Posts

Showing posts from February, 2017

ஜெயலலிதா ஆடிய ஆட்ட மென்ன?

(வாட்ஸ் ஆப் மூலம் கிடைத்த தகவலின் சுருக்கம்) ஒருவர் இறந்து விட்டால் அவரை புகழ வேண்டும் என்று எந்த விதியும் இல்லை! அவர் மறைந்து விட்டார் என்பதற்க்காக அவர் செய்த வரலாற்று பிழைகளை மறைத்து அவரை அளவுக்கு அதிகமாக புகழ்வ தும் தர்மம் இல்லை . ஆண் ஆதிக்க சமூகத்தில் ஒரு பெண் இந்த அளவிற்கு வந்தது , சாதித்தது! ஆண்கள் அவரிடம் அடிமை போல்  குனிந்தது! அதை எல்லா பெண்களும்  ரசித்தது! எல்லா பெண்களுக்கும் அவரை ஆதர்ச PERSONALITY யாக பார்த்ததும் உண்மையே! ஆனால் தன்னை விரும்பும் பெண் , இனம் படும் துன்பத்தை அவர் சரிவரப் புரிந்து கொண்டா வராக அவரை மதிப்பிட முடியவில்லை . தெருவுக்கு தெரு டாஸ்மாக் திறந்த தை எதிர்த்துப் போராடிய பெண்களை அடித்தது , சந்திரலேகா ஆசிட் வீச்சு , மூன்று பெண்கள் சொந்த கட்சிக்காரர் களால் பஸ்ஸில் வைத்து எரித்தது - ஆனால் அவர் இவைகள் எதற்கும் கவலை பட்டதும் இல்லை வருத்தபட்டதும் இல்லை . அனாலும் பெண் வாக்காளர்கள் ADMK விற்கு அதிகம் ? அதுதான் புரியாத புதிர் ! 2015 டிசம்பர் ஏற்பட்ட வெள்ள த்தில் நிவாரணப் பொருட்களை வினியோகம் செய்வதில் அம்மாவின் ஸ்டிக்கர் ஒட்டிய பிறகே...

குமாரசாமி தீர்ப்பின் கணக்கீட்டுக் குளறுபடி

Image
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் குமாரசாமி தீர்ப்பின் அஸ்திவாரமே இது தான் : ‘ கிருஷ்ணானந்த் அக்னி ஹோத்ரி என்பவரின் வழக்கில் , வருமானத்தை விட சொத்துக்கள் , 10% வரை கூடுதலாக இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்யலாம் ’ என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு உள்ளது . மேலும் , வருமானத்தை விட கூடுதலாக , 20% வரை சொத்து இருந்தால் , அதை அனுமதிக்கத் தக்க அளவாக கருதலாம் என்று ஆந்திர அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது . தற்போதைய பண வீக்கத்தை கருதி , 10 முதல் 20 சதவீதம் வரையிலான சொத்து குவிப்பை அனுமதிக்கத் தக்க அளவாக எடுத்துக் கொள்ளலாம் . இந்த வழக்கில் , குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்து குவிப்பு வருமானத்தை விட , 8.12% இருப்பதால் , அது அனுமதிக்கத் தக்க அளவுக்குள் இருக்கிறது . ஆகவே , குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெற தகுதியானவர்கள் . முக்கிய குற்றவாளி விடுதலை செய்யப்படும் போது , சிறிய பங்கு வகித்த மற்ற மூன்று பேரும் விடுதலை பெற தகுதியானர்கள் தான் . உச்ச நீதிமன்றம் கிருஷ்ணானந்த் அக்னி ஹோத்ரி வழக்கின் தீர்ப்பு இந்த வழக்கிற்குப் பொருந்தாது . எனவே , அந்த தீர்ப்பின் பலன்களை , இந்த...

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வெளிப்படுத்திய உள்ளக் குமுறல்கள்

Image
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வெளிப்படுத்திய உள்ளக் குமுறல்கள் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் , தங்கள் தீர்ப்புடன் ஏழு பக்கங்கள் அடங்கிய இணைப்புத் தீர்ப்பையும் வழங்கி சாதனை படைத்துள்ளனர் . அந்த இணைப்புத் தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இங்கு கொடுத்துள்ளோம் . ( முழு விபரம் தெரிய தலைப்பைச் சொடுக்கவும் .) Ø   இந்த வழக்கின் விசாரணையின் போது , எங்கள் மனதில் அமைதியுடன் அலைபாய்ந்து கொண்டிருந்த சில கருத்துக்களை இங்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் . அதனால் தான் , இந்த இணைப்புத் தீர்ப்பு . Ø   இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வாதங்கள் , ஆதாரங்கள் உள்ளிட்டவை , எவ்வளவு ஆழமாக திட்ட மிட்டு , மிகப் பெரிய அளவில் சொத்து குவித்ததுடன் , அவற்றை போலியான நிறுவனங்களின் பெயருக்கு மாற்றியுள்ளனர் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது . இது நம் சட்ட நடைமுறைகளை நீர்த்து போகும் வகையிலான திட்ட மிட்ட சதி . Ø   இவ்வாறு பெரும் சொத்தை மோசடி வழியில் சம்பாதிக்க , இந்த வழக்கில் செய்யப்பட்டுள்ள பல நவீன , புதுமை...

நீதியால் தண்டிக்கப்பட்ட ஊழல், அரசியலால் கோலோச்சும் கொடுமை!

Image
தமிழ் நாட்டு அரசிலும் , அரசியலிலும் ஊழல் என்பது உலகரிந்த உண்மை . இப்போது தான் முதல் முதலாக ஆட்சியில் ஊழல் செய்து வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததற்காக காலம் சென்ற ஜெயலலிதா , சசிகலா , இளவரசி , சுதாகரன் ஆகிய அனைவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா காலமான காரணத்தினால் , அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு , மற்ற மூவருக்கும் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் 2014, செப்டம்பர் மாதம் 27- ல் அளித்த தண்டனையான நான்கு ஆண்டுகள் சிறை - ஒவ்வொருவருக்கும் தலா 10 கோடி அபராதம் ஆகியவைகளை உறுதி செய்து 14- ம் தேதி பிப்ரவரி 2017 தீர்ப்பு வழங்கியது . ஜெயலலிதாவான முதல் குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை - 100 கோடி ரூபாய் அபராதம் என்று குன்ஹா விதித்த தீர்ப்பில் , சிறைத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் , அபராதத் தொகையை அவரது சொத்துக்களின் மூலம் கட்டவும் உச்ச நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்திருக்கிறது . ஆகையால் ஜெயலலிதா ‘ ஊழல் புரிந்துள்ளார் ; ஊழலை ஊக்கிவித்துள்ளார் ’ என்பதையும் உச்ச நீதிமன்றம் மிகவும் தீர்க்கமாக தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது ....