பெல்ஜியம் - யு.எஸ். - சவுதி அரேபியா நாடுகளில் மோடியின் அரசுப் பயணம் பற்றிய தொகுப்பு வாய்மை நிருபர் - பவித்திரன்

At Maalbek Metro Station, PM Narendramodi remembers India's Raghavendran Ganeshan & other victims of tragic attack

மார்ச் மாதம் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை மோடியின் அந்த 3 நாடுகளில் அரசுப் பயணம் முடிவானது. அந்த முன்று நாட்டின் பயணத்தில் முக்கிய நோக்கம்: பெல்ஜியம் நாட்டின் புருசெல்ஸ் நகரில் நடைபெறும் 13-வது இந்திய-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளல், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெறும் அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றல், சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் ஆட்சி செய்யும் ராஜ குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து இரு நாட்டு வர்த்தகம் மற்றும் இரு நாட்டு மக்களின் நல்வுறவை மேம்படுத்தல்.

மோடியின் இந்த வெளிநாட்டுப் பயணம் முடிவான பிறகு, மோடி செல்ல உள்ள பெல்ஜியம் நாட்டின் புருசெல்ஸ் நகரத்திலே 22-ம் தேதி அந்த நகர நேரப்படி காலை சுமார் 8 மணி அளவில் புருசெல்ஸ் நகர ஏர்போர்ட் இருக்கும் இடமான ஸவென்டெம்மில் இரண்டு மனித வெடிகுண்டுகள் - ஆணிகள் அடங்கிய வெடிகுண்டுகள் - அடுத்தடுத்து வெடித்தன. மூன்றாவது மனித வெடிகுண்டு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மூன்று பெட்டிகள் கொண்ட ரயிலில் மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடுப் பெட்டியில் வெடித்தது. மேலும் ஸ்வென்டெம் ஏர்போர்ட்டில் மூன்றாவது வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, அதை செயலிழக்கச் செய்தனர். இந்த வெடிகுண்டு தீவிரவாதிகளின் தாக்குதலில் 35 பேர்கள் - அதில் மூன்று மனித வெடிகுண்டு தீவிரவாதிகளும் அடங்கும் - சம்பவ இடத்திலேயே பலி ஆனார்கள். 300-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 62 பேர்களின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. ஏர்போர்டில் 17 பேர்களும், 14 பேர்கள் மெட்ரோ ஸ்டேஷனிலும், 4 பேர்கள் காயத்தால் ஆஸ்பத்திரியிலும் இறந்துள்ளனர். இதில் ராஹவேந்திர கணோசன் என்ற இன்போசிஸில் வேலை பார்க்கும் ஒரு இந்தியரும் அவர் காணாமற் போன பட்டியலில் இருந்து, பிறகு அவரது இறந்த உடல் அடையாளம் காணப்பட்டு, அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். இந்த மிகவும் துயரமான சம்பவத்தின் காரணமாக மோடியின் புருசெல்ஸ் பயணம் ரத்தாகும் என்றே பத்திரிகைச் செய்திகள் வந்தன. ஆனால், அதை யெல்லாம் பொய்யாக்கி, மோடியின் புருசெல்ஸ் பயணம் மிகவும் வெற்றிகரமாக அவரது அமைந்து விட்டது.  

India cherishes the strong relationship with EU. Held wide ranging talks with @eucopresident & @JunckerEU. 



Delighted to interact with the diaspora at the community programme. They are India's true 'Lok Doots'.

Audience at Brussels Expo Community Reception


புருசெல்ஸ் பயணத்தில் நிகழ்ந்த முக்கிய அம்சங்கள்:
*        பெல்ஜியம் தொழில் அதிபர்களுடன் சந்தித்து உரையாடல். குறிப்பாக இரத்தின வியாபாரிகளுடன் உரையாடியது.
*       
  தேவஸ்தால் ஆப்டிகல் டெலஸ்கோப் நைனிடாலில் உள்ள ARIES என்ற Aryabhata Research Institute of Observational SciencES உடன் பெல்ஜியம் உதவி மற்றும் தொழில் நுட்பத்துடன் இந்திய விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டு, அது ரிமோட் மூலம் புருசெல்ஸ்சில் பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மிச்சேல் - மோடி இருவரால் செயல்படுத்தப்பட்டது. இது ஒரு 18 மில்லியம் ஈரோ திட்டம். அதில் பெல்ஜியம் தொழிற் நுட்பத்துடன் 2 மில்லியன் ஈரோ உதவி உள்ளது.
*        
  தீவிர வாத தாக்குதல் நடந்து ஒரு வாரத்திற்குள் மோடி அதே இடத்திற்கு வந்து, பெல்ஜியம் மக்களின் துக்கத்தில் பங்குகொண்டு, அதே சமயத்தில்இந்தியா பெல்ஜியத்துடன் துணை நிற்கும்என்று ஆணித்தரமாக ஆறுதல் சொல்லி பெல்ஜியம் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து விட்டார்.

31st March: PM Narendramodi greets scientists from LIGO, who proved gravitational waves theory


1st Arpil: Standing together for nuclear security. PM @narendramodi joins leaders for the family photo at #NSS2016

மோடி வாஷிங்டன் டி.சி.யில் 31-ம் தேதி மார்ச் மற்றும் 1-ம் தேதி ஏப்ரல் என்று இரண்டு நாட்கள் செலவிட்டார். அங்கு அவர் சென்றதிற்கான முக்கிய காரணம் - அணு பாதுகாப்பு உச்சிமாநாட்டில் பங்குகொள்ளுவதற்காகத் தான்.

அணு பாதுகாப்பு உச்சிமாநாடு நடப்பதற்கு மூல காரண கர்த்தா யு.எஸ்.பிரிசிடெண்ட் ஒபாமாவாகும். அவர் தான் 2009-ம் ஆண்டு பிராக் நகரத்தில்அணு ஆயுத தீவிரவாதம் அகில உலக அளவில் அச்சுறுத்தும் ஒரு மிகப் பெரிய ஆபத்தாக உள்ளது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டு உள்ளதுஎன்று கூறி, அவரே 2010 ஆண்டு முதல் அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டை வாஷிங்டனில் கூட்டி, ‘அனைத்து அணுப் பொருட்களையும் பாதுகாப்பாக வைத்து, அணு தீவிரவாதம் நிகழாமல் தடுக்க வேண்டும்என்று அறிக்கையை முதலில் வெளியிட்டார். அந்த முதல் உச்சி மாநாட்டில் 47 தேசங்களும், 3 உலக நிருவனங்களும் பங்கேற்றன. பிறகு 53 தேசங்களும், 4 உலக நிருவனங்களும் 2012 ஆண்டு சியோலில் நடந்த இரண்டாவது உச்சி மாநாட்டில் பங்கேற்றன. மூன்றாவது உச்சி மாநாடு நெதர்லாந் நாட்டில் உள்ள ஹாக்கில் 2014 ஆண்டு நடந்தது. இப்போது 31-ம் மார்ச் - 1-ம் ஏப்ரல் இரண்டு நாட்கள் நடந்துள்ளன. சீனா பங்கேற்றாலும், இந்த உச்சி மாநாட்டை ரஷ்யா பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது. அதற்கு ரஷ்யாஉலக நிருவனங்களின் செயல்பாட்டினை வெளியாட்கள் மூலம் கட்டுப்பாடுகளை விதிப்பது விரும்பத்தகாத ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலையை உருவாக்கும் என்பதால் அதில் எங்களுக்கு உடன் பாடு இல்லை. வாஷிங்டன் தன்னை ஒரு பெரிய முக்கிய ஆளாக இந்த மாநாட்டில் செயல்பட முயல்வதாகவே நாங்கள் நம்புகிறோம். உலக அணு சக்தி நிறுவனம் இருக்கும் போது, அதனுடன் ஒத்துழைப்பதையே நாங்கள் விரும்புகிறோம்என்று காரணம் காட்டி உள்ளது. வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளும், .எஸ்..எஸ். தீவிரவாத அமைப்புகளிடம் அணு ஆயுதங்கள் கிடைக்காமல் பாதுகாப்பதும் இப்போது மிகவும் அவசியமாகி விட்டது.

இந்த மாநாட்டில் அணு ஆயுத தடுப்பு, அணுவால் ஏற்படும் மாசுக்கட்டுப்பாடு, அணு சக்தியை சமாதானப் பொருட்களை உருவாக்குவதற்குப் அனுமதித்தல், அணுக் கதிர்வீச்சை முற்றிலும் கட்டுப்படுத்தல், அணு ஆயுதங்கள் செய்யப் பயன்படும் அனைத்து அணுப்பொருட்களையும், அணு தொழிற்கூடங்களையும் கண்காணித்தல், மிகவும் சுத்திகரிக்கப்பட்ட யுரோனியம் மற்றும் புளுடோனியம் ஆகியவைகளில் அதிகமான கட்டுப்பாடுகளும், அவைகளின் பயன்பாட்டினை குறைப்பது ஆகிய அம்சங்களில் அனைத்து நாடுகளில் ஒப்புதலும் பெறப்பட்டன.

அணு பாதுகாப்பிற்கு இந்தியாவின் சார்பில் யு.எஸ். டாலர் 1 மில்லியன் நிதியை அளிக்க ஒப்புக்கொண்டது. மேலும், அணு தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் உலகளாவிய அமைப்பு மாநாட்டை 2017 ஆண்டு நடத்த இந்தியா முன் வந்துள்ளது.

மோடியின் இந்தப் பயணத்தில் ஒரு முக்கிய அம்சம் இந்தியாவின் அணு சக்தித் துறை (DAE - Department of Atomic Energy) யு.எஸ். தேசிய அறிவியல் பவுண்டேஷனுடன் ( NSF - National Science Foundation) லைகோ என்று அழைக்கப்படும் சீரொளி குறுக்கீட்டுமானி ஈர்ப்பலை ஆய்வகம் (LIGO - Laser Interferometer Gravitational-wave Observatory) அமைக்க ஒப்பந்தம் மோடியின் முன்னிலையில் வாஷிங்டனில் கைஎழுத்தானது. இதற்கு இந்தியாவின் முதலீட்டுத் தொகை $ 1200 கோடி ஆகும். இந்தத் திட்டம் 2023 ஆண்டு செயல்பாட்டுக்க்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. புவி ஈர்ப்பு அலையைக் கண்காணிக்கும் கருவியை இந்தியாவில் அமைப்பதால் இந்திய விஞ்ஞானிகளால் ஈர்ப்பு அலைகளின் மூலத்தை துல்லியமாக அறிந்து, ஆராய ஏதுவாகும்

2nd April: Hijab meets HTML: Scenes from the All Women TCS' IT Centre in Riyadh




3rd April: In a special gesture, PM Narendra Modi was conferred Saudi Arabia's highest civilian honour, the King Abdulaziz Sash. 


இரண்டு நாட்கள் - ஏப்ரல் 2 & 3 - சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் மோடி தங்கி, பல தலைவர்கள், தொழில் அதிபர்கள், அந்த நாட்டின் அரசர்கள், இந்திய வம்சாவளிகள், எல் & டி தொழிலாளிகள், டி.சி.எஸ். தகவல் தொழில் நுற்பத்தில் வேலை செய்யும் பர்தா அணிந்த சவுதிப் பெண் தொழிலாளிகள் என்று பலரையும் சந்தித்து, உரையாடி வெற்றிகரமாக தமது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்து சேர்ந்தார்.

சவுதி அரேபியா இஸ்லாமின் சுன்னிப் பிரிவைச் சேர்ந்தது. பாகிஸ்தானிலும் இந்தச் சுன்னிப் பிரிவினர் அதிகம். இரான் நாட்டில் ஷியா என்ற இஸ்லாமியப் பிரிவினர் அதிகம். சவுதி அரேபியாவுக்கும் இரான் நாட்டிற்கும் உறவு சுமூகமாக இல்லை. ஆனால் சவுதி அரேபியா பாகிஸ்தானுடன் சுமூக உறவு கொண்டாடுகிறது. முஸ்லீம்களின் மிகவும் முக்கிய புன்னிய இரண்டு மசூதிகளான மெக்கா, மெதினா சவுதி அரேபியாவில் தான் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான இந்து முஸ்லீம்கள் ஒவ்வொரு வருடமும் இந்த இரு புன்னிய மசூதிகளைத் தரிசிக்க சவுதி அரேபியாவிற்கு பயணிக்கின்றனர்.

சவுதி அரேபியாவில் வாஹாபிசம் என்ற இஸ்லாம் மதக் கோட்பாடுகளை மிகவும் தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முஸ்லீம்கள் சமாதிகளுக்கு அஞ்சலி செய்வது கூட சிலைவழிபாடாகவே கருதி, அதையும் எதிர்ப்பவர்கள். அவர்களை பின்லேடன் போன்ற தீவிரவாத கருத்துக் கொண்டவர்கள் என்றும் அவர்களால் தான் முஸ்லீம்கள் தீவிரவாத இயக்கத்தில் முஸ்லீம்கள் சேர்ந்து விடுகிறார்கள் என்றும் பரவலான கருத்து இருக்கிறது. மேலும்,சவுதி அரேபிய வாஹாபிசம் கொள்கைப் பிரிவினர் தான் பாகிஸ்தானில் தீவிரவாதத்திற்கு பலவிதங்களிலும் உதவுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், வஹாபியர்களின் எண்ணிக்கை பெர்சியன் வளைகுடாப் பகுதியில் சுமார் 5 மில்லியன் என்று கணக்கிடப்படுகிறது. அங்கு சுன்னி இனத்தவர் சுமார் 29 மில்லியனும், ஷியாப் பிரிவினர் சுமார் 89 மில்லியனும் இருக்கின்றனர்.

வஹாபிஸம் என்பதை உலகத் தீவிரவாதத்தின் ஊற்று என்றும், அது தான் ஐ.எஸ்..எஸ். தீவிரவாதம் வளருவதற்கு மூல காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த இயக்கம் முஸ்லீம் சமூகத்தினரிடையே பகை உணர்வைத் தூண்டி, ஒற்றுமையையும், நாட்டின் அமைதியையும் சீர்குலைப்பதாக முஸ்லீம் நாடுகளே கருதுகின்றனர். என்றாலும் இந்த இயக்கத்திற்கு சவுதி அரேபியாவில் இருக்கும் சில முஸ்லீம் மதவாதிகள் முக்கியமாக பாகிஸ்தான் முஸ்லீம்களுக்கு இந்த வஹாபிஸ இயக்கம் பரவ பலவிதத்திலும் - பணம், பொருள், ஆட்கள், தளவாடங்கள் - என்று உதவுவதாக உளவுத்துறையினர் உலக அளவில் கருதிகின்றனர்.

34 முஸ்லீம் தேசங்களின் கூட்டணிக்கு சவுதி அரேபியாவின் ரியாத் தான் தலைமைப் பீடம் என்பதும், அதில் பாகிஸ்தான் முக்கிய அங்கம் வகிக்கும் நாடு என்பதையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மோடி தீண்டத்தகாத தலைவராக இருந்த நிலை இந்திய மக்கள் அவரை தங்களது பிரதம மந்திரியாக தேர்தலில் வெற்றி அடையச் செய்தவுடன் மோடி உலக அரங்கில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிவிடத் தொடங்கி விட்டார். அதன் எதிரொலியால் பல அண்டை முஸ்லீம் நாடுகள் - சிறியதும் பெரியதும் - இந்தியாவுடன் நல்லுரைவையும், வர்த்தக உறவையும், மக்கள் தொடர்பையும் மேம்படுத்தியும், விரிவுபடுத்தியும், சுமூக அரசியல் நிலைப்பாட்டையும் ஏற்படுத்த விழைகின்றன. ‘முன்னேற்றம், துரித முன்னேற்றம், அனைத்து துறையிலும் முன்னேற்றம்என்ற மோடியின் சூளுரை ஒரு கோஷமாக  இல்லாமல், செயலில் இறங்கி இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்த 24X7 மணி நேரமும் மோடி உழைப்பதைப் பார்த்து வியந்து பாராட்டி பல முஸ்லீம் நாடுகளும் நேசக் கரம் நீட்டிப் பாராட்டுகின்றன.

 மோடி சவுதி அரேபியாவிற்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பாக பல முஸ்லீம் தீவிர வாத இயக்கங்களையும் தடை செய்து உத்திரவு பிறப்பித்து உள்ளது. இதில் காஷ்மீர் தீவிரவாத இயக்கமான லக்ஷர்--தைபாவும் அடங்கும். இது மோடி அந்த நாட்டிற்கு விஜயம் செய்வதற்கு முன்பே அவருக்கு அளித்த பரிசாகவே கருத வேண்டும்.

சவுதி அரசும் - இந்திய அரசும் ஒன்றாக வெளியிட்ட கூட்டு அறிக்கை இரண்டு நாடுகளும் தீவிரவாத அமைப்புகளை வேரோடு களைய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்ற வாசகங்கள் பாகிஸ்தானைக் குறிவைத்துச் சொல்லப்படாவிடினும், இந்த கூட்டு அறிக்கை அகில உலக அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. இது மோடி அரசுக்குக் கிடைத்த ஒரு மலர்க்கீரீடம் என்று சொன்னால் அது மிகையாகாது.

கூட்டு அறிக்கையின் சுருக்கமான வாசங்கள்:
*      தீவிரவாதத்தை தங்கள் பூமியிலிருந்து செயல்படுவதை அனைத்து நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும்.
*      தங்கள் நாட்டில் இருந்து மற்ற நாட்டினருக்கு எதிராகச் செயல்படும் அனைத்து தீவிர அமைப்புகளை அழிக்க வேண்டும். தீவிரவாத அமைப்புகளின் கட்டுமானங்கள், நிதி உதவிகள் ஆகியவைகள் நாட்டில் இருப்பின் அவைகள் அடியோடு ஒழிக்கப்படவேண்டும்.
*      தீவிரவாத்த்தில் ஈடுபடுவோர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்.

இதை எல்லாம் விட மற்ற முஸ்லீம் நாடுகளை ஆச்சரியப்பட வைத்த சில சம்பவங்கள் மோடியின் விஜயத்தில் நடந்தது, இந்தியாவிற்குக் கிடைத்த மாபெரும் பெருமை என்று உலகமே பாராட்டுகிறது.

இதில் குறிப்பிட வேண்டிய முதல் சம்பவம், சவுதி அரேபியாவின் மிகச் சிறந்த விருதான - அரசர் அபுலாசிஸ் ஷாஸ் என்ற பட்டம் கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டதாகும்.

 இரண்டாவது சம்பவம்: பர்தா அணிந்த பெண்கள் மட்டுமே பணிபுரியும் டி.சி.எஸ்.நிறுவனத்தை மோடி வருகையின் போது அவர்கள்மோடி .. மோடிஎன்று கோஷங்களை எழுப்பியும், ‘பாரத் மாதாக்கி ஜேஎன்று குரல் எழுப்பி அவரை வரவேற்ற விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அந்த நிறுவனத்து முஸ்லீம் பெண்களில் 80% சவுதிக் குடிமக்கள் என்பதை நினைவு கூறவேண்டும். அங்கு மிகுந்த கட்டுப்பாடுகள் உண்டு. ஏன், அவர்களின் அடையாள அட்டையிலும் அவர்கள் போட்டோ இடம் பெறாது. பயோ மெட்ரிக் முறையில் தான் அவர்களை அடையாளம் காணவேண்டும். அப்படிப்பட்ட கடுமையான கட்டுப்பாட்டில் உள்ள முஸ்லீம் கோஷாப் பெண்களின்பாரத் மாதாக்கி ஜேஎன்பதை இந்தியா மிகவும் பெருமையோடு அவர்களைப் பாராட்டுகிறது.

அங்குள்ள அறிவிப்பு பலகையில் மோடி தன் கை எழுத்திட்டு எழுதிய வாசகம்: மாத்ரு தேவோ பவ!

மூன்றாவது சம்பவம்: எல்.& டி. ஊழியர்களைச் சந்தித்து, உரையாடி, செல்ஃபீ போட்டோக்கள் எடுத்து, அவர்களுடன் சிற்றுண்டி அருந்தி ஒரு பெரிய சாதனையையே நிகழ்த்தி விட்டார். அந்தச் சமயத்தில் மோடி, இன்னுமொரு 24X7 கால் செண்டர் அமைக்கப்படும் என்றார். வேலை தேடி வருபவர்களுக்கு உதவியாக - அவர்கள் ஏமாற்றப்படக் கூடாது என்ற நிலையில் ‘E-Migrate’  என்ற வேலை வாய்ப்புத் திட்டம் வெகு விரைவில் தொடங்கப்படும் என்றார்.

சவுதி மன்னருக்கு கேரளாவில் உள்ள திருசூர் சேரமான் ஜிம்மா மசூதியின் தங்க மூலாம் பூசிய மாதிரி உருவ வடிவத்தைப் பரிசாக அளித்தார்.

மோடி ரியாத்தை விட்டு விடைபெறும் தருணத்தில் சர்வ வல்லமை பொருந்திய சவுதி மன்னரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து ஒரு கோரிக்கையை அவர் முன் சமர்ப்பித்தார். ‘சின்ன குற்றங்களுக்காக சிறையில் வாடும் இந்தியக் குடிமக்களை கருணை கூர்ந்து அவர்களை விடுதலை செய்யவேண்டுகிறேன்’. உடனே மன்னரும்ஒரு குழு அமைத்து, அவர்களின் குற்ற வழக்குகள் கருணை உள்ளோத்தோடு பரிசீலிக்கப்படும்என்று உறுதி அளித்துள்ளார். இந்த மோடியின் மனிதாபச் செயல் என் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது.    

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017