ஸ்ரீ ஸாயி ஸத் சரித்திரம்


ஸ்ரீ ஸாயி ஸத் சரித்திரம்
அல்லது
ஸ்ரீ ஸாயிபாபாவின் அற்புத வாழ்க்கையும் உபதேசங்களும்

காலஞ்சென்ற ஹேமாட்பந்த் என்னும் பரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர் அவர்களின் மராட்டிய மூலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. ஆங்கில மொழிபெயர்ப்பு: நாகேஷ் வாசுதேவ் குணாஜி தமிழாக்கம் - சொக்கலிங்கம் சுப்ரமணியன், B.E. GL ஹவுஸ், 5/8C.  சீத்தாராம் நகர், சாக்கோட்டை Post
கும்பகோணம், Pin - 612 401 (Phone oA35/2414330)
பிரசுரிப்பாளர்கள் : (புத்தகம் கிடைக்குமிடம்)
எக்ஸிகியூடிவ் ஆபிஸ்ர், பூரீ ஸாயிபாபா சன்ஸ்தான்,
சீர்டி - 423 109, அகமத்நகர் ஜில்லா, மகாராஷ்ட்ரா.
போன் : 02423:255175
பூரீ லாயிபாபா சன்ஸ்தான், சீர்டி லாயி நிகேதன்,
804-8, டாக்டர். அம்பேத்கர் ரோடு, தாதர்,
மும்பை - 400 014 (மகாராஷ்டிரா)
போன் : 24186556
  
7th Edition - 2004  - 10,000 Copies
Rs.35/-
Mr. D.M. SUKTHANKAR
Chairman, Shri Sai Baba Sansihan, Shiidi, Sai Niketar,
804-B, Dr. Ambedkar Road, Dadar, Mumbai - 400 014.
காபிரைட் : ஸ்ரீ ஸாயிபாபா சன்ஸ்தான், சீர்டி
Printed by : Anil Apporv Printers & Mfrs. Pvt. Ltd. 759/74,

Prabhat Road, Pune-411 004.




சமர்ப்பணம்

அன்புடனும், பக்தியுடனும் யாரொருவர் எனக்கு ஓர் இலை, ஒரு மலர், ஒரு பழம் அல்லது தண்ணீரை சமர்ப்பிக்கிறார்களோஅந்தத் தூய்மையான தன்னடக்க முடையவருடைய அன்புக் காணிக்கயைானது ஆர்வத்துடனும், தாமதமின்றியும் என்னால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதை IX : 26.


அந்தர்யாமியாய் விளங்குகின்ற ஸ்ரீ ஸாயிபாபாவுக்கு 
இப்பணியினையும் என்னையும் சமர்ப்பிக்கிறேன்.


பொருளடக்கம்

அத்தியாயம்

தமிழ்ப் பதிப்பின் முன்னுரை (மொழிபெயர்ப்பாளருடையது)
மொழி பெயர்ப்பாளரின் முன்னுரை (இரண்டாம் பதிப்பு)
          
1. கோதுமை மாவு அரைத்த அற்புத நிகழ்ச்சி நமஸ்காரங்கள் -
கோதுமை மாவு அரைத்த நிகழ்ச்சியும், அதன் தத்துவ உட்கருத்தும்
                                                          
2. இப்பணியைச் செய்வதன் நோக்கம் - இஃதை மேற் கொள்வதில் உள்ள திறமையின்மையும், துணிவின்மையும் - கார சார விவாதம் குறிப்பிடக் கூடியதும், முனிவருடைய பட்டமுமான "ஹேமாட்பந்தை" வழங்குதலும் - குருவின் அவசியம்                                                          

3. ஸாயிபாபாவின் அனுமதியும், வாக்குறுதியும் அடியார்க்கு
இடப்பட்ட திருப்பணிகள் - பாபாவின் நிகழ்ச்சிகள் வழிகாட்டும்
விளக்குகள் அவரின் தாயன்பு - ரோஹிலாவின் கதை -
அவரின் சுவையும் அமுதமுமான மொழிகள்  
                      
4. சீர்டிக்கு லாயிபாபாவின் முதல் விஜயம் ஞானியின்
வருகை - சீர்டி ஒரு புண்ணிய தீர்த்தம் ஸாயிபாபாவின்
தோற்றம் - கெளலிபுவாவின் கருத்து - விட்டலின் பிரசன்னம்  -
க்ஷீர்ஸாகரின் கதை - பிரயாகையில் தாஸ்கணுவின் குளியல் -
ஸாயிபாபாவின் அயோனி ஜன்மமும், அவரின் முதல்
சீர்டி விஜயமும் -மூன்று சத்திரங்கள்  

5. சாந்த்படீலின் கல்யாண கோஷ்டியுடன் பாபாவின் வருகை -
வரவேற்கப்பட்டு 'ஸாயி' என அழைக்கப்படுதல் - மற்ற
ஞானிகளுடன் தொடர்பு - அவருடைய உடையும்
அன்றாட நிகழ்ச்சி நியதிகளும் -- பாதுகைகளின் கதை -
மொஹித்தினிடம் மல்யுத்தப் பயிற்சியும், வாழ்க்கையில்
மாற்றமும் - தண்ணீரால் விளக்கெரித்தல் - போலி குரு ஜவஹர் அலி                 

6. ஸ்ரீராம நவமித் திருவிழாவும், மசூதி ரிப்பேர்களும் - குருவின் கை தீண்டலினால் ஏற்படும் பயன் - ஸ்ரீராம நவமித் திருவிழா - அதன் ஆரம்பம், மாறுதல்கள் முதலியன - மசூதி ரிப்பேர்கள்.                                                          

7. வியக்கத்தகு அவதாரம் - ஸாயிபாபாவின் குணாதிசயங்கள் -
அவரின் யோக சாதனைகள் - அவரின் எங்குநிறை தன்மை -
குஷ்டரோக அடியவனின் சேவை - குழந்தை காபர்டேயின் பிளேக் வியாதி -பண்டரீபுரத்துக்குச் செல்லல்.                         

8. மானிடப் பிறவியின் சிறப்பு ஸாயிபாபா உணவுப் பிச்சை யெடுத்தல் - பாயஜாபாயியின் சேவை - ஸாயிபாபாவின் படுக்கை - குசால் சந்திடம் அவருக்கு உள்ள பிரேமை.                                                           

9. விடைபெறும்போது லாயிபாபாவின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிதல் - கீழ்ப்படியாதிருத்தலின் விளைவு - சில நிகழ்ச்சிகள் - பிச்சை எடுப்பதும் அதன் அவசியமும் - பக்தரின் தர்கட் குடும்பத்தின் அனுபவம் - பாபா எவ்வாறு திருப்தியுடன் உண்பிக்கப்பட்டார்.                                             

10. ஸாயிபாபாவின் வாழ்க்கை நடைமுறை - அவர்படுக்கும் பலகை - சீர்டியில் அவரின் வாசம் - அவரின் அறிவுரைகள் - அவரின் பணிவு - மிகவும் எளிய வழி                                 

11. சகுணப் பிரம்மமாக ஸாயி - டாக்டர் பண்டித்தின் வழிபாடு - ஹாஜி சிதிக்ஃபால்கே - ஐம் பூதங்களின் மேல் பாபாவின் கட்டுப்பாடு.                                                

12. ஸாயி லீலைகள் - (1) காகாமஹாஜனி, (2) வக்கீல் துமால்,
(3) திருமதி. நிமோண்கர், (4) முலே சாஸ்திரி, 5) ஒரு டாக்டர் ஆகியோரின் அனுபவங்கள்                                 

13. அதிகமான ஸாயி லீலைகள் - வியாதிகள் குணமாக்கப்படுதல்(1) பீமாஜி பாடில் (2) பாலா சிம்பி, (3) பாபுஸாஹேப் புட்டி(4) ஆலந்திசுவாமி, (5) காகாம ஹாஜனி, (6) ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த்                                                               
14. நாந்தேடைச் சேர்ந்த ரத்தன்ஜீ வாடியா - மெளலி ஸாஹேப் முனிவர் - தக்ஷணை சாஸ்திரம் - மீமாம்ஸ்ஸை.       
                                                                         
15. நாரத இசை முறை - திரு. சோல்கரின் சர்க்கரை இல்லாத தேநீர் - இரண்டு பல்லிகள்     
                                 
16- 17 துரித பிரம்ம ஞானம்                                                
18-19 ஹேமாட்பந்த் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார் - திருவாளர் ஸாடே, திருமதி தேச்முக்கின் ஊக்குவித்தல் - உபதேச வகைகள் அவதூறு பேசுவது பற்றியும், உழைப்புக்கு ஊதியம் கொடுப்பது பற்றியும் போதனைகள்  
                                                           
20. தாஸ்கணுவின் பிரச்சனை காகாவின் வேலைக்காரப்
பெண்ணால் தீர்ந்தது                                                   

21. (1) W.H. டா கூர், (2) அனந்தராவ் பாடண்கர், (3) பண்டரீபுரத்து வக்கீல் ஆகியோரின் கதைகள்                                                                                   

22. பாம்புக்கடியிலிருந்து மீட்புதலி - 1) பாலாஸாஹேப் மிரீகர்,
(2) பாபுஸாஹேப் புட்டி, 3) அமிர் சக்கர் (4) ஹேமாட்பந்த் -
பாம்புகளைக் கொல்வதைப் பற்றிப் பாபாவின் கருத்து.                                                       

23. யோகமும், வெங்காயமும் - பாம்புக் கடியினின்று சாமா
குணமாக்கப்படுதல் - வாந்தி பேதியின் (காலரா) கட்டளைகள்
மீறப்பட்டன - குரு பக்திக்குக் கடுமையான பரிசோதனை                                                     

24. பாபாவின் தமாஷும் வேடிக்கையும் - சனக் லீலை
(1) ஹேமாட்பந்த், (2) ஸ்தைாமர், (3) அண்ணா சீஞ்சணீகரும் மாவசிபாயியும்.      

25. அஹமத் நகர் தாமு அண்ணா - (1) வியாபார விவகாரம்     (2) மாம்பழ லீலை.                                             
                                                                               
26. (1) பக்தபந்த், (2) ஹரிச்சந்திர பிதலே, (3) கோபால் ஆம்ப்டேகர் ஆகியோரின் கதைகள்.                                    
27. விஷ்ணு லஹஸ்ரநாமம். பாகவதம் இவைகளைக் கொடுத்து அனுகூலம் செய்தல் - தீக்ஷித்தின் விட்டல் காட்சி - கீதா ரஹஸ்யம் - காபர்டே                                 

28. சீர்டிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக் குருவிகள் - (1) லக்மிசந்த்,     (2) பர்ஹாண்பூர் மாது, (3) மேகா.                            

29. (1) சென்னை பஜனை சங்கம், (2) தெண்டுல்கர் (தகப்பனாரும் மகனும்), (3) டாக்டர் கேப்டன் ஹாடே, (4) வாமன் நார்வேகர் ஆகியோரின் கதைகள்.                                                                 
30. சீர்டிக்கு இழுக்கப்பட்ட (1) வணியைச் சேர்ந்த காகாஜி வைத்யா, (2) பம்பாயைச் சேர்ந்த பஞ்சாபி ராம்லால்

31. (1) சந்நியாசி விஜயானந்த், (2) பாலாராம் மான்கர், (3) நூல்கர், (4) மேகா (5) புலி இவர்களெல்லாம் பாபாவின் முன்னிலையில் உயிர் நீத்தல்.                                                               
32. குரு - கடவுள் தேவை - பட்டினி அங்கீகரிக்கப் படவில்லை.                        
33. உதியின் பெருமை - தேள் கடி - பிளேக் வியாதிகள்
குணமாக்கப்படுதல் - ஜாம் நேர் அற்புதம் - நாராயண்ராவின்
வியாதி - பாலாபுவாஸூதார் - அப்பா ஸாஹேப் குல்கர்ணி,
ஹரிபாவ் கர்ணிக்.                                                 

34. உதியின் பெருமை (தொடர்ச்சி) (1) டாக்டரின் சகோதரியின் மகன், (2) டாக்டர் பிள்ளை, (3) சாமாவின் மைத்துனி, (4) ஈரானியப் பெண், (5) ஹர்தா கனவான், (6) பம்பாய்ப் பெண்மணி.                                           

35. சோதிக்கப்பட்டுப் போதாக்குறை ஏதுமில்லை எனக் கண்டுணர்தல் - காகா மஹாஜனியின் நண்பரும், எஜமானரும் - பாந்த்ராகாரரின் தூக்கமின்மை வியாதி - பாலாஜி பாடில் நெவாஸ்கர்.                                     

36. (1) இரண்டு கோவா கனவான்கள், (2) திருமதி. ஒளரங்காபாத்கர் ஆகியோரின் அற்புதக் கதைகள்.                                                                                                 
37. சாவடிஊர்வலம்                                                         
38. பாபாவின் ஹண்டி - கோவிலை மதிக்காதிருத்தல் - காலா அல்லது கூட்டுக் கலவை - ஒரு கிண்ணம் மோர்.                                                                                      

39. 50 பாபாவின் ஸ்மஸ்கிருத ஞானம், கீதையின் ஒரு ஸ்லோகத்திற்கு பாபாவின் பொருள் விளக்கம் - சமாதி மந்திர் கட்டுதல்.                                                                    

40. பாபாவின் கதைகள் (1) திருமதி. தேவ்வின் உத்யாபன
விழாவிற்கு ஒரு சந்நியாசிபோல் மற்ற இருவருடன் செல்லுதல் (2) ஒரு சித்திர ரூபத்தில் ஹேமாட்பந்தின் வீட்டுக்குச் செல்லுதல்.
                                                       
41. சித்திரத்தின் கதை - கந்தல் திருடுதலும் ஞானேச்வரி பாராயணமும்                                    

42. பாபா மஹா சமாதியடைதல் - முன்பாகவே உணர்த்திய குறிப்பு - ராமச்சந்திர தாதா பாடில், தாத்யா கோதே பாடீல் இவர்கள் மரணம் தவிர்த்தல்- லக்ஷ்மிபாய் சிந்தேவுக்கு தர்மம் செய்தல் - கடைசி நேரம்.                                                
43-44. பாபா மஹா சமாதியடைதல் (தொடர்ச்சி) ஏற்பாடுகள் -
சமாதி மந்திர் கோவில் - செங்கல் உடைதல் - 72 மணி நேர சமாதி - ஜோக்(G)கின் துறவு, - பாபாவின் அமுத மொழிகள்.                                                              

45. காகா ஸாஹேப்பின் ஐயமும் ஆனந்தராவ் கண்ட காட்சியும்மரப்பலகை பாபாவின் படுக்கைக்கானது பகத்தினுடையது அல்ல.
                                                        
46. பாபாவின் கயா பயணம் - ஆடுகளின் கதை.           

47. பாபாவின் பூர்வஜென்ம ஞாபகங்கள் - வீரமபத்ரப்பா,
சனபஸப்பா (பாம்பு, தவளை) இவர்களின் கதை 
                       
48. அடியவர்களின் அல்லலை அகற்றுதல் - (1) சேவடே,
(2) சபட்னேகர் ஆகியோரின் கதைகள்
                    
49. (1) ஹரி கனோபா, (2) ஸோமதேவ் ஸ்வாமி, (3) நானாஸாஹேப் சாந்தோர்கர் ஆகியோரின் கதைகள்

50. (1) காகாஸாஹேப் தீக்ஷீத், (2) ஸ்ரீ தேம்பே ஸ்வாமி, (3) பாலாராம் துரந்தர் ஆகியோரின் கதைகள்.  
                         
முடிவுரை                                                

ஆரத்தி                                                   

சிர்டி லாயிபாபா அஷ்டோத்தர சத நாமாவளி .

 ஒம்
ஸ்ரீ ஸாயிராம்




தமிழ்ப் பதிப்பின் முன்னுரை - (முதற் பதிப்பு)

1964-ம் ஆண்டு முதல் கோயமுத்துர் ஸ்ரீ நாகஸாயி மந்திருக்கு
அடிக்கடி செல்லும் பாக்கியம் பெற்றிருந்தேன். சீர்டி ஸாயிபாபா
அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை அறியவிழையும் தூண்டுதலால் அப்போது அங்கு இருந்த திரு. சாரி அவர்களிடமிருந்து ஸ்ரீ ஸாயி ஸ்த் சரித்திரம் என்னும் நூலின்  ஆங்கிலப் பதிப்பை வாங்கிப் படித்தேன்.

ஸ்ரீ ஸாயி ஸத் சரிதத்திற்கு என உரிய தனிச்சிறப்புகளாவன:

1. ஸத் சரிதம் பாபா இவ்வுலகத்தில் வாழ்ந்திருந்தபோதே அவரால் ஆசீர்வாதம் செய்யப்பட்டு திரு ஹேமாட்பந்த் அவர்களால் எழுதப்பட்டது.

2. இந்நூலைக் குளித்தபின் ஆசாரம், அன்பு, நம்பிக்கையுடன்
எவரொருவர் ஒரு வாரத்தில் படித்து முடிக்கிறார்களோ அவர்களுடைய கேடுகள் அழிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நூலைப் படிப்பதால் என்னென்ன் நலன்கள் கிடைக்கும் என்பதைப் பிற்சேர்க்கையில் காணலாம்.

3. கிறிஸ்தவர்களுக்குப் பைபிகளும் முகம்மதியர்களுக்குக் குரானும்சைவர்களுக்குத் தேவாரம், திருவாசகம், வைணவர்களுக்குத் திவ்வியப் பிரபந்தமும் எவ்வாறு உயர்ந்ததாகக் கருதப்படுகிறதோ அவ்வளவு முக்கியம் வாய்ந்த நூலாக சீர்டி ஸாயி பக்தர்களுக்கு "ஸ்ரீ ஸாயி ஸ்த் சரித்திரம்" கருதப்படுகிறது.

பின்னர் இந்நூல் இதுகாறும் தமிழ் மொழியில் வெளிவராதது
அறிந்து அதை நான் தமிழில் மொழிபெயர்க்க விரும்பினேன்.

இது குறித்து 1966-ஆம் ஆண்டில் சீர்டி சன்ஸ்தானத்திற்கு
எழுதிக் கேட்டேன். அப்போது இருந்த கோர்ட் ரிலீவர் திரு. B.G. போட்னிஸ் அவர்கள் என்னை ஊக்குவிக்குமுகமாகப் பதில் எழுதினார்.





அத்தியாயம் 1

நமஸ்காரங்கள் : கோதுமை மாவு அரைத்த நிகழ்ச்சியும்
அதன் தத்துவ உட்கருத்தும்

புராதனமானதும், மிக்க மரியாதை உள்ளதுமான வழக்கத்தின்படிஹேமாட் பந்த், இந்த ஸாயி சரித்திரத்தைப் பல்வேறு நமஸ்காரங்களுடன் எழுத ஆரம்பிக்கிறார்.

1. முதலில் எல்லாவித இடையூறுகளையும் நீக்குதற் பொருட்டாகவும், தன் பணி வெற்றியுறவும் "ஐந்து கரத்தனை யானை முகத்தனைமிக்கப் பணிவுடன் தலை தாழ்த்தி வணங்குகிறார். ஸ்ரீ சீர்டி ஸாயியே. கணபதி என்றும் கூறுகிறார்.

2. பின்னர் தன் மனத்திலே உதித்த எண்ணங்களை உயர்த்தி
உணர்வூட்ட தம் தாய் ஸரஸ்வதியை நமஸ்கரிக்கின்றார்.
ஸ்ரீ ஸாயிஅறிவின் தெய்வமேஎன்றும், அவரே தன் வாழ்க்கைக் கீதத்தை அழகுடன் பாடுகிறார் என்றும் கூறுகிறார்.

3 ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முத் தொழிலையும்
முறையே நிகழ்த்தும், பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரையும் வணங்கி ஸாயிநாதர் அவர்களுடன் ஒன்றானவர் என்றும், சம்சாரம் என்னும் ஆற்றினைத் தாண்டி நம்மைச் சுமந்து செல்லவல்ல மாபெரும் ஸத்குரு என்றும் விளம்புகிறார்.

4. பின்னர் பரசுராமரால் கடலினின்று உயர்த்தப்பட்ட கொங்கண
தேசத்தில் அவதரித்துத் தம்மைக் காக்கும் தம் குல தெய்வமான 'நாராயண ஆதிநாத்'தையும், குடும்பத்தின் ஆதிபுருஷரையும் நமஸ்கரிக்கிறார்.

5. பின்னர் தனது கோத்திரத்தில் அவதரித்த பாரத்வாஜ முனிவரையும், பல்வேறு ரிஷிகளான யாக்ஞவல்க்யர், பிருகு, பராசரர், நாதர், வேதவியாஸர், ஸனகர், ஸனந்தனர். ஸனத்குமாரர்சுகர், செளனகர், விசுவாமித்திரர், வஸிஷ்டர், வால்மீகி, வாமதேவர், ஜைமினி, வைசம்பாயனர் நவயோகீந்திரர் முதலியவரையும் நவீன மகான்களாகிய நிவிருத்தி, ஞானேஸ்வர், ஸொபான், முக்தாபாய், ஜனார்த்தனர், ஏக்நாத், நாமதேவர், துகாராம், கனகர், நரஹரி முதலானோரையும் பணிந்து தலைவணங்கி நமஸ்கரிக்கிறார்.

6. பிறகு தனது தாத்தாவான ஸதாசிவரையும், தகப்பனாரான ரகுநாதரையும், தன்னை இளம் வயதில் பிரிந்த அன்னை தந்தைக்கு நிகரான அத்தை, தன் அன்பிற்குரிய அண்ணன் ஆகியோரையும் வணங்குகிறார்.

7. பின்னர் படிப்பவர்களையும் வணங்கி, தனது பணிக்கு முழு அன்பும், மனமும் சிதையாத கவனத்தையும் நினைப்பையும் கொடுத்தருள வேண்டிக்கொள்கிறார்.

8. கடைசியாக தனது ஒரே அடைக்கலமும், பிரம்மமே
மெய்ப்பொருள், பாரனைத்தும் மாயத்தோற்றம் என்று தனக்கு
உணர்விக்கின்ற ஸ்ரீதத்தாத்ரேயரின் அவதாரமான ஸ்ரீஸத்குரு சீர்டி பாபா அவர்களை நமஸ்கரித்து அங்ங்னமே எம்பெருமான் வதியும் எல்லா ஜீவராசிகளையும் வணங்கித் துதிக்கின்றார்.

பராசரர், வியாஸர், சாண்டில்யர்.முதலியோரது கருத்தின்படிபக்தியால் பலகாலும்துதித்தவற்றைச் சுருக்கமாகக் கூறிய பின்பு ஆசிரியர் பின்வரும் நிகழ்ச்சியை விவரிக்கிறார்.

