப்பு 2008

வருடம் நடந்த கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் பி . ஜே . பி . யை முதன் முதலாக ஆட்சி பீடத்தில் அமர்த்தியவர் என்ற பெருமை பி . எஸ் . எடியுரப்பாவிற்கு ஏற்பட்டு , அவரும் 30 மே 2008 முதன் மந்திரியாகப் பொறுப்பேற்றார் . ஆனால் , அவரது துரதிஷ்டம் சந்தோஷ் ஹெக்டே என்ற கர்நாடகாவின் லோகயுக்தா (2006- லிருந்து ஜூன் 2010 வரை பதவி வகித்தவர் ) மற்றும் அப்போதைய கர்நாடக கவர்னராக இருந்த எச் . ஆர் . பரத்வாஜ் ஆகிய இருவரின் மூலம் வந்தது . பங்களூர் மற்றும் ஷிமோகா ஆகிய இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக கனிவளச் சுரங்கம் தோண்ட அனுமதி வழங்கியது - நிலம் வாங்கியதில் முறைகேடு ஆகியவைகளை ஆய்வு செய்த அறிக்கையை ஏற்று பரத்வாஜும் எடியூரப்பாவின் மேல் வழக்குப் பதிவு செய்து , போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும் உத்திரவிட்டார் . அதனால் , எடியுரப்பா 15-10-2011 அன்று கைதி செய்யப்பட்டு , 23 நாட்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு , விசாரிக்கப்பட்டுள்ளார் . பி . ஜே . பி . யின் அப்போதைய மேலிடம் அத்வானியின் சொல்படி , எடியுரப்பாவைக் காப்பாற்ற முயலவில்லை . சந்தேஷ் ஹெக்டேயிடம் அத்வானிக்கு ஒரு தனி நம்பிக்கை உண்டு என்பதை இங்கு க...