குழந்தைகள் சொற்களை ஒதுக்காதீர்கள்

குழந்தைகள் சொற்களை ஒதுக்க வேண்டாம்

ஆக்கம்: ஸ்ருதி ஜி. சந்திரன், 5-ம் வகுப்பு, சிசு கிரஹா பள்ளி, பங்களூரு.

நான் சொல்ல வந்ததை எல்லோரும் கவனமாகக் கோளுங்கள், குறிப்பாக பெரியோர்கள். குழந்தைகளாகிய நாங்கள் வேண்டுவது உங்களது அதிகக் கவனம்.நான் எப்போதும் வீட்டில் நடப்பதைப் பார்த்திருக்கிறேன். நமது வீட்டில் ஒரு பிரச்சனை ஏற்ப்படும் பொழுது, குழந்தைகளான நாங்கள் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு யோசனை சொன்னால், வீட்டிலுள்ள பெரியவர்கள் அத்தனை பேர்களும், 'நீங்கள் எல்லாம் பேசாமல் இருங்கள் என்றோ அல்லது வெளியே செல்லுங்கள் என்றோ அல்லது இந்த சர்ச்சைகளிலெல்லாம் தலையிடுவதை நிறுத்துங்கள் என்றோ' எங்களை விரட்டி அடித்து விடுகிறார்கள். மிகவும் கண்ணியமான பெரியவர்கள், எங்களிடம் எதுவும் சொல்லாமல், எங்களை உதாசீனப்படுத்துவார்கள்.

நான் இதற்கெல்லாம் ஒன்றே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு குழந்தையும் ஒரு வகையில் சிறப்பு அம்சம் கொண்டது என்பதை நிரூபிக்க எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்பது தான் எனது கோரிக்கை. 'குழந்தைகள் மிகவும் பலனுள்ளவைகளைச் சொல்வதிலும், செய்வதிலும் சிறப்பும், திறமையும் வாய்ந்தவர்கள்' என்று பெரியவர்கள் எப்போதும் சொல்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே அவர்கள் மனதாரச் சொல்வதாகப் படவில்லை.

அப்படிப் பெரியவர்கள் எங்களுக்கு வாய்ப்புக் கொடுக்காவிட்டாலும், நாங்கள் மிகவும் பயனுள்ள குழந்தைகள் என்பதை நிரூபிப்போம் என்பது உறுதி.மற்ற குழந்தைகள் நிரூபிக்காவிடினும், நான் நிச்சயமாக நிரூபிப்பேன்.

ஆனால், இந்த சமயத்தில் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்:'குழந்தைகள் பெரியவர்களைப் போல் தங்களை மறைத்துக் கொண்டு, ஒரு யோசனையைச் சொன்னால், பெரியவர்கள் அதை ஏற்று, பின்பற்றுவார்கள்.'எப்படி இருப்பினும், குழந்தைகளான எங்கள் கருத்துக்களைச் செவிமடுத்து, செயல்படுங்கள் என்றுதான் பெரியவர்களைக் கேட்டுக்கொள்ள விழைகிறேன்.

குழந்தைகள் செயல்களும், சொற்களும் மிகவும் பிரயோசனமானவர்கள் என்பதை நான் இப்போது நிரூபிக்கப் போகிறேன்.

நான் கீழே கொடுத்திருக்கும் பட்டியலைப் படிக்கவும்:
1. பெரியவர்களை விட குழந்தைகள் ஊக்கமும், அன்பும் கொண்டவர்கள்.
2. குழந்தைகள் மிகவும் அதீதமான கற்பனை வளமும், விளையாட்டும் உடையவர்கள்.
3. குழந்தைகள் மிகவும் அதீதமான சக்தியும், தைரியமும் கொண்டவர்கள்.
4. குழந்தைகள் பெரியவர்களை விட தீர்க்கமான புத்தி உடையவர்கள்.
5. குழந்தைகள் அதி வேகமாக செயலாற்றல் கொண்டவர்கள்.

இனியாவது பெரியவர்கள் கருணை கூர்ந்து, 'குழந்தைகள் லாயக்கற்றவர்கள்' என்று கருதுவதை உடனடியாக நிறுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017