1910-ஆம் ஆண்டிற்குப்பின், எப்போதோ ஒரு நாள் நல்ல காலை நேரத்தில் மசூதிக்கு ஸாயிபாபாவைத் தரிசிப்பதற்காகச்  சென்றிருந்தேன். பின்வரும் நிகழ்ச்சியைக் கண்ட நான்  ஆச்சர்யத்தால் தாக்கப்பட்டேன். தன் முகம், வாய். இவற்றைக் கழுவிய பின்பு, ஸாயிபாபா கோதுமை மாவு அரைக்கத்
தயார்படுவதில் முனைந்தார். ஒரு சாக்கைத் தரையில் விரித்து, அதன் மேல் திருகையை வைத்தார். பின்பு முறத்தில் கொஞ்சம் கோதுமையை எடுத்து, பின் தம் கம்பளியில் கைகளை மடக்கி விட்டுக் கொண்டு, கையளவு கோதுமையை திருகைக் குழியில் இட்டார். திருகையைச் சுற்றி, கோதுமையை அரைக்கத் தொடங்கினார். பிச்சை எடுத்து வாழ்ந்து எவ்வித உடைமையும்  சேமிப்பும் அற்ற இவர் கோதுமை மாவு அரைக்க வேண்டிய வேலையென்ன என்றவாறு நினைத்தேன். அங்குவந்த சிலரும் அவ்வாறே எண்ணினார்கள். ஆயின், ஒருவருக்கும் பாபா என்ன  செய்கிறார் என்று கேட்கத் துணிவு வரவில்லை. பாபா மாவரைக்கும் செய்தி உடனே கிராமத்தில் பரவி ஆண்களும், பெண்களும் பாபாவின் செய்கையைக் காணப் பெருந்திரளாக மசூதிக்கு வந்தனர்.

கூட்டத்திலிருந்த தைரியம் உள்ள நான்கு பெண்மணிகள் வலிய வந்து நுழைந்து, பாபாவை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, வலிய குச்சியைக் கைப்பற்றி பாபாவின் லீலைகளைப் பாடியவாறு மாவரைக்கத் தொடங்கினர். முதலில் பாபா கடுங்கோபம் அடைந்தார். ஆயின், அந்தப் பெண்மணிகளின் அன்பையும்,
பக்தியையும் கண்டு மிக்க சந்தோஷம் அடைந்து புன்னகை புரியலானார். அவர்கள் அவ்வாறு அரைத்துக் கொண்டி ருக்கையில் "பாபாவுக்கு வீடோ, பிள்ளைகளோ, அன்றி, அவரைக் கவனிக்க யாருமே இல்லையாதலாலும் அவர் பிச்சை எடுத்து வாழ்ந்தாராதலாலும் அவருக்கு ரொட்டி, பிரட் செய்ய
கோதுமை மாவு தேவையில்லை. எனவே இவ்வளவு அதிகமான மாவை என்ன செய்வார்? ஒருவேளை பாபா அன்பாயிருக்கும் காரணத்தால், இம்மாவை நமக்குப் பகிர்ந்து கொடுத்துவிடுவார்" என்றவாறு எண்ணமிட்டபடி பாடியவாறே அரைத்து முடித்து. திருகையை ஓரத்தில் நகர்த்திவிட்டு, கோதுமை மாவை நான்கு பிரிவாகப் பிரித்து ஆளுக்கு ஒவ்வொரு பகுதியாக எடுத்துக் கொள்ளத் தொடங்கினார்கள். இதுவரை அமைதியாகவும், அடக்கமாகவும் இருந்த பாபா, கோபமடைந்துபெண்களே! உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? யாருடைய அப்பன் வீட்டுப் பொருளை இவ்வாறு அபகரிக்கிறீர்கள்? நீங்கள் தடங்கல்
இன்றி மாவை எடுத்துச் செல்வதற்கு நான் முன்னம் உங்களிடம் கடன் பட்டிருக்கிறேனா என்ன? தயவு செய்து இப்போது இதைச் செய்யுங்கள், இம்மாவை எடுத்துச் சென்று கிராம எல்லைகளில் கொட்டிவிட்டு வாருங்கள்" என்றார். இதைக் கேட்டபின் அவர்கள் வெட்கமடைந்து தமக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டு கிராம எல்லைக்குச் சென்று பாபா குறிப்பிட்டபடியே அங்கே மாவைப் பரப்பி விட்டார்கள்.

பாபா செய்த இவைகளெல்லாம் என்னவென்று சீர்டி மக்களை வினவினேன். காலரா நோய் கிராமத்தில் பரவிக் கொண்டு  இருப்பதாயும், இது அதையே எதிர்க்க பாபாவின் பரிகாரமாகும் என்றும் கூறினர். கோதுமை அரைக்கப்பட வில்லை. காலராவே அரைக்கப்பட்டு கிராமத்திற்கு வெளியில் கொட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் பின்னர் காலரா மறைந்து கிராம மக்கள் மகிழ்ச்சியுற்றனர். நானும் இவற்றையெல்லாம் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி யடைந்தேன். ஆனால், அதே சமயம் எனக்கு ஆச்சரியம் விளந்த்து. ‘காலராவுக்கும், கோதுமை மாவுக்கும் பூவுலகில் உள்ள ஒற்றுமை யாது? சாதாரணமாக அவைகளுக்கு உள்ள உறவு என்ன? அவை இரண்டையும் எங்ங்னம் இணைக்க முடியும்?

இந்நிகழ்ச்சி விவரிக்க இயலாததாய் இருக்கிறது. நான் இதைப் பற்றிச் சிறிது எழுதி என் மனம் நிறைவடையும் வரை பாபாவின் இனிக்கும் லீலைகளைப் பாடுவேன்.’

இந்த லீலையைப் பற்றி இவ்வாறாக எண்ணமிட்டபின் என் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது. இங்ங்னம் நான் பாபாவின் வாழ்க்கை வரலாறானஸத் சரித்திரத்தைஎழுத உணர்ச்சி யூட்டப்பட்டேன்.

பாபாவின் அருளுடனும், ஆசியுடனும் இப்பணி செவ்வனே வெற்றிகரமாகச் செய்யப்பட்டது என்பதையும் நாமறிவோம். . . .

மாவரைத்ததன் தத்துவ உட்கருத்து

சீர்டி மக்கள் இந்நிகழ்ச்சியை ஒட்டி அமைத்த காரணத்தைத் தவிர வேறு ஒரு தத்துவ உட்கருத்தும் இருப்பதாக நாம் நினைக்கிறோம். ஸாயிபாபா ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் சீர்டியில் வாழ்ந்தார். இந்நீண்ட காலத்தில் அவர் பெரும்பாலும் தினசரி அரைத்தார். கோதுமையை மாத்திரமன்று. பாவங்கள், உள்ளம், உடல் ஆகியவற்றின் துன்பங்களையும் கணக்கில்லாத் தன் அடியவர்களின் தொல்லைகளையும் அரைத்துத் தீர்த்தார். கர்மம், பக்தி என்ற இரண்டு கற்கள் அவர் திருகையில் இருந்தது. முன்னது கீழ்கல்லாகும். பின்னது மேற்கல்லாகும். பாபா பிடித்து அரைத்த கைப்பிடி ஞானமாகும். சத்துவ, ராஜச, தாமச என்ற முக்குணங்களைச் சேர்ந்த நமது எல்லா உணர்ச்சிகள், ஆசைகள், பாவங்கள், அஹங்காரம் இவைகளை நிகளந்துகளாக்கி முன்னோடி| வேலையாக அரைக்கப்பட்டாலன்றி ஞானம் அல்லது தன்னை உணர்தல் என்பது முடியாதென்பது பாபாவின் உறுதியான| தீர்ப்பாகும். இக்குணங்களைத் தள்ளிவிடுவது அத்தகைய கடினமானது. ஏனெனில் அவைகள் அவ்வளவு நுட்பமானவை.

கபீரின் ஒரு நிகழ்ச்சியை இது ஞாபகமூட்டுகிறது. ஒரு பெண்மணி சோளத்தை அரைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு அவர் தன் குரு நிபதிரஞ்ஜனரிடம், “திருகையில் இடப்பட்ட சோளத்தைப் போன்று இவ்வுலக வாழ்க்கை என்னும் திருகையாலே நசுக்கப்படும்போது நான் அஞ்சுவதனால் அழுகிறேன்என்று கூறினார். நிபதிரஞ்ஜனர், “பயப்படாதே. நான் செய்வது போல் இத்திருகையில் உள்ள ஞானமென்னும் பிடியைப் பிடித்துக் கொள். அதிலிருந்து நெடுந்துரம் சென்று திரியாதே. ஆயின் உட்புறமாகத் திரும்பு அப்போது நீ காப்பாற்றப்படுவது நிச்சயம்" என்று பதிலளித்தாராம்.

ஸ்ரீ ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்.



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017